TNPSC Thervupettagam

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் - பகுதி 1

November 8 , 2023 427 days 591 0

(For English version to this please click here)

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்

  • பாரா ஏசியாட் என்றழைக்கப்படும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளானது பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய நிகழ்வுகளாகும்.
  • இது ஆசிய பாராலிம்பிக் குழுவால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.
  • உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர்களுக்காக ஒவ்வொரு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகும்  ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இது நடத்தப் படுகிறது.
  • இரண்டு போட்டிகளும் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளில் பயன்படுத்தப் டும் உத்தியை ஏற்றுக் கொண்டுள்ளன.
  • இரண்டு போட்டிகளும் ஒரே நகரில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இருப்பினும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளானது தனியே பிரிக்கப்பட்ட பிறகு, ஆசியப் போட்டிகளுக்குத் தலைமையேற்கும் நகரம் தொடர்பான ஒப்பந்தமானது இரண்டு போட்டிகளும் ஒன்றையொன்று சாராமல் இயங்குமென குறிப்பிடுகிறது.
  • சர்வதேச பாராலிம்பிக் குழுவின் (IPC) மூலம் இந்த விளையாட்டுகள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.

  • பாராலிம்பிக் விளையாட்டுகளுக்குப் போட்டிகளுக்குப் பிறகு இது இரண்டாவது பெரிய பல்துறை விளையாட்டுப்  போட்டியாக விவரிக்கப்படுகிறது.
  • அதன் வரலாற்றில், மூன்று நாடுகளானது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளன, மேலும் நாற்பத்தி நான்கு நாடுகள் இவ்விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 22 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கு இடையில் சீனாவில் உள்ள ஹாங்சோவில் மிகச் சமீபத்திய விளையாட்டுகள் நடைபெற்றன.
  • அடுத்தப் போட்டிகளானது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 14 முதல் 22 வரை ஜப்பானில் உள்ள நகோயாவில் நடைபெற உள்ளன.

வரலாறு

  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு FESPIC விளையாட்டுப் போட்டிகளானது இருந்த நிலையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் போட்டியிட்டனர்.
  • 1975 ஆம் ஆண்டு முதன்முதலில் ஜப்பானின் உள்ள ஒய்டா நகரத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 18 நாடுகள் பங்கேற்றன.
  • மேலும் எட்டு FESPIC விளையாட்டுப் போட்டிகளானது 2006 ஆம் ஆண்டு வரை நடத்தப் பட்டன.
  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளானது FESPIC விளையாட்டுப் போட்டிகளை முறியடித்தது.
  • FESPIC கூட்டமைப்புடன் இணைந்து FESPIC விளையாட்டுப் போட்டிகள் கலைக்கப் பட்டது.
  • இவ்விளையாட்டுகளை நடத்தும் குழுவானது ஆசிய பாராலிம்பிக் மன்றத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.

  • இது 2006 ஆம் ஆண்டு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற FESPIC பதிப்பின் இறுதிப் போட்டிகளின் நிறைவின் போது ஆசிய பாராலிம்பிக் குழு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான முதல் ஆசிய பல்வகை விளையாட்டுப் போட்டியான, ஆசிய பாரா விளையாட்டுத் தொடக்கப் போட்டியானது  சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்றது.
  • ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது போன்று ஆசிய மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளை ஒரே நகரில் நடத்தும் திட்டமானது இருந்திருக்கிறது.
  • ஆனால் இன்று வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரத்திற்கான ஒப்பந்தத்தில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி குறிப்பிடப் படவில்லை.
  • இது போட்டிகள் முற்றிலும் தனித்தனியாகவும் எந்தத் தொடர்பும் இல்லாமல் நடத்தப் படுகின்றன என்பதை குறிப்பிடுகிறது.
  • இரண்டு விளையாட்டுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக இயங்கியதோடு, வெவ்வேறு ஏற்பாட்டுக் குழுக்களால் நிர்வகிக்கப் படுகின்றன.

விளையாட்டுகள்

  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளிளை வரலாறு ரீதியாக உற்று நோக்குகையில் 27 விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
  • இதில் 2010 ஆம் முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து ஆசிய பாரா விளையாட்டுகளும் அடக்கமாகும்,

சின்னங்கள்

  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் சின்னங்களானது கற்பனையான சிறப்பியல்பு கொண்ட பாத்திரங்கள் ஆகும்.
  • பொதுவாக, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் பகுதியின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலுள்ள ஒரு விலங்கு அல்லது மனித உருவங்களானது இவ்விளையாட்டுகளின் சின்னங்களாக பயன்படுத்தப்படுகிறது.
  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளை இளையத் தலைமுறையினைச் சேர்ந்த பார்வையாளர்களுக்குச் சந்தைப்படுத்த வேண்டுமென்பதற்காக உதவ இச்சின்னங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கும் அதற்கென தனியான சொந்தச் சின்னமானது வடிவமைக்கப்படுகிறது.
  • 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிக்கான முதல் சின்னமாக Fun Fun என்ற சின்னமானது பயன்படுத்தப்பட்டது.

பதக்கங்களின் எண்ணிக்கை

  • இவ்விளையாட்டுப் போட்டிகளின் வரலாறு முழுவதும் உற்று நோக்குகையில் 45 தேசிய பாராலிம்பிக் குழுக்களானது பங்கேற்கின்றன.
  • 39 நாடுகள் இப்போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளதோடு, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், கம்போடியா, மாலத்தீவு மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 6 நாடுகள் இன்னும் ஒரு பதக்கத்தை கூட வெல்லவில்லை.
  • 32 நாடுகள் குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கத்தையாவது வென்றுள்ளதோடு, மேலும் ஒட்டு மொத்தமாக இதுவரை நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் சாம்பியனாக வெளிப்படும் ஒரே நாடு சீனாவாகும்.

ஆசிய பாரா விளையாட்டு 2023

  • 2022 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளானது 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் என்றும் பொதுவாக 2022 ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுகள் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது 2022 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையான பல்முறை விளையாட்டுப் போட்டியாகும்.
  • இது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 22 முதல் 28 வரை சீனாவில் உள்ள ஜெஜியாங், ஹாங்ஸோ நகரில் மாற்றுத் திறனாளி ஆசிய விளையாட்டு வீரர்களுக்காக நடைபெற்றது.
  • 2010 ஆம் ஆண்டில் குவாங்சோவில் நடைபெற்ற விளையாட்டுகளுக்குப் பிறகு, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இரண்டாவது சீன நகரமாக ஹாங்சோ உள்ளது.
  • இது முதலில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்படத் திட்டமிடப்பட்டது.
  • ஆனால் கோவிட்-19 தொற்றுநோயின் காரணமாக இப்போட்டியானது 2023 ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

போட்டிகளை நடந்திடும் புரவலன் நகரம்

  • இப்போட்டிகளின் மரபுப் படி, 2010 ஆம் ஆண்டு முதல், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளானது பொதுவாக ஒவ்வொரு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகும் ஒரே நாட்டில் நடைபெறும்.
  • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று, ஆசிய பாராலிம்பிக் குழுவானது, சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சோ நகரில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது பதிப்பினை நடத்தப் போவதாக அறிவித்தது.
  • இந்த நகரத்திற்கு இதற்கு முன்பாக 2022 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான பொறுப்பானது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் வழங்கப்பட்டது.

வளர்ச்சி மற்றும் தயார்நிலை

சின்னம்

  • 2022 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப் பூர்வச் சின்னமான "எப்போதும் முன்னோக்கி" என்பது 2020 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
  • இச்சின்னமானது சக்கர நாற்காலியில் அமர்ந்துள்ள விளையாட்டு வீரரானவர் 10 அரை-வளைவு கோடுகளுடன் ஓடும் பாதையில் முன்னோக்கிச் செல்வது போன்றும், கியான்டாங் ஆற்றின் அலைகளையும் ஒத்திருக்கிறது.
  • இந்தச் சின்னமானது "பாரா-விளையாட்டு வீரர்களின் உன்னதமான வீரத்தையும், விடாமுயற்சியுடன் கூடிய சவால் விடுவதினை" பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக இப்போட்டிகளை நடத்தும் ஏற்பாட்டுக் குழு கூறியது.

சின்னம்

  • உள்ளூர் புராணங்களில் பேரின்பத்தின் அடையாளமாக உள்ள லியாங்சு கலாச்சாரத்தின் தெய்வீகப் பறவையின் சின்னமான Fei Fei என்பதால் ஈர்க்கப்பட்டு அதனைச் சின்னமாக அறிவித்துள்ளனர்.
  • இது இவ்விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வச் சின்னமாக 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று இணைய வழியில் வெளியிடப்பட்டது.
  • முதல் "பறத்தல்" என்பது அந்தப் பறவையின் பயணமாகும்.
  • இதில் உயரமான வானமானது பறவைகள் பறக்க அனுமதிக்கிறது.
  • இது மனித சமுதாயத்தில் சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் நட்பு ஆகியவற்றின் நல்ல சூழ்நிலையைக் குறிக்கிறது.
  • இரண்டாவது "பறத்தல்" என்பது மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களின் மன நிலையினைக் குறிக்கிறது.

  • இது அதன் உடலைச் சுற்றி இறக்கைகள் முதல் கன்னங்கள் வரை லியாங்சு கலாச்சாரத்தின் வடிவத்தைக் காட்டுகிறது.
  • அதன் கிரீடத்தில் உள்ள "i" என்ற எழுத்து நுண்திறன்யும் ஹாங்சோவை இணைய நகரமாகவயம் குறிக்கிறது.
  • மகிழ்ச்சியாக இருக்கும்போது அல்லது விளையாட்டுகளை விளையாடும்போது அது கண் சிமிட்டுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் மார்பில் 45 புள்ளிகள் கொண்ட வளையமும் உள்ளது.
  • இது ஆசிய பாராலிம்பிக் குழு (APC) உறுப்பினர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதோடு, மையத்தில் இவ்விளையாட்டுப் போட்டிகளின் சின்னமும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது ஹாங்சோ பாரம்பரியத்தின் இணைவு என விவரிக்கப் படுகிறது.
  • இது தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் மகிழ்ச்சி மற்றும் கலாச்சார வேறுபாட்டின் தூதுவர் என்றும் குறிப்பிடப்பட்டது.

​​​​​​​

குறிக்கோள்

  • 2022 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ குறிக்கோளானது, "இதயங்கள் சந்திக்கின்றன, கனவுகள் பிரகாசிக்கின்றன" என்பதாகும்.
  • இச்சின்னம் வெளியிடப்பட்ட அதே நாளில்தான் இக்குறிக்கோளும் வெளியிடப் பட்டது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பொன்மொழியினைப் போலவே, இது ஆசிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பைக் குறிக்கிறது.

பதக்கங்கள்

  • 2023 ஜூலை 14 ஆம் தேதி அன்று, 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கான 100 நாள் நேர எண்ணிக்கையுடன், "Osmanthus Grace" என்ற பதக்க வடிவமைப்பும் வெளியிடப்பட்டது.
  • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்சோவின் கவிஞரால் இயற்றப்பட்ட டாங் பாடல் கவிதையிலிருந்து அதன் பெயர் பெறப்பட்டது.
  • பதக்க வடிவமைப்பானது லியாங்சு கலாச்சாரத்தின் வட்டவடிவிலான பச்சை பை மற்றும் மஞ்சள் சதுர காங் போன்ற இரண்டு வெவ்வேறு பச்சை மாணிக்கக் கற்களின் கலவையாக இருந்தது.
  • இது சொர்க்கம் மற்றும் பூமியுடன் தொடர்புடையது.
  • இச்சின்னத்தின் முகப்பானது இனிமையான ஓஸ்மந்தஸ் மலர்களால் சூழப் பட்டவாறும், பின்புறப் பகுதியானது ஹாங்சோ நகரின் மலராலும் அலங்கரிக்கப் பட்டும் ஆசிய பாராலிம்பிக் மன்றத்தின் விளையாட்டுப் பதிப்புகளின் சின்னமானது காணப்படுகிறது.
  • இது இவ்விளையாட்டுப் போட்டிகளின் பெயரானது சீன மற்றும் ஆங்கில மொழியில் பிரெய்லி எழுத்துக்களால் சூழப்பட்டுள்ளவாறு வடிவமைக்கப் பட்டுள்ளது.

விளையாட்டு

  • இந்த விளையாட்டுப் போட்டிகளில் 22 பிரிவினைச் சேர்ந்த விளையாட்டுகளில் (23 துறைகளில்) 501 தங்கப் பதக்கம் தொடர்பான விளையாட்டுப் போட்டிகள் இடம் பெற்றன.
  • இந்த துறை சார்ந்தப் போட்டிகளானது பல விளையாட்டுப் போட்டிகளாக பிரிக்கப் பட்டன.
  • இதில் பாரா டேக்வாண்டோ, பாரா கேனோ மற்றும் கோ ஆகியவையும் அடங்கும்.
  • இவை விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான திட்டத்தில் முதன்முறையாக சேர்க்கப் பட்டுள்ளன.
  • முந்தையப் பதிப்பில் அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் பதிப்பில் இடம்பெறாத பார்வையற்றறோர்க்கான கால்பந்து மற்றும் படகோட்டுதல் ஆகியவையும் இதில் சேர்க்கப் பட்டுள்ளன.

  • சில போட்டிகளை நடத்துவதற்குப் போதிய சாத்தியமான இடங்கள் இல்லாத காரணத்தால் முந்தைய 3 பதிப்புகளில் நடைபெற்ற பந்துவீச்சு நிகழ்வுகளை கைவிட ஏற்பாட்டுக் குழுவானது முடிவு செய்துள்ளது.
  • இந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் பதிப்பில், 501 போட்டிகளுக்குப் பதிலாக 438 போட்டிகள் திட்டமிடப்பட்டது (2021 ஆம் ஆண்டில் 616 திட்டமிடப் பட்டு அது 2023 ஆம் ஆண்டில் 566 ஆகக் குறைக்கப் பட்டதோடு, அதுவே பின்னர் 501 விளையாட்டுப் போட்டிகளாக குறைந்தது).
  • 2020 ஆம் ஆண்டு கோடைகாலப் பாராலிம்பிக்ஸ் போட்டிகளும் நடத்த திட்டமிடப் பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு இப்போட்டிகளுக்கான திட்டத்துடன் ஒப்பிடும்போது மேற் கொள்ளப் பட்ட மாற்றங்களால் (2018 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு போட்டிகளின் எண்ணிக்கையானது 60 அதிகமாக இருந்தன (566), ஆனால் இணைக்கப் பட்ட மற்றும் அகற்றப் பட்ட போட்டிகளின் காரணமாக அதன் எண்ணிக்கையானது 501 ஆகக் குறைக்கப்பட்டது).

பங்கேற்பு

  • ஆசிய பாராலிம்பிக் குழுவில் அங்கம் வகிக்கின்ற 43 தேசிய பாராலிம்பிக் குழுக்கள் இப்போட்டிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
  • உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் அமைப்பின் (WADA) தடைகளுக்கு இணங்க, ஆசிய பாராலிம்பிக் குழுவானது வட கொரியா நாட்டினை அவர்களது தேசிய சின்னங்களை இப்போட்டிகளில் பயன்படுத்தும் அனுமதியினை மறுத்ததால், அந்நாடு இவ்விளையாட்டுகளில் இருந்து விலகியது.
  • வட கொரியா ஊக்க மருந்து விதிமுறைகளைக் கடைபிடிக்காததால் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் WADA இந்தத் தடையை விதித்தது.

​​​​​​​​​​​​​​

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்