TNPSC Thervupettagam

இந்திய மாநிலங்களின் சின்னங்கள் - பகுதி 3

December 28 , 2023 379 days 992 0

(For English version to this please click here)

இந்திய மாநிலங்களின் சின்னங்கள்

முன்மொழியப்பட்ட மாநில கீதங்கள்

  • கோவா, ஹரியானா, கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அரசுகள் தற்போது அதிகாரப்பூர்வமான மாநிலப் பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்திய மாநிலங்கள் நிறுவப்பட்ட நாட்களின் பட்டியல்

ஆந்திரப் பிரதேசம்

  • இது ஆந்திர பிரதேச தினம் என்று அழைக்கப்படுகிறது.
  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஆந்திரா பிரதேசம் மாநிலமானது மறுசீரமைக்கப் பட்டு  ஆண்டுதோறும் இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • 1953 – 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலச் சட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலமானது மதராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது
  • 1956 – 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் ஆந்திரப் பிரதேச மாநிலமானது ஹைதராபாத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

அருணாச்சலப் பிரதேசம்

  • அருணாச்சலப் பிரதேச தினமானது பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று கொண்டாடப் படுகிறது (மாநிலமானது 1987 ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டது).
  • 1972 – 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டத்தின் மூலம் அசாமிலிருந்துப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது.
  • 1987 – 1986 ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச மாநிலச் சட்டத்தின் மூலம் அது ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது.

அசாம்

  • அசாம் தினமானது, டிசம்பர் 2 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
  • இந்த மாநிலமானது, அஹோம் ராஜ்ஜியத்திலிருந்து பிரிக்கப்பட்டு நிறுவப்பட்டது (1228).
  • 1874 - வங்காள மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு வடகிழக்கு எல்லைப்புற மாகாணம் அமைக்கப் பட்டது.
  • 1905 - கிழக்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாமில் இணைக்கப்பட்டது.
  • 1912 - அசாம் மாகாணமாக மீண்டும் நிறுவப்பட்டது.
  • 1950 - அசாம் மாநிலமாக மாநில அந்தஸ்து பெற்றது.

பீகார்

  • பீகார் மாநிலமானது 1912 ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று உருவாக்கப்பட்டது
  • 1912 - பீகார் மற்றும் ஒரிசா மாகாணமாக நிறுவப்பட்டது
  • 1936 – 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் மூலம் பீகார் மாகாணம் பிரிக்கப் பட்டது
  • 1950 - பீகார் மாநிலமாக மாநில அந்தஸ்து பெற்றது.

சத்தீஸ்கர்

  • சத்தீஸ்கர் உருவான தினமானது, சத்தீஸ்கர் ராஜ்யோத்சவா தினம் என்று அழைக்கப் படுகிறது.
  • இது 2000 ஆம் ஆண்டு நவம்பர் 1 தேதி அன்று உருவாக்கப்பட்டது.
  • 2000 – 2000 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் மத்தியப் பிரதேசத்திலிருந்துப் பிரிக்கப்பட்டது

கோவா

  • கோவா விடுதலை தினமானது டிசம்பர் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது (விடுதலை 1961).
  • கோவா தினமானது மே 30 ஆம் தேதி கொண்டாடப் படுகிறது  (மாநில அந்தஸ்து பெற்ற ஆண்டு 1987)
  • 1961 - போர்த்துகீசிய-இந்தியப் போருக்குப் பிறகு கோவா, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக அது இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
  • 1987 – 1986 ஆம் ஆண்டு கோவா மாநிலச் சட்டத்தின் மூலம் அது தனி மாநிலமாக மாற்றப்பட்டது.

குஜராத்

  • குஜராத் மாநிலமானது, 1960 ஆம் ஆண்டு மே 1 தேதி அன்று உருவாக்கப்பட்டது.
  • 1924 – மேற்கத்திய இந்திய முகமையின் மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது.
  • 1944 – பரோடா, மேற்கு இந்தியா மற்றும் குஜராத் மாநிலங்கள் முகமை என மறுசீரமைக்கப்பட்டது.
  • 1948 - சௌராஷ்டிரா மாநிலம் மற்றும் கத்தியவார் ஐக்கிய மாநிலம் என மறுசீரமைக்கப்பட்டது.
  • 1956 – 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
  • 1960 - பம்பாய் மாநிலமானது, இரண்டாகப் பிரிக்கப்பட்டு குஜராத் மாநிலமானது உருவானது.

ஹரியானா

  • ஹரியானா மாநிலமானது 1966 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
  • 1966 – 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.

மாச்சலப் பிரதேசம்

  • மாச்சலப் பிரதேசமானது, 1971 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • 1948 – மாச்சலப் பிரதேசத் தலைமை ஆணையர் மாகாணமாக அது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • 1971 – 1970 ஆம் ஆண்டு மாச்சலப் பிரதேச மாநிலச் சட்டத்தின் மூலம் மாநில அந்தஸ்தை அடைந்தது.

ஜார்க்கண்ட்

  • ஜார்க்கண்ட் தினமானது, 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
  • 2000 – பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு பீகார் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டது.

கர்நாடகா

  • கர்நாடக மாநில தினமானது, கர்நாடக ராஜ்யோத்சவா என்று அழைக்கப்படுகிறது.
  • இது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்டது
  • இது முதலில் இந்தியப் பேரரசுகளில் மைசூர் இராட்சியமாக இருந்தது.
  • 1948 – இந்திய ஒன்றியத்தின் கீழ் மைசூர் மாநிலமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது
  • 1956 – பம்பாய் மாநிலத்திலுள்ள கன்னட மொழி பேசும் தெற்கத்தியப் பகுதிகளானது 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. 
  • 1973 – கர்நாடகா மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கேரளா

  • கேரளா உருவான தினமானது, கேரள பிறவி தினமென்று அழைக்கப்படுகிறது.
  • இது 1956 ஆம் ஆண்டு நவம்பர்  1 ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்டது.
  • 1956 – இந்தியப் பேரரசின் முன்னாள் கொச்சி இராட்சியம் மற்றும் திருவிதாங்கூர் இராட்சியம் ஆகியவற்றிலிருந்து திருவாங்கூர்-கொச்சி மாநிலமாக மறுசீரமைக்கப் பட்டது.
  • 1956 – 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் படி மராஸ் மாகாணத்தின் சில பகுதிகளுடன் இணைக்கப்பட்டு கேரள மாநிலமானது அமைக்கப் பட்டது.

மத்தியப் பிரதேசம்

  • மத்தியப் பிரதேசமானது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்று நிறுவப் பட்டது.
  • 1956 – மத்திய பாரதம், விந்தியப் பிரதேசம், மத்திய மாகாணங்கள் மற்றும் பெரார் மற்றும் போபால் மாநிலங்களை 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு உருவாக்கப் பட்டது.

மகாராஷ்டிரா

  • மகாராஷ்டிரா மாநிலமானது 1960 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அன்று உருவாக்கப் பட்டது.
  • 1960 – 1960 ஆம் ஆண்டு பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் பம்பாய் மாநிலமானது இரண்டாகப் பிரிக்கப்பட்டு மகாராஷ்டிரா மாநிலமானது உருவாக்கப் பட்டது.

மணிப்பூர்

  • மணிப்பூர் தினமானது, மணிப்பூர் மாநில தினம் என்று அழைக்கப்பட்டது.
  • இது 1972 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி உருவாக்கப் பட்டது.
  • 1972 – 1971 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலச் சட்டத்தின் மூலம் மாநில அந்தஸ்தினை அடைந்தது.

மேகாலயா

  • 1972 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி அன்று மேகாலயா மாநிலமானது உருவாக்கப் பட்டது. 
  • 1970 – 1969 அசாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டத்தின் மூலம் அசாமில் ஒரு தன்னாட்சி மாநிலமாக இது நிறுவப்பட்டது.
  • 1972 – 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டத்தின் மூலம் மாநில அந்தஸ்தினை அடைந்தது.

மிசோரம்

  • 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 தேதி அன்று மிசோரம் மாநிலமானது உருவாக்கப் பட்டது.
  • 1971 – 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டத்தின் மூலம் யூனியன் பிரதேசமாக நிறுவப்பட்டது.
  • 1987 – 1986 ஆம் ஆண்டு மிசோரம் மாநிலச் சட்டத்தின் மூலம் மிசோரம் மாநிலமாக நிறுவப் பட்டது.

நாகாலாந்து

  • 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 1 தேதி அன்று நாகாலாந்து மாநிலமானது நிறுவப்பட்டது.
  • 1963 - 1962 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.

ஒடிசா

  • இம்மாநிலமானது, ஏப்ரல் 1 ஆம் தேதி (1936) உருவாக்கப்பட்டது.
  • இது இந்தியச் சுதந்திரத்திற்கு முன் பிரிக்கப்பட்ட முதல் மொழிவாரி மாநிலமாக இருந்தது.
  • 1912 - பீகார் மற்றும் ஒரிசா மாகாணமாக நிறுவப்பட்டது.
  • 1936 – 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் மூலம் ஒரிசா மாகாணமானது பிரிக்கப்பட்டது.
  • 2011 – 2011 ஆம் ஆண்டு ஒரிசா (பெயர் மாற்றம்) சட்டத்தின் மூலம் ஒடிசா என மறுபெயரிடப் பட்டது.

பஞ்சாப்

  • 1966 ஆம் ஆண்டு நவம்பர் 1 தேதி அன்று பஞ்சாப் மாநிலமானது நிறுவப்பட்டது.
  • 1947 - பிரிக்கப்படாத பஞ்சாப் மாகாணத்திலிருந்து கிழக்கு பஞ்சாப் மாகாணமாக நிறுவப் பட்டது.
  • 1950 – பஞ்சாப் மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1966 – 1966 ஆம் ஆண்டு பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப் பட்டது.

ராஜஸ்தான்

  • 1949 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலமானது உருவாக்கப் பட்டது.  
  • 1949 - முந்தைய மத்ஸ்யா மற்றும் ராஜஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டு, ராஜஸ்தான் ஐக்கிய மாநிலமாக நிறுவப்பட்டது.
  • 1950 – ராஜஸ்தான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 1956 – 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப் பட்டது.

சிக்கிம்

  • சிக்கிம் மாநிலமானது, 1975 ஆம் ஆண்டு மே 16 அன்று உருவாக்கப்பட்டது.
  • முதலில் இந்தியப் பேரரசில் சிக்கிம் இராட்சியமாக காணப்பட்டது.
  • 1975 – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 35வது திருத்தத்தின் மூலம் இது பிரிக்கப்பட்டு, நிறுவப்பட்டது.

தமிழ்நாடு

  • தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் தேதி மராஸ் மாகாணத்தின் பெயரானது தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் (1969) செய்யப்பட்டது.
  • 1950 – மராஸ் மாகாணமானது மராஸ் மாநிலம் என மறுபெயரிடப்பட்டது
  • 1952 – 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலச் சட்டத்தின் மூலம் பிரிக்கப்பட்டது
  • 1956 - 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப் பட்டது.
  • 1969 – 1968 ஆம் ஆண்டு மராஸ் மாநில (பெயர் மாற்றம்) சட்டத்தின் மூலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

தெலுங்கானா

  • தெலுங்கானா மாநிலமானது ஜூன் 2 ஆம் தேதி உருவானது (2014).
  • 2014 –  2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

திரிபுரா

  • திரிபுரா மாநிலமானது, ஜனவரி 21 ஆம் தேதி உருவாக்கப்பட்டது (1972).
  • 1949 – திரிபுரா இணைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஒன்றியத்துடன் திரிபுரா இணைந்தது.
  • 1950 - இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஒரு பகுதி C மாநிலமாக மாறியது.
  • 1956 – 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்டது.
  • 1972 – 1971 ஆம் ஆண்டு வடகிழக்குப் பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டத்தின் மூலம் மாநில அந்தஸ்த்தினை அடைந்தது.

உத்தரப்பிரதேசம்

  • உத்தரப் பிரதேச மாநிலமானது, ஜனவரி 24 தேதி அன்று நிறுவப்பட்டது
  • உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு, மாநில அந்தஸ்து மற்றும் ஐக்கிய மாகாணங்களின் பெயர் மாற்றம் ஆகியவை செய்யப்பட்டது (1950).
  • 1902 – வடமேற்கு மாகாணங்களிலிருந்து ஆக்ரா மற்றும் ஆவத் ஐக்கிய மாகாணங்களாக நிறுவப்பட்டது.
  • 1936 – 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் மூலம் ஐக்கிய மாகாணம் என மறுபெயரிடப்பட்டது.
  • 1950 – டெல்லி பிரதேசத்தின் சில பகுதிகளைச் சேர்த்து உத்தரப் பிரதேச மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது.

உத்தரகாண்ட்

  • உத்தரகாண்ட் மாநிலமானது 2000 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி அன்று உருவாக்கப் பட்டது.
  • 2000 – 2000 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

மேற்கு வங்காளம்

  • மேற்கு வங்காள மாநிலமானது, ஜூன் 20 தேதி அன்று உருவாக்கப்பட்டது.
  • 1947 – வங்காள மாகாணமானது, பிரிக்கப்பட்டு மேற்கு வங்காள மாகாணம் ஆனது.
  • 1950 - மேற்கு வங்க மாநிலமாக மாநில அந்தஸ்து பெற்றது.

யூனியன் பிரதேசம் உருவான நாட்கள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

  • அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசமானது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 தேதி அன்று உருவாக்கப்பட்டது.
  • 1950 – இது ஒரு பகுதி D மாநிலமாகும்.
  • 1956 – 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் யூனியன் பிரதேசமாக நிறுவப்பட்டது.

சண்டிகர்

  • சண்டிகர் யூனியன் பிரதேசமானது, 1966 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்று நிறுவப்பட்டது
  • 1953 - இது கிழக்கு பஞ்சாபின் தலைநகராக நிறுவப்பட்டது.
  • 1966 – 1966 ஆம் ஆண்டு யூனியன் பிரதேசமாக பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப்பட்டது.

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ

  • தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று உருவாக்கப்பட்டது.
  • 1961 - இந்திய-போர்த்துகீசியப் போருக்குப் பிறகு கோவா, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
  • 1987 – 1986 ஆம் ஆண்டு கோவா மாநிலச் சட்டத்தின் மூலம் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப் பட்டது.
  • 2020 – 2019 ஆம் ஆண்டு தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ (யூனியன் பிரதேசங்களின் இணைப்பு) சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டது.

டெல்லி

  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்று டெல்லி உருவாக்கப்பட்டது.
  • 1911 – டெல்லி யூனியன் பிரதேசமானது இந்தியாவின் தலைநகரப் பகுதியாக, தலைமை ஆணையரின் மாகாணமாக நிறுவப்பட்டது.
  • 1956 – 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர்

  • ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசமானது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 தேதி அன்று நிறுவப்பட்டது.
  • 1947 – இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு காஷ்மீர் உருவானது.
  • 2019 – ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 என்ற சட்டம் மூலம் யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்டது

லடாக்

  • லடாக் நாள் என்பது 31 அக்டோபர் 2019 அன்று நிறுவப்பட்டது
  • 1947 – இந்தியாவின் பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது.
  • 2019 – 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்டது.

லட்சத்தீவு

  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி லட்சத்தீவு உருவாக்கப்பட்டது.
  • 1956 – 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் யூனியன் பிரதேசத்தை உருவாக்க மதராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

புதுச்சேரி

  • புதுச்சேரி சுதந்திர தினமானது  1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி அன்று உருவாக்கப் பட்டதைத் தொடர்ந்து, இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக புதுச்சேரியின் அதிகாரம் இடமாற்றம் செய்யப்பட்ட தினமானது கொண்டாடப்பட்டது
  • 1954 - இந்தியாவில் பிரெஞ்சு அதிகார நிறுவனங்களின் நடைமுறை நிறுத்தமானது மேற்கொள்ளப்பட்டது.
  • 1962 – இந்தியாவில் பிரெஞ்சு அதிகாரமானது சட்டப்பூர்வமாக இடமாற்றம் செய்யப் பட்டது.
  • 1963 - யூனியன் பிரதேசமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்