TNPSC Thervupettagam

அறிவியல் ஆயிரம் உடற்பயிற்சிக்குப் பதிலாக மாத்திரையா

July 31 , 2022 739 days 401 0
  • உடற்பயிற்சி செய்வதன் நன்மைகளை ஒரு மாத்திரையில் கொண்டு வருவது குறித்து விஞ்ஞானத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 
  • பேய்லர் மருத்துவக் கல்லூரி  ஆராய்ச்சியாளர்கள், உடற்பயிற்சியின் போது, உடலின் ரத்தத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மூலக்கூறை, கண்டறிந்துள்ளனர். இந்த மூலக்கூறின் மூலமாக உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமனை திறம்பட குறைக்க முடியும் என்று கூறுகின்றனர். 

ஆய்வுகள்

  • பெய்லர் காலேஜ் ஆஃப் மெடிசின், ஸ்டான்போர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் உள்ளிட்ட மூன்று கூட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் உடற்பயிற்சி குறித்து ஆய்வு செய்து சில முக்கிய தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.
  • 'உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் ரத்தத்தில் ஒரு புதிய மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது என்ற ஆச்சரியமான உண்மையைக் கண்டறிந்துள்ளனர். மேலும், இதன் மூலம் எலிகளின் உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமனை திறம்பட குறைக்க முடியும்என்றும் தெரிவிக்கின்றனர்.
  • இந்த கண்டுபிடிப்புகள், உடற்பயிற்சிக்கும் பசிக்கும் இடையே உள்ள தொடர்புக்கு அடிப்படையான உடலியல் செயல்முறைகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது எனவும் கடந்த ஜூன் 12ல் "நேச்சர் இதழில்" (journal Nature ) வெளியிட்டுள்ள இதன் முடிவுகளில் கூறியுள்ளனர். 

உடற்பயிற்சியும் நன்மையும்

  • "வழக்கமான உடற்பயிற்சி என்பது எடை இழப்புக்கு உதவுகிறது; பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துகிறது; குறிப்பாக அதிக எடை மற்றும் பருமனானவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் நன்றாக பயனளிக்கிறது" என பத்திரிக்கையின் இணை ஆசிரியரும், குழந்தை மருத்துவம்- ஊட்டச்சத்து மற்றும் மூலக்கூறு மற்றும் செல்லுலார் உயிரியல் பேராசிரியருமான டாக்டர் யோங் சூ (Dr. Yong Xu) கூறினார்.
  • மேலும் பெய்லர் என்பவர், "உடற்பயிற்சி இந்த நன்மைகளைத் தூண்டும் பொறிமுறையை நாம் புரிந்துகொள்ள முடிந்தால், பலருக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதற்கு நாங்கள் தயாராக எப்போதும் இருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
  • 'போதுமான உடற்பயிற்சி செய்ய முடியாத வயதான அல்லது பலவீனமானவர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அல்லது பிற நிலைமைகளை மெதுவாக்க உதவும் மருந்தை உட்கொள்வதன் மூலம் அவர்கள் உடற்பயிற்சியின் பலனை ஒருநாள் நன்றாக அனுபவிக்கலாம்/பயனடையலாம்' என்று ஸ்டான்போர்ட் மருத்துவத் துறை, நோயியல் உதவி பேராசிரியர், அறிஞரும், எழுத்தாளருமான  ஜொனாதன் லாங் கூறினார்.

மூலக்கூறின் பெயர்: லாக்-பீ (Lac-Phe)

  • எலிகளின் ஓட்டத்தை வைத்து அவற்றின் ரத்த பிளாஸ்மா கலவைகள் பற்றிய விரிவான பகுப்பாய்வுகளை நடத்தினர். அதில் லாக்-பீ(Lac-Phe) என்ற மூலக்கூறைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு  மாற்றியமைக்கப்பட்ட அமினோ அமிலமாகும். இது லாக்டேட்(Lactate) (தசைகளில் எரியும் உணர்வுக்கு காரணமான கடுமையான உடற்பயிற்சியின் விளைவுகளுக்கு காரணமானது)  மற்றும் ஃபினைல்அலனின் (Phenylalanine) (புரதங்களின் கட்டுமானத் தொகுதிகளில் ஒன்றான அமினோ அமிலம்) ஆகியவற்றிலிருந்து ஒருங்கிணைக்கப்படுகிறது. 

லாக்-பீயினால் உடல் எடை குறைதல்

  • உடல் பருமன் உள்ள எலிகளில் (அதிக கொழுப்புள்ள உணவு உண்ணப்படும் எலிகள்), 12 மணி நேரத்தில் எலிகளின் இயக்கம் அல்லது ஆற்றல் செலவினத்தை கணக்கிடுகையில்  இந்த மூலக்கூறு, எலிகளின் உணவு உட்கொள்ளலை சுமார் 50% குறைத்தது. இவ்வாறு 10 நாட்களுக்கு கண்காணிக்கப்படும்போது எலிகளின் உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமனைக் குறைத்தது. 

லாக்-பீ உற்பத்தி நொதி: CNDP2

  • லாக்-பீ உற்பத்தியில் ஈடுபட்டுள்ள (CNDP2 -carnosine dipeptidase 2) எனப்படும் மனிதனில் உள்ள நொதியையும் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், இந்த நொதி இல்லாத எலிகள் அதே உடற்பயிற்சித் திட்டத்தில் கட்டுப்பாட்டுக் குழுவாக உடற்பயிற்சி முறையில் அதிக எடையைக் குறைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

லாக்-பீ செயல்பாடுகள்

  • பந்தயக் குதிரைகள் மற்றும் மனிதர்களில் உடல் செயல்பாடுகளை வைத்து பிளாஸ்மா லாக்-ஃபீ அளவுகளில் ஏற்படும் மாற்றத்தையும் கண்டறிந்தது. ஸ்பிரிண்ட் எனும் தீவிர உடற்பயிற்சிலாக்-ஃபீ மூலக்கூறுகளை அதிகம் தூண்டியதும் கண்டறியப்பட்டுள்ளது. 
  • 'லாக்-பீ என்பது பழங்கால மற்றும் பாதுகாக்கப்பட்ட அமைப்பு. இது உணவை ஒழுங்குபடுத்துகிறது, பல விலங்கு இனங்களில் உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடையதுஎன்று ஆய்வாளர் லாங் கூறினார்.
  • மேலும், 'எங்கள் அடுத்த ஆய்வுகளில் மூளை உள்பட உடலில் அதன் விளைவுகளை லாக் - பீ எவ்வாறு சமரசம் செய்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிந்து விடுவோம். உடற்பயிற்சிக்கு மாற்றாக மருத்துவத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என்றார். 
  • இந்த சோதனைகள் மற்றும் ஆய்வுகள் மனித நலனுக்கு மிக மிகத் தேவையானவை. அனைத்தும் அறிவியலின் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளே. 

நன்றி: தினமணி (31 – 07 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்