TNPSC Thervupettagam

இந்திய பங்குச்சந்தை ஏன் சரிகிறது?

November 4 , 2024 68 days 118 0

இந்திய பங்குச்சந்தை ஏன் சரிகிறது?

  • இந்திய பங்குச் சந்தைக்கு அக்டோபர் 2024 மிகவும் ஒரு மோசமான மாதமாகவே முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி சுமார் 1,800 புள்ளிகளும், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 5500 புள்ளிகளும் இறங்கி முடிந்து இருக்கிறது. இந்த இறக்கம் இன்னும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதுவரை சுமார் 7 சதவீதம் இறங்கிய, இந்திய சந்தை இன்னும் 4% - 6% இறக்கம் காண்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

உலக சந்தைகளின் குறியீட்டு எண்கள்:

  • அமெரிக்க குறியீட்டு எண்டவ் ஜோன்ஸ் பெரிய மாற்றம் இல்லாமலும், இங்கிலாந்தின் FTSE சுமார் 2.5% சரிவையும், பிரான்சின் CAC சுமார் 5,5% சரிவையும், ஜெர்மனியின் DAX சுமார் 1.6% இறக்கத்தையும் சந்தித் துள்ளது. ஆசிய சந்தைகளில் ஜப்பானின், Nikkai 1.8% சரிவையும், ஹாங்காங் சந்தையின் Hangseng 1.5% சரிவையும், சீனாவின் Shanghai 6.2% ஏற்றத்தையும் அடைந்துள்ளது.
  • இந்திய சந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது, பெரும்பான்மையான உலக சந்தை களில் மாற்றம் இல்லாமலும், சில சந்தைகள் சற்று இறங்கியும் உள்ளது. அதே நேரம் சீனாவின் பங்குச்சந்தை மிக வலுவான ஏற்றத்தை கண்டுள்ளது.

அந்நிய நிறுவனங்களின் விற்பனை:

  • இந்திய பங்குச் சந்தையில், அக் டோபர் மாதம் முழுவதுமே அந்நிய நிறுவனங் கள் மொத்தமாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் விற்றிருக்கிறார்கள். இந்த விற்பனையின் அளவு என்பது கடந்த ஐந்து வருடங்களில் இதுவே அதிகபட்சம் ஆகும். இதற்கு முன்பாக 2020-ல் கோவிட் பிரச்சினையினால் பெரும் விற்பனை நிகழ்ந்தது. தற்போதைய அந்நிய நிதி நிறுவனங்களின், விற்பனையானது அதையும் தாண்டி புதிய சரித்திரத்தை படைத் துள்ளது. இவர்களின் விற்பனையானது இன்னும் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. அந்நிய நிறுவனங்களின் விற்பனை தொடர்ந்தால், இந்திய பங்குச் சந்தை மீண்டும் அடுத்த கட்ட இறக்கத்தைச் சந்திக்கலாம்.
  • பொதுவாக, இது போன்ற கடுமையான விற்பனையானது சந்தையை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் அளவுக்கு இந்நேரம் இறக்கி இருக்கும். உள்நாட்டு நிதி நிறுவனங்கள், இதற்கு இணையாக ரூ.1 லட்சம் கோடி என்ற அளவுக்கு பங்குகளை வாங்கி இருக் கிறார்கள். ஆகவேதான் இந்திய சந்தையின் வீழ்ச்சி சற்றே மட்டுப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதனுடைய உள்நாட்டு நுகர்வை பொருத்தே உள்ளது. தற்போது உள்நாட்டு நுகர்வு சரிய ஆரம்பித்துள்ளது. இந்த சரிவானது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை மட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. இந்திய நிறுவனங்களின், இரண்டாம் காலாண்டு முடிவுகள் பெரும்பாலும் சந்தை எதிர்பார்ப்பை விட குறைவான லாபத்தை காட்டியுள்ளன. மேலும் வரக்கூடிய காலாண்டுகளில், லாபம் குறைவதற்கான வாய்ப்பும் உள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் விற்பனை சீனாவில் முதலீடு:

  • இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவை சந்திக்கும் அதே நேரம், சீனாவின் பங்குச்சந்தை அக்டோபர் மாதம் தொடர் ஏறுமுகமாக இருப்பதையும் காண்கிறோம். கடந்த ஒரு வருடமாக மந்தமாக இருந்த சீனப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சீன அரசு பல்வேறு ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக சீனப் பங்குச் சந்தை எழுச்சி கண்டுள்ளது. இந்நிலையில் அந்நிய முதலீட்டளர்கள், இந்திய பங்குச் சந்தையில் தங்கள் பங்குகளை விற்றுவிட்டு, அந்தப் பணத்தை சீனச் சந்தையில் முதலீடு செய்வதாகவும் செய்திகள் வருகின்றன. எல்லாவற்றையும் தாண்டி, பல்வேறுநிச்சய மற்ற சூழல் உலக சந்தையில் நிலவி வருகிறது. அமெரிக்க தேர்தல், அமெரிக்கா வின் வட்டி விகிதம் சார்ந்து எடுக்கப்பட இருக்கும் முடிவுகள், இஸ்ரேல் - ஈரான் போர் சூழல் ஆகியவை பங்குச் சந்தையில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.

என்ன செய்வது?

  • இத்தகைய சந்தை சூழலை சிறு முதலீட்டாளர்கள் எவ்வாறு சமாளிக்கலாம்? நீண்ட கால முதலீட்டாளர்கள் நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால், பொறுமையாக ஆறு முதல் ஒன்பது மாதம் காத்திருக்க வேண் டும். சந்தை மீண்டும் எழும் போது, நல்ல நிறுவனங்களின் பங்குகளும் மீண்டு எழும்.
  • குறுகிய கால முதலீட்டாளர்கள் அவ்வப்போது லாபத்தை வெளியே எடுப்பது நல்லது. மேலும் இறக்கங்களில் வாங்குவதற்கு. கையில் உள்ள பங்குகளில் ஒரு பகுதியை பணமாக மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. இதுவரையில் சந்தையில் முதலீடு செய்யாதவர்களுக்கு, இந்த இறக்கம் ஒரு நல்ல வாய்ப்பை கொடுக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்