TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுகள் - பகுதி 3

October 23 , 2023 269 days 435 0

(For English version to this please click here)

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கங்கள்

  • ஆசிய நாடுகளுக்கிடையே நட்புறவினை வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டு "Heart to Heart, @Future" என்ற பொன்மொழியினை 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியானது தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியின் பதக்கமானது "ஷான் சுய்" (ஏரி மற்றும் மலை) என்ற பெயருடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது லியாங்சு கலாச்சாரத்தினைப் பிரதிபலிக்கும் ஜேட் காங்கால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப் பட்டது.
  • இது முதலில் முந்தைய ஆண்டிற்காக திட்டமிடப்பட்டது.
  • கோவிட்-19 தொற்றுநோயின் உலகளாவியத் தாக்கத்தின் காரணமாக இந்தப் போட்டியானது மீண்டும் திட்டமிடப்பட்டது.

  • இது மிக உயர்ந்த அளவிலான போட்டிகளில் மிக ஆவலாக பங்கேற்பதற்காக ஆசியா முழுவதிலும் உள்ள தடகள மற்றும் பிற விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்கிறது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியானது ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாகும்.
  • இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
  • இது ஆசிய ஒலிம்பிக் மன்றத்தால் (OCA) ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப் படுகின்றன.
  • ஒன்றோடொன்று இணைந்த வளையங்களுடன் உதிக்கும் சூரியனை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக அறிவித்துள்ளனர்.
  • இது சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • வில்வித்தை, கலை நீச்சல், குத்துச்சண்டை, உடைத்தல், ஹாக்கி, நவீன பென்டத்லான் (ஐந்து போட்டிகளை உள்ளடக்கியது), படகோட்டம், டென்னிஸ் மற்றும் நீர்ப் பந்தாட்டம் ஆகிய போட்டிகளானது ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளாக செயல்படும்.
  • மேற்கண்ட அந்த ஒன்பது விளையாட்டுகளில் வெற்றி பெற்ற வீரர்கள், 2024 ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெறுவதற்கான ஒதுக்கீட்டு இடங்களையும் பெறுவார்கள்.

இந்தியா மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறுவன உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது.
  • முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய பெருமை வாய்ந்த நாடும் இந்தியா ஆகும்.
  • 1982 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், 9வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளும்  புதுதில்லியில் நடைபெற்றது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முதல் சின்னமாக இந்திய யானையான அப்பு என்ற சின்னம் பயன்படுத்தப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 655 பேர் கொண்ட குழுவானது இந்தியா சார்பாக அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
  • ஆனால், 14 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய பதக்கப் பட்டியலையும், மறக்க முடியாத சில நினைவுகளையும் ஆசியாட் வழங்காமல் இல்லை.

  • இப்போட்டிகளானது செப்டம்பர் 23 ஆம் தேதி தொடக்க விழாவுடன் ஆரம்பிக்கப் பட்டது.
  • இருப்பினும், பல அணிகளைப் போலவே, இந்தியாவும் செப்டம்பர் 19 முதல் பங்கேற்றது.
  • துல்லியமாக 107 பதக்கங்கள் என்ற வகையில் இந்தியத் தடகள விளையாட்டு வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை நாட்டிற்குப் பெற்றுத் தந்துள்ளனர்,.
  • இந்தியாவானது 100 பதக்கங்களின் பட்டியலைக் கடந்தது இதுவே முதல் முறை ஆகும்.
  • விளையாட்டுப் போட்டிகளின் ஒரே பதிப்பில் 100 பதக்கங்களை எட்டிய நான்காவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
  • 2023 விளையாட்டுப் போட்டிகளானது 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்களை இந்தியாவிற்குப் பெற்று தந்து முடிவடைந்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவும் அதன் பங்கேற்பும்

  • 1951 - இந்தியா ஆசிய விளையாட்டுக் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததோடு புதுதில்லியில் முதல் ஆசியப் போட்டியையும் நடத்தியது.
  • 15 தங்கம், 16 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தம் 51 பதக்கங்களை வென்று ஆசியாட்டில் 2வது இடத்தைப் பதிவு செய்தது.
  • இது ஆசியாட் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் சிறந்த பதக்கத் தரவரிசை ஆகும்.
  • 1954 – இந்தியா 1954 ஆம் ஆண்டில் 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்கள் என 17 பதக்கங்களை மட்டுமே வென்றது.
  • மணிலா விளையாட்டுப் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்தது.
  • 1958 - 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை இந்தியா வென்றது.
  • டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவானது 7வது இடத்தைப் பிடித்தது.
  • 1962 – இந்தியாவானது 1962 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் 33 பதக்கங்களை வென்றது.

  • ஜகார்த்தாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 10 தங்கம், 13 வெள்ளி, 10 வெண்கலம் என பதக்கப் பட்டியலில் 3வது இடத்தினை இந்தியாவானது பிடித்துள்ளது.
  • 1966 - நம் தேசமானது 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்கள் என 21 பதக்கங்களை வென்றுள்ளது.
  • பாங்காக்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவானது 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 1970 - இந்தியாவானது 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் என்று மொத்தமாக 25 பதக்கங்களை வென்றுள்ளது.
  • 1974 - நம் நாடானது 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 4 தங்கம், 12 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்றது.
  • தெஹ்ரான் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவானது 7வது இடத்தில் இருந்தது.
  • 1978 - இந்தியாவானது 11 தங்கம், 11 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 28 பதக்கங்களைப் பெற்றது.
  • பாங்காக்கில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் நம் தேசமானது 6வது இடத்தைப் பிடித்தது.
  • 1982 - 13 தங்கம், 19 வெள்ளி மற்றும் 25 வெண்கலம் என தேசமானது 57 பதக்கங்களை வென்றது.

  • புதுதில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவானது 5வது இடத்தைப் பிடித்தது.
  • 1986 - 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியாவானது 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என 37 பதக்கங்களை வென்றது.
  • சியோலில் நம் தேசமானது 5வது இடத்தைப் பிடித்தது.
  • 1990 – நம் நாடானது 1 தங்கம், 8 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என 23 பதக்கங்களை வென்றது.
  • பெய்ஜிங்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவானது 11வது இடத்தில் இருந்தது.
  • 1994 - இந்தியாவானது 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் என 23 பதக்கங்களை வென்றது.
  • ஹிரோஷிமாவில் நடந்த விளையாட்டின் புள்ளிவிவரப் பட்டியலில் இந்தியா 8வது இடத்தைப் பிடித்திருந்தது.
  • 1998 - 7 தங்கம், 11 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என 35 பதக்கங்களை வென்றது.
  • பாங்காக்கில் நடைபெற்ற போட்டியின் புள்ளிவிவரப் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் இருந்தது.
  • 2002 - நாடானது 11 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என 36 பதக்கங்களை வென்றது.
  • இது பூசானில் 7வது இடத்தினை வகித்தது.
  • 2006 - இந்தியாவானது 10 தங்கம், 17 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் என 53 பதக்கங்களை வென்றது.

  • தோஹாவில் நடைபெற்ற புள்ளிவிவரப் பட்டியலில் தேசமானது 8வது இடத்தில் இருந்தது.
  • 2010 - 14 தங்கம், 17 வெள்ளி மற்றும் 34 வெண்கலம் என 65 பதக்கங்களை வென்றது.
  • குவாங்சோவில் நடைபெற்ற போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியாவானது 6வது இடத்தில் இருந்தது.
  • 2014 - இந்தியாவானது 11 தங்கம், 10 வெள்ளி மற்றும் 36 வெண்கலம் என 57 பதக்கங்களை வென்றது.
  • இது இன்சியானில் நடைபெற்ற விளையாட்டில் 8வது இடத்தில் இருந்தது.
  • 2018 - 16 தங்கம், 23 வெள்ளி மற்றும் 31 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 70 பதக்கங்களை வென்றது.
  • ஜகார்த்தா மற்றும் பாலம்பேங்கில் நடைபெற்ற போட்டியில் புள்ளிவிவரப் பட்டியலில் இந்தியாவானது 8வது இடத்தில் இருந்தது.
  • 2023 - 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவானது 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
  • ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

  • இதுவரை இல்லாத வகையில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலப் பதக்கங்கள் என 107 பதக்கங்களை வென்று குவித்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனக்கென ஒரு புதிய அடித்தளத்தினை அமைத்துக் கொண்டது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையானது 3 இலக்கத்தை தாண்டியது.
  • இதன் மூலம், சீனா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு ஆகிய நாடுகளுக்குப் பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஒரே பதிப்பில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்களை வென்ற நான்காவது நாடாக இந்தியா ஆனது.
  • 570 விளையாட்டு வீரர்களை இந்தியாவின் சார்பாக இந்தோனேஷியாவின் தலைநகரான ஜாகர்த்தாவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பியது.
  • மேலும் அப்போட்டியில் இந்தியாவானது 16 தங்கப் பதக்கங்கள் உட்பட 70 பதக்கங்களுடன் திரும்பியது.
  • இது இந்தியாவின் முந்தைய பதக்கப் பட்டியலுடன் ஒப்பிடும்போது சிறந்தப் பதக்கச் சாதனையாகும்.
  • இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் ஏழு தங்கப் பதக்கங்களை வென்றதோடு 2023 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற போட்டியில் நாட்டிற்காக அதிக தங்கப் பதக்கங்களையும் பெற்றனர்.
  • 2023 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த ஏழு தங்கப் பதக்கங்களில் நான்கு உலகச் சாதனைகளுடன் பெறப்பட்டது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்