TNPSC Thervupettagam

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 – பாகம் 02

November 1 , 2024 69 days 442 0

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 – பாகம் 02

(For English version to this please click here)

இளைஞர்களின் வேலைவாய்ப்புச் சவால்கள்

  • பிராந்திய மக்கள்தொகை மாற்றங்கள் வேலைவாய்ப்பு விளைவுகளில், குறிப்பாக இளைஞர்களுக்கு அப்பட்டமான ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துகின்றன:
  • இளைஞர்களின் பெருக்கம்:
  • கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பல பெரிய மாநிலங்கள் இளைஞர்களின் வளர்ச்சியால் வகைப்படுத்தப் படுகின்றன, ஆனால் அவை குறைந்த தனிநபர் வருமானத்துடன் ஒப்பீட்டளவில் வளர்ச்சியடையாமல் உள்ளன.

  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு:
  • இந்தப் பிராந்தியங்களில் அதிக படித்த இளைஞர்கள் குறைவு.
  • அவர்களுக்கு முறையான வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லை.
  • பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு எதுவும் பெறவில்லை, படிக்கவில்லை மற்றும் பயிற்சி ஏதும் பெறவும் இல்லை.
  • கொள்கைத் தாக்கங்கள்:
  • இந்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதையும், இளைஞர்களுக்கான சமச்சீர் வாய்ப்புகளை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட பிராந்தியக் கொள்கைகளின் அவசரத் தேவை உள்ளது.

கல்வி மற்றும் திறன்கள் பொருந்தாமை

  • வேலை வாய்ப்பு நெருக்கடி
  • உயர்கல்வி பெற்ற வேலையற்ற இளைஞர்களின் விகிதம் 2000 முதல் 2022 வரை கணிசமாக உயர்ந்துள்ளது என்பது சாத்தியமானப் பொருத்தமின்மைகளை எடுத்துக்காட்டுகிறது.
  • பொருந்தாத குறிகாட்டிகள்:
  • படித்த இளைஞர்களிடையே பணியில் சேர ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, கல்வித் தகுதிகளுக்கும், உயர் திறன் வேலைகளுக்குத் தேவையான திறன்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்கிறது.

வேகமாக மாறும் தொழில்நுட்பங்கள் மற்றும் காலநிலை மாற்றம்

  • வளர்ந்து வரும் சவால்கள்
  • விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொழிலாளர் சந்தையில் பெரும் சவால்களை முன்வைக்கின்றன:
  • செயற்கை நுண்ணறிவு:
  • AI ஆனது வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்களை உருவாக்குகிறது என்பதோடு இது பல்வேறு துறைகள் மற்றும் வேலை வகைகளைப் பாதிக்கிறது.

  • காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள்:
  • தொழிலாளர் சந்தையானது காலநிலை மாற்றத்தால் அதிகளவில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதோடு இது முன்னர் கணித்ததை விட வேகமாக முன்னேறி வருகிறது.
  • பசுமை வேலை வாய்ப்புகள்
  • முறைசாராத துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தீவிர வானிலை நிகழ்வுகளால் மோசமாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன:
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை:
  • இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள், 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட புதைபடிமம் சாரா எரிபொருள் மின் உற்பத்தித் திறனை அடைந்து, மாற்றத்திற்கான ஒரு இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • இந்த மாற்றம் சூரிய மற்றும் காற்றாலைத் துறைகளில் சுமார் 3.4 மில்லியன் வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான சவால்

  • மக்கள்தொகை மாற்றம்
  • இந்தியா தற்போது அதன் மக்கள்தொகை மாற்றத்தில் ஒரு முக்கியமான ஊடுருவல் புள்ளியில் உள்ளது:
  • உழைக்கும் வயது மக்கள்தொகை வளர்ச்சி: உழைக்கும் வயது மக்கள் தொகையின் பங்கு 2011 ஆம் ஆண்டில் 59 சதவீதத்திலிருந்து 2021 ஆம் ஆண்டில் 63 சதவீதமாக அதிகரித்தது என்ற நிலையில் அது அடுத்த 15 ஆண்டுகளில் நிலைப்புத் தன்மை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

  • மக்கள்தொகை ஈவு: நாடு அதன் மக்கள்தொகை ஈவினை அறுவடை செய்வதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளது.
  • மொத்த மக்கள்தொகையில் இளைஞர்களின் விகிதம் குறையத் தொடங்கியிருந்தாலும், அவர்கள் இன்னும் பல நாடுகளுடன் ஒப்பிடப் படும் போது மிக குறிப்பிடத்தக்கப் பங்கையும் (27 சதவீதம்) அளவையும் (371 மில்லியன் நபர்கள்) பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

இளைஞர் வேலைவாய்ப்பின் சிறப்பியல்புகள்

  • தொழிலாளர் படை பங்கேற்பு குறைகிறது
  • இளைஞர்களிடையே தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது:
  • LFPR குறைப்பு: LFPR 2000 ஆம் ஆண்டில் 54 சதவீதத்திலிருந்து, 2022 ஆம் ஆண்டில் 42 சதவீதமாகக் குறைந்தது.
  • 20-24 வயது மற்றும் 25-29 வயதுடையவர்களுடன் ஒப்பிடுகையில், 15-19 வயதுடைய இளைஞர்களிடையே இந்தச் சரிவு குறிப்பாக அதிகளவில் உள்ளது.

  • தொழிலாளர் மக்கள்தொகை விகிதம்: இளைஞர்களுக்கான தொழிலாளர் மக்கள்தொகை விகிதம், கோவிட் - 19 தொற்றுநோய்க்கு முன், 2000 முதல் 2019 வரை கீழ்நோக்கியப் போக்கை அனுபவித்தது.
  • அதிகரித்து வரும் வேலையின்மை
  • உலகளாவியப் போக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில், பெரியவர்களை விட இளைஞர்கள் மூன்று மடங்கு அதிகமாக வேலையின்றி இருக்கிறார்கள் என்ற நிலையில், இந்தியாவின் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் கவலையளிப்பதாக உள்ளது:
  • இளைஞர்களின் வேலையின்மை விகிதம்: இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 2000 ஆம் ஆண்டில் 5.6 சதவீதத்திலிருந்து, 2012 ஆம் ஆண்டில் 6.2 சதவீதமாக உயர்ந்தது, பின்னர் 2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 18 சதவீதமாகவும், 2020 ஆம் ஆண்டில் தோராயமாக 15.1 சதவீதமாகவும், ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

  • படித்த இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம்: குறிப்பாக படித்த இளைஞர்களிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது, 2018 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய சராசரியை விட அதிகமாக உள்ளது.
  • படித்த இளைஞர்களின் வேலையின்மையின் தாக்கங்கள்
  • இந்திய இளைஞர்கள் கல்வியில் உயர் நிலைகளை அடைந்தாலும், போதிய வேலை வாய்ப்புகள் இல்லாதது தெளிவாகத் தெரிகிறது:
  • குறைந்து வரும் பங்கேற்பு: தொழிலாளர் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு குறைந்து வருவது கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு இடையே வளர்ந்து வரும் தொடர்பின்மையைப் பிரதிபலிக்கிறது.

  • சமூகத் தாக்கங்கள்: படித்த இளைஞர்களின் வேலையின்மையின் சவால்கள், சமூக சமநிலை மற்றும் அமைதிக்கான ஆழமானத் தாக்கங்களுடன், பெருகிய முறையில் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது.
  • திறன்கள் பொருந்தாமை மற்றும் வேலை வாய்ப்பு
  • சவால்கள் இருந்தபோதிலும், இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைக் கண்டறியக் கூடிய துறைகள் உள்ளன:
  • நவீன திறன்களின் தேவை: சில துறைகள் பாரம்பரியத் திறன்களைக் காட்டிலும், நவீன திறன்களைக் கோருகின்றன என்ற நிலையில் இது இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான சாத்தியத்தை எடுத்துக் காட்டுகிறது.
  • குறைந்த திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு: இருப்பினும், குறைந்தத் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புத் தொடர்பான தொடர்ச்சியான சிக்கல்கள் இந்தத் திறன்களை உணர்ந்து கொள்வதில் குறிப்பிடத்தக்கத் தடைகளாக உள்ளன.

இந்தியாவில் தொழிலாளர் படை, வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை

  • தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் (LFPR)
  • தற்போதைய நிலை
  • 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கான LFPR 2022 ஆம் ஆண்டில் 55.2% ஆக இருந்தது.
  • இது உலகச் சராசரியான 59.8% என்ற அளவை விடக் குறைவு.

  • வரலாற்றுப் போக்குகள்
  • 2000-2019: LFPR 2000 ஆம் ஆண்டில் 61.6% என்ற அளவில் இருந்து 2019 ஆம் ஆண்டில் 50.2% ஆக குறைந்தது.
  • 2022 மீட்பு: 55.2% ஆக அதிகரித்தது.

தொழிலாளர் மக்கள் தொகை விகிதம்

  • 2000-2019: 2000 ஆம் ஆண்டில் 60.2% ஆக இருந்து, 2019 ஆம் ஆண்டில் 47.3% ஆக குறைந்தது.
  • 2022 மீட்பு: 52.9% ஆக உயர்ந்தது.
  • திறந்த வேலையின்மை விகிதம்
  • 2000: திறந்த வேலையின்மை வெறும் 2% ஆக இருந்தது.
  • 2012: சுமார் 2% உள்ளது.
  • 2019: 5.8% ஆக அதிகரித்தது.
  • 2022: 4.1% ஆக குறிப்பிடத்தக்க வகையில் குறைந்தது.

தொழிலாளர் படை மற்றும் தொழிலாளர் வளர்ச்சி

  • தொழிலாளர் படை வளர்ச்சி
  • 2000 ஆம் ஆண்டில் 396.3 மில்லியனிலிருந்து 99.2 மில்லியனாக அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 495.5 மில்லியனாக உள்ளது.
  • தொழிலாளர் வளர்ச்சி
  • தொழிலாளர் வளர்ச்சி 79.4 மில்லியனாக இருந்தது என்ற நிலையில் இது திறந்த நிலை வேலையின்மையில் 19.8 மில்லியனாக அதிகரித்தது.
  • 2012-2019 போக்குகள்: திறந்த வேலையின்மை கணிசமாக 18.6 மில்லியனாக வளர்ந்தது என்ற நிலையில், மேலும் 200,000 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு உருவாக்கப் பட்டது.

தொற்றுநோய்ப் பாதிப்பு (2019-2022)

  • தொழிலாளர் அதிகரிப்பு
  • 2019 ஆம் ஆண்டில் 466.5 மில்லியனாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 78 மில்லியனாக அதிகரித்து, 2022 ஆம் ஆண்டில் 544.5 மில்லியனாக உள்ளது.
  • தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
  • தொழிலாளர் படை 2019 ஆம் ஆண்டில் 495.5 மில்லியனிலிருந்து 71.9 மில்லியனாக அதிகரித்து, 2022 ஆம் ஆண்டில் 567.4 மில்லியனாக உள்ளது.

  • வேலைவாய்ப்பின்மை குறைப்பு
  • இந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 6.1 மில்லியனாக கணிசமாகக் குறைக்கப்பட்டது.

திறந்த வேலைவாய்ப்பின்மை விகிதப் போக்குகள்

  • வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு (2012-2019)
  • முதன்மைக் காரணம்: இந்த காலகட்டத்தில் திறந்த வேலையின்மை விகிதத்தில் கணிசமான அதிகரிப்பிற்கு முக்கியமாக தொழிலாளர் படையின் வளர்ச்சியின் காரணமாக இருந்தது.
  • இந்த வளர்ச்சி அதற்கேற்ற வேலைவாய்ப்பு அதிகரிப்பு இல்லாமல் ஏற்பட்டது.
  • தாக்கம்: இந்தப் பொருத்தமின்மையானது வேலைவாய்ப்பின்மை நிலைகளை உயர்த்த வழி வகுத்தது என்பதோடு இது வேலை உருவாக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்கச் சவாலைப் பிரதிபலிக்கிறது.

2019 ஆண்டு முதல் முதல் 2022 ஆண்டு வரை மாற்றங்கள்

  • தொழிலாளர் படை வளர்ச்சி: 2019 முதல் 2022 வரை தொழிலாளர் படையின் அதிகரிப்பு, பணியாளர்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் சேர்ந்தது.
  • வேலைவாய்ப்பின்மை குறைப்பு: இந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை குறைந்து உள்ளது என்பதோடு இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தொழிலாளர் சந்தையில் மிகவும் சாதகமான மாற்றத்தைக் குறிக்கிறது.

வேலைவாய்ப்புத் தரம் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • ILO நுண்ணறிவுகள் (2023): தற்போது நிலவும் உலகளாவிய மந்தநிலையின் போது உருவாக்கப் படும் வேலைவாய்ப்பின் தரம் கவலைகளை எழுப்புகிறது.
  • பல தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் அல்லது வருமானம் கொண்ட, குறைவான தரம் கொண்ட வேலைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
  • தாக்கங்கள்: இந்தப் போக்கு பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தொழிலாளர் நலனை உறுதிப் படுத்த சிறந்த வேலைவாய்ப்புத் தரம் மற்றும் நிலையான வேலை வாய்ப்புகளின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் (LFPR) பாலினப் பரவல்

  • 2000 ஆண்டு முதல் 2019 ஆண்டு வரையிலான போக்குகள்
  • LFPR விகிதத்தில் சரிவு
  • பெண் தொழிலாளர்களின் LFPR ஆனது 14.4 சதவீத புள்ளிகளால் கடுமையாகச் சரிந்தது.
  • ஆண் தொழிலாளர்களோடு ஒப்பிடுகையில், LFPR 8.1 சதவீதப் புள்ளிகளால் குறைந்துள்ளது.

  • 2019 ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை மாற்றங்கள்
  • போக்குகளின் தலைகீழ் மாற்றம்
  • பெண் தொழிலாளர்களின் LFPR விகிதமானது 8.3 சதவீதப் புள்ளிகளால் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன், அந்தப் போக்கானது தலைகீழாக மாறியது.
  • ஆண் தொழிலாளர்களின் LFPR 1.7 சதவீத புள்ளிகளோடு சிறு அதிகரிப்பைக் கண்டது.
  • பெண் தொழிலாளர் பங்கேற்பின் போக்குகள்
  • பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் (LFPR) இந்த உயர்வு மற்ற தொழிலாளர் சந்தை மாற்றங்களுடன், பல்வேறு நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அதிகமான பெண்கள் பணியிடத்தில் நுழைவதைக் குறிக்கிறது.
  • இந்தப் போக்கு 2005 ஆம் ஆண்டில் காணப்பட்டதைப் போன்று உள்ளது.
  • தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளி
  • தற்போதைய LFPR ஒப்பீடு (2022)
  • பெண் தொழிலாளர்களின் LFPR 32.8% ஆக இருந்தது என்ற நிலையில் இது ஆண் தொழிலாளர்களின் LFPR 77.2% அளவை விட தோராயமாக 2.3 மடங்கு குறைவாகும்.

உலகளாவியச் சூழல்

  • இந்தியாவின் குறைந்த ஒட்டுமொத்த LFPR ஆனது, குறைவான பெண் தொழிலாளர்களின் LFPR விகிதத்தால் கணிசமாகப் பாதிக்கப்படுகிறது என்பதோடு இது 2022 ஆம் ஆண்டிற்கான உலகச் சராசரியான 47.3% அளவை விட மிகக் குறைவாக உள்ளது.
  • இருப்பினும், இந்தியாவின் பெண் தொழிலாளர்களின் LFPR விகிதம் தெற்காசியச் சராசரியான 24.8% என்ற அளவை விட அதிகமாக உள்ளது.

பகுதி வாரியாக தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR)

  • 2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரையிலான போக்குகள்
  • LFPR விகிதத்தில் சரிவு
  • கிராமப்புறங்களில் 14.1 சதவீதப் புள்ளிகளுடன் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்தன.
  • நகர்ப்புறங்களில் 3.5 சதவீதப் புள்ளிகளுடன் சிறிது சரிவைக் கண்டன.
  • 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை மாற்றங்கள்
  • போக்குகளின் தலைகீழ் மாற்றம்
  • கிராமப்புறங்களில் LFPR ஆனது 6 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
  • நகர்ப்புறங்களில் LFPR ஆனது 2.1 சதவீதப் புள்ளிகளுடன் சற்று அதிகரிப்பு இருந்தது.

பாலின வேறுபாடுகள்

  • LFPR விகிதத்தின் அதிகரிப்பு நகர்ப்புறப் பெண் தொழிலார்களுடன் ஒப்பிடும் போது, கிராமப் புறங்களில் உள்ள பெண் தொழிலார்களிடையே அதிகரித்துக் காணப்பட்டது.

  • தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் மற்றும் வேலைவாய்ப்பின்மை போக்குகள்
  • ஒத்த வடிவங்கள்
  • தொழிலாளர் மக்கள்தொகை விகிதத்தில் உள்ள போக்குகள் LFPR அளவைப் பிரதிபலித்தது என்ற நிலையில் இது முதல் காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அதிகரிப்புக்கு வழி வகுத்தது என்பதோடு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் சமீபத்திய காலக் கட்டத்தில் ஒரு சரிவும் ஏற்பட்டது.
  • வேலைவாய்ப்பின்மை விகித ஒப்பீடு
  • கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் அதிகமாகவே உள்ளது.

பெண் தொழிலாளர் சந்தையில் பங்கு பெறும் போக்குகள்

  • பங்கேற்பதில் உள்ள ஏற்ற இறக்கங்கள்
  • குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகள்
  • தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு, குறிப்பாக கிராமப்புறங்களில், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒட்டு மொத்த LFPR மாற்றங்களைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
  •  வேலைவாய்ப்பு நிலையில் மாற்றங்கள்
  • துணை வேலைவாய்ப்பு போக்குகள்
  • துணை நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு 2000 ஆம் ஆண்டில் 8.3% ஆக இருந்து, 2019 ஆம் ஆண்டில் 2.8% ஆக குறைந்துள்ளது.
  • இருப்பினும், இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 6.3% ஆக கணிசமாக அதிகரித்துள்ளது.

  • தாக்கங்கள்
  • இந்த அதிகரிப்பு 2022 ஆம் ஆண்டில் தொழிலாளர்களுடன், குறைவாக எண்ணிகையில் இணைந்த பெண்கள் தொழிலாளர்கள் அதிக சுறுசுறுப்பானப் பங்கேற்பாளர்களாக மாறியதை எடுத்துக் காட்டுகிறது.
  • இது வேலை வாய்ப்புகளுடன் அவர்களின் ஈடுபாட்டின் மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்