TNPSC Thervupettagam

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் - பகுதி 2

November 11 , 2023 425 days 570 0

(For English version to this, please click here)

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2023 – இந்தியா

  • 2023 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளானது சீனாவிலுள்ள ஹாங்சோ நகரில் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது.
  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் நான்காவது பதிப்பிற்கு இந்தியாவானது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அணியினை அனுப்பியுள்ளது.
  • இதில் 191 ஆண்கள் மற்றும் 112 பெண்கள் உட்பட 303 விளையாட்டு வீரர்கள் இருந்தனர்.
  • 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பிய 190 தடகள வீரர்களில் இருந்து இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • அவர்கள் தங்களது சிறந்த செயல்பாட்டினை வெளிப்படுத்தி அவ்வாண்டு (2018) நடைபெற்ற போட்டியில், 15 தங்கம் உட்பட 72 பதக்கங்களை வென்றனர்.
  • 2023 ஆம் ஆண்டில் சீனா (521:214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம்), ஈரான் (44 தங்கம், 46 வெள்ளி, 41 வெண்கலம்), ஜப்பான் (42,49,59), கொரியா (30,33, 40) அடுத்து பதக்க எண்ணிக்கையில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது

  • 2010 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்சூ நகரில் முதல் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளானது நடைபெற்றது.
  • இதில் இந்திய தேசமானது ஒரு தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் 15வது இடத்தைப் பிடித்தது.
  • 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய தேசமானது 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கல பதக்கங்கள் என 111 பதக்கங்களுடன் சிறந்த பதக்கப் பட்டியலைப் பெற்றது
  • ஹாங்சோவில் நடைபெற்ற நான்காவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியப் பாரா தடகள வீரர்கள் தொடர்ந்து ஜொலித்து வந்தனர்.
  • ஆடவருக்கான T-47 400 மீட்டர் போட்டியில் திலீப் காவிட் 26-வது தங்கப் பதக்கத்தினை வென்றதன் மூலம் இந்தியா 100 பதக்கங்களைக் கடந்தது.
  • முன்னதாக, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய தேசமானது தனது சிறந்த தங்கப் பதக்க எண்ணிக்கையை முந்தியதோடு, 2018 ஆம் ஆண்டின் பதக்கப் பட்டியலின் எண்ணிக்கையையும் தாண்டியது.

  • சீன மக்கள் குடியரசின் நகரான ஹாங்சோவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் செயல் திட்டத்தினை இந்தியத் தடகள வீரர்கள் 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலத்துடன் 111 பதக்கங்களுடன் முடித்தனர்.
  • பதக்கங்களைத் தவிர, இந்தியப் பாரா தடகள வீரர்கள் ஹாங்சோவில் மூன்று உலக சாதனைகளையும் முறியடித்தனர்.
  • இதில் இரு வீரர்கள் தடகளப் பிரிவுகளில் ஒன்றான ஈட்டி எறிதல் பிரிவுகளில் விளையாடி உலகச் சாதனையினைப் படைத்தனர்.
  • ஆண்களுக்கான ஈட்டி எறிதல்-F46 என்ற பிரிவில் 68.60 மீட்டர் முயற்சியில் குர்ஜார் சுந்தர் சிங் என்பவர் தங்கப் பதக்கத்தினை வென்றதன் மூலம் புதிய உலக சாதனையினைப் படைத்தார்.

  • ஆண்களுக்கான ஈட்டி எறிதல்-F64 என்ற பிரிவில் 73.29 மீ முயற்சியில் சுமித் ன்டில் என்பவர் புதிய உலக சாதனையினைப் படைத்துள்ளார்.
  • 158 ரன்களுடன் மூன்றாவது உலக சாதனையினை ஆண்களின் கூட்டு அணியானது பதிவு செய்தது.
  • இந்தியா 2014 ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றப் போட்டிகளில் முறையே 15வது மற்றும் 8வது இடத்தினைப் பிடித்தது.
  • ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டுகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகள் போன்ற ஒரு பெரிய அளவிலான சர்வதேச பல்முறை விளையாட்டுப் போட்டிகளின் மத்தியில் 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்களை இந்திய தேசமானது வென்றது.
  • நான்கு தங்கப் பதக்கங்கள் உட்பட 21 பதக்கங்களுடன், இந்திய வீராங்கனைகள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர்.
  • இந்திய அணி சதுரங்கப் போட்டி மற்றும் வில்வித்தை ஆகிய போட்டிகளில் தலா எட்டு பதக்கங்களையும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆறு பதக்கங்களையும் பெற்றது.
  • இறுதி நாள் அன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவானது 4 தங்கப் பதக்கம் உட்பட 12 பதக்கங்களைக் குவித்தது.
  • சதுரங்கப் போட்டியில் ஏழு பதக்கங்களையும், தடகளப் போட்டிகளில் நான்கு பதக்கங்களையும், படகோட்டுதல் போட்டிகளில் ஒரு பதக்கத்தையும் இந்திய அணி வென்றது.
  • F55 என்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 33.69 மீ. தூரம் ஈட்டியினை எறிந்து தங்கப் பதக்கத்துடன் நீரஜ் யாதவ் இவ்விளையாட்டுப் போட்டியில் சாதனையினைப் படைத்தார்.

  • அதே போட்டியில், சகநாட்டவரான தேக் சந்த் என்பவர் 30.36 மீட்டர் தூரம் வரை ஈட்டியினை எறிந்து வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • ஆடவருக்கான 400மீ T47 போட்டியில் 49.48 வினாடிகளில் ஓடி வெற்றிபெற்ற திலிப் மஹது கவியோட் தனது பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு தங்கப் பதக்கத்தினைச் சேர்த்தார்.
  • பூஜா என்பவர் இறுதி தடகளப் போட்டிகளில் பதக்கத்தை வென்றதோடு, பெண்களுக்கான 1500 மீட்டர் T20 விளையாட்டுப் போட்டிகளில் 5:38.81 என்ற வினாடிகளில் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • சதுரங்க விளையாட்டு வீரர்கள் இறுதி நாளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட ஏழு பதக்கங்களை இறுதி வரை போராடிச் சிறப்பாக விளையாடினர்.

  • ஆடவருக்கான தனிநபர் குறுகிய கால விளையாட்டுப்போட்டியான VI-B1 போட்டியில் சதீஷ் இனானி தர்பன் தங்கம் வென்றனர்,
  • அதே சமயம் இதில் பிரதான் குமார் சௌந்தர்யா மற்றும் அஷ்வின்பாய் காஞ்சன்பாய் மக்வானா ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.
  • மூவர் அணியும் தங்கப் பதக்கத்தினை வென்றது.
  • ஆடவருக்கான தனிநபர் குறுகிய கால விளையாட்டுப் போட்டியான VI-B2/B3 போட்டியில் கிஷன் கங்கோலி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
  • இதே விளையாட்டுப் போட்டியில் கங்கோலி, சோமேந்திரா, ஆர்யன் பால்சந்திரா ஜோஷி ஆகியோர் அடங்கிய குழுவானது வெண்கலப் பதக்கத்தினை வென்றது.
  • பெண்களுக்கான விரைவு விளையாட்டுப் போட்டியான VI-B1 விளையாட்டு அணிப் பிரிவில் வ்ருத்தி சாகன்லால் ஜெயின், ஹிமான்ஷி பாவேஷ் குமார் ரதி, சமஸ்கிருதி விகாஸ் மோர் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.
  • அனிதா மற்றும் கொங்கனபள்ளே நாராயணா ஆகியோர் PR3 கலப்பு இரட்டையருக்கான துடுப்பு படகோட்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற நிலையில், இதன் மூலம் இந்தியாவுக்குப் படகோட்டுதல் போட்டிகளில் தனிப் பதக்கம் கிடைத்துள்ளது.
  • டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட 51 விளையாட்டு வீரர்கள் உட்பட எந்தப் பதிப்பிலும் இல்லாத அளவுக்கு 313 போட்டியாளர்களை ஹாங்சோவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பியது.
  • படகோட்டுதல், சிறு படகுசெலுத்துதல், புல்வெளி பந்துவீச்சு, டைக்குவாண்டோ (தற்காப்புக்கலை), பார்வையற்றோர்க்கான கால்பந்து விளையாட்டுகள் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 17 விளையாட்டுப் போட்டிகளில் இந்திய தேசமானது முதல் முறையாக போட்டியிட்டது.
  • ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 43 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 4,000 போட்டியாளர்கள் 22 விளையாட்டுப் போட்டிகளில் 566 தங்கப் பதக்கங்கள் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 9-15 ஆம் தேதிகளுக்கிடையில் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளானது ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டது.
  • ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அது ஒரு வருடத்திற்கு பிறகு நடத்தப் பட்டது.

நாட்கள் வாரியாக இந்தியாவின் பதக்கம் வென்றவர்கள்

  • 2023 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக போட்டிகளுக்குச் சென்ற இந்தியக் குழுவானது அதன் பிரகாசமான சிறப்பியல்புகளோடு போட்டிகளில் கலந்து கொள்ள தொடங்கியது.
  • பெண்களுக்கான படகோட்டுதல் VL2 போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியினைத் தொடங்கியது.
  • பாரா தடகள வீராங்கனையான பிராச்சி யாதவ் என்பவர் படகோட்டுதல் போட்டியின் தூரத்தினை 1:03.147 வினாடிகளில் கடந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தினை வென்றார்.

  • அதன் பிறகு விரைவில், 29 வயதினை அடைந்த பிரணவ் சூர்மா என்ற விளையாட்டு வீரர் 30.01 மீட்டர் என்ற முயற்சியுடன் ஆசிய பாரா விளையாட்டு சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தினையும், தரம்பீர் (28.76 மீ) மற்றும் அமித் குமார் (26.93 மீ) முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
  • அதுமட்டுமின்றி, ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டிகளின் T63 பிரிவில் மூன்று இந்தியர்கள் 1-2-3 என்ற கணக்கில் அப்போட்டியை முடித்தனர், ஆனால் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் மட்டுமே ஆசியப் பாராலிம்பிக் குழுவின் (APC) விதிகளின் படி, வழங்கப்படுகிறது.
  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஷைலேஷ் குமார் 1.82 மீட்டர் என்ற கணக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு (1.80 மீட்டர்) என்பவர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
  • ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டிகளின் பிரிவான T47 வகுப்பில் இந்தியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தினை நிஷாத் குமார் என்பவர் 2.02 மீட்டர் உயரத்தினைத் தாண்டி வென்ற நிலையில், சகநாட்டவரான ராம் பால் 1.94 மீட்டர் உயரம் தாண்டுதல் முயற்சியில் வெண்கலப் பதக்கத்தினையும் வென்றார்.

  • பாரா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா என்பவர் இந்தியாவின் நான்காவது தங்கப் பதக்கத்தினைக் கைப்பற்றினார்.
  • பெண்களுக்கான 10 மீட்டர் அழுத்தப்பட்ட காற்றினைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் படும் துப்பாக்கி சுடுதல் போட்டியின் நிலைப்பாடான SH1 பிரிவின் இறுதிப் போட்டியில் அவனி 249.6 புள்ளிகளைப் பதிவு செய்து 247.0 என்ற பழைய விளையாட்டுச் சாதனையை முறியடித்தார்.
  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 5000 மீ-T11 என்ற போட்டி பிரிவில் இந்தியாவினைச் சேர்ந்த அங்கூர் தாமா என்பவர் ஐந்தாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
  • இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்ததால் படகோட்டுதல் போட்டியில் பிராச்சி யாதவும் மற்றும் தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜியும் தலா ஒரு தங்கப் பதக்கத்தினை வென்றனர்.
  • முந்தைய நாள் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்றதைத் தொடர்ந்து பிராச்சி பெற்ற இரண்டாவது பதக்கமாக இது காணப் படுகிறது.
  • மேலும் அவரது கணவரான மணீஷ் கவுரவ் என்பவரும் படகோட்டுதல் போட்டிப் பிரிவில் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
  • பின்னர் ஆடவருக்கான விளையாட்டுப் போட்டிகளில் 5000 மீ-T13 பிரிவில் ஷரத் மாகனஹள்ளி சங்கரப்பா என்பவர் தங்கப்பதக்கத்தினை வென்று இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கையை 9 ஆக உயர்த்தினார்.

  • பின்னர் அது இந்தியாவின் நீரஜ் யாதவ், யோகேஷ் கதுனியா மற்றும் முத்துராஜா ஆகியோர் இணைந்து ஒரே போட்டியில் அனைத்துப் பதக்கங்களையும் வென்று அரங்கச் சிறப்பு விழாவில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தனர்.
  • ஆடவருக்கான வட்டு எறிதல் போட்டியில் F54/55/56 என்ற பாய்ச்சலில் முத்து என்பவர் தங்கப் பதக்கத்தினைப் பெற்றுத் தந்தார்.
  • இதன் மூலம் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
  • ஷரத் சங்கரப்பா மகனஹள்ளி பெற்ற தங்கப்பதக்கமும் முதலில் கணக்கிடப்பட்டு இந்தியாவின் பதக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
  • ஆனால் இந்தப் போட்டியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே இருந்ததால் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை ஒன்பதாகக் குறைக்கப் பட்டது.
  • மூன்றுக்கும் குறைவான போட்டியாளர்கள் இருக்கும் சந்தர்ப்பங்களில் பதக்கங்களை வழங்குவது குறித்த முடிவுகளானது தொழில்நுட்பப் பிரதிநிதிகளின் குழுவினால் மேற்கொள்ளப்படும் என ஆசிய பாராலிம்பிக்ஸ் குழுவின் விதிப் புத்தகமானது குறிப்பிடுகிறது.
  • 3வது நாளில் இந்தியா 30 பதக்கங்களை குவித்தது.
  • இதில் அனைத்து ஆறு தங்கமும் தடகளப் போட்டியிலிருந்துப் பெறப்பட்டது.
  • ஈட்டி எறிதல் போட்டிப் பிரிவான F64 என்பதில் தற்போதைய பாராலிம்பிக்ஸ் சாம்பியனான சுமித் ன்டில் என்பவர் 73.29 மீட்டர் முயற்சியுடன் தங்கம் வெல்லும் நோக்கோடு உலகச் சாதனையைச் சிறப்பாக நிகழ்த்தினார்.

  • மற்றொரு இந்திய வீரரான புஷ்பேந்திர சிங் என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் 62.06 மீட்டர் தூரம் ஈட்டியினை எறிந்து வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஒரே பதிப்பில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையினை அங்கூர் தாமா பெற்றார்.
  • ஆடவருக்கான T11 தடகள விளையாட்டுக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் அவர் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
  • 4வது நாள் போட்டியானது இந்தியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக இருந்ததோடு, இந்திய நாடு எளிமையாக 72 பதக்கங்களை வென்று முந்தைய பதக்கப் பட்டியலைத் தாண்டியது.
  • இதுவரை நடைபெற்ற அனைத்து ஆசியா பாரா விளையாட்டுப்போட்டிகளின் பதிப்புகளிலும் இல்லாத வகையில் இந்தியா தேசமானது அதிக பதக்கங்களை வென்றுள்ளது.
  • அன்றைய தினமானது இந்திய தேசமானது 82 பதக்கங்களை வென்றதுடன்  முடிவடைந்தது.
  • மூன்று தங்கப் பதக்கம் உட்பட 18 பதக்கங்களையும் இந்தியா வென்றது.
  • ஆடவருக்கான F46 என்ற குண்டு எறிதல் விளையாட்டுப் பிரிவில் சச்சின் சர்ஜேராவ் கிலாரி என்பவர் 16.03 மீட்டர் தூரம் வரை குண்டினை எறிந்து முதல் தங்கப் பதக்கத்தையும், ரோஹித் குமார் 14.56 மீட்டர் தூரம் வரை குண்டினை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

  • பாரா துப்பாக்கி சுடுதல் வீரரான சித்தார்த்த பாபு R6 கலப்பு 50 மீட்டர் சூழல் துப்பாக்கி சுடுதல் SH1 என்ற போட்டிப் பிரிவில் மற்றொரு தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • சீன வீரர்களான லின் யுஷன் மற்றும் ஏய் சின்லியாங்கின் அணியினை ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமாரின் ஒன்றிணைந்த கலப்பு அணியானது தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது.
  • இறுதி நாளான 5வது நாளில், இந்திய தேசமானது ஏழு தங்கம் உட்பட 17 பதக்கங்களை வென்றது.
  • இதன் மூலம் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கையானது 99 ஆக உயர்ந்துள்ளது.
  • பாரா வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி என்பவர் பெண்களுக்கான வில்வித்தைப் போட்டியில் தனித் தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • தற்போதைய பாராலிம்பிக் சாம்பியனான பிரமோத் பகத் ஒற்றையர் பிரிவினருக்கான SL3 பிரிவில் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
  • டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்ற IAS அதிகாரியான சுஹாஸ் லலினகெரே யதிராஜ் என்பவர் SL4 என்ற விளையாட்டுப் போட்டிப் பிரிவின் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்றதன் மூலம் கடந்த பதிப்பில் பெற்ற தனது வெண்கலப் பதக்கத்திலிருந்து மேம்படுத்தியுள்ளார்.

  • இப்போட்டியின் ஆறாவது மற்றும் கடைசி நாளில், இந்திய தேசமானது நான்கு தங்கம் உட்பட 12 பதக்கங்களைச் சேர்த்தது.
  • சதுரங்கப் போட்டியில் ஏழு பதக்கங்களையும், தடகளப் போட்டியில் நான்கு பதக்கங்களையும், படகோட்டுதல் போட்டியில் ஒரு பதக்கத்தையும் இந்திய அணியினர் பெற்றனர்.
  • ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் F55 பிரிவில் நீரஜ் யாதவ் என்பவர் தங்கம் வென்று இந்தியாவுக்கான இறுதி நாளைத் தொடங்கினார்.
  • இதே போட்டியில் 30.36 மீட்டர் தூரம் ஈட்டியினை எறிந்து இந்திய நாட்டைச் சேர்ந்த தேக் சந்த் என்பவர் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • ஆடவருக்கான T47 விளையாட்டுப் பிரிவை சேர்ந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தினை 49.48 வினாடிகளில் கடந்து திலீப் மஹது காவிட் மற்றொரு தடகளப் போட்டியில் தங்கத்தினை வென்றார்.

  • சதுரங்கப்போட்டி விளையாட்டு வீரர்கள் இரண்டு தங்கப்பதக்கம் உட்பட ஏழு பதக்கங்களுடன் கடைசியாக சிறபாக விளையாடினர்.
  • ஆடவருக்கான தனிநபர் விரைவுப் போட்டியில் VI-B1 பிரிவில் சதீஷ் இனானி தர்பன் என்பவர் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா அனைத்து மூன்று பதக்கங்களையும் வென்றது.
  • பிரதான் குமார் சௌந்தர்யா மற்றும் அஷ்வின்பாய் கஞ்சன்பாய் மக்வானா ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.
  • மூவரைக் கொண்ட அணியும் தங்கப் பதக்கத்தினை வென்றது.
  • இவற்றைத் தவிர, ஹாங்சோவில் நடைபெற்ற பல்முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியத் தடகள வீரர்கள் மீண்டும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினர்.

 

2023 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களின் பட்டியல்கள் – இந்தியா

No.

Athlete

Sport

Event

Medal

1

Ankur Dhama

Athletics

Men’s 5000m-T11

Gold

2

Nishad Kumar

Athletics

Men’s High Jump-T47

Gold

3

Ram Pal

Athletics

Men’s High Jump-T47

Silver

4

Shailesh Kumar

Athletics

Men’s High Jump-T63

Gold

5

Mariyappan Thangavelu

Athletics

Men’s High Jump-T63

Silver

6

Monu Ghangas

Athletics

Men’s Shot Put-F11

Bronze

7

Pranav Soorma

Athletics

Men’s Club Throw-F51

Gold

8

Dharambir

Athletics

Men’s Club Throw-F51

Silver

9

Amit Kumar

Athletics

Men’s Club Throw-F51

Bronze

10

Prachi Yadav

Canoe

Women’s VL2

Silver

11

Kapil Parmar

Judo

Men -60kg J1

Silver

12

Kokila

Judo

Women -48kg J2

Bronze

13

Avani Lekhara

Shooting

Women’s 10m Air Rifle Standing SH1

Gold

14

Rudransh Khandelwal

Shooting

Mixed 50m Pistol SH1

Silver

15

Aruna

Taekwondo

Women’s K44 -47kg

Bronze

16

Praveen Kumar

Athletics

Men’s High Jump-T64

Gold

17

Unni Renu

Athletics

Men’s High Jump-T64

Bronze

18

Ekta Bhyan

Athletics

Women’s Club Throw-F32/51

Bronze

19

Simran

Athletics

Women’s 100m-T12

Silver

20

Deepthi Jeevanji

Athletics

Women’s 400m-T20

Gold

21

Ajay Kumar

Athletics

Men’s 400m-T64

Silver

22

Manish Kaurav

Canoe

Men’s KL3

Bronze

23

Prachi Yadav

Canoe

Women’s KL2

Gold

24

Gajendra Singh

Canoe

Men’s VL2

Bronze

25

Neeraj Yadav

Athletics

Men’s Discus Throw-F54/55/56

Gold

26

Yogesh Kathuniya

Athletics

Men’s Discus Throw-F54/55/56

Silver

27

Muthuraja

Athletics

Men’s Discus Throw-F54/55/56

Bronze

28

Ravi Rongali

Athletics

Men’s Shot Put-F40

Silver

29

Pramod

Athletics

Men’s 1500m-T46

Silver

30

Rakesh Bhaira

Athletics

Men’s 1500m-T46

Bronze

31

Ashok

Powerlifting

Men’s -65kg

Bronze

32

Rudransh Khandelwal

Shooting

Men’s 10m Air Pistol SH1

Silver

33

Manish Narwal

Shooting

Men’s 10m Air Pistol SH1

Bronze

34

Rubina Francis

Shooting

Women’s 10m Air Pistol SH1

Bronze

35

Team India

Archery

Men’s Doubles Recurve – Open

Bronze

36

Team India

Archery

Women’s Doubles Compound – Open

Silver

37

Team India

Archery

Men’s Doubles Compound – Open

Silver

38

Pooja

Athletics

Women’s Discus Throw-F54/55

Silver

39

Sumit

Athletics

Men’s Javelin Throw Throw-F64

Gold

40

Pushpendra Singh

Athletics

Men’s Javelin Throw Throw-F64

Bronze

41

Haney

Athletics

Men’s Javelin Throw Throw-F37/38

Gold

42

Narayan Thakur

Athletics

Men’s 200m-T35

Bronze

43

Shreyansh Trivedi

Athletics

Men’s 200m-T37

Bronze

44

Soman Rana

Athletics

Men’s Shot Put-F57

Silver

45

Hokato Sema Hotozhe

Athletics

Men’s Shot Put-F57

Bronze

46

Sundar Singh Gurjar

Athletics

Men’s Javelin Throw Throw-F46

Gold

47

Rinku

Athletics

Men’s Javelin Throw Throw-F46

Silver

48

Ajeet Singh

Athletics

Men’s Javelin Throw Throw-F46

Bronze

49

Ankur Dhaka

Athletics

Men’s 1500m-T11

Gold

50

Rakshitha Raju

Athletics

Women’s 1500m-T11

Gold

51

Lalitha Killaka

Athletics

Women’s 1500m-T11

Silver

52

Sharath Makanahalli

Athletics

Men’s 1500m-T13

Silver

53

Balwant Singh Rawat

Athletics

Men’s 1500m-T13

Bronze

54

Nimisha Suresh

Athletics

Women’s Long Jump-T47

Gold

55

Pramod Bhagat / Manisha Ramadass

Badminton

Mixed Doubles SL3-SU5

Bronze

56

Manasi Joshi

Badminton

Women’s Singles SL3

Bronze

57

Sivarajan Solaimalai / Nithya Sre Sumathy Sivan

Badminton

Mixed Doubles SH6

Bronze

58

Nitesh Kumar / Thulasimathi Murugesan

Badminton

Mixed Doubles SL3-SU5

Bronze

59

Mandeep Kaur

Badminton

Women’s Singles SL3

Bronze

60

Vaishnavi Puneyani

Badminton

Women’s Singles SL4

Bronze

61

Zainab Khatoon

Powerlifting

Women’s -61kg

Silver

62

Kumari Raj

Powerlifting

Women’s -61kg

Bronze

63

Bhavina Patel

Table Tennis

Women’s Singles – Class 4

Bronze

64

Sandeep Dangi

Table Tennis

Men’s Singles – Class 1

Bronze

65

Adil Mohamed Nazir Ansari / Naveen Dalal

Archery

Men’s Doubles – W1 Open

Bronze

66

Sheetal Devi / Rakesh Kumar

Archery

Mixed Team Compound – Open

Gold

67

Narayan Thakur

Athletics

Men’s 100m-T35

Bronze

68

Sachin Sarjerao Khilari

Athletics

Men’s Shot Put-F46

Gold

69

Rohit Kumar

Athletics

Men’s Shot Put-F46

Bronze

70

Shreyansh Trivedi

Athletics

Men’s 100m-T37

Bronze

71

Bhagyashri Jadhav Madhavrao

Athletics

Women’s Shot Put-F34

Silver

72

Monu Ghangas

Athletics

Men’s Discus Throw-F11

Silver

73

Simran

Athletics

Women’s 200m-T12

Silver

74

Manisha Ramadass

Badminton

Women’s Singles SU5

Bronze

75

Nithya Sre Sumathy Sivan

Badminton

Women’s Singles SH6

Bronze

76

Pramod Bhagat / Sukant Indukant Kadam

Badminton

Men’s Doubles SL3-SL4

Bronze

77

Sukant Indukant Kadam

Badminton

Men’s Singles SL4

Bronze

76

Krishna Nagar / Sivarajan Solaimalai

Badminton

Men’s Doubles SH6

Bronze

79

Himanshi Bhaveshkumar Rathi

Chess

Women’s Individual Standard VI-B1

Bronze

80

Mandeep Kaur / Manisha Ramadass

Badminton

Women’s Doubles SL3-SU5

Bronze

81

Nithya Sre Sumathy Sivan / Rachana Shaileshkumar Patel

Badminton

Women’s Doubles SH6

Bronze

82

Sidhartha Babu

Shooting

R6 – Mixed 50m Rifle Prone SH1

Gold

83

Rakesh Kumar

Archery

Men’s Individual Compound – Open

Silver

84

Sheetal Devi

Archery

Women’s Individual Compound – Open

Gold

85

Raman Sharma

Athletics

Men’s 1500m-T38

Gold

86

Solairaj Dharmaraj

Athletics

Men’s Long Jump-T64

Gold

87

Manu

Athletics

Men’s Shot Put-F37

Bronze

88

Pradeep Kumar

Athletics

Men’s Javelin Throw-F54

Silver

89

Laxit

Athletics

Men’s Javelin Throw-F54

Bronze

90

Lakshmi

Athletics

Women’s Discus Throw-F37/38

Bronze

91

Pramod Bhagat

Badminton

Men’s Singles SL3

Gold

92

Nitesh Kumar

Badminton

Men’s Singles SL3

Silver

93

Yathiraj Suhas Lalinakere

Badminton

Men’s Singles SL4

Gold

94

Krishna Nagar

Badminton

Men’s Singles SH6

Silver

95

Nitesh Kumar/Tarun

Badminton

Men’s Doubles SL3-SL4

Gold

96

Chirag Baretha/Raj Kumar

Badminton

Men’s Doubles SU5

Silver

97

Thulasimathi Murugesan

Badminton

Women’s Singles SU5

Gold

98

Thulasimathi Murugesan/Manasi Joshi

Badminton

Women’s Doubles SL3-SU5

Silver

99

Suyash Narayan Jadhav

Swimming

Men’s 50m Butterfly-S7

Bronze

100

Neeraj Yadav

Athletics

Men’s Javelin Throw Throw-F55

Gold

101

Tek Chand

Athletics

Men’s Javelin Throw Throw-F55

Bronze

102

Dilip Mahadu Gavit

Athletics

Men’s 400m-T47

Gold

103

Pooja

Athletics

Women’s 1500m-T20

Bronze

104

Satish Inani Darpan

Chess

Men’s Individual Rapid VI-B1

Gold

105

Kumar Pradhan Soundarya

Chess

Men’s Individual Rapid VI-B1

Silver

106

Ashwinbhai Kanchanbhai Makwana

Chess

Men’s Individual Rapid VI-B1

Bronze

107

Kishan Gangolli

Chess

Men’s Individual Rapid VI-B2/B3

Bronze

108

Satish Inani Darpan/Kumar Pradhan Soundarya/Ashwinbhai Kanchanbhai Makwana

Chess

Men’s Team Rapid VI-B1

Gold

109

Aryan Joshi/Somendra/Kishan Gangolli

Chess

Men’s Team Rapid VI-B2/B3

Bronze

110

Vruthi Saganlal Jain/ Himanshi Bhaveshkumar Rathi/ Sanskruti Vikas More

Chess

Women’s Team Rapid VI-B1

Bronze

111

Anita/Konganapalle Narayana

Rowing

PR3 Mixed Double Sculls – PR3 Mix2x

Silver

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்