TNPSC Thervupettagam

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல்களின் வரலாறு – பாகம் 6

May 12 , 2024 243 days 447 0

(For English version to this please click here)

மக்களவைக்குத் தேர்தல் முறை

பிராந்திய தொகுதிகள்:

  • ஒவ்வொரு மாநிலமும் நேரடி மக்களவைத் தேர்தலுக்காக பிராந்திய தொகுதிகளாகப் பிரிக்கப் பட்டன.
  • மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில், இட ஒதுக்கீட்டில் ஒரே சீரான தன்மையை அரசியலமைப்பு (விதி 82) உறுதி செய்கிறது.
  • இதன் மூலம் மாநிலங்களுக்கிடையேயும், தொகுதிகளுக்குள்ளும் ஒரே மாதிரியான பிரதிநிதித்துவம் பராமரிக்கப் படுகிறது.

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் மறுசீரமைப்பு:

  • ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பின்னரும் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதிப் பிரிவு திருத்தப்படும்.
  • இந்த செயல்முறையைத் தீர்மானிக்க பாராளுமன்றம் அதிகாரம் பெற்றது என்ற வகையில் இதற்காக எல்லை நிர்ணய ஆணைக்குழுச் சட்டங்களை இயற்றுகிறது.
  • மறுசீரமைப்பு நோக்கங்களுக்காக 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டன.

பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு:

  • அரசியலமைப்புச் சட்டமானது (விதி 330) மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் லோக் சபாவில் எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு இடஒதுக்கீட்டினை வழங்குகிறது.
  • ஆரம்பத்தில் இந்த இடஒதுக்கீடானது பத்து வருடங்களுக்கு செயல்படுதப்பட்டது பின்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள் அது நீட்டிக்கப்பட்டது.
  • அதே சமயம் பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்டப் பழங்குடியின உறுப்பினர்கள் பொது இடங்களிலும் போட்டியிடத் தகுதியுடையவர்கள்.
  • 84வது திருத்தச் சட்டம் (2001) மற்றும் 87வது திருத்தச் சட்டமானது (2003), மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடுகளில் திருத்தங்களை மேற்கொண்டது.

முதல்நிலை-பதவி-அமைப்பு:

  • பிராந்திய பிரதிநிதித்துவத்தின் கீழ், சட்டமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தொகுதி எனப்படும் புவியியல் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
  • ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு பிரதிநிதி மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • எனவே அத்தகையத் தொகுதி ஒற்றை உறுப்பினர் தொகுதி என அழைக்கப்படுகிறது.
  • இந்த முறையில், பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
  • எனினும் இந்த எளிய பெரும்பான்மைப் பிரதிநிதித்துவ அமைப்பு, முழு வாக்காளர்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.
  • வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது சிறுபான்மையினருக்கு (சிறு குழுக்களுக்கு) உரிய பிரதிநிதித்துவத்தை வழங்காது.

தேர்தல்கள் தொடர்பான செயல்கள்

எல்லை நிர்ணயம்

  • எல்லை நிர்ணயம் என்பது மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையாகும்.
  • எல்லை நிர்ணயக் குழு ஒரு உயர் அதிகாரம் பெற்ற அதன் ஆணைகள் ஒரு சட்டத்தின் அமலாக்கத்திற்குச் சமமான அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பாகும்.
  • இதன் ஆணைகளை எந்த ஒரு நீதிமன்றத்தாலும் கேள்வி கேட்க இயலாது.

  • இந்த மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிர்ணயிப்பது இதில் அடங்கும்.
  • அரசியலமைப்பின் 82வது மற்றும் 170வது பிரிவின்படி, மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளின் இடங்கள், அவை பிராந்திய தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் சரி செய்யப் படுகின்றன.
  • இந்தச் செயல்முறைக்குப் பாராளுமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்ட எல்லை நிர்ணய ஆணையக் குழு பொறுப்பாகும்.
  • 1951, 1961 மற்றும் 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எல்லை நிர்ணயப் பயிற்சிகள் நடந்தன.
  • எல்லை நிர்ணய ஆணையம் நான்கு முறை உருவாக்கப்பட்டது: 1952, 1963, 1973 மற்றும் 2002.

  • 1981 மற்றும் 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எல்லை நிர்ணயம் நடைபெறவில்லை.
  • 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பின்னர் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப் பட்ட போதிலும், இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

ஜம்மு காஷ்மீரில் எல்லை நிர்ணய மாற்றங்கள்:

  • வாக்காளர் பிரதிநிதித்துவத்தைச் சமநிலைப்படுத்தும் எல்லை நிர்ணயமானது, ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாநிலச் சட்டமன்றச் சட்டத்தின் காரணமாக, இரண்டு தசாப்தங்களாக நடைபெற வில்லை.
  • எனினும் சிறப்பு அந்தஸ்து ரத்து (அரசியலமைப்புப் பிரிவு 370) செய்யப்பட்டதால் அங்கு மாற்றம் ஏற்பட்டது.
  • ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை 111ல் இருந்து 107 ஆக மாற்றியது.
  • லடாக் யூனியன் பிரதேசமாக மாறியது
  • இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட 107 இடங்களாக குறைத்தது.
  • 2019 ஆம் ஆண்டுக்கு முன், நாடாளுமன்றத் தொகுதிகளில் 6 இடங்களும், சட்டமன்றத்தில் 107 இடங்களும் இருந்தன.
  • மறுசீரமைப்பிற்குப் பிறகு, இந்த இரண்டு வகை தொகுதிகளும் இந்திய அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.

எல்லை நிர்ணயச் சட்டம், 2002

  • 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தையும் மறுசீரமைப்பு மற்றும் பிராந்திய தொகுதிகளாகப் பிரிக்க வேண்டியதன் அவசியத்தை நிவர்த்தி செய்ய 2002 ஆம் ஆண்டு எல்லை நிர்ணயச் சட்டம் இயற்றப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் 82 மற்றும் 170 பிரிவுகள் எல்லை நிர்ணயச் செயல்முறையை தீர்மானிக்கப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை மறு நிர்ணயம் செய்ய அரசியலமைப்பின் 330 மற்றும் 332 பிரிவுகள் அனுமதிக்கின்றன.
  • 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போதைய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம், சீரற்ற மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் இடம்பெயர்வு தொடர்பான சிதைவுகளுக்கு வழிவகுக்கிறது.
  • 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி அளவுகளில் உள்ள வேறுபாடுகளை சரி செய்ய, எல்லை நிர்ணய ஆணையம் 2002 ஆம் ஆண்டின் படி, எல்லை நிர்ணயச் சட்டம் நிறுவப் பட்டது.
  • 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல், பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களின் எண்ணிக்கையை மறு நிர்ணயம் செய்யும் பணியை எல்லை நிர்ணய ஆணையம் மேற்கொண்டது.
  • இச்சட்டம் எல்லை நிர்ணயச் செயல்முறைக்கான வழிகாட்டுதல்களைக் கோடிட்டுக் காட்டியது.
  • எல்லை நிர்ணய ஆணையமானது ஜூலை 31, 2008 ஆம் ஆண்டிற்குள் தனது பணியை முடிக்க இலக்கு வைத்தது.
  • எல்லை நிர்ணய ஆணையத்தின் இறுதி ஆணைகள் வெளியிடப்பட்டப் பிறகு நடைபெறும் மக்களவை அல்லது மாநில சட்டமன்றத்திற்கான அனைத்துப் பொதுத் தேர்தல்களுக்கும் எல்லை நிர்ணயம் பொருந்தும்.
  • பொதுத் தேர்தல்களின் விளைவாக வரும் இடைத் தேர்தல்களும் இதில் அடங்கும்.

அரசியலமைப்புத் தேவை

  • மக்களால் ஆன அரசாங்கம் என வரையறுக்கப்படும் ஜனநாயகம், 'ஒரு குடிமகன்-ஒரு வாக்கு-ஒரு மதிப்பு' என்ற கொள்கையைக் கடைபிடித்து அதன் பெரும்பான்மையினரால் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்.
  • ஆரம்பத்தில், 1951, 1961 மற்றும் 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது, இதன் விளைவாக முறையே 494, 522 மற்றும் 543 இடங்கள் கிடைத்தன.
  • இருப்பினும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலிருந்து மக்களவை இட அதிகரிப்பானது முடக்கப் பட்டு உள்ளது.
  • இந்த நடவடிக்கையானது 2000 ஆம் ஆண்டு வரை 42வது திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப் படுத்தப்பட்டது மற்றும் 84 வது திருத்தச் சட்டத்தால் 2026 வரை அது நீட்டிக்கப்பட்டது.
  • இதன் விளைவாக, இட ஒதுக்கீடு தற்போது 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட மக்கள் தொகையைச் சார்ந்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு இந்த ஒதுக்கீட்டை மறுசீரமைக்கத் திட்டங்கள் உள்ளன.
  • 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, இட ஒதுக்கீடுகளின் எண்ணிக்கையை மாற்றாமல், பிராந்தியத் தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப் பட்டாலும், 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதே போன்ற சீரமைப்பு நிகழும்.
  • ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள், தொகுதி எல்லைகள் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கப்பட்ட இடங்களை உள்ளடக்கிய எல்லை நிர்ணய செயல்முறையானது பொதுவாக 2031 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தும்.
  • எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்தி வைக்கப்படுவதாலும், 2026 ஆம் ஆண்டை நெருங்கி வருவதாலும் வரவிருக்கும் எல்லை நிர்ணயம் குறித்த விவாதங்கள் வெளி வந்துள்ளன.

சிக்கல்கள்

  • மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முடக்கப் பட்டன.
  • நம் நாட்டில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களை விட உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் கடந்த ஐந்து தசாப்தங்களாக ஏற்பட்ட மக்கள்தொகை வெடிப்பு சமமற்றதாக உள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு நிலவரப்படி பல்வேறு மாநிலங்களின் கணிக்கப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் திருத்தப்பட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான இரண்டு விருப்பங்கள் பொது களத்தில் விவாதிக்கப்படுகின்றன.
  • முதலாவதாக, தற்போதுள்ள 543 இடங்களைத் தொடர்வது மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே அவற்றின் மறுபகிர்வு (அட்டவணை 1).
  • இரண்டாவதாக, பல்வேறு மாநிலங்களுக்கிடையே விகிதாச்சார அதிகரிப்புடன் இட ஒதுக்கீடுகளின் எண்ணிக்கையை 848 ஆக அதிகரிப்பது (அட்டவணை 2).

  • உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற பெரிய வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தென் மாநிலங்கள், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற சிறிய வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பின்தங்கி இருக்கலாம்.
  • கூட்டாட்சிக் கொள்கைகளின் சாத்தியமான மீறல் மற்றும் குறைந்தப் பிரதிநிதித்துவத்தை எதிர் கொள்ளும் மாநிலங்களில் மக்கள் மத்தியில் அதிருப்தி உணர்வுகள் ஏற்படலாம்.
  • 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் முடக்கம் என்ற தத்துவத்துடன் இது முரண்படுகிறது, ஏனெனில் சிறந்த மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைக் கொண்ட மாநிலங்கள் அரசியல் முக்கியத்துவத்தை இழக்கின்றன.

சர்வதேச நடைமுறைகள்

  • அமெரிக்காவில், 1913 ஆம் ஆண்டு முதல் பிரதிநிதிகள் அவையின் இட ஒதுக்கீடு 435 ஆக இருந்தது.
  • 1911 ஆம் ஆண்டில் 9.4 கோடியாக இருந்த மக்கள் தொகை 2023 ஆம் ஆண்டில் 33.4 கோடியாக உயர்ந்தது.
  • அங்கு குறைந்தபட்ச மாற்றங்களுடன் ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும், 'சம விகிதாச்சார' முறையின் மூலம் இட ஒதுக்கீடு மறுபகிர்வு செய்யப்பட்டது.
  • எ.கா., மக்கள்தொகை கணக்கெடுப்பு 2020: 37 மாநிலங்கள் மாற்றமில்லை, டெக்சாஸ் அதன் பிரதிநிதித்துவத்தை இரண்டு இடங்கள் அதிகரித்தது, அதே நேரத்தில் ஐந்து மாநிலங்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தில் கூடுதல் இடத்தைப் பெற்றன. இதற்கு மாறாக, ஏழு மாநிலங்களில் தலா ஒரு இடங்கள் குறைக்கப்பட்டன.
  • ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் (720 உறுப்பினர்கள்), 27 நாடுகளுக்கு 'தேய்வு விகிதாச்சாரத்தின்' மூலம் இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
  • மக்கள்தொகை வளர்ச்சியுடன், மக்கள்தொகை-இடஒதுக்கீட்டின் விகிதம் அதிகரிக்கிறது.
  • உதாரணமாக, டென்மார்க்கில் (மக்கள் தொகை: 60 லட்சம்) 15 இடங்கள் உள்ளன, இதன் விளைவாக ஒரு உறுப்பினருக்கு சராசரி மக்கள் தொகை சுமார் 4 லட்சம் பேர்.
  • இதற்கிடையில், ஜெர்மனி (மக்கள் தொகை: 8.3 கோடி) 96 இடங்களைக் கொண்டுள்ளது, ஒரு உறுப்பினருக்கு சராசரியாக 8.6 லட்சம் பேர்.

சிறந்த தீர்வு

  • முரண்பட்ட ஜனநாயக மற்றும் கூட்டாட்சிக் கோட்பாடுகள் காரணமாக எல்லை நிர்ணயச் செயல்முறை ஒரு சவாலை எதிர்கொள்கிறது.
  • இருப்பினும், இரண்டு கொள்கைகளையும் சமமாக மதிப்பிடுவதன் மூலம், ஒரு இணக்கமானத் தீர்வை அடைய முடியும்.
  • பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரம், ரயில்வே, தொலைத்தொடர்பு, வரிவிதிப்பு போன்ற ‘மத்தியப் பட்டியல்’ விஷயங்களில் சட்டம் இயற்றுவதும், அதற்கு மத்திய அரசைப் பொறுப்பேற்க வைப்பதும் தான் நாடாளுமன்ற உறுப்பினரின் முக்கியப் பணியாகும்.
  • மத்திய அரசின் பெரும்பாலானத் திட்டங்கள் மாநில அரசுகளால் மட்டுமே செயல்படுத்தப் படுகின்றன.
  • மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக இருக்கும், இது மாநிலப் பிரதிநிதித்துவத்தில் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • இது கூட்டாட்சிக் கொள்கையைப் பேணவும், நிலைநாட்டவும் செய்கிறது.
  • இந்த ஆலோசனையில் மாநிலங்களவை இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல், தற்போதைய மக்கள்தொகையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பதும் அடங்கும்.
  • இது மக்கள்தொகை மாற்றங்களுடன் பிரதிநிதித்துவம் சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது.
  • இது கூடுதலாக, பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
  • உள்ளூரில் அடிமட்ட அளவில் ஜனநாயகம் மற்றும் குடிமக்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கு, அவர்களின் அதிகாரத்தை வலுப்படுத்துவதும் அதற்குப் போதுமான நிதி ஆதாரங்களை வழங்குவதும் மிக அவசியமாகும்.

தேர்தல்கள் தொடர்பான பிற சட்டங்கள்

  • பாராளுமன்ற (தகுதி நீக்கத் தடுப்பு) சட்டம், 1959 என்பது சில லாபம் ஈட்டும் பதவிகளை வகிக்கும் அரசாங்க அதிகாரிகளையும், தகுதி நீக்கம் எதுவும் இல்லாமல் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்ற அனுமதிக்கிறது.
  • பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் (திருத்தம்) சட்டம், 1976, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பதற்காக, குறிப்பிட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரின் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் பட்டியல்களைச் சேர்ப்பது மற்றும் விலக்குவது ஆகியவற்றை வழங்குகிறது.
  • யூனியன் பிரதேசங்களின் அரசுச் சட்டம், 1963.
  • டெல்லியின் தேசியத் தலைநகர் பிராந்திய அரசுச் சட்டம், 1991.
  • குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952, இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான அல்லது அதனுடன் தொடர்புடைய சில விஷயங்களை ஒழுங்குபடுத்துகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்