TNPSC Thervupettagam

இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெண் தலைவர்கள் – பகுதி II

May 26 , 2023 549 days 975 0

(For the English version of this Article Please click Here)

4.   துர்காபாய் தேஷ்முக்

  • துர்காபாய் தேஷ்முக்  இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், சமூக சேவகர் மற்றும் அரசியல்வாதி ஆகவும் இருந்தார்.
  • அவர் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் மற்றும் இந்தியாவின் திட்டக் குழு ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
  • துர்காபாய் தேஷ்முக் 1909 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார்.
  • 12 வயதில் அவர் ஆங்கில வழிக் கல்வியைத் திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை விட்டு வெளியேறினார்.
  • பின்னர் அவர் பெண்களுக்கான இந்திக் கல்வியை மேம்படுத்துவதற்காக என்று ராஜ முந்திரியில் பாலிகா ஹிந்தி பத்ஷாலாவைத் தொடங்கினார்.
  • 1923 ஆம் ஆண்டு தனது சொந்த ஊரான காக்கிநாடாவில் இந்தியத் தேசியக் காங்கிரஸின் மாநாட்டை நடத்திய போது, அவர் ஒரு தொண்டராகவும், காதிக் கண்காட்சியின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
  • ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் அவர் மகாத்மா காந்தி வழியைப் பின்பற்றினார்.
  • அவர் எப்போதும் நகைகள் மற்றும் ஒப்பனைப் பொருட்களை அணிந்திருந்ததில்லை என்பதோடு அவர் ஒரு சத்தியாக் கிரகியாகவும் இருந்தார்.
  • காந்தி தலைமையில் உப்புச் சத்தியாக்கிரக நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒரு முக்கிய சமூகச் சீர்திருத்தவாதியாக அவர் இருந்தார்.
  • இவர் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பெண் சத்தியாக்கிரகிகளை ஒருங்கிணைத்தார்.
  • இதனால் ஆங்கிலேய அரசு அதிகாரிகள் அவரை 1930 ஆம் ஆண்டு முதல் 1933 ஆம் ஆண்டு வரை மூன்று முறை சிறையில் அடைத்தனர்.
  • சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு துர்காபாய் தனது படிப்பைத் தொடர்ந்தார்.
  • 1930 ஆம் ஆண்டில்  ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் அவர் அரசியல் அறிவியல் துறையில் பி.ஏ மற்றும் எம்.ஏ.வை முடித்தார்.
  • 1942 ஆம் ஆண்டில் அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்புப் பட்டம் பெற சென்றார்.
  • அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.
  • துர்காபாய் பார்வையற்றவர்களுக்கான நிவாரணச் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
  • பெண்கள் விடுதலைக்கான பொதுநல ஆர்வலரான இவர், 1937ஆம் ஆண்டில் ஆந்திர மகளிர் சபையை (ஆந்திர மகளிர் மாநாடு) நிறுவினார்.
  • அவர் மத்திய சமூக நல வாரியத்தின் நிறுவனர் தலைவராகவும் இருந்தார்.
  • பின்னர் அவர் மதராஸ் மாகாணத்தில் இருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அரசியல் நிர்ணய சபையின் தலைவர்கள் குழுவில் இருந்த ஒரே பெண் இவர் தான்.
  • டாக்டர் துர்காபாய் தேஷ்முக் டெல்லியில் வசிக்கும் தெலுங்குக் குழந்தைகளின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ய 1948 ஆம் ஆண்டில் ஆந்திரக் கல்விச் சமூகத்தை (AES)  நிறுவினார்.
  • 1953 ஆம் ஆண்டில்  சி.டி. தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டார்.
  • சி.டி. தேஷ்முக் இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னராக இருந்தார்.
  • 1950 ஆம் ஆண்டு முதல் 1956  ஆம் ஆண்டு வரை சி.டி. தேஷ்முக்  இந்தியாவின் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தார்.
  • துர்காபாய்  1958 ஆம் ஆண்டில்  இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய மகளிர் கல்விக் குழுவின் முதல் தலைவராக இருந்தார்.
  • 1963 ஆம் ஆண்டு வாஷிங்டன் டி.சியில் நடைபெற்ற உலக உணவு காங்கிரஸிற்கு இந்தியாவின் உறுப்பினராக அவர் பங்கு ஏற்றார்.
  • துர்காபாய் தேஷ்முக்  1981 ஆம் ஆண்டு மே மாதம் 9 அம் தேதி  அன்று இறந்தார்.
  • விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில்  அவரை  நினைவு கூரும் வகையில் பல்கலைக் கழகத்தின்  மகளிர் ஆய்வுத் துறைக்கு டாக்டர் துர்காபாய் தேஷ்முக் பெண்கள் ஆய்வு மையம் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • துர்காபாய் தேஷ்முக் பெற்ற விருதுகள் பால் ஜி ஹாஃப்மேன் விருது, நேரு எழுத்தறிவு விருது, யுனெஸ்கோ விருது (எழுத்தறிவுத் துறையில் சிறந்தப் பணிக்காக), பத்ம விபூஷன் விருது, ஜீவன் விருது மற்றும் ஜெகதீஷ் விருது ஆகியவை ஆகும்.
  • ஆந்திரா மகிளா சபா (1938), சமூக அபிவிருத்திக் குழுமம், துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை (1962), மற்றும் புது தில்லியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி ஆகிய அனைத்து நிறுவனங்களும் துர்காபாய் அவர்களால்  நிறுவப்பட்டதாகும்.

5. அன்சா ஜீவராஜ் மேத்தா

  • அன்சா ஜீவராஜ் மேத்தா சீர்திருத்தவாதி, சமூக ஆர்வலர், கல்வியாளர், சுதந்திர ஆர்வலர், பெண்ணியவாதி மற்றும் இந்திய எழுத்தாளர் போன்ற பல்வேறு நிலைகளில் இருந்தார்.
  • அன்சா மேத்தா 1897 ஆம் ஆண்டு சூலை மாதம் 3 ஆம் தேதி அன்று ஒரு நகர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவர் பரோடா அரசைச் சேர்ந்த மனுபாய் மேத்தாவின் மகளும் மற்றும் முதல் குஜராத்திப் புதினமான கரண் கெலோவின் ஆசிரியர் நந்தசங்கர் மேத்தாவின் பேத்தியுமாவார்.
  • இவர் 1918 ஆம் ஆண்டில்  தத்துவத்தில் பட்டம் பெற்றார்.
  • அவர்  இதழியல் மற்றும் சமூகவியல் துறையைப் படிக்க இங்கிலாந்து சென்றார்.
  • 1918 ஆம் ஆண்டில் சரோஜினி நாயுடுவையும் பின்னர் 1922 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியையும் சந்தித்தார்.
  • இவர் சிறந்த மருத்துவரும் மற்றும் குஜராத்தின் முதல் முதலமைச்சராக இருந்த சிறந்த நிர்வாகியுமான ஜீவராஜ் நாராயண் மேத்தா என்பவரை மணந்தார்.
  • ஹன்சா மேத்தா வெளிநாட்டு ஆடைகள் மற்றும் மதுபானங்களை விற்கும் கடைகள் முன் மறியல் போராட்டத்திற்கு  ஏற்பாடு செய்தார்.
  • அன்சா மேத்தா மகாத்மா காந்தியின் ஆலோசனையின் படி பிற சுதந்திர இயக்க நடவடிக்கைகளிலும் பங்கேற்றார்.
  • பின்னர் அவர் 1930 ஆம் ஆண்டில்  தேஷ் சேவிகா தளத்தை நிறுவினார்.
  • 1932 ஆம் ஆண்டில் இவர் தனது கணவருடன் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இவர் மும்பை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையின் ஒரு பகுதியாக இருந்த 15 பெண்களில் இவரும் ஒருவராக இருந்தார்.
  • இவர் அடிப்படை உரிமைகள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் துணைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.
  • இவர் இந்தியாவில் உள்ள பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதிக்காக வாதிட்டார்.
  • அன்சா 1926 ஆம் ஆண்டில் மும்பை பள்ளிகள் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1945-46 ஆம் ஆண்டில் அகில இந்திய மகளிர் மாநாட்டின் தலைவரானார்.
  • ஐதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மகளிர் சங்க மாநாட்டில் தனது தலைமை உரையில், பெண்கள் உரிமைகள் சாசனத்தை முன்மொழிந்தார்.
  • இவர் 1945 முதல் 1960 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் வெவ்வேறு பதவிகளை வகித்தார்.
  • இவர் திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், அகில இந்திய இடைநிலைக் கல்வி வாரிய உறுப்பினர், இந்தியப் பல்கலைக்கழக வாரியத் தலைவர் மற்றும் பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் போன்ற பதவிகளில் பணியாற்றி உள்ளார்.
  • 1946 ஆம் ஆண்டு பெண்களின் நிலை குறித்து அணுசக்தி துணைக் குழுவில் அன்சா இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • 1950 ஆம் ஆண்டில் அன்சா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் துணைத் தலைவரானார்.
  • மேலும் இவர் யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
  • குஜாராத்தியில் அருன்னு ஆட்புத் ஸ்வப்னா (1934), பாப்லானா பரக்ரமோ (1929), பால்வர்த்தவாலி பகுதி 1-2 (1926, 1929) உட்பட பல குழந்தைகள் புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
  • வால்மீகி இராமாயணத்தில் ஆரண்ய காண்டம், பால காண்டம் மற்றும் சுந்தர காண்டம் ஆகியவற்றை இவர் மொழிபெயர்த்துள்ளார்.
  • கல்லிவரின் பயணங்கள் உட்பட பல ஆங்கிலக் கதைகள் இவரால் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
  • இவரது கட்டுரைகள் சேகரிக்கப்பட்டு கேட்லாக் லெகோ (1978) என்ற பெயரில் வெளியிடப் பட்டன.
  • அன்சா மேத்தாவுக்கு 1959 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
  • அன்சா மேத்தா 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி அன்று இறந்தார்

6. கமலா சவுத்ரி

  • கமலா சவுத்ரி  இந்தியச் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.
  • கமலா சவுத்ரி 1908 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 தேதி அன்று லக்னோவில் பிறந்தார்.
  • இவரது தந்தை ராய் மன்மோகன் தயால் ஒரு துணை ஆட்சியராக இருந்தார்.
  • அவரது தாய்வழி தாத்தா லக்னோவில் அவாத் படைகளின் தளபதியாக இருந்தாதோடு மட்டுமல்லாமல் அவர் 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற  முதல் சுதந்திரப் போரிலும் பங்கேற்றார்.
  • இவர் 1922 ஆம் ஆண்டு பிப்ரவரி  மாதத்தில் ஜே.எம். சவுத்ரியைத் திருமணம் செய்து கொண்டார்.
  • இவரது மாமியார் சுயராஜ்யக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார்.
  • இவருக்கு எழுத்தாளர் டாக்டர் ஈரா சக்சேனா மற்றும் மறைந்த மாதவேந்திர மோகன் மற்றும் டாக்டர் ஹேமேந்திர மோகன் சவுத்ரி உட்பட பல குழந்தைகள் இருந்தனர்.
  • 1930 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின் போது சவுத்ரி இந்தியத் தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.
  • அதன் பின்னர் இவர் இந்தியச் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
  • இவர் ஆங்கிலேய அதிகாரிகளால் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.
  • அகில இந்திய காங்கிரஸ் குழுவின் 54வது அமர்வின் போது மூத்த துணைத் தலைவராக இவர் செயல்பட்டார்.
  • இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணயச் சபையில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார் என்பதோடு அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் இவர் 1952 ஆம் ஆண்டு வரை இந்திய மாகாண அரசாங்கத்தின் ஒரு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • இவர் உத்தரப்பிரதேச மாநில சமூக நல ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
  • 1962 ஆம் ஆண்டு சவுத்ரி  மக்களவை உறுப்பினரானார்.
  • உன்மாத் (1934), பிக்னிக் (1936), யாத்திரை (1947) மற்றும் பெல் பத்ரா ஆகியவை இவரது கதைத் தொகுப்புகள் ஆகும்.
  • பாலினப் பாகுபாடு, விவசாயிகள் சுரண்டப் படுவது மற்றும் விதவைகளின் மோசமான நிலை ஆகியவை இவரது படைப்புகளின் முக்கிய கருப்பொருள்கள் ஆகும்.
  • கமலா சவுத்ரி 1970 ஆம் ஆண்டில்  இறந்தார்.

---------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்