TNPSC Thervupettagam

G2O டெல்லி உச்சி மாநாடு - பகுதி 1

September 26 , 2023 463 days 730 0

(For English version to this please click here)

G2O டெல்லி உச்சி மாநாடு

  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் G20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்தியாவின் புது டெல்லியில் நடத்தப் பட்டது.
  • G20 தலைவர்கள் மாநாட்டை இந்தியா முதல் முறையாக நடத்தியது.
  • அதன் G20 தலைமையின் போது, ​​இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தியது.
  • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது உலகளாவியப் பொது நலனில்கவனம் செலுத்துகிறது.
  • G20 தலைவர்களின் புது தில்லிப் பிரகடனமானது ரஷ்யா-உக்ரைன் பதட்டங்கள் முதல் நிலையான வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்குவது வரை பல்வேறு உலகளாவியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டி ஒருமனதாக ஒருமித்தக் கருத்தை எட்டியுள்ளது.

துரிதப்படுத்தப்பட்ட, உள்ளடக்கிய மற்றும் மீள்திறன் வளர்ச்சி

  • ஒரு துரிதப்படுத்தப்பட்ட, மீள்திறன் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியானது ஒரு நிலையான வளர்ச்சிக்கான அடித்தளமாகும்.
  • அதன் G20 தலைமைப் பொறுப்பின்போது, ​​கட்டமைப்பு மாற்றத்தைக் கொண்டு வரும் திறன் கொண்ட பகுதிகளில் கவனம் செலுத்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய வர்த்தகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துதல், வளர்ச்சிக்கான வர்த்தக உணர்வைக் கொண்டு வருதல், தொழிலாளர் உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் தொழிலாளர் நலனைப் பாதுகாத்தல், உலகளாவியத் திறன் இடைவெளியை நிவர்த்தி செய்தல் மற்றும் உள்ளடக்கிய விவசாய மதிப்புச் சங்கிலிகள் மற்றும் உணவு அமைப்புகளை உருவாக்குதல் போன்ற குறிக்கோள்கள் ஆகியவை இதில் அடங்கும்.

நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை துரிதப்படுத்தல்

  • இந்தியாவின் G20 தலைமைப் பொறுப்பானது 2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலின் முக்கியமான மையப் புள்ளியுடன் முரண்படுகிறது.
  • எனவே, கோவிட்-19 பெருந்தொற்றின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தை இந்தியா ஒப்புக் கொள்கிறது.
  • இது தற்போதைய தசாப்தத்தின் நடவடிக்கை மீட்சியின் ஒரு தசாப்தமாக மாற்றப் பட்டுள்ளது.
  • நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலில் வகுக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கான G20 அமைப்பின் முயற்சிகளை மறுபரிசீலனை செய்வதில் இந்தியா கவனம் செலுத்த விரும்புகிறது.

தொழில்நுட்ப மாற்றம்  மற்றும் எண்ம பொது உள்கட்டமைப்பு

  • G20 தலைமை என்ற முறையில், தொழில்நுட்பத்திற்கா மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் இந்தியா அதன் நம்பிக்கையை முன்வைக்கிறது.
  • எண்ம பொது உள்கட்டமைப்பு, நிதி உள்ளடக்கம் மற்றும் விவசாயம் முதல் கல்வி வரையிலான துறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாடு போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் அதிக அறிவைப் பகிர்வதற்கு இது உதவுகிறது.

21 ஆம் நூற்றாண்டிற்கான பலதரப்பு நிறுவனங்கள்

  • சீர்திருத்தப்பட்ட பன்முகத் தன்மைக்காக தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதே இந்தியாவின் G20 முன்னுரிமையாக இருக்கும்.
  • இது 21 ஆம் நூற்றாண்டில் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு மிகவும் பொறுப்பான, உள்ளடக்கிய நியாயமான, சமமான மற்றும் பிரதிநிதித்துவ பலமுனை சர்வதேச அமைப்பை உருவாக்குகிறது.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி

  • உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்த G20 மன்றத்தைப் பயன்படுத்த இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.
  • இது இந்தியாவின் G20 விவாதங்களின் மையமாக இருப்பது பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் பிரதிநிதித்துவத்திற்கு உதவுகிறது.

உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முதலீடு

  • இந்தியா தனது தலைமைப் பொறுப்பிற்கான பதவிக் கால நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சியான கலாச்சார முயற்சிகளுடன் தொடங்கியது.
  • இதில் பல்வேறு ஜன் பகிதாரி நடவடிக்கைகள் அடங்கும்.
  • இது நாடு முழுவதும் உள்ள 75 கல்வி நிறுவனங்களுடன் கூடிய சிறப்புப் பல்கலைக் கழக இணைப்பு நிகழ்வாகும்.
  • இது G20 இலச்சினை மற்றும் வண்ணங்களுடன் 100 ASI நினைவுச் சின்னங்களை ஒளிரச் செய்கிறது மற்றும் நாகாலாந்தில் நடைபெறும் ஹார்ன்பில் (இருவாட்சிப் பறவை) திருவிழாவில் G20 அமைப்பினைக் காட்சிப்படுத்துகிறது.
  • மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணல் கலையின் மூலம் இந்தியாவின் G20 இலச்சினையினை உருவாக்கினார்.
  • இளைஞர் நடவடிக்கைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் அந்தந்த நகர-இடங்களின் காட்சிகள் மற்றும் மரபுகளைக் காண்பிக்கும் தள உல்லாசப் பயணங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஆண்டு முழுவதும் திட்டமிடப் பட்டு உள்ளன.

2023 ஆம் ஆண்டு G20 உச்சிமாநாட்டின் முக்கிய முடிவுகள்

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அனுமதி (G20 தற்போது G21)

  • G20 தலைவர்கள் ஆப்பிரிக்க ஒன்றியத்தினை G20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.
  • இரண்டு நாள் G20 உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வின் போது, ​​உலகின் 20 பெரிய பொருளாதாரங்களின் (G20) குழுவில் ஆப்பிரிக்க ஒன்றியத்தை (AU) நிரந்தர உறுப்பினர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
  • இந்த முக்கிய உலகளாவிய அமைப்பின் புதிய உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டுள்ளது.
  • ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) என்பது 55 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஒரு குறிப்பிடத் தக்க அமைப்பாகும்.
  • இது ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் உள்ள நாடுகளை கூட்டாகப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.
  • கடந்த சில ஆண்டுகளாக, உலகளாவியத் தெற்கு நாடுகளின், குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தின் பிரச்சினைகள், சிரமங்கள் மற்றும் விழைவுகளை முன்னிலைப்படுத்தி, இந்தியா தன்னை ஒரு முக்கிய ஆதரவாளராக தீவிரமாக நிலை நிறுத்திக் கொண்டு உள்ளது.
  • இம்மன்றத்தில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு இது ஒரு முக்கிய படியாகும்.

G20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியச் சேர்க்கையின் தாக்கம்

  • G20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர் நிலையானது, உலகளாவிய வர்த்தகம், நிதி மற்றும் முதலீடு ஆகியவற்றை மறுவடிவமைப்பதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
  • இது G20 அமைப்பிற்குள் உலகளாவியத் தெற்கு நாடுகளின் சார்பாக ஒரு பெரியளவிலான கருத்தினை வழங்குகிறது.
  • இது G20 அமைப்பிற்குள் ஆப்பிரிக்காவின் நலன்கள் மற்றும் முன்னோக்குகளை  கேட்பதற்கும் அங்கீகரிப்பதற்கும் அனுமதிக்கிறது.

2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை மூன்று மடங்காக உயர்த்துதல்

  • சர்வதேச எரிசக்தி அமைப்பின் (IEA) மதிப்பீட்டின்படி, இந்த ஒற்றை நடவடிக்கையானது தற்போது மற்றும் 2030 ஆம் ஆண்டு இடையில் ஏழு பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைத் தவிர்க்கலாம்.
  • இது புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.
  • இது புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய்மையான ஆற்றல் மாற்றுகளை நோக்கிய குறிப்பிடத் தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
  • இது பாரீஸ் ஒப்பந்தத்தின் நோக்கங்களை அடைவதற்கான, டிரில்லியன் கணக்கான டாலர்கள் நிதி ஆதாரங்களின் தேவையை வெளிப்படுத்துகிறது.
  • இந்த அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை விரிவுபடுத்தினால் 2023 மற்றும் 2030 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 7 பில்லியன் டன்கள் CO2 உமிழ்வைத் தவிர்க்கலாம்.

உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான அர்ப்பணிப்பு

  • வாழ்க்கைக்கானச் செலவு தொடர்பான அழுத்தங்களுக்குப் பங்களிக்கும் வகையில் உணவு மற்றும் எரிசக்தி விலைகள் உட்பட, அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை G20 தலைவர்கள் அங்கீகரித்துள்ளனர்.
  • வறுமை, காலநிலை மாற்றம், தொற்றுநோய்கள் மற்றும் மோதல்கள் போன்ற உலகளாவியச் சவால்களால் பாதிக்கப்படக் கூடிய மக்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டு, பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
  • G20 அமைப்பின் தலைவர்கள் கருங்கடல் தானிய முயற்சியினை முழுமையாக, சரியான நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

  • G20 தலைமையின் போது விவசாய பணிக் குழு இரண்டு அம்சங்களில் வரலாற்று ஒருமித்த கருத்தை எட்டியது
  • G20 அமைப்பின் தக்காண உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மற்றும் தினை முன்முயற்சி குறித்த உயர்மட்டக் கொள்கைகளானது மகரிஷி என்றழைக்கப் படுகிறது.
  • மனிதாபிமான உதவி, உணவு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பான நிகர திட்டங்கள், காலநிலை வினைத் திறமிக்க அணுகுமுறைகள், விவசாய உணவு முறைகளை உள்ளடக்குதல், ஒரு சுகாதார அணுகுமுறை, விவசாயத் துறையினை எண்மமயமாக்கல் மற்றும் விவசாயத்தில் பொறுப்பான பொது மற்றும் தனியார் முதலீட்டை அளவிடுதல் ஆகியவை உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான உயர்மட்டக் கொள்கைகளின் கீழுள்ள ஏழு கோட்பாடுகள் ஆகும்.
  • மகரிஷி (தினைகள் மற்றும் பிற தொன்மையான தானியங்கள் சர்வதேச ஆராய்ச்சி முயற்சி) ஆனது சர்வதேச தினை ஆண்டுகளான 2023 மற்றும் அதற்குப் பிறகு, ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதையும், தினைகள் மற்றும் பிற பழங்காலத் தானியங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • G20 அமைப்பின் தலைவர்கள் அதிக வெளிப்படைத் தன்மைக்காக, வேளாண் சந்தை தகவல் அமைப்பு (AMIS) மற்றும் உலகளாவிய புவிக் கண்காணிப்பு மற்றும் வேளாண் கண்காணிப்புக் குழு (GEOGLAM) ஆகியவற்றை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர்.
  • இதில் தாவர எண்ணெய்களை சேர்க்க AMIS என்பதினை விரிவுபடுத்துவதும், உணவு விலை ஏற்ற இறக்கத்தைத் தவிர்க்க முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் அடங்கும்.

கடன்

  • கடன் வரிசையில் போராடும் நாடுகளுக்கு நிவாரணம் தேவைப்படுகிறது, ஆனால் உறுதியான நடவடிக்கைகள் எதுவும் அறிவிக்கப் படவில்லை.
  • சர்வதேச உதவி நிறுவனமான ஆக்ஸ்பாம் என்ற நிறுவனமானது, வறுமை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைச் சமாளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால், உச்சி மாநாட்டை "உற்சாகமற்றது மற்றும் குறைவானது" என்று அழைத்தது.

ரஷ்யா உக்ரைன் போர்

  • உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாக குறிப்பிடாததால், புது டெல்லி தலைவர்களின் பிரகடனத்தை உக்ரைன் விமர்சித்தது.
  • G20 கொள்கையின் நிலைத் தன்மை, பகுப்பாய்வு மற்றும் நடைமுறைக் கருவிகளை வழங்குவதன் மூலம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.
  • இது G20 உறுப்பினர்கள் வளரும் நாடுகளுடனான தங்கள் ஒத்துழைப்பைச் சிறப்பு இலக்காகக் கொள்ளவும் மற்றும் உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் வளர்ச்சி முயற்சிகளை அதிகரிக்கவும் அனுமதிக்கிறது.

  • தீவிரவாதத்தினை கடுமையாக கண்டித்த மிகக் குறிப்பான 2015 ஆம் ஆண்டின் துருக்கி பிரகடனத்தினைப் போலவே 2023 ஆம் ஆண்டு புது தில்லி பிரகடனமும் முந்தைய G20 பிரகடனங்கள் மீதே கட்டமைக்கப் பட்டுள்ளது
  • முதன்மையாக பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழுவை (FATF) வலுப்படுத்துவதில் கவனம் செலுத்திய 2022 ஆம் ஆண்டின் G20 பாலி தலைவர்கள் பிரகடனம் போலல்லாமல், 2023 ஆம் ஆண்டு புது தில்லி பிரகடனமானது பரந்த அளவிலான கவலைகளை உள்ளடக்கியது.
  • G20 அமைப்பின் தலைவர்கள், புது தில்லி பிரகடனத்தில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் தெளிவாகக் கண்டித்துள்ளனர்.
  • உலகளாவியச் சொத்து மீட்பு வலையமைப்புகளை மேம்படுத்துவதற்கும், குற்றவியல் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும் FATF அமைப்பின் முயற்சிகளை இந்த அறிவிப்பானது ஆதரிக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்