TNPSC Thervupettagam

G20 அமைப்பு - பகுதி 2

September 23 , 2023 492 days 722 0

(For English version to this please click here)

G20 அமைப்பு

சவால்கள்

https://www.upscprep.com/content/images/2023/02/image-4.png

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பிளவுகள்

  • அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பிளவுகளைசஜ் சமாளிப்பதில் உலகப் பொருளாதாரமானது சிக்கலை எதிர்கொள்கிறது.
  • இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலைக் குறிக்கிறது.

எதிர்பார்க்கப்படும் மந்தநிலை

  • அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட உலகின் சில பெரிய பொருளாதாரங்கள் மந்தநிலையை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது ஒரு மந்தநிலை அல்லது இயங்காநிலையைச் சென்றடைய வழிவகுக்கும்.

நிலையான உயர் பணவீக்கம்

  • தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கமானது, பல நாடுகளில் வரலாற்று ரீதியாக உச்சத்தை எட்டியுள்ளது.
  • இது உலகளாவிய வாங்கும் சக்தியைக் குறைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியையும் குறைக்கிறது.
  • உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அதிகப் பணவீக்கத்திற்குப் பதிலளிக்கும் வகையில் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
  • இது பொருளாதார நடவடிக்கைகளை மேலும் குறைத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் தாக்கம்

  • புவிசார் அரசியல் தெளிவின்மை பெரிதும் அதிகரிப்பதோடு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பும் உலகளாவியப் பணவீக்கத்தைக் கணிசமாக அதிகரித்து உள்ளது.
  • இது தொடர்பான மேற்கத்தியத் தடுப்பு நடவடிக்கைகளானது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

சட்டப்பூர்வப் பிணைப்பின்மை

  • விவாதங்கள் மற்றும் ஒருமித்தக் கருத்துகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்ற நிலையில் அது பிரகடனங்கள் வடிவில் முடிவடைகிறது.
  • இந்த அறிவிப்புகள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை.
  • இது 20 உறுப்பினர்களைக் கொண்ட வெறும் ஒரு ஆலோசனைக் குழுவாகும்.

முனைவாக்க நலன்

  • 2022 ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டிற்கு ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்கள் அழைக்கப்பட்டனர்.
  • ரஷ்ய அதிபரை அழைக்க வேண்டாம் என அமெரிக்கா ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இக்குழுவின் உரையை புறக்கணிக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
  • சீனாவின் மூலோபாய எழுச்சி, நேட்டோவின் விரிவாக்கம் மற்றும் ஜார்ஜியா மற்றும் கிரிமியாவில் ரஷ்யாவின் பிராந்திய ஆக்கிரமிப்பு மற்றும் தற்போது 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மோதல் ஆகியவை உலகளாவிய முன்னுரிமைகளை மாற்றியுள்ளன.

பிரச்சினைகள் G20 அமைப்பில் தீர்க்கப் படுதல்

  • G20 அமைப்பானது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் பரந்த நிகழ்ச்சி நிரலில் கவனம் செலுத்துகிறது.
  • உலகப் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நிகழ்ச்சி நிரலில் இது ஆதிக்கம் செலுத்தினாலும், சமீபத்திய ஆண்டுகளில் நிதிச் சந்தைகள், வரி மற்றும் நிதிக் கொள்கை, வர்த்தகம், விவசாயம், வேலைவாய்ப்பு, ஆற்றல், ஊழலுக்கு எதிரான போராட்டம், பணி தொடர்பான சந்தையில் பெண்களின் முன்னேற்றம், 2030 ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி கொள்கையின் நிகழ்ச்சி நிரல், காலநிலை மாற்றம், உலகளாவிய ஆரோக்கியம், பயங்கரவாத எதிர்ப்பு, உள்ளடக்கிய தொழில் முனைவு ஆகிய கூடுதல் பகுதிகளும் முக்கியமானதாகி விட்டன,.

முன்னோக்கிய பாதை

  • G20 அமைப்பு உலகப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருத்தல் கடினமாகும்.
  • ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், G20 சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான மன்றமாக உள்ளது.
  • வளர்ந்து வரும் வலிமை மிக்க நாடுகள் உலகளவில் செல்வாக்கு செலுத்துவதற்கும், பங்களிப்பதற்கும் வாய்ப்புகளைத் தேடுவதால், G20 போன்ற பயனுள்ள உலகளாவிய நிர்வாகம் அவசியம் ஆகும்.
  • IMF, OECD, WHO, உலக வங்கி மற்றும் WTO போன்ற சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டாண்மையை G20 வலுப்படுத்த வேண்டும் என்பதோடு, மேலும் இதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் பணியை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
  • அனைத்து உறுப்பு நாடுகளின் நலனுக்காக, தனிநபர் நலனை விட உலகளாவிய ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • உக்ரைன்-ரஷ்யா மோதல்கள் மற்றும் ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் போன்றப் பிரச்சினைகளைத் தீர்க்க உரையாடல் மற்றும் இராஜதந்திரத்தினைப் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • 2023 ஆம் ஆண்டு G20 உச்சி மாநாட்டை, ஆக்கிரமிப்பு வர்த்தகத் தடைகள் / பொருளாதாரத் தடைகள், நாடுகளுக்கிடையேயான மோதல்கள் மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் ஒத்துழைப்பிற்காக வாதிடுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவாதிப்பதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

G20 மற்றும் இந்தியா

  • 2022 ஆம் ஆண்டு நவம்பர் 16 அன்று வெளியிடப்பட்ட G20 பாலி தலைவர்களின் பிரகடனத்துடன், 2022 ஆம் ஆண்டு இந்தோனேஷியா G20 தலைவர் பதவியை வகித்தது.
  • G20 செயல்முறையில் இந்தியாவின் பங்கேற்பானது ஒரு பெரிய வளரும் பொருளாதாரம் என்பதை உணர்ந்ததிலிருந்து உருவாகிறது.
  • சர்வதேசப் பொருளாதார மற்றும் நிதி அமைப்பின் நிலைத் தன்மையில் இந்தியா ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது.

https://i0.wp.com/blog.forumias.com/wp-content/uploads/2023/09/Picture3.png?resize=364%2C274&is-pending-load=1#038;ssl=1

G20 மாநாடு தொடர்பான இந்தியாவின் நிகழ்ச்சி நிரல்

  • நிதி அமைப்பில் அதிக உள்ளடக்கத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம்.
  • சர்வதேச வணிகப் போக்குகளை தவிர்ப்பதன் மூலம் உள்ளூர் வணிகத்தை மேம்படுத்தல் மற்றும்
  • வளரும் நாடுகளின் வளர்ச்சி வாய்ப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்.
  • G20 அமைப்பின் இலச்சினையானது இந்தியத் தேசியக் கொடியின் துடிப்பான நிறங்களான காவி, வெள்ளை மற்றும் பச்சை மற்றும் நீலம் போன்ற நிறங்களிலிருந்து உத்வேகம் பெறுகிறது.
  • 2023 ஆம் ஆண்டு இந்தியா முதல் முறையாக G20 தலைவர்கள் மாநாட்டைக் கூட்டியது.
  • இது 43 பிரதிநிதிகளின் தலைவர்களைக் கொண்டுள்ள நிலையில் இது G20 அமைப்பில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரியது ஆகும்.
  • அதன் இறுதி உச்சி மாநாடானது இந்த ஆண்டு இறுதியில் செப்டம்பரில் புது தில்லியில்  நடத்தப் பட்டது.
  • இந்தியா தனது G20 தலைமையின் கருப்பொருளாக வாசுதேவக் குடும்பகம்அல்லது ஒரு பூமி - ஒரு குடும்பம் - ஒரு எதிர்காலம்என்பதை அமைத்துள்ளது.
  • இது உலகளாவியச் சவால்களைக் கூட்டாகவும் திறம்படவும் எதிர்கொள்வதற்கு அவசியமான ஒருமித்த உணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2008 ஆம் ஆண்டு G20 அமைப்பின் முதல் உச்சி மாநாடானது வாஷிங்டன் DC (USA) நகரத்தில் நடத்தப் பட்டது.
  • இது உலகளாவிய நிதியில் சீர்திருத்தங்களை மேற்கொண்டது.

  • ஐரோப்பிய ஒன்றியமானது (EU) G20 அமைப்பில் ஒரு அமைப்பாக குறிப்பிடப் படுகிறது.
  • எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒவ்வொரு உறுப்பு நாடும் ஒரு தனி இறையாண்மை கொண்ட நிறுவனமாகும்.
  • G20 போன்ற சர்வதேச அமைப்புகளில் ஐரோப்பிய ஒன்றியமானது ஒரே பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது.
  • பிரேசில், முதன்முறையாக, புவிக் கிரகத்தின் 20 பெரியப் பொருளாதாரங்களின் குழுவான குழு இருபதின் தலைவர்கள் மற்றும் பிரதமர்களின் வருடாந்திரக் கூட்டத்தை 2024 ஆம் ஆண்டு நடத்தவுள்ளது.

2023 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமைப் பொறுப்பு

  • 2023 ஆம் ஆண்டுக்கான G20 தலைவர் பதவியானது இந்தியாவிடம் ஒப்படைக்கப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று G20 தலைவர் பதவியை இந்தியா ஏற்றுக் கொண்டது.
  • இந்தியா G20 தலைவர் பதவியை வகிக்கும் போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் கிட்டத்தட்ட 200 கூட்டங்களை நடத்தியது.
  • "முதல் உலகம் அல்லது மூன்றாம் உலகம்" அல்லாது, "ஒரே உலகம்" என்பதை உறுதிப்படுத்த இந்தியாவானது செயல்படும்.
  • G20 இந்தியத் தலைமையின் கருப்பொருளானது, ஒரு பொதுவான இலக்கு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக ஒட்டு மொத்த உலகையும் ஒன்றிணைக்கும் அதன் பார்வையை நனவாக்குவதற்கான முயற்சிகளை உள்ளடக்கியது.

2023 உச்சி மாநாட்டின் முக்கியத்துவம்

  • இந்தியாவின் G20 தலைமைப் பொறுப்பு என்பது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த அவசரப் பிரச்சினைகளின் உலகளாவிய நிகழ்ச்சி நிரலுக்குப் பங்களிக்க இது இந்தியாவிற்கு ஒரு சிறப்பு வாய்ப்பாகும்.
  • கோவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்திற்கான புதிய உலக ஒழுங்கை நோக்கிய முதல் படியாக, ஐ.நா போன்ற பலதரப்பு அமைப்புகளைச் சீர்திருத்துவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதாகும்.
  • இது உலகளவில் தெற்கு நாடுகளின் தலைமைப் பொறுப்பினை ஏற்க ஒரு வாய்ப்பு ஆகும்.
  • புவி வெப்பமடைதல், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் உள்ள மோதல்கள் போன்ற பிரச்சினைகள் உள்ளதால் உலகளவில் G20 அமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
  • 1999 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டதிலிருந்து இந்தியா G20 அமைப்பில் உறுப்பினராக உள்ளது.
  • வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் மேம்பாடு போன்ற பல்வேறு உலகளாவியப் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களில் கொள்கைகளை விவாதிக்கவும் ஒருங்கிணைக்கவும் அதன் கூட்டங்களில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.

https://i0.wp.com/blog.forumias.com/wp-content/uploads/2023/09/Picture2.png?resize=352%2C309&is-pending-load=1#038;ssl=1

  • எனவே, குறிப்பாக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயங்கரவாத வலையமைப்பிற்கு செல்லும் பணம் தொடர்பான உலகளாவிய நடவடிக்கைத் தேவைப் படுகிறது

பொருளாதாரக் குற்றவாளிகள்

  • பொருளாதாரக் குற்றவாளிகளைக் கையாள்வதில் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு ஒரு தீவிரமான கொள்கை சவாலாக இருக்குமென G20 மாநாட்டில் இந்தியாவால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • ஒசாகா உச்சி மாநாட்டிலும் இந்தியா இதை வலியுறுத்தியது.
  • இந்தியா இந்த யோசனையை முன்மொழிந்துள்ளதோடு பிற G20 நாடுகளிடமும் ஒத்துழைப்பை நாடியுள்ளது.

வரி விதிப்பு

  • G20 ஏற்கனவே வரி விதிப்பு தொடர்பான உண்மையினை உணர்ந்து, அடிப்படைத் தேய்மானம் மற்றும் லாபப் பகிர்வு (BEPS) கட்டமைப்பைக் கொண்டு வந்துள்ளது.
  • மேலும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பரவல் மற்றும் மின்-வணிகத்தை விரிவுபடுத்தும் சவால்களைச் சமாளிக்க இந்தக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

புதிய எண்மத் தொழில்நுட்பங்கள்

  • உலகம் முழுவதும் எண்மத் தொழில்நுட்பங்களில் புதுமைகளானது விரைவாகவும்  வேகமாகவும் பரவி வருகின்றன.
  • இந்த உச்சி மாநாடானது பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான  நன்மைகளை அளிக்கும்.
  • தனியுரிமை, தரவுப் பாதுகாப்பு மற்றும் எண்ம நிர்வாகம் போன்ற சில சிக்கல்கள் சரியாக புரிந்து கொள்ளப் பட வேண்டும்.
  • எனவே, இத்தகையத் தொழில்நுட்பங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நெறிமுறை சிக்கல்களைச் சமாளிக்க இந்தியா இந்த நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

பருவநிலை மாற்றம்

  • பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியானது, வளர்ந்த நாடுகளிடையே ஒரு சர்ச்சைக்குரியப் பிரச்சினையாக உள்ளது.

ஊழலைக் குறைத்தல்

  • வளரும் நாடுகளில் சமமான வளர்ச்சிக்கு ஊழல் பெரும் தடையாக உள்ளது.
  • எனவே, சர்வதேச இராஜதந்திரத்திலிருந்து எந்த அளவிலான முயற்சிகள் எடுக்கப் பட்டாலும், அடிமட்ட அளவில் தாக்கங்கள் ஏற்படுவது எதுவும் தெளிவாகத் தெரிய வில்லை.

ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரித்தல்

  • இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான சமத்துவமின்மையைக் குறைக்க இன்றியமையாதது ஆகும்.

மேம்படுத்தப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு

  • G20 தலைமைப் பொறுப்பானது இருதரப்பு சந்திப்புகள், வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான விவாதங்கள் மூலம் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற பிற முக்கிய பொருளாதாரங்களுடன் இந்தியா தனது பொருளாதார ஈடுபாட்டை ஆழப் படுத்த உதவும்.

உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ளல்

  • G20 உறுப்பினராக, காலநிலை மாற்றம், வறுமைக் குறைப்பு மற்றும் சுகாதார நெருக்கடிகள் போன்ற உலகளாவியச் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • இந்த தலைமைப் பொறுப்பின் மூலம் மேலே உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண G20 அமைப்பின் பதிலளிப்பில், இந்தியா தலைமை வகிக்க முடியும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்