ஏப்ரல் – முக்கியத் தினங்கள்
- - - - - - - - - - - - - - - - -
ஏப்ரல் - 1
முட்டாள்கள் தினம்
- புத்தாண்டு தினம் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
- கிரிகோரியன் நாட்காட்டியானது 1582-ல் போப் கிரிகோரி XIII-ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி ஜனவரி 1 புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
- எனினும் பலர் இதை ஏற்றுக் கொள்ள மறுத்து, புத்தாண்டு தினத்தை ஏப்ரல் மாதத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- ஜனவரி 1-ஐ புத்தாண்டு தினமாக அனுசரிக்க மறுப்பவர்களை மற்றவர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர். மேலும் அவர்களை ‘முட்டாள்களின் தூதுவர்களாக’ அனுப்பப்படுவதாக கேலி செய்தனர். இவ்வாறு முட்டாள்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒடிசா தினம்
- ஒடிசா மாநிலத்தை தனி மாகாணமாக 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி உருவாக்கியதை நினைவு கூறும் விதமாக ஏப்ரல் 1 ஒடிசா தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- ஒடிசா மாநிலத்தின் நிர்வாக அடையாளம் 1568-ல் அம்மாநிலத்தின் கடைசி அரசர் மற்றும் தலைவரான முகுந்த் தேவின் இறப்பிற்கு பிறகு முழுவதுமாக மறைந்தது.
ஏப்ரல் - 2
சர்வதேச குழந்தைகளின் புத்தக தினம்
- இந்நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் இளம் வயதினருக்கான புத்தகங்கள் மீதான சங்கம் (IBBY – International Board on Books for Young People) என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
- IBBY ஆனது சர்வதேச லாப நோக்கமில்லாத நிறுவனம் ஆகும்.
- ஹன்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் பிறந்த தினமான ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் முதன்முதலாக 1967 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.
மன இறுக்கத்திற்கான உலக விழிப்புணர்வு தினம்
- உலகம் முழுவதும் உள்ள மன இறுக்க ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதற்காக ஐ.நா.வின் உறுப்பு நாடுகளை இத்தினம் ஊக்கப்படுத்துகிறது (ASD – Autism Spectrum Disorder).
- உலக மனஇறுக்க விழிப்புணர்வு நாள் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று ஐ.நா. மன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- ஐ.நா.விற்கான கத்தார் பிரதிநிதியால் இத்தினம் முன்மொழியப்பட்டது.
ஏப்ரல் – 3
உலக விருந்தினர் கூட்ட தினம்
- உலக விருந்தினர் கூட்ட தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. மனித இனம், சந்தோஷமான கொண்டாட்டம் ஆகியவற்றை அர்ப்பணிப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் உலக தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- வன்ன போந்தா எழுதிய “பிளைட் : ஏ குவாண்டம் பிக்சன்” என்ற நாவல் வெளியீட்டிற்குப் பின்பு 1996 ஆம் ஆண்டு முதல் உலக விருந்தினர் கூட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஏப்ரல் 4
சுரங்கப் பணிகளில் சுரங்க விழிப்புணர்வு மற்றும் உதவிகளுக்கான ஐ.நா.வின் சர்வதேச தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 அன்று சுரங்கப் பணிகளில் சுரங்க விழிப்புணர்வு மற்றும் உதவிகளுக்கான ஐ.நா.வின் சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
- கண்ணிவெடி மற்றும் அதை ஒழிப்பதற்கான செயல்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தை அனுசரிப்பதன் நோக்கமாகும்.
- ஐ.நா. பொதுச் சபையானது 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதியன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி சுரங்கப் பணிகளில் சுரங்க விழிப்புணர்வு மற்றும் உதவிகள் தினமாக அனுசரிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- இது முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று அனுசரிக்கப்பட்டது.
சர்வதேச கேரட் தினம்
- சர்வதேச கேரட் தினம் அல்லது கேரட் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- உலகம் முழுவதும் உள்ள கேரட் பிரியர்களுக்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஏப்ரல் - 5
தேசிய கடல்சார் தினம் - இந்தியா
- முதன்முறையாக 1919-ஆம் ஆண்டில் ஏப்ரல் 5 ஆம் தேதி இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் மும்பையிலிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு புறப்பட்டது.
- பழங்காலம் முதல் இந்தியா கடற்பயணம் மேற்கொள்ளுகிற திறன் கொண்டது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்திய வரலாற்றில் பொன் எழுத்து தினமாக ஏப்ரல் 5 அனுசரிக்கப்படுகிறது.
- தேசிய கடல்சார் தினம் முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
ஏப்ரல் - 6
வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டுகள் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டுகள் (IDSDP – International Day of Sport For Development and Peace) தினத்தை உலகம் அனுசரிக்கிறது.
- வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டுகள் தினம் என்பது சமூக மாற்றம், சமூக அபிவிருத்தி, அமைதி மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை வளர்ப்பதற்கான விளையாட்டு சக்தியாகும் என்பதை கொண்டாடும் வருடாந்திர நிகழ்வாகும்.
- 2013-ல் ஐ.நா. பொதுச் சபையால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டுகள் தினமானது 1896-ல் நடைபெற்ற முதலாவது நவீன ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு இணைப்பை ஏற்படுத்துகிறது.
ஏப்ரல் - 7
உலக சுகாதார தினம்
- உலக சுகாதார தினம் என்பது உலக சுகாதார விழிப்புணர்வு தினமாக உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் (WHO – World Health Organisation) அனுசரிக்கப்படுகிறது.
- 1948-ல் முதலாவது உலக சுகாதார சபையை WHO நடத்தியது.
- இச்சபை 1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ஐ உலக சுகாதார தினமாக கடைபிடிக்க முடிவு செய்தது.
சர்வதேச தலையணை சண்டை தினம்
- 2018 ஆம் ஆண்டின் சர்வதேச தலையணை சண்டை தினம் ஏப்ரல் 9 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது.
- முதலாவது உலக தலையணை சண்டை தினம் 2008 ஆம் ஆண்டு மார்ச்சில் அனுசரிக்கப்பட்டது.
- அன்று முதல் பொழுதுபோக்கு என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நகரங்களில் தலையணை கும்பல் சண்டைகள் வளர்ந்து வருகிறது.
1994 ஆம் ஆண்டு ருவாண்டா இன அழிப்புக்கு எதிரான சர்வதேச தினம்
- 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ல் ஐ.நா. பொது அவையால் சர்வதேச அளவில் 1994-ம் ஆண்டு நடைபெற்ற ருவாண்டா இன அழிப்புக்கு எதிரான சர்வதேச தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஏப்ரல் - 8
சர்வதேச ரோமானியர்கள் தினம்
- ரோமானியர்களின் கலாச்சாரம் மற்றும் ரோமானிய மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஏப்ரல் 8 ஆம் தேதி சர்வதேச ரோமானியர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 1971 ஆம் ஆண்டில் ஏப்ரல் 7 முதல் 8 வரை லண்டனுக்கு அருகில் செல்ஸ்பீல்டில் நடைபெற்ற ரோமானியப் பிரதிநிதிகளின் முதலாவது முக்கியமான சந்திப்பினை கௌரவிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஏப்ரல் - 10
உலக ஹோமியோபதி தினம்
- ஹோமியோபதி மருத்துவ அமைப்பின் தந்தையான டாக்டர் சாமுவேல் ஹனிமேன் என்பவரை கௌரவிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- ஹனிமேனிற்கு அர்ப்பணிக்கும் விதமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படுகிறது.
- சிறந்த மருத்துவமுறைகள் மற்றும் நோயை குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிக்காக நிதியுதவி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏப்ரல் - 11
தேசிய பாதுகாப்பான தாய்மை தினம், இந்தியா
- 2013 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கமானது அரசியல் ஆர்வலர் கஸ்தூரிபாய் காந்தியின் நினைவாக ஏப்ரல் 11-ம் தேதியை தேசிய பாதுகாப்பான தாய்மை தினமாக அறிவித்தது.
- உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இந்தியா முதலாவதாக தேசிய பாதுகாப்பான தாய்மை தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- இத்தினம், பெண்களுக்கு கருத்தரிப்பு, பிள்ளைப்பேறு மற்றும் குழந்தை பிறப்பிற்குப் பின்பு வழங்கும் சேவைகள் போதுமான அளவிற்கு அளிக்கப்படுவதற்கு வெள்ளை ரிப்பன் கூட்டணி இந்தியா (WRAI – White Ribbon Alliance India) எடுத்த ஒரு புது முயற்சியாகும்.
உலக பார்கின்சன் தினம்
- உலக பார்கின்சன் நோய் தினம் டாக்டர் பார்கின்சன் பிறந்த தினத்தைக் குறிக்கிறது.
- உலக பார்கின்சன் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. சிறந்த மருத்துவ முறைகள் மற்றும் நோயை குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிக்காக நிதியுதவி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஏப்ரல் - 12
சர்வதேச மனித விண்வெளி பயண தினம்
- ஐ.நா. பொதுச் சபையானது 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஏப்ரல்-12ஐ சர்வதேச மனித விண்வெளிப் பயண தினமாக அறிவித்துள்ளது.
- மேலும் இத்தினம் ரஷ்யாவில் அண்டப் பயணவியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- சோவியத்தைச் சேர்ந்த யூரி காகரின் என்பவரால் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி முதலாவது மனித விண்வெளி பயணம் மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரல் - 13
ஜாலியன் வாலாபாக் படுகொலை
- 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது. பஞ்சாபின் அமிர்தசரஸின் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் கூடிய மக்கள் கூட்டத்தின்போது ஜெனரல் டையர் தலைமையிலான பிரிட்டீஷ் இந்திய இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.
ஏப்ரல் - 14
அம்பேத்கர் ஜெயந்தி
- பி. ஆர். அம்பேத்கரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி அல்லது பீம் ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினமானது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினமான 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியைக் குறிக்கிறது.
- இத்தினத்திற்கு இந்தியா முழுவதும் 2015 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் - 15
உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம்
- 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியை முதன்முறையாக உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினமாக ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 21 வரை உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க வாரமாக ஐ.நா. சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இதன் கொண்டாட்டமானது லியோனர்டோ டாவின்சியின் பிறந்த தினமான ஏப்ரல் 15-ல் தொடங்கி, உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க நாளான ஏப்ரல் 21 அன்று நிறைவடைகிறது.
உலகக் கலை நாள்
- நுண்கலைகளுக்கான சர்வதேச நிகழ்ச்சியான உலகக் கலைகள் தினத்தை (ரிட்டிக் தினம்) கலைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு அறிவித்துள்ளது (IAA – International Association of Art).
- குவாடல்ஜராவில் நடைபெற்ற கலைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பின் 17வது பொதுச் சபைக் கூட்டத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதியை உலகக் கலை நாளாக அனுசரிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. உலகக் கலை தினம் இத்தினம் முதன்முறையாக 2012 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- லியோனர்டோ டாவின்சியின் பிறந்த நாளை கௌரவிக்கும் விதமாக இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஏப்ரல் - 16
உலக குரல் தினம்
- குரல் நிகழ்ச்சியை கொண்டாடுவதற்காக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 ஆம் தேதி உலகக் குரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- பிரேசிலில் 1999 ஆம் ஆண்டில் பிரேசிலின் தேசியக் குரல் தினமாக முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
ஏப்ரல் - 17
சர்வதேச ஹைக்கூ கவிதை நாள்
- உலகம் முழுவதும் ஏப்ரல் 17 ஆம் தேதி ஹைக்கூ நாளாக அனுசரிக்கப்படுகிறது.
- இது 2007 ஆம் ஆண்டு சரி கிராண்டஸ்டாப் என்பவரால் பதிவு செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டில் ஹைக்கூ பவுண்டேஷனின் திட்டமாக தொடங்கப்பட்டது.
உலக இரத்தப்போக்கு நோய் தினம்
- சர்வதேச நிகழ்ச்சியான உலக இரத்தப்போக்கு தினம் (World Hemophilia Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 17 ஆம் தேதி இரத்தப்போக்கிற்கான உலக பெடரேஷன் (WFH – World Federation of Hemophilia) அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது.
- WFH-ன் நிறுவனர் பிரான்க் செனோபல் பிறந்த தினத்தை கௌரவிப்பதற்காக ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் - 18
உலக பாரம்பரிய தினம்
- சர்வதேச அளவில் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது உலக பாரம்பரிய தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இதை 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச ஆணையம் (ICOMOS – International Council on Monuments and Sites) பரிந்துரைத்தது. 1983 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் (UNESCO) பொதுச் சபை இதற்கு ஒப்புதல் அளித்தது.
உலக அமெச்சூர் வானொளி தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக அமெச்சூர் வானொலி தின கொண்டாட்டத்தில் வானொலி அமெச்சூர்களின் உரை ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
- பாரிஸில் 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ல் சர்வதேச அமெச்சூர் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.
ஏப்ரல் - 21
குடிமைப் பணிகள் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி குடிமைப் பணிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- சுதந்திர இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல் 1944 ஆம் ஆண்டில் டெல்லியின் மெட்கேப் இல்லத்தில் நிர்வாகப் பணி அதிகாரிகளின் பயிற்சிக் கூட்டத்தில் உரையாற்றியதை நினைவு கூறும் விதமாக இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இவர் குடிமைப் பணியாளர்களை ‘இந்தியாவின் எஃகு சட்டகம்’ என்று குறிப்பிட்டார்.
- இத்தினத்தின் முதலாவது கூட்டம் புது தில்லியின் விக்யான் பவனில் 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்றது.
உலக மீன்கள் இடப்பெயர்வு தினம்
- திறந்தவெளி ஆறுகள் மற்றும் மீன்களின் இடப்பெயர்வின் முக்கியத்துவத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மீன்கள் இடப்பெயர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இது உலக மீன்கள் இடப்பெயர்வு பவுண்டேஷனால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஏப்ரல் – 22
புவி தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி உலக புவி தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 1970 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நவீன சுற்றுச்சூழல் இயக்கத்தினை நினைவுகூறும் விதமாக முதன்முறையாக 1970 ஆம் ஆண்டு இத்தினம் அனுசரிக்கப்பட்டது.
- 1969 ஆம் ஆண்டில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற யுனெஸ்கோ கருத்தரங்கின்போது அமைதிக்கான ஆர்வலர் ஜான் மெக்கோனெல் அமைதி மற்றும் புவியை கௌரவிப்பதற்காக ஒரு தினத்தை முன்மொழிந்தார்.
- முதன்முறையாக இத்தினமானது வட துருவத்தில் இளவேனிற்காலத்தின் முதல் நாளில் 1970 ஆம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
- இது தற்பொழுது 192 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. இது லாப நோக்கில்லாத நிறுவனமான புவி தின அமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகிறது. 1970 ஆம் ஆண்டில் இத்தினம் முதல் புவி தினத்தின் ஒருங்கிணைப்பாளரான டெனிஸ் ஹேயிஸ் என்பவரால் தலைமை தாங்கப்பட்டது.
ஏப்ரல் - 23
உலக புத்தக மற்றும் நகலுரிமை தினம் அல்லது உலக புத்தக தினம்
- புத்தகங்கள் படிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 1616 ஆம் ஆண்டின் இத்தினத்தில் செர்வன்டிஸ், ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலெசோ டி லா வேகா அனைவரும் மரணமடைந்தனர்.
- மேலும் இத்தினம் மொரைஸ் டுரோன், ஹேல்டர் லக்ஸ்நெஸ், விளாடிமிர் நபோகோவ் ஜோசப் ப்ளா மற்றும் மேனுவல் மெஜியா வலேஜோ போன்ற சிறந்த எழுத்தாளர்களின் பிறப்பு மற்றும் இறப்பு தினமாகும்.
உலக ஆங்கில மொழி நாள்
- ஐ.நா.ஆல் ஏற்படுத்தப்பட்ட உலக ஆங்கில மொழி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினம் மற்றும் உலக புத்தகம் மற்றும் நகலுரிமை தினத்துடன் ஒன்றிப் பொருந்துகிறது.
- ஐ.நா. பொதுச் சபை முதன்முறையாக ஆங்கில மொழி நாளை 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ல் கொண்டாடியது.
- ஐ.நா. செயலகத்தில் நடைமுறையில் இருக்கும் 2 பணி மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. ஐ.நா.வின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று.
ஏப்ரல் - 24
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி இந்திய தேசிய தினமாக தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (தேசிய உள்ளூர் தன்னாட்சி தினம்) மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் அனுசரிக்கப்படுகிறது.
- 2010 ஆம் ஆண்டில் முதலாவது பஞ்சாயத்து ராஜ் தினத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்
- அரசியலமைப்பு (73வது திருத்தம்), 1992 ஆனது நிறைவேற்றப்பட்டதை இத்தினம் குறிக்கிறது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று நடைமுறைக்கு வந்தது.
- 73வது அரசியலமைப்புச் சட்டத்தின் விளைவாக பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
- அன்று முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி பெண்களின் அரசியல் மேம்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஏப்ரல் - 25
உலக எழுதுபொருட்கள் தினம்
- ஏப்ரல் மாதத்தில் கடைபிடிக்கப்படும் தேசிய எழுதுபொருட்கள் வாரத்தின் ஒரு பகுதியாக உலக எழுதுபொருட்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஏப்ரலின் கடைசி புதன் கிழமை உலக எழுதுபொருட்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த வருடம் (2018) ஏப்ரல் 25 அன்று நடைபெற்றது.
- இது 2012 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- பிரிட்டீஷ் வரலாற்றில் மிக முக்கியமாக எழுதப்பட்ட ஆவணங்களில் ஒன்றான அடிப்படை சாசனத்தின் 800-வது ஆண்டினை நினைவு கூறும் விதமாக இது அனுசரிக்கப்படுகிறது.
- அடிப்படை சாசனம்1215 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
உலக மலேரியா தினம்
- சர்வதேச அளவில் உலக மலேரிய தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் மலேரியாவை கட்டுப்படுத்துவதற்கான உலக முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
- உலக சுகாதார நிறுவனத்தால் (WHO – World Health Organisation) இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- உலக மலேரியா தினமானது 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் 60-வது கூட்டத்தின் போது உருவாக்கப்பட்டது.
ஏப்ரல் - 26
உலக அறிவுசார் சொத்து தினம்
- உலக அறிவுசார் சொத்து தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் WIPO (World Intellectual Property Organisation) உருவாக்கப்படுவதற்கான பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. WIPO ஆனது 1970 ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
- தினசரி வாழ்க்கையில் IP (Intellectual Property)-ன் பங்கு குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக WIPO ன் உறுப்பு நாடுகள் 2000 ஆம் ஆண்டு உலக IP தினத்தை உருவாக்கியது.
- உலக அறிவுசார் சொத்து நிறுவனம் என்பது அறிவுசார் சொத்துகளின் கொள்கைகள், சேவைகள், தகவல் மற்றும் ஒத்திழைப்புக்கான சர்வதேச மன்றமாகும்.
சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினம்
- ஐ.நா.வானது சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவு தினமாக ஏப்ரல் 26-ஐ பறைசாற்றியது.
- இத்தினம் முதன்முறையாக 2016 ஆம் ஆண்டு 1986-ல் ஏற்பட்ட அணுக்கரு பேரிடரின் 30-வது நினைவு ஆண்டின் போது அனுசரிக்கப்பட்டது.
- 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியன்று தற்போது உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுக்கரு ஆற்றல் ஆலையானது வெடித்து சிதறி தீப்பொறி ஏற்பட்டு மிக அதிக அளவிலான கதிரியக்கப் பொருட்களை வளிமண்டலத்தில் வெளியேற்றியது.
ஏப்ரல் - 28
பணியாற்றும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினம்
- சர்வதேச அளவில் தொழில்சார் விபத்துகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஏப்ரல் 28-ஐ பணியாற்றும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினமாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு அனுசரிக்கிறது.
- உலக அளவில் 1996 ஆம் ஆண்டு முதல் வர்த்தக மன்ற இயக்கத்தினால் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்த பணியாளர்களின் நினைவு தினம் அல்லது சர்வதேச பணியாளர்களின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினம் 2003 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் - 29
இரசாயனப் போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்
- இரசாயனப் போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27 ஆம் தேதி இரசாயனப் போர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- இது ஐ.நா-ஆல் அங்கீகரிக்கப்பட்டு, 2005 ஆம் ஆண்டு முதல் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1997 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29-ல் இரசாயன ஆயுதங்கள் பிரகடனம் நடைமுறைக்கு வந்ததையடுத்து இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நடன தினம்
- யுனெஸ்கோவின் செய்முறைக் கலைகளுக்கான முக்கியப் பங்காளரான சர்வதேச திரையரங்கு நிறுவனத்தின் (ITI – International Theatre Institute) –ன் பிறந்த தினத்தின் நினைவாக ஏப்ரல் 29 ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நிகழ்ச்சி நவீன கதை நடனத்தை உருவாக்கியவரான ஜீன் ஜியோர்ஜஸ் நோவரீ என்பவரது பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஏப்ரல் - 30
சர்வதேச ஜாஸ் (இசை) தினம்
- ஏப்ரல் மாதம் முழுவதும் ஜாஸ் (இசை) மற்றும் அவற்றின் மிகச் சிறந்த பாரம்பரியம் பொது வெளியில் மக்களின் ஈர்ப்பைப் பெறுகிறது
- 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization) ஏப்ரல் 30 ஆம் தேதியை தேசிய ஜாஸ் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- - - - - - - - - - -