TNPSC Thervupettagam

G20 டெல்லி உச்சி மாநாடு - பகுதி 2

September 28 , 2023 471 days 696 0

(For English version to this please click here)

2023 ஆம் ஆண்டு G20 உச்சிமாநாட்டின் முக்கிய முடிவுகள்

சுகாதார மீள்தன்மை மற்றும் ஆராய்ச்சி

  • G20 புது தில்லி தலைவர்களின் பிரகடனமானது சுகாதாரப் பாதுகாப்புக்கு குறிப்பிடத் தக்க முக்கியத்துவம் அளிக்கிறது.
  • இது ஒரு நெகிழ்வான சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கான தேவைக்கும் முன்னுரிமை அளிக்கிறது.
  • மேலும் இது மீள்தன்மை, சமமான, நிலையான மற்றும் உள்ளடக்கிய சுகாதார அமைப்புகளை உருவாக்க உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு உறுதியளிக்கிறது.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த முயற்சியின் மையப்புள்ளியாக உள்ளது.
  • இது ஆரம்ப சுகாதாரம், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட சிறந்த நிலைக்கு மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • காசநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற தொற்றுநோய்களுக்கு தீர்வு காண்பதுடன், நீண்ட கால கோவிட் பற்றிய ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தையும் G20 அங்கீகரிக்கிறது.
  • இந்தியாவின் G20 தலைவர் பதவியானது சான்றுகள் அடிப்படையிலான பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைக்க வலியுறுத்தியது.
  • குறிப்பாக ஆண்டிமைக்ரோபியல் (நுண்ணுயிர்) எதிர்ப்பைக் கையாள்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனிதர்களில் ஏற்படும் நோய்களைக் கண்காணிக்கும் ஒரு சுகாதார அணுகுமுறையை பின்பற்றுவதில் முக்கியத்துவமளிக்க வலிவுறுத்துகிறது.

நிதித் தடம் பற்றிய ஒப்பந்தங்கள்

  • கிரிப்டோகரன்சிகளுக்கான ஒருங்கிணைந்த, விரிவான கொள்கை மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பிற்கு இந்தியாவின் G-20 தலைமைத்துவமானது அடித்தளம் அமைத்துள்ளது.
  • கிரிப்டோ சொத்து ஒழுங்குமுறையில் உலகளாவிய ஒருமித்தக் கருத்தானது வலியுறுத்தப் பட்டது.
  • G-20 தலைவர்கள் உலகளாவிய உயர் வளர்ச்சி கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய, மிகவும் வலுவான மற்றும் பயனுள்ள பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளின் (MDBs) அழுத்தமான தேவையை அங்கீகரித்துள்ளனர்.
  • நிதிச் சேர்க்கைக்கான எண்ம பொது உள்கட்டமைப்பின் இந்தியாவின் பங்கு மாதிரியானது ஒரு நம்பிக்கைக்குரிய அணுகுமுறையாக ஒப்புக் கொள்ளப் படுகிறது.
  • G-20 தலைவர்களின் புது தில்லி பிரகடனமானது கிரிப்டோ-சொத்து சுற்றுச்சூழல் அமைப்பில் விரைவான வளர்ச்சிகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் கண்காணிப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியா-மெர்கோசூர் (தெற்கத்திய பொதுச் சந்தை) முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் (PTA)

  • இந்தியா மற்றும் பிரேசில் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியா-மெர்கோசூர் PTA ஒப்பந்தத்தின் விரிவாக்கத்திற்கு இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.
  • மெர்கோசூர் என்பது பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே மற்றும் பராகுவே ஆகிய நாடுகளை உள்ளடக்கிய லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஒரு வர்த்தக உடன்பாடு ஆகும்.
  • 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று இந்தியா-மெர்கோசூர் PTA ஒப்பந்தமானது நடைமுறைக்கு வந்தது.
  • இது இந்தியாவிற்கும் மெர்கோசூர் தொகுதிக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொருட்களின் மீதான சுங்க வரிகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

காலநிலை நிதியுதவி அர்ப்பணிப்பு

  • இந்தப் பிரகடனமானது காலநிலை நிதியளிப்பில் கணிசமான அதிகரிப்பை வலியுறுத்துகிறது.
  • இது பில்லியன் டாலர்களிலிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களுக்கு "குவாண்டம் ஜம்ப்" என்று அழைக்கப்படுகிறது.
  • இது USD உட்பட குறிப்பிடத்தக்க நிதி ஆதாரங்களின் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
  • 2030 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலக் கட்டத்தில் வளரும் நாடுகளுக்கு 5.8-5.9 டிரில்லியன் டாலர்களும் மற்றும் 2050 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வை அடைவதற்காக, 2030 ஆம் ஆண்டிற்குள் சுத்தமான எரிசக்தித் தொழில் நுட்பங்களுக்கு ஆண்டுக்கு 4 டிரில்லியன் டாலர்களும் காலநிலை நிதி உதவிக்கு தேவைப் படுகிறது.

G20 தலைவர் பதவி மாற்றம்

  • இந்தியப் பிரதமர் G20 தலைமைப் பொறுப்பினை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் ஒப்படைத்து விட்ட நிலையில், அவர் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று அதிகாரப்பூர்வமாகத் தலைமைப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.

2023 ஆம் ஆண்டு G20 உச்சி மாநாட்டில் சமீபத்திய இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பு

  • இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது தொழில்நுட்பக் கூட்டாண்மையை வலுப்படுத்தி வருகின்றன.
  • அவர்கள் மீள்கடத்தி விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.
  • சீனாவின் தொலைத்தொடர்பு உபகரணங்களை அகற்றுவதுடன், அமெரிக்காவின் 'ரிப் அண்ட் ரிப்ளேஸ்' (புதிய தொழில்நுட்பம் மூலம் பழைய உபகரண மாற்றம்) திட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.
  • விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் களங்களில் விரிவாக்கப்பட்ட ஒத்துழைப்பின் மூலம் இந்தியா-அமெரிக்க முக்கியப் பாதுகாப்புக் கூட்டுறவை ஆழப்படுத்தவும் பன்முகப்படுத்தவும் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின.

இருதரப்பு விவாதங்கள்

  • இந்தியப் பிரதமர் மோடி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கு இடையேயான ஒரு முக்கியச் சந்திப்பு உட்பட பல இருதரப்பு விவாதங்கள் நடைபெற்றதோடு, இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியது.

இந்தியா-வங்காளதேசம்

  • இருதரப்புச் சந்திப்பிற்குப் பிறகு இந்தியா-வங்காளதேசம் இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  • முதலாவதாக, இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) மற்றும் வங்க தேச வங்கி ஆகியவற்றுக்கு இடையே எண்மக் கட்டண வழிமுறைக்கான ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்தானது.
  • இரண்டாவதாக, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது 2023-2025 ஆம் ஆண்டுகளுக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே கலாச்சாரப் பரிமாற்றத் திட்டத்தை (CEP) புதுப்பிப்பதில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
  • மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்திற்கும் (ICAR) வங்க தேச விவசாய ஆராய்ச்சி மன்றத்திற்கும் (BARC) இடையே கையெழுத்தானது.

உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (GBA) வெளியீடு

  • உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை பிரதமர் மோடி அறிமுகப் படுத்தினார்.
  • இது பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை உலகளாவிய 20% தரத்திற்குக் கொண்டு செல்ல G20 நாடுகளை ஒன்று திரட்டுகிறது.
  • இது 30க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஒரு குழுவாகும்.
  • இது உயிரி எரிபொருளை ஏற்றுக் கொள்வதை எளிதாக்குவதோடு, இதன் மூலம் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் உயிர் ஆற்றல் அணுகுதலுக்கான ஒரு திறவுகோலாக அமைகிறது.
  • GBA உறுப்பினர்கள் உயிரி எரிபொருளின் முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களாக உள்ளனர்.
  • அமெரிக்கா (52 சதவீதம்), பிரேசில் (30 சதவீதம்) மற்றும் இந்தியா (3 சதவீதம்), மற்றும் உற்பத்தியில் 85 சதவீத பங்களிப்பையும், எத்தனால் நுகர்வில் சுமார் 81 சதவீதத்தையும் பங்களிக்கின்றன.
  • உலகளாவிய எத்தனால் சந்தை 2022 ஆம் ஆண்டு $99.06 பில்லியனாக மதிப்பிடப் பட்டது.
  • இது  2032 ஆம் ஆண்டுக்குள் 5.1% CAGR என்ற அளவில் வளரும் மற்றும் 2032 ஆம் ஆண்டு $162.12 பில்லியனைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இம்முயற்சி இந்தியாவிற்கு பல முனைகளில் பயனளிக்கும்.
  • GBA என்பது G20 தலைவர் பதவியின் உறுதியான விளைவாக, உலக அளவில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உதவும்.

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்

  • இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை அதன் தலைவர்கள் தொடங்கி வைத்தனர்.
  • ஒரு பாரிய இரயில் மற்றும் கப்பல் இணைப்புத் திட்டமான இது, பிராந்தியங்கள் முழுவதும் பொருளாதார ஒருங்கிணைப்பை வளர்க்கிறது.
  • இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் அரசாங்கங்களிடையே இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித் தடத்தை நிறுவுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MoU) கையெழுத்தானது.
  • இரயில்வே மற்றும் கடல் பாதைகளை உள்ளடக்கியப் போக்குவரத்துப் பாதைகளின் வலையமைப்பாக IMEC கருதப்படுகிறது.
  • ஆசியா, அரேபிய வளைகுடா மற்றும் ஐரோப்பா இடையே ஒருங்கிணைப்பை வளர்ப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

எல்லை தாண்டிய கொடுப்பனவுகளுக்கான G20 அமைப்பின் அர்ப்பணிப்பு

  • G20 நாடுகள் G20 திட்ட வரைபடத்திற்கு ஏற்ப, வேகமான, வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய எல்லை தாண்டிய கொடுப்பனவுகளை ஊக்குவிக்க உறுதி பூண்டுள்ளன.

ஐக்கியப் பேரரசு (UK) - இந்தியா FTA விவாதங்கள்

  • இந்தியாவும் இங்கிலாந்தும் தங்களிடையே வளர்ந்து வரும் உறவுகள் மற்றும் இங்கிலாந்து-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) வழங்குவதற்கான ஒரு முன்னேற்றம் குறித்து விவாதித்தன.

இந்திய விவசாயத்தின் மீது G20

  • G20 தலைவர்கள் இந்தியாவின் வேளாண் திறனை கண்காட்சிகளையும், பண்ணையிலிருந்து உணவுப் பொருள் உற்பத்தி செய்யப்பட்டு அது எவ்வாறு உணவாக தயாரிக்கப் பட்டு விநியோகிக்கப்படுகிறது என்பது வரையிலான அனுபவங்களைப் பெற்றனர்.

பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை

  • G20 பிரகடனமானது அனைத்து நாடுகளும் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அமைதியான முறையில் மோதலுக்கான தீர்வு ஆகியவற்றின் கொள்கைகளை நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

உக்ரைனில் அமைதியை வலியுறுத்தல்

  • G20 அமைப்பின் புது தில்லி தலைவர்களின் பிரகடனமானது இன்றையக் காலக் கட்டத்தில் அமைதியான முறையில் மோதலைத் தீர்ப்பது மற்றும் போரைத் தவிர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
  • மேலும் எண்ம உள்கட்டமைப்பு மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான பரிந்துரைகளை அவர்கள் உருவாக்கியுள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு கடன் நிவாரணக் கட்டமைப்பை நிறுவுவது குறித்து ஒப்பந்தம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

G20 உச்சி மாநாட்டில் முக்கியமாக விடுபட்டவைகள்

போக்குவரத்து வழித்தடம்

  • மத்திய கிழக்கில் இரயில் பாதைகளை அமைப்பது மற்றும் துறைமுகம் மூலம் இந்தியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு நிதியுதவி அல்லது காலக்கெடு பற்றிய விவரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

உயிரி எரிபொருள் கூட்டணி

  • இந்தியா தற்போது ஆழ்ந்த ஊட்டச் சத்து குறைபாடு, அதிக உணவு சார்ந்த பணவீக்கம் போன்ற குறைபாடுகளை எதிர்கொள்கிறது.
  • நல்ல விளைச்சல் கொண்ட விளை நிலங்களை எத்தனால் உற்பத்திக்காக மாற்றுவது உயிரி எரிபொருளில் அதிக ஆர்வம் கொண்ட அமெரிக்காவை மகிழ்விப்பதாகத் தெரிகிறது.

பருவநிலை மாற்றம்

  • G20 நாடுகள் கூட்டாக உலகளாவிய உமிழ்வுகளில் சுமார் 80%க்கு பங்களிக்கின்றன.
  • இருப்பினும், G20 உச்சி மாநாட்டில் உள்ள தலைவர்கள் படிம எரிபொருட்களை படிப்படியாக வெளியேற்றுவது குறித்து ஒருமித்தக் கருத்தை எட்டவில்லை.
  • இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பெருக்கும் இலக்கை அடைவதற்காக, தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் இலக்குகளைத் திருத்துவதற்கான எந்தத் திட்டத்தையும் வழங்கவில்லை.

தலைவர்களின் வருகையின்மை

  • இந்த ஆண்டு உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரின் வருகையின்மையானது குறிப்பிடத் தக்கது.

உலகளாவிய நிதி அமைப்பு சீர்திருத்தங்கள்

  • இரண்டாம் உலகப் போரின் முடிவில் பிரெட்டன் வுட்ஸ் மாநாட்டில் வடிவமைக்கப் பட்ட உலகளாவிய நிதி அமைப்பை மறுசீரமைப்பது பற்றி உச்சி மாநாட்டில்  விவாதிக்கப் பட்டது, என்றாலும் இதில் காலக்கெடு அல்லது செயல் திட்டம் எதுவும் வரையறுக்கப்படவில்லை.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்