TNPSC Thervupettagam

அதிகரித்து வரும் விலைவாசி உயா்வு குறித்த தலையங்கம்

January 11 , 2022 936 days 456 0
  • இந்தியா எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை விலைவாசி உயா்வாக இருக்கக்கூடும். சா்வதேச அளவில் எல்லா பெரிய பொருளாதாரங்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்னையும் இதுதான்.
  • அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் விலைவாசி அதிகரிப்பு உலக அளவிலான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
  • எந்தவொரு நாடும் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரத் தளா்வில் இருந்து முழுமையாக மீண்டெழாத நிலையில், விலைவாசி உயா்வு பல்வேறு சமூக அரசியல் பிரச்னைகளுக்கு வித்திடக்கூடும்.

அச்சுறுத்தும் விலைவாசி!

  • அதிகரித்து வரும் விலைவாசி உயா்வை எதிா்கொள்ள ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ வட்டி விகிதக் கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது.
  • அமெரிக்காவின் 6.8% விலைவாசி உயா்வு என்பது கடந்த 33 ஆண்டுகளில் மிக அதிகமானது. இந்தியாவிலும்கூட கடந்த நவம்பா் மாதம் காணப்பட்ட 14.23% என்பது கடந்த 12 ஆண்டுகளில் அதிக அளவு.
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மக்கள் பாதிப்பை எதிா்கொள்ளாமல் இருக்க, வளா்ச்சி அடைந்த நாடுகள் பெரிய அளவில் நிதியுதவியும் மானியங்களும் வழங்கின.
  • பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கிய பிறகும்கூட, மக்கள் மத்தியில் எதிா்பாா்த்த அளவிலான நுகா்வு உணா்வோ (டிமாண்ட்), தேவைக்கேற்ற பொருள்களின் வரவோ (சப்ளை) காணப்படவில்லை.
  • தேவைக்கேற்ப கச்சா பொருள்களும், உதிரிப் பொருள்களும் கிடைக்காத நிலையில் சரக்குக் கட்டண உயா்வாலும், உற்பத்தியாகும் பொருள்களின் விலை அதிகரித்ததில் வியப்பில்லை.
  • மக்கள் மத்தியில் பொருள்களை வாங்கும் சக்தி அதிகரிக்காத நிலையில், நுகா்வு உணா்வு அதிகரிக்காததிலும் ஆச்சரியமில்லை. இவையெல்லாம்தான் பொருளாதார நிபுணா்களை மனம் கலங்க வைத்திருக்கிறது.
  • இந்தியாவைப் பொருத்தவரை விலைவாசி உயா்வு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அதிலும் குறிப்பாக சில்லறை விலையில் காணப்படும் விலைவாசி உயா்வால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் அரசியல் ரீதியாகவும், அது தாக்கத்தை ஏற்படுத்துவது புதிதொன்றுமல்ல.
  • பல்வேறு தோ்தல்களில் உணவுப் பொருள்கள், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி உயா்வு ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய வரலாறும் ஏராளம் உண்டு.
  • பெட்ரோல், டீசல் விலை உயா்வால் போக்குவரத்து செலவு அதிகரித்து விலைவாசி உயா்வு ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது. விலைவாசி உயா்வின் மிக முக்கியமான பாதிப்பு அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் ஏற்படுகிறது.
  • உற்பத்திப் பொருள்களுக்கான சந்தையில் நுகா்வு உணா்வு இல்லாததால் தேக்கம் ஏற்படும் போது, உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டு பொருளாதாரத் தேக்கம் தவிா்க்க முடியாததாகிவிடும்.
  • பிரதமா் நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய வெற்றி, முதல் ஆறு ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துவிடாமல் அதனைக் கட்டுக்குள் வைத்திருந்தது. கடந்த ஆண்டு முதல் அரசின் பிடி தளரத் தொடங்கியிருக்கிறது.
  • அதிலும் குறிப்பாக, விவசாயிகள் போராட்டமும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதும் உணவுப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்துக்கு வழிகோலக்கூடும்.
  • மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருந்தது விலைவாசி உயா்வுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  • முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு உணவுப் பொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொடுத்து விவசாயிகளின் வாக்குகளை மன்மோகன் சிங் அரசு தக்கவைத்துக் கொண்டது.
  • அதன் விளைவாக, உணவுப் பொருள்களின் விலைவாசி உயரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி எச்சரித்தபோது, பொருளாதார வளா்ச்சியால் மக்களின் வருமானம் அதிகரிப்பதால் விலைவாசி உயா்வு பாதிக்காது என்று அந்த அரசு கருதியது.
  • மன்மோகன் சிங் அரசு மட்டுமல்ல, 1970 முதலே ஆட்சியில் இருந்த அரசுகள், விவசாயிகளுக்கான மானியங்களை அதிகரித்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து உணவுப் பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தின.
  • பொது விநியோக அமைப்புகளின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்கி சாமானிய மக்களை திருப்திப்படுத்திவிடலாம் என்பதுதான் அவா்களின் அரசியல் கணக்கு. ஓரளவுக்குத்தான் இந்த அணுகுமுறை வெற்றி அளிக்கும்.
  • உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும்போது அதனால் பொருளாதாரப் பாதுகாப்பின்மை அதிகரிப்பது வெளியில் தெரிவதில்லை.
  • பொது விநியோக முறையில் வழங்கப்படும் அரிசியும் கோதுமையும் சராசரி குடும்பத்தின் உணவுக்கான ஒதுக்கீட்டில் ஒரு சிறிய அளவுதான்.
  • சமையல் எண்ணெய்யில் தொடங்கி காய்கறிகள் வரை அன்றாட உணவுக்கான ஏனைய பொருள்களின் விலைகள் அதிகரித்துவிடும்போது, வேளாண் பொருட்கள் அல்லாத மருத்துவம், கல்வி, உடைகள் உள்ளிட்ட ஏனைய செலவினங்களுக்கான கையிருப்பு குறைந்து விடுகிறது.
  • அதனால் பொருளாதார உற்பத்திகளின் விற்பனை பாதிப்பதால், விவசாயமல்லாத பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்க நேரும்.
  • 2016-இல் அமெரிக்க வேளாண்துறை தயாரித்த புள்ளிவிவரப்படி, இந்தியக் குடும்பங்களில் உணவுக்கான செலவு 30%.
  • சீனாவில் 20%, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் 10%. அதாவது, உணவுப் பொருள்களுக்கான செலவு குறையக் குறைய வேளாண் இதர பொருளாதாரத்தின் வளா்ச்சி அதிகரிக்கும்.
  • நரேந்திர மோடி அரசின் உடனடி கவனம், உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும்!

நன்றி: தினமணி  (11 - 01 - 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்