TNPSC Thervupettagam

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 – பாகம் 03

November 5 , 2024 19 days 330 0

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 – பாகம் 03

(For English version to this please click here)

கிராமப்புறப் பணியாளர்களின் போக்குகளைப் பாதிக்கும் காரணிகள்

  • முந்தைய சரிவு
  • 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிராமப்புறங்களில் பெண் பணியாளர்களின் பங்கேற்புச் சரிவிற்குப் பல்வேறு காரணிகள் கூறப்பட்டது.

  • 2019 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மாற்றங்கள்
  • 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில், சுயதொழில் மற்றும் துணை நிறுவனங்களில் ஈடுபடும் பெண்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதோடு இது அவர்களின் குடும்பங்களை ஆதரிக்கும் பொருட்டு, பொருளாதார நடவடிக்கைகளின் தேவையைப் பிரதிபலிக்கிறது.

பெண் தொழிலாளர் படை பங்கேற்பை ஈர்க்கும் காரணிகள்

  • வருமான விளைவு
  • குடும்ப வருமானத்தில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களைப் பணியில் ஈடுபடச் செய்கிறது.
  • கல்வி விளைவு
  • கல்வி பெறுதலின் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் சந்தையில் பங்கேற்பதற்கான உந்துதல்கள் வழங்கப் படுகின்றன.

  • குறைவான பதிவுகள்
  • அதிகாரப்பூர்வப் புள்ளி விவரங்களில், பெண்களின் பணி பெரும்பாலும் குறைவாகவே குறிப்பிடப் படுவதோடு, இது அவர்களின் பங்கேற்பின் தவறானப் பிரதிநிதித்துவத்திற்கு வழி வகுக்கிறது.

  • பாலின ஊதிய இடைவெளி
  • ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாடுகள் பெண்களின் பணியாளர் ஈடுபாட்டை ஊக்கப்படுத்தவில்லை.

  • சமூக மற்றும் கலாச்சார விதிமுறைகள்
  • பாரம்பரியப் பணிகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பைக் கட்டுப் படுத்துகின்றன.
  • வீட்டு மற்றும் பராமரிப்புப் பொறுப்புகள்
  • வீட்டில் உள்ள பொறுப்புகள் பணிக்கான பெண்களின் பங்களிப்பைக்  கட்டுப்படுத்தலாம்.

இடம்பெயர்தல்

  • இடம்பெயர்வு முறைகள் பெண்களின் உள்ளூர் தொழிலாளர் விநியோகத்தைப் பாதிக்கலாம், என்பதோடு அது அவர்களின் பங்கேற்பையும் பாதிக்கலாம்.

நேரம் தொடர்பான குறைந்த வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள்

  • தற்போதைய விகிதங்கள் (2022)
  • 2022 ஆம் ஆண்டில் நேரம் தொடர்பான குறைவான வேலைவாய்ப்பு 7.5% ஆக இருந்தது.
  • இது பல ஆண்டுகளாக ஏற்ற இறக்கமாக இருந்தது, 2012 ஆம் ஆண்டில் 8.1% இலிருந்து, 2019 ஆம் ஆண்டில் 9.1% ஆக அதிகரித்து, பின்னர் 2022 ஆம் ஆண்டில் அது 7.5% ஆகக் குறைந்தது.

பாலின வேறுபாடுகள்

  • 2022 ஆம் ஆண்டில் பெண்களுடன் (7.1%) ஒப்பிடும்போது ஆண்களிடையே (7.7%) குறைவான வேலை வாய்ப்பு விகிதம் சற்று அதிகமாக இருந்தது.
  • நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஒப்பீடுகள்
  • கிராமப்புறங்களை விட (7.2%) நகர்ப்புறங்களில் (8.4%) குறைவான வேலை வாய்ப்பு அதிகமாக இருந்தது.

போக்குகள் மற்றும் தாக்கங்கள்

  • திறந்த வேலைவாய்ப்பின்மையுடன் ஒப்பிடுதல்
  • வேலைவாய்ப்பின்மை விகிதங்கள், திறந்த வேலைவாய்ப்பின்மையை விட கணிசமாக அதிகமாக இருந்தாலும், அவை 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில், குறிப்பாக பெண்களிடையே (2.5 சதவீத புள்ளிகளால்) குறைந்துள்ளன.
  • தொற்றுநோய்க்கு முந்தைய மற்றும் பிந்தையப் போக்குகள்
  • தொற்றுநோய்க்கு முன் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, தொற்றுநோய் இருந்த போது மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட சரிவு, குறிப்பாகப் பெண்களிடையே, கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைப்பது குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.

வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் படை மாறுபாடுகள்

  • 2000 முதல் 2012 வரையிலான போக்குகள்
  • தொழிலாளர் மற்றும் தொழிலாளர் படை வளர்ச்சி
  • இந்த காலக்கட்டத்தில் தொழிலாளர் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் படை வளர்ச்சி ஆகியவை இணைந்து நகர்ந்தன.
  • மக்கள்தொகை வளர்ச்சித் தாக்கம்
  • தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் (LFPR) சரிவு.
  • தொழிலாளர் மக்கள் தொகை விகிதத்தில் குறைவு.

2012 முதல் 2019 வரையிலான போக்குகள்

  • மிகக் குறைவான வேலைவாய்ப்பு வளர்ச்சி
  • வேலை வாய்ப்பு மிகக் குறைவான விகிதத்தில் வளர்ந்தது என்ற நிலையில் அது தொழிலாளர் படையின் வளர்ச்சியை விட கணிசமாகக் குறைவாக இருந்தது.
  • விளைவுகள்
  • ஏற்றத்தாழ்வுகள் பின்வருவனவற்றிக்கு வழி வகுத்தன:
  • அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்.
  • LFPR மற்றும் தொழிலாளர் மக்கள் தொகை விகிதத்தில் மேலும் சரிவு.

2019 முதல் 2022 வரையிலான போக்குகள்

  • தொழிலாளர் வளர்ச்சியானது தொழிலாளர் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது என்பதோடு இது மக்கள்தொகை வளர்ச்சியை விட அதிகமாக இருந்தது.
  • முடிவுகள்
  • வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்தது.
  • LFPR மற்றும் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் இரண்டிலும் அதிகரிப்பு ஏற்பட்டது.

துறை சார்ந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி

  • விவசாயத் துறை
  • போக்குகள் (2000-2019)
  • விவசாயத் தொழிலாளர்கள் அதிகரித்து வரும் வேகத்திலேயே குறைந்துள்ளனர்.
  • தலைகீழ் மாற்றங்கள் (2019-2022)
  • 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் 8.9% என்ற விகிதத்தில் விவசாயத் தொழிலாளர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு

  • வளர்ச்சி விகிதங்கள்
  • 2012-2019 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2019-2022 ஆகிய ஆண்டுகளில் விவசாயம் அல்லாத வேலை வாய்ப்பு சற்று அதிக விகிதத்தில் வளர்ந்துள்ளது.
  • முக்கிய பங்களிப்பாளர்கள்
  • கட்டுமான வேலைவாய்ப்பு வளர்ச்சி ஒரு முக்கிய உந்துதலாக இருந்தது என்ற நிலையில் அது சமீபத்திய காலக் கட்டத்தில் கிட்டத்தட்ட 6.4% வளர்ச்சி அடைந்துள்ளது.

உற்பத்தி மற்றும் சேவைத் துறை ஒப்பீடுகள்

  • மொத்த விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு வளர்ச்சியை விட உற்பத்தித் துறை வேலை வாய்ப்பு வளர்ச்சி சற்று அதிகமாக இருந்தது.
  • இதற்கு நேர்மாறாக, 2019-2022 ஆகிய ஆண்டுகளில் சேவைத் துறை வேலைவாய்ப்புகள் குறைந்த விகிதத்தில் சுமார் 1.1% வளர்ச்சியடைந்தன.

வேலைவாய்ப்பு மற்றும் வெளியீட்டில் ஏற்பட்ட துறைசார் மாற்றங்கள்

  • கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் (2019-2022)
  • கோவிட் - 19 தொற்றுநோய் என்பது முந்தையப் போக்குகளை மாற்றியது:
  • மொத்த GVAவில் (மொத்த மதிப்பு கூடுதல்) முதன்மைத் துறையின் பங்கு 14.8% என்ற அளவிலிருந்து 15.6% ஆக அதிகரித்துள்ளது.
  • விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு 2019 ஆம் ஆண்டில் 42.4% இலிருந்து, 2021 ஆம் ஆண்டில் 46.4% ஆக கணிசமாக உயர்ந்து பின்னர் 2022 ஆம் ஆண்டில் 45.4% ஆக குறைந்தது.
  • கட்டுமானம் மற்றும் வர்த்தகம், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தவிர, விவசாயம் அல்லாத துறையின் பங்கில் சரிவு ஏற்பட்டது.

வேலைவாய்ப்பு விநியோகம் (2022)

  • ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகள்
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் வேலைவாய்ப்பில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவு சுய வேலை வாய்ப்பாகும் என்பதோடு இது மொத்த வேலைவாய்ப்பில் 55.8% ஆகும். அதனைத் தொடர்ந்து வருவன:
  • சாதாரண வேலைவாய்ப்பு: 22.7%
  • வழக்கமான வேலைவாய்ப்பு: 21.5%
  • போக்குகள் (2000-2022)
  • 2000 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் சுய வேலைவாய்ப்பின் பங்கு 52% ஆக நிலையானதாக இருந்தது.
  • அதே காலக்கட்டத்தில் வழக்கமான வேலைவாய்ப்பு 14.2% என்ற அளவிலிருந்து, 23.8% ஆக கணிசமாக அதிகரித்துள்ளது.
  • இருப்பினும், 2022க்குள்:
  • சுயவேலைவாய்ப்பு 3.8 சதவீதப் புள்ளிகள் அதிகரித்து 55.8% ஆக உள்ளது.
  • வழக்கமான வேலைவாய்ப்பு 2.3 சதவீதப் புள்ளிகள் குறைந்து 21.5% ஆக உள்ளது.
  • 2000 ஆம் ஆண்டில் 33.3% ஆக இருந்த சாதாரண வேலை வாய்ப்பு, 2022 ஆம் ஆண்டில் 22.7% ஆகக் குறைந்தது.

  • வழக்கமான வேலைவாய்ப்பு பற்றிய கண்ணோட்டம்
  • வழக்கமான வேலைவாய்ப்புகளில் அதிகரிப்பு: சமீபத்திய ஆண்டுகளில் வழக்கமான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ளது.
  • வழக்கமான வேலைவாய்ப்புக்கான நிபந்தனைகள்
  • முறைசாராமை மற்றும் ஒப்பந்தங்களின் பற்றாக்குறை:
  • ஒப்பந்தம் இல்லாமல் வழக்கமான தொழிலாளர்களின் சதவீதம் 2005 ஆம் ஆண்டில் 59.6% ஆக இருந்து, அது 2019 ஆம் ஆண்டில் 69.8% ஆக கணிசமாக உயர்ந்தது.
  • தொற்றுநோய்களின் போது பாதிக்கப்பட, வழக்கமான வேலைவாய்ப்புகள் இழந்ததைத் தொடர்ந்து, இந்த சதவீதம் 2022 ஆம் ஆண்டில் 61.9% ஆகக் குறைந்தது.

நீண்ட கால ஒப்பந்தங்கள்

  • நீண்ட கால ஒப்பந்தங்களில் சரிவு:
  • நீண்ட கால ஒப்பந்தங்களைக் கொண்ட தொழிலாளர்களின் பங்கு (மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக) 2005 ஆம் ஆண்டில் 35.9% ஆக இருந்து, 2019 ஆம் ஆண்டில் 21.5% ஆக தொடர்ந்து குறைந்தது.
  • இந்தப் போக்கு 2022 ஆம் ஆண்டில் 26.4% ஆக அதிகரித்து சற்று தலைகீழாக மாறியது.

  • தாக்கங்கள்
  • எழுத்துப்பூர்வ ஒப்பந்தங்கள் இல்லாத வழக்கமான தொழிலாளர்களின் பங்கில் ஏற்பட்ட சமீபத்திய குறைவு, நீண்ட கால ஒப்பந்தத் தொழிலாளர்களின் அதிகரிப்புடன், தொற்று நோயைத் தொடர்ந்து வழக்கமான வேலைக்கான பணி நிலைத் தன்மையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.

ஊதியம் மற்றும் வருவாய்

  • வேலைவாய்ப்பு நிலை மூலம் சராசரி வருவாய்
  • தினசரி வருவாய்:
  • வேலைவாய்ப்பு நிலை (சுய தொழில், வழக்கமான சம்பளம் மற்றும் சாதாரண தொழிலாளர்கள்), பாலினம் மற்றும் இருப்பிடம் (கிராமப்புறம் அல்லது நகர்ப்புறம்) ஆகியவற்றின் அடிப்படையில் சராசரி தினசரி வருவாயில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
  • சராசரி மாதாந்திர வருவாய் (2022)
  • வழக்கமான பணியாளர்கள்: ₹19,010
  • சுயதொழில் செய்பவர்கள்: ₹11,973
  • சாதாரண தொழிலாளர்கள்: ₹8,267

பாலின ஊதிய இடைவெளி

  • பாலின அடிப்படையில் சராசரி மாத வருவாய்:
  • சராசரி வருவாயில் பாலின இடைவெளி நீடிக்கிறது என்ற நிலையில், சுயதொழில் செய்பவர்கள் மிகப்பெரிய பாலின இடைவெளியை அனுபவிப்பதோடு, அதைத் தொடர்ந்து சாதாரண மற்றும் வழக்கமான சம்பளம் பெறும் தொழிலாளர்களின் மத்தியில் பாலின இடைவெளி உள்ளது.
  • போக்குகள்:
  • வழக்கமான வேலைவாய்ப்புக்கான பாலின மற்றும் கிராமப்புற-நகர்ப்புற வருவாய் இடைவெளிகள் பல ஆண்டுகளாகக் குறைந்திருந்தாலும், அவை சாதாரண வேலை மற்றும் சுய வேலை வாய்ப்புகளில் விரிவடைந்துள்ளன.

ஊதியங்கள் மற்றும் வருவாய்ப் போக்குகள்

  • சராசரி மாதாந்திர உண்மையான வருவாய்
  • வழக்கமான ஊதியம் பெறும் தொழிலாளர்கள்:
  • 2012 ஆம் ஆண்டில் ₹12,100 ரூபாயில் இருந்து, 2019 ஆம் ஆண்டில் ₹11,155 ஆக ஆண்டுதோறும் 1.2% குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 0.7% குறைந்து ₹10,925 ஆக இருந்தது.
  • சுயதொழில் செய்பவர்கள்:
  • 2019 ஆம் ஆண்டில் ₹7,017 ரூபாயில் இருந்து, 2022 ஆம் ஆண்டில் ₹6,843 ஆக ஆண்டுக்கு 0.8% சரிவைச் சந்தித்துள்ளது.
  • சாதாரண தொழிலாளர்கள்:
  • சராசரி உண்மையான வருவாய் 2012 ஆம் ஆண்டில் ₹3,701 ஆக இருந்து, 2019 ஆம் ஆண்டில்  ₹4,364 ஆக ஆண்டுக்கு 2.4% அதிகரித்துள்ளது.
  • மேலும் ஆண்டுக்கு 2.6% அதிகரித்து 2022 ஆம் ஆண்டில் ₹4,712 ஆக இருந்தது.

மாத ஊதியத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் பரவல்

  • வழக்கமான தொழிலாளர்கள்
  • ₹5,000 வரை ஊதியம்:
  • 2012 ஆம் ஆண்டில் 34.6% ஆக இருந்து, 7.7 சதவீதப் புள்ளிகள் குறைந்து 2022 ஆம் ஆண்டில் 26.9% ஆக குறைந்தது.
  • இந்த மாற்றமானது வழக்கமான தொழிலாளர்களிடையே ஊதிய விநியோகத்தில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
  • சாதாரண தொழிலாளர்கள்
  • ₹5,000 வரை ஊதியம்:
  • 42.2 சதவீதப் புள்ளிகளுடன், 2012 ஆம் ஆண்டில் 75.4% என்ற அளவில் இருந்து 2022 ஆம் ஆண்டில் 33.2% ஆக குறிப்பிடத்தக்கச் சரிவடைந்தது.
  • ₹10,000க்கு மேல் ஊதியம்:
  • 2012 ஆம் ஆண்டில் தோராயமாக 3% என்ற அளவில் இருந்து 2022 ஆம் ஆண்டில் 8% ஆக அதிகரித்து, 5 சதவீதப் புள்ளிகள் உயர்வைக் குறிக்கிறது.

சராசரி மாத ஊதியத்தின் போக்கு

  • சராசரி உண்மையான மாதாந்திர வருவாய்
  • ஏழ்மையான அடுக்குகள்:
  • கடந்த பத்து ஆண்டுகளில் ஏழ்மையான அடுக்குகளில் சராசரி உண்மையான மாத வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் சரிவு இருந்த போதிலும், சாதாரண தொழிலாளர்கள் வழக்கமான தொழிலாளர்களுடன் ஒப்பிடப் படும் போது மிகவும் கூர்மையான அதிகரிப்பைக் கண்டனர்.
  • வழக்கமான தொழிலாளர்கள்:
  • 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் சராசரி வருவாய் கிட்டத்தட்ட சீராக இருந்தது.
  • சாதாரண தொழிலாளர்கள்:
  • 2019 முதல் 2022 வரை சராசரி மாத வருமானம் கிட்டத்தட்ட 80% அதிகரித்துள்ளது, இருப்பினும் இந்த உயர்வு அடிப்படை விளைவால் பாதிக்கப்படலாம்.
  • பணக்கார அடுக்குகள்
  • வழக்கமான தொழிலாளர்களின் உண்மையான சராசரி மாத வருமானம் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.
  • இதற்கு நேர்மாறாக, பணக்காரர்களின் அடுக்குகளில் உள்ள சாதாரண தொழிலாளர்களின் வருவாய் ஒரு எதிர்போக்கைப் பின்பற்றியது என்பதோடு, இது வேலைவாய்ப்பு வகைகளில் ஊதிய வளர்ச்சியில் மாறுபாட்டைக் குறிக்கிறது.

வருவாய் சமத்துவமின்மை

  • 2022 ஆம் ஆண்டில், ஏழ்மையான மற்றும் பணக்கார அடுக்குகளுக்கு இடையிலான சராசரி மாத வருவாயின் விகிதம்:
  • வழக்கமான தொழிலாளர்களுக்கு 12%.
  • சாதாரண தொழிலாளர்களுக்கு 30%.

  • இது சாதாரண தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது, ​​வழக்கமான தொழிலாளர்களிடையே வருவாயில் அதிக சமத்துவமின்மையைக் குறிப்பதோடு, இது வேலைவாய்ப்பு நிலைத்தன்மை மற்றும் சம்பாதிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப் போகிறது.

குறைந்தபட்ச ஊதியம் பெறாத தொழிலாளர்களின் விகிதம்

  • 2022 ஆம் ஆண்டிற்கான காலம் சார்ந்த தொழிலாளர் கணக்கெடுப்பின் அடிப்படையிலான பகுப்பாய்வு, விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் திறனற்ற தொழிலாளர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறாத தொழிலாளர்களின் விகிதம் தொடர்பான புள்ளி விவரங்களை வெளிப்படுத்துகிறது.

அகில இந்திய அளவில்

  • வழக்கமான தொழிலாளர்கள்:
  • 40.8% திறனற்ற விவசாயத் தொழிலாளர்கள் சராசரி தினசரி குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற வில்லை.
  • சாதாரண தொழிலாளர்கள்:
  • 51.9% திறனற்ற விவசாயத் தொழிலாளர்கள் சராசரி தினசரி குறைந்தபட்ச ஊதியத்தை இழந்து உள்ளனர்.

கட்டுமானத் துறை

  • வழக்கமான தொழிலாளர்கள்:
  • கட்டுமானத் துறையில் 39.3% திறனற்றத் தொழிலாளர்கள் சராசரி தினசரி குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறவில்லை.
  • சாதாரண தொழிலாளர்கள்:
  • கட்டுமானத் துறையில் 69.5% திறனற்றத் தொழிலாளர்கள் சராசரி தினசரி குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறவில்லை.

  • இந்த புள்ளிவிவரங்கள் ஊதிய இணக்கத்தில் குறிப்பிடத்தக்க சவால்களை எடுத்துக் காட்டுகின்றன என்பதோடு, அது குறிப்பாக சாதாரண தொழிலாளர்கள் மத்தியில், குறைந்த பட்ச ஊதிய விதிமுறைகளை மேம்படுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது.
  • பங்கேற்பு மற்றும் வருவாய்: தொழிலாளர்களில் பெண்களின் பங்கேற்பு மற்றும் அவர்களின் வருமானம் ஆண்களை விடக் கணிசமாக குறைவாக உள்ளது.
  • பெண்களில் பெரும்பாலோர் சுயதொழில், முறைசாரா வேலைவாய்ப்பு அல்லது குறைந்த திறன் கொண்ட உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்பதோடு, இது ஆண்களின் பணிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
  • கல்வித் தகுதி: 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, 44.6% ஆண்களுடன் ஒப்பிடும் போது, ​​33.6% பெண்கள் மட்டுமே இடைநிலைக் கல்வி அல்லது அதற்கு மேல் படித்துள்ளனர்.
  • இந்த கல்வி இடைவெளி, சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அதிகப்படுத்துகிறது.
  • இந்தக் காரணிகள் இந்தியத் தொழிலாளர் சந்தையில் குறிப்பிடத்தக்கப் பாலின வேறுபாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்பதோடு, இது பெண்களின் முழுப் பங்கேற்பு மற்றும் பொருளாதார அதிகாரம் பெறுவதற்குத் தடையாக இருக்கும் முறையான தடைகளை வெளிப்படுத்துகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்