TNPSC Thervupettagam

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 – பாகம் 01

October 29 , 2024 2 days 136 0

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 – பாகம் 01

(For English version to this please click here)

அறிமுகம்

  • இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 என்பது இந்தியாவில் உள்ள தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் மனித மேம்பாட்டு நிறுவனத்தின் தொடரில் மூன்றாவது வெளியீடாகும்.
  • இதில் முதல் அறிக்கையான இந்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அறிக்கை 2014: உலகமயமாக்கலின் சகாப்தத்தில் இந்தியத் தொழிலாளர்கள் என்பது, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்ததைக் குறிப்பிகிறது.
  • இது இந்தியாவில், குறிப்பாக உலகமயமாக்கலினால், வேலைவாய்ப்பு சார்ந்தவற்றைப் பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்கியது.
  • இரண்டாவது அறிக்கையான இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2016: சவால்கள் மற்றும் உற்பத்தி சார்ந்த வளர்ச்சியின் கட்டாயம் என்பது, இந்தியத் தொழிலாளர் சக்தியின் மாறிவரும் பண்புகளை விரிவாக ஆய்வு செய்தது.
  • இந்த அறிக்கை தேசம் எதிர்கொள்ளும் முக்கிய வேலைவாய்ப்பு சவால்களையும் அடையாளம் கண்டுள்ளது.
  • அது இந்தச் சிக்கல்களைத் திறம்படச் சமாளிக்க, உற்பத்தியை மையமாகக் கொண்ட வளர்ச்சி உத்தியின் அவசியத்தை வலியுறுத்தியது.

  • இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024, இந்த முந்தையக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.
  • இது சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், இந்தியாவின் தற்போதைய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நிலையை ஆராய்கிறது.
  • இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன்களை மையமாகக் கொண்ட 2024 அறிக்கையை உருவாக்க மனித மேம்பாட்டு நிறுவனம் (ILO) சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் ஒத்துழைத்தது.

  • கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்திய தொழிலாளர் சந்தையில் உள்ள போக்குகள் மற்றும் வடிவங்களின் பகுப்பாய்வு அடிப்படையில், இந்த அறிக்கையானது கோவிட் - 19 நெருக்கடியின் தாக்கத்தை ஆராய்கிறது.
  • இது தற்போது பொருளாதாரம் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு சவால்களின் வளர்ந்து வரும் பண்புகளையும், பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் இடையிலான உறவையும் எடுத்துக்காட்டுகிறது.
  • இந்த அறிக்கையானது இளைஞர் தொழிலாளர் சந்தையின் ஆழமான பகுப்பாய்வை வழங்குவதோடு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்த முக்கியச் சவால்களை அடையாளம் கண்டு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான முக்கியமான இணைப்புகளை வழங்குகிறது.
  • கூடுதலாக, இது ஏற்கனவே உள்ள உத்திகளை மதிப்பாய்வு செய்து இளைஞர்களின் வேலை வாய்ப்பின் மீது குறிப்பாக கவனம் செலுத்துவதன் மூலம், இந்த வளர்ந்து வரும் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள புதிய கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளைப் பரிந்துரைக்கிறது.

நீடித்த மற்றும் உயர் பொருளாதார வளர்ச்சி

  • இந்தியா 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து குறிப்பிடத்தக்கப் பொருளாதார வளர்ச்சியை அனுபவித்து வருகிறது, குறிப்பாக 1990 ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தின் தாராள மயமாக்கலுடன் துரிதப் படுத்தப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி: சில ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்தை எட்டியது.
  • 2008 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய சரிவு: 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு, உலகளாவிய நிதி நெருக்கடியின் காரணமாக வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்தது மற்றும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் COVID-19 தொற்றுநோய்களின் போது வளர்ச்சி விகிதம் சரிந்தது.

  • எனினும் இந்த இடையூறுகள் இருந்தபோதிலும், கடந்த நான்கு தசாப்தங்களாக பொருளாதாரம் சராசரியாக 6 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பராமரித்து வருகிறது.
  • தற்போதைய நிலை: தொற்றுநோய் முடிவுக்கு வந்ததில் இருந்து வளர்ச்சி நிலையானது, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவை நிலை நிறுத்துகிறது.

எதிர்காலக் கணிப்புகள்

  • நீடித்த வளர்ச்சி: அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா 5-6 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • திட்டமிடப்பட்ட பொருளாதார அளவு: பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 2027 ஆம் ஆண்டில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் மற்றும் 2030 ஆம் ஆண்டில், 7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

வளர்ச்சிக்குப் பங்களிக்கும் காரணிகள்

  • மக்கள்தொகையின் நன்மை: பெரும் இளைஞர் மக்கள் தொகையை உடையது.
  • உள்கட்டமைப்பில் முதலீடு: மின்னணு மற்றும் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடு.
  • பொருளாதார சீர்திருத்தங்கள்: சரக்கு மற்றும் சேவை வரியில் சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குதல்.
  • அதிகரித்த வரி வருவாய்: உயரும் வரி வருவாய் காரணமாக அரசாங்கத்தின் நிதி ஆதாரங்கள் விரிவடைந்துள்ளன.
  • மதிப்பீடுகளின்படி, இந்தியப் பொருளாதாரம் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே 7.3 சதவிகிதம் மற்றும் 7.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதோடு இது தொற்று நோய்க்குப் பிந்தைய காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு மீள்தன்மையினைக் காட்டுகிறது.

உலகமயமாக்கல் மற்றும் வர்த்தகம்

  • 1990களில் இருந்து இந்தியப் பொருளாதாரம் படிப்படியாக உலகமயமாக்கப்பட்டது:
  • ஏற்றுமதி வளர்ச்சி: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பண்டங்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியானது 1984 ஆம் ஆண்டில் 6.3 சதவீதத்திலிருந்து 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 22 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம்: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பண்டங்கள் மற்றும் சேவைகளின் பங்கு 1984 ஆம் ஆண்டில் 7.7 சதவீதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டில் 23.6 சதவீதமாக உயர்ந்தது.
  • சேவைகளின் பங்கு: சேவை ஏற்றுமதிகள், குறிப்பாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் இயக்கப்பட்ட சேவைகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளித்துள்ளன.

சமூகத் தாக்கம்

  • பொருளாதார வளர்ச்சியின் உயர் விகிதம் இந்திய சமுதாயத்தில் முக்கியமான மாற்றங்களுக்கு வழி வகுத்தது:
  • வறுமைக் குறைப்பு: முழுமையான வறுமை நிலைகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
  • மேம்படுத்தப் பட்ட வாழ்க்கைத் தரம்: வாழ்க்கைத் தரம் மற்றும் பல்வேறு சமூக மற்றும் மனித வளர்ச்சிக் குறிகாட்டிகளின் மேம்பாடுகள் குறிப்பிடத் தக்கவை.
  • மனித வளர்ச்சிக் குறியீடு: இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு குறைவாகவே உள்ளது.

தனிநபர் வருமானம் மற்றும் சமத்துவமின்மை

  • தனிநபர் வருமானம் தரவரிசை: ஜி-20 நாடுகளில் இந்தியா மிகக் குறைந்த தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளது என்பதோடு இது அமெரிக்க டாலர்களில் $2,601 மற்றும் வாங்கும் திறன் சமநிலையில் (PPP) அமெரிக்கா டாலர்களில் $9,073 என மதிப்பிடப்பட்டுள்ளது.

  • மற்ற நாடுகளுடன் ஒப்பிடுதல்: 2022 ஆம் ஆண்டில் தனிநபர் மொத்தத் தேசிய வருமானம், இந்தியாவிற்கு அமெரிக்க டாலர்களில் $8,210 என உள்ள நிலையில், சீனாவிற்கு அமெரிக்க டாலர்களில் $21,250 என்றும் அமெரிக்காவிற்கு டாலர் மதிப்பில் $77,530 என்றும் உள்ளது.

பிராந்திய வேறுபாடுகள்

  • இந்தியாவிற்குள் பொருளாதார வளர்ச்சி சமமாக விநியோகிக்கப்படவில்லை:
  • மாநில மாறுபாடுகள்: 2021 ஆம் ஆண்டில், டெல்லியில் தனிநபர் மாநில உள்நாட்டு உற்பத்தி பீகாரை விட எட்டு மடங்காகவும், மேலும் உத்தரப் பிரதேசத்தை விட அது ஆறு மடங்காகவும் அதிகமாக இருந்தது.

  • மெதுவான வளர்ச்சி கொண்ட மாநிலங்கள்: 2011 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மணிப்பூர், மேகாலயா மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது மெதுவான வளர்ச்சியைக் கண்டன.
  • எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
  • உழைக்கும் வயது மக்கள் தொகை: அதிகரித்து வரும் உழைக்கும் வயது மக்கள்தொகை என்பது, வளர்ந்த நாடுகள் மற்றும் சீனாவில் உள்ள மக்கள் தொகை சரிவுடன் வேறுபடுகிறது.

  • உள்கட்டமைப்பு விரிவாக்கம்: மின்னணு, நிலப் பரப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பில், குறிப்பாக கல்வியில் தொடர்ச்சியான வளர்ச்சியானது எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • உலகளாவிய விநியோகச் சங்கிலிகள்: உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில், வெளியீட்டு-ஊக்கத் திட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் உள்நாட்டு நுகர்வோர் சந்தை மூலம் இந்தியாவின் பங்கு கூடுதல் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்தியத் தொழிலாளர் சந்தை

  • பொருளாதார வளர்ச்சியின் தாக்கம்
  • பொருளாதார வளர்ச்சியானது நாட்டின் தொழிலாளர் சந்தை நிலைமைகளைச் சாதகமாகப் பாதித்திருந்தாலும், அது வேலைவாய்ப்பில் தீவிரமான கட்டமைப்பு மாற்றத்திற்கு வழி வகுக்க வில்லை.
  • வேளாண்மையில் இருந்து சேவைத் துறைக்கு இடம்பெயர்தல்:
  • மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்தின் பங்கு 2000 ஆம் ஆண்டில் 60 சதவீதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டில் 42 சதவீதமாகக் குறைந்துள்ளது.

  • இந்தச் சரிவு கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளால் பெருமளவில் உள்வாங்கப் பட்டு உள்ளதோடு, மொத்த வேலைவாய்ப்பில் அவர்களின் பங்கு 2000 ஆம் ஆண்டில் 23 சதவீதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டில் 32 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • உற்பத்தியில் தேக்கம்:
  • மொத்த வேலைவாய்ப்பில் உற்பத்தித் துறையின் பங்கு ஒப்பீட்டளவில் தேக்க நிலையிலேயே உள்ளது என்பதோடு இது 12-14 சதவீதமாக உள்ளது.
  • உற்பத்தித்திறன் மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பு
  • தொழிலாளர் சந்தையில் ஒரு முக்கியமான மாற்றம் தொழிலாளர் உற்பத்தித்திறன் அதிகரிப்பு ஆகும்.
  • நிலையான மற்றும் முறைசார்த் துறை தொழிலாளர்கள்:
  • வழக்கமான தொழிலாளர்களின் விகிதம் 2000 ஆம் ஆண்டில் 14 சதவீதத்திலிருந்து, 2019 ஆம் ஆண்டில் 21 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • அதே காலக் கட்டத்தில் முறைசார்ந்தத் துறை தொழிலாளர்கள் 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்ந்துள்ளனர்.
  • முறைசாரா வேலைவாய்ப்பு:
  • இந்த அதிகரிப்பு இருந்த போதிலும், சுமார் 90 சதவீத தொழிலாளர்கள் முறைசாராத் தொழிலாளிகளாகவே உள்ளனர் என்பதோடு இதில் முறைசார்ந்த துறையில் உள்ள முறைசாரா தொழிலாளர்களும் உள்ளனர்.
  • தொழிலாளர் வருமானம்:
  • மொத்த வருவாயில் தொழிலாளர் வருவாயின் பங்கு குறைந்து வருகிறது என்பதோடு 2019 ஆம் ஆண்டு நிலவரப் படி, சில மீட்சி இருந்தபோதிலும், அது தனது 2000 ஆண்டு நிலைக்குக் கீழே இருந்தது.

இந்தியத் தொழிலாளர் சந்தையின் சிறப்பியல்புகள்

  • இந்தியத் தொழிலாளர் சந்தை குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாட்டிற்கு பொதுவான பல அம்சங்களை வெளிப்படுத்துகிறது:
  • வளர்ச்சி முறை:
  • இந்தியாவின் வளர்ச்சியானது பல வளர்ந்த நாடுகளில் காணப்படும் உற்பத்தித் துறை சார்ந்த வளர்ச்சியில் இருந்து வேறுபட்டு, சேவைத் துறை சார்ந்ததாக உள்ளது.
  • மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத் துறையின் பங்கு குறைந்தாலும், அது பெருமளவில் சேவைத் துறைக்கு மாறியதோடு, இது மொத்த வேலைவாய்ப்பில் 23 சதவீதத்தைக் கொண்டு உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறை 14 சதவிகிதம் மட்டுமே பங்களித்தது என்ற நிலையில், சேவைத் துறை 55 சதவிகிதம் மற்றும் உற்பத்தித் துறை 18 சதவிகிதம் என்ற அளவிற்குப் பங்களித்துள்ளது.
  • வேலையின்மை விகிதம்:
  • திறந்த வேலையின்மை விகிதம் வரலாற்று ரீதியாக சுமார் 2-3 சதவீதம் குறைந்தது, ஆனால் அது 2019 ஆம் ஆண்டில் சுமார் 5.8 சதவீதமாக உயர்ந்தது (அது 2022 ஆம் ஆண்டில் மீண்டும் குறைந்தாலும் கூட).
  • இந்த குறைந்த வேலையின்மை விகிதம், வளரும் பொருளாதாரங்களில் பொதுவான மற்றும் போதுமான வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாததைக் குறிக்கிறது.

  • முறைசாரா வேலைவாய்ப்பு:
  • ஏறத்தாழ 90 சதவீதத் தொழிலாளர்கள் முறைசாராத வேலையில் உள்ளனர்.
  • நிலையான மற்றும் முறைசார்ந்தத் துறை ஊழியர்களின் பங்கு அதிகரித்துள்ள போதிலும், முறைசார்ந்தத் துறையில் பல நிலையான தொழிலாளர்கள் முறைசாராத நிலையிலேயே உள்ளனர்.
  • சுய வேலைவாய்ப்பு மொத்த வேலைவாய்ப்பில் பாதியாக உள்ளது என்பதோடு இது உலகளவில் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும்.
  • சந்தைப் பிரிவு:
  • தொழிலாளர்ச் சந்தையானது பாலினம், இருப்பிடம், தொழில், சமூகக் குழுக்கள் மற்றும் புவியியல் பகுதிகளால் அதிகளவில் பிரிக்கப் பட்டுள்ளது.
  • பாலினம் மற்றும் பிற சமூகப் பிரிவுகளில் வருவாய் இடைவெளி குறைந்துவிட்டாலும், வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் வருமானம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார படி நிலைகள் தொடர்கின்றன.

பெண் தொழிலாளர் பங்கேற்பு:

  • பெண்களுக்கான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைவாக உள்ளது என்பதோடு 2022 ஆம் ஆண்டில் மொத்த உழைக்கும் பெண்களது வயதானது மக்கள் தொகையில் 25 சதவீதமாக இருந்தது.

  • பிழைப்பிற்கான வாழ்வாதார வேலைவாய்ப்பின் அதிகரிப்பு காரணமாக தொற்றுநோய்களின் போது பெண்களின் பங்கேற்பு அதிகரித்தது.
  • கணிசமான பாலின ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில், உலகிலேயே மிகக் குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒரு நாடு ஆகும்.

வேலைவாய்ப்புச் சவால்கள்

  • மெதுவான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கட்டமைப்பு மாற்றமின்மை

கண்ணோட்டம்

  • நியாயமான உயர் பொருளாதார வளர்ச்சி இருந்த போதிலும், உற்பத்தி வேலை வாய்ப்புகளில் அதற்கான விரிவாக்கத்தை இந்தியா காணவில்லை.
  • இந்த நிகழ்வானது வளர்ச்சிக்கான செயல்பாட்டில் குறைந்து வரும் வேலைவாய்ப்புத் தீவிரத்தால் வகைப் படுத்தப் படுகிறது.

சேவைகள் தலைமையிலான வளர்ச்சி:

  • பெரும்பாலான வளர்ந்த நாடுகள் அவற்றின் வளர்ச்சியின் போது அனுபவிக்கும் உற்பத்தித் துறை சார்ந்த வளர்ச்சியைப் போலல்லாமல், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையானது சேவைத் துறையால் முதன்மைப் படுத்தப் படுகிறது.
  • இது இந்தியாவில் கட்டமைப்பு மாற்றத்தின் மெதுவான மற்றும் குறைவான செயல்முறையை விளைவித்துள்ளது.

தொழிலாளர் சந்தை ஏற்றத் தாழ்வுகள் மற்றும் தொழில்நுட்பச் சவால்கள்

  • தொழில்நுட்பத்தின் தாக்கம்
  • சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொழிலாளர் சந்தை நிலப்பரப்பை வெகு கணிசமாக மாற்றியுள்ளன:
  • மூலதனச் செறிவை அதிகரித்தல்:
  • பல ஆண்டுகளாக மூலதனச் செறிவு உயர்ந்துள்ளது என்பதோடு இது வளர்ச்சி செயல் முறைக்குள் குறைந்த வேலைவாய்ப்புச் செறிவிற்கு வழி வகுக்கிறது.
  • மாறும் திறன் விகிதம்:
  • உயர் திறன் வேலைகளுக்கான தேவை அதிகரித்துள்ள அதே நேரத்தில் குறைந்த திறன் கொண்ட வேலை வாய்ப்புகள் சுருங்கி, தொழிலாளர் சந்தையில் ஏற்றத்தாழ்வுகளை அதிகப் படுத்துகின்றன.
  • தொழிலாளர் சந்தையில் ஏற்ற தாழ்வுகள்
  • இந்தியத் தொழிலாளர் சந்தை பல்வேறு பரிமாணங்களில் உயர் மட்டச் சமத்துவமின்மையை வெளிப்படுத்துகிறது:
  • பிராந்திய வேறுபாடுகள்:
  • பிராந்தியம், சமூகக் குழுக்கள், பாலினம் மற்றும் தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வேலைவாய்ப்பு விளைவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
  • இந்த வேறுபாடுகள் பரந்த சமூக ஏற்றத்தாழ்வுகளுக்குப் பங்களிக்கின்றன.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்