TNPSC Thervupettagam

G20 அமைப்பு - பகுதி 1

September 22 , 2023 477 days 1054 0

(For English version to this please click here)

G20 அமைப்பு

https://www.insightsonindia.com/wp-content/uploads/2022/03/G20.png

  • G20 அல்லது குழு இருபது என்பது ஒரு அரசுகளுக்கிடையேயான மன்றமாகும்.
  • அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற 19 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் (EU) உள்ளடக்கியது.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் 18வது G20 உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஆப்பிரிக்க யூனியனானது G20 அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு, 21வது உறுப்பினராக மாற்றப்பட்டதாக அறிவித்தார்.
  • ந்த G20 குழுவிற்கு நிரந்தரத் தலைமைச் செயலகம் எதுவும் இல்லை.
  • இதன் தலைமையானது முந்தையது, தற்போதையது மற்றும் வரவிருக்கும் தலைமை ஆகிய முக்கூட்டால் ஆதரிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் தலைமையின் போது, ​​முக்கூட்டானது முறையே இந்தோனேசியா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

  • G20 உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களைக் கொண்டது.
  • இது சர்வதேச நிதி நிலைத்தன்மை, காலநிலை மாற்றத் தணிப்பு மற்றும் நீடித்த நிலையான மேம்பாடு போன்ற உலகப் பொருளாதாரம் தொடர்பான முக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க செயல்படுகிறது.
  • G20 உச்சி மாநாடு என்பது ஆண்டுதோறும் சுழலும் தலைமைப் பொறுப்பின் அடிப்படையில் நடத்தப் படுகிறது.
  • G20 தலைமைப் பொறுப்பினை வகிக்கும் நாடானது மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து, உலகப் பொருளாதாரத்தின் முன்னேற்றங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் G20 நிகழ்ச்சி நிரலை ஒன்றிணைக்கும் பொறுப்பினைக் கொண்டுள்ளது.
  • G20 ஆரம்பத்தில் பரந்த பெரிய பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தியது என்றாலும் அதன் பின்னர் அதன் நிகழ்ச்சி நிரலில் வர்த்தகம், நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், ஆற்றல், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவை சேர்க்கப் பட்டுள்ளன.
  • இது தொழில்மயமான நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும்.
  • இது மொத்த உலக உற்பத்தியில் (GWP) 90% அளவினையும், சர்வதேச வர்த்தகத்தில் 75-80% மதிப்பினையும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் உலகின் நிலப்பரப்பில் தோராயமாக பாதியையும் கொண்டுள்ளது.

வரலாற்றுப் பின்னணி

  • 1999 ஆம் ஆண்டு G-20 குழுவானது ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு (1997) நிறுவப் பட்டது.
  • இது 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற G7 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் ஜெர்மனியின் பெர்லினில் 1999  ஆம் ஆண்டு டிசம்பர் 15-16 அன்று ஒரு தொடக்கக் கூட்டத்துடன் முறையாக நிறுவப் பட்டது.
  • கனடாவைச் சேர்ந்த நிதியமைச்சரான பால் மார்ட்டின் அதன் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் மற்றும் ஜெர்மனி நாட்டின் நிதியமைச்சரான ஹான்ஸ் எய்ச்சல் அதன் தொடக்கக் கூட்டத்தைத் தொகுத்து வழங்கினார்.
  • 2008 ஆம் ஆண்டு முதல், இது ஆண்டிற்கு ஒரு முறையாவது கூட்டப் படுகிறது.

  • இது உறுப்பினர்களின் அரசாங்கத் தலைவர் அல்லது அரசத் தலைவர், நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கான மன்றமாகும்.
  • 2009 ஆம் ஆண்டில், ஜி-20 அமைப்பு சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான மன்றத்திற்கான முதன்மை மன்றமாக அறிவிக்கப்பட்டது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவமானது ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியால் செய்யப் படுகிறது.

G20 அமைப்பின் நோக்கங்கள்

  • உலகளாவியப் பொருளாதார நிலைத்தன்மை, நிலையான வளர்ச்சியை அடைவதற்காக அதன் உறுப்பினர்களிடையே கொள்கை ஒருங்கிணைப்பினை மேற்கொள்ளல்.
  • அபாயங்களைக் குறைத்தல் மற்றும் எதிர்கால நிதி நெருக்கடிகளைத் தடுக்கும் நிதி ஒழுங்குமுறைகளை மேம்படுத்துதல்
  • ஒரு புதிய சர்வதேச நிதிக் கட்டமைப்பை உருவாக்குதல்.

G20 அமைப்பின் பணிகள்

  • G20 அமைப்பின் பணி இரண்டு தடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
  • G20 நிதித்தடம் மற்றும் ஷெர்பா பாதை என்ற இரண்டு இணையான தடங்களைக் கொண்டுள்ளது.
  • நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் நிதிப் பாதையை வழி நடத்துகிறார்கள், அதே சமயம் ஷெர்பாக்கள் நிதித் தடத்திற்குப் பிறகு ஷெர்பா பாதையை வழி நடத்துகிறார்கள்.
  • ஷெர்பா தரப்பிலிருந்து G20 செயல்முறையானது, அதன் தலைவர்களின் தனிப்பட்டத் தூதுவர்களான உறுப்பு நாடுகளின் ஷெர்பாக்களால் ஒருங்கிணைக்கப் படுகிறது.
  • நிதிப் பாதையானது உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களால் வழி நடத்தப் படுகிறது.
  • அதன் இரண்டு தடங்களுக்குள் கருப்பொருள் சார்ந்த பணிக்குழுக்கள் உள்ள நிலையில் இதில் உறுப்பினர்களின் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் இதற்கு அழைக்கப் பட்ட/ விருந்தினர் நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
  • நிதித் தடம் என்பது முக்கியமாக நிதி அமைச்சகத்தால் வழி நடத்தப் படுகிறது.
  • G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் நிதிப் பாதையின் ஒரு பகுதியாகும்.
  • அவர்கள் ஆண்டுக்குப் பல முறை சந்தித்து நிதி மற்றும் நிதி சார்ந்த கவலைகள் மற்றும் நிதி விதிகள் பற்றி விவாதிக்கின்றனர்.
  • ஷெர்பா பாதையானது அரசியல் ஈடுபாடு, ஊழல் எதிர்ப்பு, வளர்ச்சி மற்றும் ஆற்றல் போன்ற பரந்த தலைப்புகளின் மீது கவனம் செலுத்துகிறது.
  • ஒவ்வொரு G20 நாட்டையும் ஒரு ஷெர்பா பிரதிநிதித்துவப் படுத்துகிறார், அவர் அந்த நாட்டின் தலைவரின் சார்பாகத் திட்டமிடுபவராகவும், வழிகாட்டுபவராகவும், செயல்படுத்துபவராகவும் செயல்படுவார்.
  • இந்திய ஷெர்பாவான சக்திகாந்த தாஸ் 2018 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடைபெற்ற G20 மாநாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.

G20 அமைப்பின் ஒத்துழைப்புப் பகுதிகள்

  • 2010 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மையான இடமாக டொராண்டோவைத் தலைவர்கள் அறிவித்தனர்.
  • கொள்கை ஆலோசனை வழங்கும் பல சர்வதேச நிறுவனங்கள் G20 உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்றன.

அதன் சில அமைப்புகள்

  • நிதி நிலைத்தன்மை வாரியம் என்பது நிதி நிலைத்தன்மையை (FSB) மேற்பார்வையிடும் ஒரு அமைப்பாகும்.
  • உலகளாவிய நிதி நெருக்கடியின் தொடக்கத்தைத் தொடர்ந்து, G20 தலைவர்கள் நிதி நிலைத் தன்மை வாரியத்தை (FSB) நிறுவினர்.
  • ஆண்டு முழுவதும், வணிகம் (B20), குடிமைச் சமூகம் (C20), தொழிலாளர் (L20), சிந்தனைக் குழுக்கள் (T20) மற்றும் இளைஞர்கள் (Y20) ஆகியவற்றின் ஈடுபாடுள்ள குழுக்களானது முக்கியமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் என்பதோடு, அதன் கண்டுபிடிப்புகள் G20 தலைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும்.

https://i0.wp.com/blog.forumias.com/wp-content/uploads/2023/09/Picture1.png?resize=409%2C232&is-pending-load=1#038;ssl=1

கட்டமைப்பு மற்றும் செயல்பாடு

  • G20 தலைமைப் பொறுப்பானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு கட்டமைப்பின்படி சுழற்சி செய்யப் படுகிறது.
  • இது காலப்போக்கில் பிராந்தியச் சமநிலையை உறுதி செய்கிறது.
  • இதில் 19 நாடுகள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன, ஒவ்வொன்றும் நான்கு நாடுகளுக்கு மேல் மிகாமல் தலைமைப் பொறுப்பினைத் தேர்ந்தெடுக்கும்.

  • ஒவ்வொரு பிரிவினரும் மாறி மாறி தலைமைப் பொறுப்பினை வகிக்கின்றனர்.
  • ஒவ்வொரு ஆண்டும், G20 ஆனது வெவ்வேறு குழுவிலிருந்து ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது.
  • குழு 20 அமைப்பில் ஒரு குழுவாக இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.
  • G20 அமைப்பிற்கு என்று நிலையான செயலகம் அல்லது தலைமையகம் எதுவும் இல்லை.
  • மாறாக, G20 தலைவர் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து G20 நிகழ்ச்சி நிரலை ஒன்றாகக் கொண்டு வருவதற்கும், உலகளாவியப் பொருளாதார நிகழ்வுகளுக்கு எதிர்வினையாற்றுவதற்கும் பொறுப்பானவராக உள்ளார்.

முக்கூட்டு

  • ஒவ்வொரு ஆண்டும், ஒரு புதிய நாடு அதன் தலைவராக வரும் போது (இந்த வழக்கில் 2018 ஆம் ஆண்டு அர்ஜென்டினா), இது முக்கூட்டை உருவாக்குவதற்கு என்று முந்தைய தலைமைப் பதவி (2017 ஆம் ஆண்டு ஜெர்மனி) மற்றும் வரவிருக்கும் தலைமைப் பதவியுடன் (2019 ஆம் ஆண்டு ஜப்பான்) ஒத்துழைக்கிறது.
  • இது அந்தக் குழுவின் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியையும் ஒத்திசைவையும் பராமரிக்கிறது.

G20 தலைமை நாற்காலியின் சுழற்சி

  • ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கான G20 தலைவர்களின் கூட்டத்திற்கு எந்த உறுப்பு நாடு தலைமை தாங்குவது என்பதை இது தீர்மானித்தல் வேண்டும்.
  • ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர அனைத்து உறுப்பு நாடுகளும் இதில் ஐந்து வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • ஒரு குழுவில் உள்ள அனைத்து நாடுகளும் தங்கள் குழுவின் முறை வரும் போது G20 தலைவர் பதவியை ஏற்க தகுதியுடையவை.
  • எனவே, அடுத்த ஜி20 தலைவரைத் தேர்ந்தெடுக்க சம்பந்தப்பட்டக் குழுவில் உள்ள நாடுகள் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அமைப்பு

  • நிரந்தர செயலகம் அல்லது ஊழியர்கள் இல்லாமல் G20 செயல்படுகிறது.
  • பதவியில் இருக்கும் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் நாடானது அதன் பதவிக் காலத்திற்கு ஒரு தற்காலிகச் செயலகத்தை நிறுவுகிறது.
  • இது குழுவின் பணிகளை ஒருங்கிணைத்து அதன் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறது.
  • 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளின் உச்சி மாநாடுகளை முறையே இந்தியா மற்றும் பிரேசில் நடத்தும்.
  • இந்த 20 உறுப்பினர்களைத் தவிர, பல சர்வதேச மன்றங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் G20 கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

G20 நிகழ்ச்சி நிரல்

நிதிநிலை கவனம்

  • ஆரம்ப G20 நிகழ்ச்சி நிரலானது, அரசாங்கக் கடனின் நிலைத் தன்மை மற்றும் உலகளாவிய நிதி நிலைத் தன்மையை உள்ளடக்கிய வடிவத்தில் கவனம் செலுத்தியது.
  • இது மிகப்பெரிய வளரும் பொருளாதாரங்களை சம பங்குதாரர்களாக கொண்டு வரும்.
  • மேலும், G20 உச்சி மாநாட்டில் பங்கேற்பாளர்களின் தொடர்ச்சியான உள்ளடக்கிய கருப் பொருள்களில் உலகப் பொருளாதார வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதிச் சந்தை ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றன.

உள்ளடக்கிய வளர்ச்சி

  • 2015 ஆம் ஆண்டின் ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, G20 நிகழ்ச்சி நிரலில் "உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள்" சேர்க்கப் பட்டன.
  • இதில் இடப்பெயர்வு, எண்மமயமாக்கல், வேலைவாய்ப்பு, சுகாதாரம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் மேம்பாட்டு உதவி ஆகியவை அடங்கும்.

சாதனைகள்

நெகிழ்வுகள்

  • 20 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள G20 ஆனது, விரைவான தேர்வுகளை மேற் கொள்ளவும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நெகிழ்வாகவும் உள்ளது.

உள்ளடக்கம்

  • ஒவ்வொரு ஆண்டும், அழைக்கப்பட்ட நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகள் பங்கேற்பு குழுக்களில் சேர்க்கப் படுகின்றன.
  • இது உலகளாவிய கவலைகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்கும் போது, ஒரு பெரிய மற்றும் முழுமையான கண்ணோட்டத்தை அனுமதிக்கிறது.

ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்

  • உலகளாவிய நிதி ஒழுங்குமுறைக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதில் G-20 முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • மேம்படுத்தப்பட்ட நாடு கடந்த ஒத்துழைப்பும் இதில் அடங்கும்.
  • தனியார் துறை நிதி ஆதாரங்கள் குறைந்து கொண்டிருந்த நேரத்தில் பலதரப்பு வளர்ச்சி வங்கிகளிலிருந்து US$235 பில்லியன் கடன்கள் வழங்கப் படுவதற்கு அது உதவியது.
  • G20 அமைப்பின் முக்கியச் சாதனைகளில் ஒன்றாக 2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, ​​அவசர காலப் பணத்தினை விரைவாகப் பயன்படுத்தியதைக் குறிப்பிடலாம்.

  • இது சர்வதேச நிதி நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்காக தேசிய நிதி நிறுவனங்களின் கண்காணிப்பை மேம்படுத்தவும் முயற்சிக்கிறது.
  • G20 அல்லது OECD அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச வரி முறையின் சீர்திருத்தங்களுக்கு அடிப்படைத் தேய்மானம் மற்றும் லாப மாற்ற (BEPS) திட்டமும், அத்துடன் வரி வெளிப்படைத் தன்மை தரநிலைகளைச் செயல்படுத்துதல் போன்றவையும் எடுத்துக்காட்டுகளாகும்.
  • G20 ஆனது வர்த்தக வசதி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகித்த நிலையில், இது முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 முதல் 8.7% வரை இது பங்களிக்கக் கூடும் என்று உலக வர்த்தக அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

மேம்பட்ட தகவல்தொடர்பு

  • G20 ஆனது உலகின் மிகவும் தொழில்மயமான மற்றும் வளரும் நாடுகளை விவாதத்திற்குக் கொண்டு வருகிறது.
  • அது முடிவெடுப்பதில் ஒருமித்த கருத்தையும் பகுத்தறிவையும் கொண்டு வரும்.
  • 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற (நவம்பர்) G20 உச்சி மாநாட்டில், அதன் தலைவர்கள் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கார்பன் நடுநிலைமையை அடைய இயலும் உறுதி அளித்தனர்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்