TNPSC Thervupettagam

இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெண் தலைவர்கள் – பகுதி I

May 25 , 2023 550 days 1806 0

(For the English version of this Article Please click Here)

  • அரசியலமைப்பு சபை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அமைப்பு அல்லது சபை ஆகும்.
  • இந்திய அரசியல் நிர்ணய சபையானது மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளை உள்ளடக்கியது ஆகும்.
  • 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12 பெண்கள் (பின்னர் 15) உட்பட 389 பிரதிநிதிகள் (பின்னர் 299) கொண்ட ஒரு புதிய அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது.
  • அரசியல் நிர்ணய சபையில் இருத்த பெண் உறுப்பினர்கள் அம்மு சுவாமிநாதன், தாக்சாயணி வேலாயுதன், பேகம் குத்ஸியா ஐசாஸ் ரசூல், துர்காபாய் தேஷ்முக், அன்சா ஜீவராஜ் மேத்தா, கமலா சவுத்ரி, இலீலா ராய், மாலதி சௌத்ரி, பூர்ணிமா பானர்ஜி, ராஜ்குமாரி அம்ரித் கவுர், ரேணுகா ராய், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபாளினி, விஜய லட்சுமி பண்டிட் மற்றும் அன்னி மசுகரேன் ஆகியோர் ஆவர்.

1 . அம்மு சுவாமிநாதன்

  • அம்மு சுவாமிநாதன் (Ammu Swaminathan) அல்லது அம்முக் குட்டி சுவாமிநாதன் இந்திய சுதந்திர இயக்கத்தின் போது ஒரு இந்தியச் சமூக சேவகராகவும், அரசியல் ஆர்வலராகவும், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.
  • கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அணைக்கரை என்ற ஊரில் வடக்கத்தி குடும்பத்தில் அம்முக் குட்டி பிறந்தார்.
  • இவரது தந்தை கோவிந்த மேனன் ஒரு உள்ளூர் அதிகாரியாக இருந்தார்.
  • அம்முவின் பெற்றோர் இருவரும் நாயர் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இவரது பெற்றோரருக்குப் பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் அதிலும் ஒன்பது மகள்களில் இவர் இளையவராக இருந்தார்.
  • அம்மு ஒருபோதும் பள்ளிக்குச் செல்லவில்லை, என்றாலும் வீட்டிலேயே ஒரு அடிப்படைக் கல்வியை மட்டுமே பெற்றார். அதில் மலையாளத்தில் குறைந்தபட்ச வாசிப்பு, எழுதுதல், சமையல், வீட்டைக் கவனித்தல் மற்றும் திருமண வாழ்க்கைக்குத் தயாராவது ஆகியவை அடங்கும்.
  • இவர் மிகச் சிறிய வயதிலேயே தனது தந்தையை இழந்தார்.
  • இதன் விளைவாக அம்மு 13 வயதாக இருந்த போது ​​அந்தக் காலத்தில் கேரளச் சமூகத்தால்  ஏற்றுக் கொள்ளப் பட்ட சம்பந்தம் என்ற முறைப்படி அம்முவின் தாயார் திருமண ஏற்பாடுகளைச் செய்தார்.
  • கேரள ஐயர் பிராமணரான சுப்பராம சுவாமிநாதன் அவரது மனைவி அம்முவை விட இருபது வயது மூத்தவர் ஆவார்.
  • அம்முவின் வாழ்க்கை தனது கணவரின் துணையால் மாறியது.
  • சுவாமிநாதன் தனது மனைவியின் திறமைகளை ஊக்குவித்தார்.
  • அவருக்கு ஆங்கிலம் மற்றும் பிற பாடங்களை வீட்டிலேயே கற்பிக்க ஆசிரியர்களை அவர் நியமித்தார்.
  • பின்னர் அம்மு மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவராகி இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
  • 1936 ஆம் ஆண்டில் இவர் இந்திய தேசிய காங்கிரசுக்குப் பிரச்சாரம் செய்ய இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.
  • 1920 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக அவர் கைது செய்யப் பட்டார்.
  • இவர் விடுதலைக்கு பிறகு அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • 1952 ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்திலிருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • இவர் பல கலாச்சார மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
  • இவர் இந்தியாவின் முதல் பெண்கள் அமைப்பான மதராஸ் பெண்கள் சங்கத்தின் ஆர்வலரானார்.
  • இந்திய சாரணர் சங்கத்தின் தலைவராக 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அவர் பணியாற்றினார்.
  • 1975 ஆம்  ஆண்டு நடைபெற்ற அனைத்துலகப் பெண்கள் ஆண்டின் தொடக்க விழாவில் இவர் 'ஆண்டின் தாய்' ஆகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அம்மு சுவாமிநாதன் 1978 ஆம்  ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதியன்று  இறந்தார்.

2. தாக்சாயணி வேலாயுதன்

  • தாக்சாயணி வேலாயுதன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பல்வேறு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் தலைவர் ஆவார்.
  • தாக்சாயணி வேலாயுதன் 1912 ஆம் ஆண்டு  4 ஜூலை ஆம் தேதியன்று   பிறந்தார்.
  • புலையர் சமூகத்தைச் சேர்ந்த இவர் இந்தச் சமூகத்திலிருந்து கல்வி கற்ற முதல் தலைமுறை மக்களில் ஒருவராக அறியப் படுகிறார்.
  • தாக்சாயணி எர்ணாகுளம் மாவட்டம் கணையன்னூர் வட்டத்தில் உள்ள முளவுக்காடு என்ற கிராமத்தில் 1912 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  • இவர் 1935 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் முடித்தார்.
  • மூன்று வருடங்கள் கழித்து சென்னை பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பயிற்சிப் படிப்பை அவர் முடித்தார்.
  • கொச்சி மாநில அரசின் உதவித் தொகை மூலம் இவரது படிப்பிற்கு ஆதரவு அளிக்கப் பட்டது.
  • 1935 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு  வரை திருச்சூரிலும் திருப்பூணித்துறையிலும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.
  • அவர் தனது சமூகத்திலிருந்து மேல் சீலை அணிந்த முதல் பெண், இந்தியாவின் முதல் தாழ்த்தப் பட்ட பெண் பட்டதாரி, முதல் அறிவியல் பட்டதாரி, கொச்சி சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் ஒன்பது பெண் உறுப்பினர்களில் ஒருவர் என்ற பல்வேறு நிலைகளை அடைந்தார்.
  • ஆனால் இவரது சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் மேல் ஆடை அணிந்தவர்களில் ஒருவர் என்று குறிப்பிடுவது சரியான கருத்து இல்லை என்றும், இவருடைய மூத்த சகோதரி மற்றும் இவரது தாயார் தயிதாரா மாணி ஏற்கனவே மேல் சீலை அணிந்ததாகவும் கருதப் படுகிறது.
  • இவரது தாயார் மாணி இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் வரை வாழ்ந்து 1959 ஆம் ஆண்டில் இறந்தார்.
  • 1945 ஆம் ஆண்டில் தாக்சாயணி கொச்சின் சட்டமன்றத்திற்கு என்று அம்மாநில அரசால் பரிந்துரைக்கப் பட்டார்.
  • வேலாயுதன் 1946 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு குழுவினரால் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அரசியலமைப்பு சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே பட்டியல் சாதிப் பெண் இவர் ஆவார்.
  • 1946-1952 ஆம் ஆண்டு வரை இவர் அரசியலமைப்பு நிர்ணய சபை மற்றும் இந்தியாவின் தற்காலிக நாடாளுமன்றத்தின் உறுப்பினராக பணியாற்றினார்.
  • நாடாளுமன்றத்தில் இவர் குறிப்பாக அட்டவணை சாதியினரின் கல்வி தொடர்பான விடயங்களில் சிறப்புக் கவனம் செலுத்தினார்.
  • முதல் மற்றும் ஒரே தலித் பெண் சட்டசபை உறுப்பினரான தாக்சாயணி வேலாயுதனைக் கௌரவிக்க கேரள அரசு 'தாக்சாயணி வேலாயுதன் விருதை' அறிவித்து உள்ளது.
  • இது மாநிலத்தில் மற்ற பெண்களை மேம்படுத்துவதில் பங்களித்த பெண்களுக்கு வழங்கப் படும் ஒரு விருதாகும்.
  • இந்த விருதிற்காக இரண்டு கோடி ருபாய் ஒதுக்கப்பட்டது.
  • தாக்சாயணி வேலாயுதன் 1978 ஆம்  ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதியன்று  இறந்தார்.

3. பேகம்  ஐசாஸ் ரசூல்

  • பேகம் ஐசாஸ் ரசூல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை குழுவில் இடம் பெற்ற ஒரே முஸ்லிம் பெண் ஆவார்.
  • பேகம் ரசூல் 1909 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி சர் சுல்பிகர் அலிகான் அவரது மனைவி மஹ்முதா சுல்தானாக்கும் மகளாக பிறந்தார்.
  • இவரது தந்தை சர் சுல்பிகர் பஞ்சாபில் உள்ள மலேர்கோட்லா ஆளும் சுதேச அரசின் குடும்பத்தினைச் சேர்ந்தவர் ஆவார்.
  • இவரது தாயார் மஹ்முதா சுல்தானா லோஹாருவைச் சேர்ந்த நவாப் அல்லாவுதீன் அகமது கானின் மகள்.
  • 1929 ஆம் ஆண்டில் குத்ஸியா நவாப் ஐசாஸ் ரசூல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 
  • 1937 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிட்டு உத்தரப் பிரதேச சட்ட மன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர்.
  • பேகம் ஐசாஸ் ரசூல் 1952 ஆம் ஆண்டு வரை அதன் உறுப்பினராக இருந்தார்.
  • இவர் 1937 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரை அந்தச் சபையின் துணைத் தலைவர் பதவியில் இருந்தார்.
  • 1950 ஆம் ஆண்டு முதல் 1952 ஆம் ஆண்டு வரை அவர் அந்தச் சபையில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.
  • இந்த நிலையை அடைந்த இந்தியாவின் முதல் பெண்மணி மற்றும் உலகின் முதல் முஸ்லிம் பெண்மணி இவரே ஆவார்.
  • இவரது குடும்பப் பின்னணி அரச குடும்பமாக இருந்த போதிலும், ஜமீன்தாரி ஒழிப்புக்கு இவர் வலுவான ஆதரவு அளித்தார்.
  • மதத்தின் அடிப்படையில் தனித் தொகுதிகள் வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை இவர் கடுமையாக எதிர்த்தார்.
  • 1946 ஆம் ஆண்டில் இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதோடு இதில் இறுதியாக இணைந்த 28 முஸ்லிம் லீக் உறுப்பினர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.
  • அரசியல் நிர்ணய சபையில் இவர் மட்டுமே முஸ்லிம் பெண் ஆவார்.
  • 1950 ஆம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம் லீக் கலைக்கப் பட்ட போது பேகம் ஐசாஸ் ரசூல் காங்கிரசில் சேர்ந்தார்.
  • 1952 ஆம் ஆண்டில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1969 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
  • 1969 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இவர் சமூக நலன் மற்றும் சிறுபான்மைத் துறை அமைச்சராக இருந்தார்.
  • சமூகப் பணிகளில் இவர் செய்தப் பங்களிப்புகளுக்காக வேண்டி 2000 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
  • இவர் இந்திய மகளிர் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் பதவியில் 20 ஆண்டுகள் இருந்தார்.
  • இவர் ஆசிய பெண்கள் ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
  • இவர் 2001 ஆம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியன்று இறந்தார்.

------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்