TNPSC Thervupettagam

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 – பாகம் 04

November 7 , 2024 27 days 173 0

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 – பாகம் 04

(For English version to this please click here)

இந்தியாவில் இடம்பெயர்வு போக்குகள் (2000–2021)

  • வேலைவாய்ப்பு முறைகள் மற்றும் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இடம்பெயர்வுப் போக்குகளை குறிப்பாக வேலைவாய்ப்பு தொடர்பானவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

முக்கியப் போக்குகள்:

  • ஒட்டு மொத்த இடம்பெயர்வு விகிதம்: இந்தியாவில் ஒட்டுமொத்த இடம்பெயர்வு விகிதம் 2000 ஆம் ஆண்டில் 26.8% ஆக இருந்து, 2.1 சதவீதப் புள்ளிகளால் 2021 ஆம் ஆண்டில் 28.9% ஆக சற்று அதிகரித்துள்ளது.

பாலின வேறுபாடுகள்:

  • பெண்கள்: பெண்களிடையே இடம்பெயர்தல் விகிதம் கணிசமாக உயர்ந்து, 5.5 சதவீதப் புள்ளிகள் அதிகரித்து 42.4% என்ற அளவிலிருந்து 47.9% ஆக உள்ளது.
  • ஆண்கள்: மாறாக, ஆண்களுக்கான இடம்பெயர்வு விகிதம் 1.4 சதவீதப் புள்ளிகளாக குறைந்து ள்ளது என்பதோடு இது 12.1% என்ற அளவிலிருந்து 10.7% ஆக குறைந்துள்ளது.

வேலைவாய்ப்பு தொடர்பான காரணங்களால் இடம்பெயர்தல்

  • கண்ணோட்டம்
  • 2021 ஆம் ஆண்டில், அனைத்து விதமாகப் புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 10.7% பேர் வேலை நோக்கங்களுக்காக இடம்பெயர்ந்தனர்.
  • இடம்பெயர்வுக்கான காரணங்கள்
  • வேலைவாய்ப்பினைத் தேடுதல்.
  • சிறந்த வேலைவாய்ப்புகளுக்கான இடம்பெயர்வு.
  • பணி இடமாற்றம்.
  • வேலை செய்யும் இடத்திற்கு அருகாமை.
  • முன்பு வசித்த இடத்தில் வேலை வாய்ப்பு இல்லாதது.
  • பாலின வேறுபாடுகள்
  • பெண்கள்: புலம்பெயர்ந்த பெண்களில் 1.7%.
  • ஆண்கள்: புலம்பெயர்ந்த ஆண்களில் 49.6%.
  • பிராந்தியச் சிறப்பம்சங்கள்
  • டெல்லி: 87.1%
  • கர்நாடகா: 63.2%
  • மகாராஷ்டிரா: 59.5%

வேலைவாய்ப்பு வகைகளில் மாற்றங்கள்

  • சுயதொழில்
  • தொடர்ச்சியான அதிகரிப்பு: கோவிட் 19 தொற்றுநோய் காலகட்டத்தின் போது சுயதொழிலில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து 2022 ஆண்டு வரை தொடர்ந்தது.
  • பாதிப்புகள் ஏற்படக் கூடிய வேலை: இந்த வளர்ச்சி குறிப்பாக கிராமப்புறங்களில் மற்றும் பெண்களிடையே ஊதியம் அல்லாத குடும்ப வேலைகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தொழிலாளர் விகிதம்:

  • விகிதம்: சுயதொழில் செய்பவர்களில் கணிசமானப் பகுதியினர் ஊதியம் பெறாத குடும்பப் பணியாளர்களைக் கொண்டிருந்தனர்.

வழக்கமான மற்றும் சாதாரண வேலைவாய்ப்பு

  • மெதுவான வளர்ச்சி: வழக்கமான முறையான, முறைசாராத மற்றும் சாதாரணமாக ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையானது, தொற்றுநோய் காலக் கட்டத்தின் போது வேலை வாய்ப்பு குறைவான வேகத்தில் அதிகரித்தது.
  • சாதாரண வேலைவாய்ப்பு: மற்ற வேலைவாய்ப்பு வகைகளுடன் ஒப்பிடும் போது தொடர்ச்சியான வளர்ச்சியுடன் ஓரளவு நெகிழ்ச்சியைக் காட்டியுள்ளது.
  • தொற்றுநோய்க்குப் பிந்தைய குறைப்பு: தொற்றுநோய்க்குப் பிறகு, வழக்கமான மற்றும் முறைசாராத வேலைவாய்ப்புகள் சீராக குறைந்தது, அதே சமயம் சாதாரண வேலைவாய்ப்பு நிலையாக இருந்தது.

புவியியல் பரவல்

  • கிராமப்புறம்: கூடுதலாக, சுயதொழில் செய்பவர்களில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமானோர் கிராமப்புறங்களில் இருந்தனர்.

உண்மையான மாதாந்திர ஊதியம் மற்றும் வருவாய் மாற்றங்கள்

  • கண்ணோட்டம்
  • 2022 ஆம் ஆண்டில் சில மீட்சியுடன், உச்சத்தில் தொற்றுநோய் இருந்த ஆண்டுகளில் ஊதியங்களில், கோவிட் - 19 நோயின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
  • சாதாரண ஊதியம்
  • 2020: ஊரடங்கு நடவடிக்கைகளால் குறிப்பாகச் சாதாரண ஊதியங்கள் மெதுவாக வளர்ந்தன.

  • 2021: வளர்ச்சி குறைவாகவே இருந்தது.
  • 2022: மீட்பு காலத்தில் சாதாரண ஊதியங்களின் வளர்ச்சி விகிதத்தில் மறுமலர்ச்சி காணப் பட்டது.

வழக்கமான மற்றும் சுயதொழில் வருவாய்

  • குறைந்த வளர்ச்சி விகிதங்கள்: வழக்கமான மற்றும் சுயதொழில் வருவாயில் 2021 ஆம் ஆண்டு வரை குறைந்த அல்லது எதிர்மறையான வளர்ச்சி விகிதம் உள்ளது.
  • 2022 மீட்பு: வழக்கமான மற்றும் சுயதொழில் வருவாயில் ஆகிய இரு வருவாய்களின் வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் குறிப்பிடப் பட்டது.

ஊதிய வளர்ச்சியில் பாலின வேறுபாடுகள்

  • வழக்கமான ஊதியங்கள்: 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரையிலான வழக்கமான ஊதியத்தில் பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் சற்று எதிர்மறையான வளர்ச்சி விகிதத்தை அனுபவித்தனர்.
  • சுயதொழில் செய்பவர்கள்: பெண் சுயதொழில் செய்பவர்கள், ஆண் சுயதொழில் செய்பவர்களுடன் ஒப்பிடும் போது வருமானத்தில், கணிசமாக உயர்ந்த எதிர்மறை வளர்ச்சி விகிதத்தை எதிர்கொண்டனர்.
  • சாதாரண ஊதியங்கள்: ஆண்களின் சாதாரண ஊதியத்துடன் ஒப்பிடுகையில், பெண்களின் சாதாரண ஊதியங்கள் சற்று அதிக வளர்ச்சி விகிதத்தை வெளிப்படுத்தின.
  • இந்தப் போக்குகள் பல்வேறு வேலைவாய்ப்பு வகைகளில் தொற்றுநோயின் மாறுபட்ட தாக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன மற்றும் வருவாயில் நிலையான பாலின வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகின்றன.

துறை சார்ந்த வேலைவாய்ப்பு பகுப்பாய்வு (2019–2022)

  • கண்ணோட்டம்
  • பரந்த துறைசார் பகுப்பாய்வு 2019 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப் பகுதியில் வெவ்வேறு துறைகளில், வேலைவாய்ப்பில் ஏற்பட்ட மாறுபட்ட போக்குகளைக் குறிக்கிறது.

துறை சார்ந்த வேலைவாய்ப்புப் போக்குகள்

  • விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள்
  • நிலையான வளர்ச்சி: விவசாயத் துறையானது, 2020 ஆம் ஆண்டில் 30.8 மில்லியன், 2021 ஆம் ஆண்டில் 12.1 மில்லியன் மற்றும் 2022 ஆம் ஆண்டில் 12.9 மில்லியன் அதிகரிப்புடன் வேலை வாய்ப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது.
  • கட்டுமானத் துறை
  • நிலையான அதிகரிப்பு: கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது என்ற நிலையில் அது 2020 ஆம் ஆண்டில் 2.4 மில்லியனாகவும், 2021 ஆம் ஆண்டில் 5.7 மில்லியனாகவும், 2022 ஆம் ஆண்டில் 3.3 மில்லியனாகவும் அதிகரித்துள்ளது.

பிற துறைகள்

  • நிலைத்தன்மை அல்லது சிறு அதிகரிப்பு: கட்டுமானம், வர்த்தகம், உற்பத்தி மற்றும் தகவல் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை நிலையான அல்லது அதே காலக் கட்டத்தில் சிறு அதிகரிப்பைக் கண்டது.

ஊரடங்குகளின் தாக்கம்

  • ஊரடங்கின் போது வேலை இழப்புகள்: நாடு தழுவிய ஊரடங்கின் போது உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் விவசாயத் துறையின் சில பகுதிகளில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக காலாண்டுத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
  • ஊரடங்கிற்குப் பிந்தைய மீட்பு: ஊரடங்கு நடவடிக்கைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகள் இரண்டிலும் வேலைவாய்ப்பில், குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டது என்ற நிலையில் இது தொற்றுநோய்களின் போது வருடாந்திரத் துறை மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.

தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகள்

  • வேலைவாய்ப்பு மாற்றங்களின் கண்ணோட்டம் (2000-2019)
  • 2000 ஆம் ஆண்டில், உயர் மற்றும் நடுத்தரத் திறன் வேலைகள் 5.1% ஆக இருந்தது என்ற நிலையில் 2019 ஆம் ஆண்டில் இது 9.6% ஆக அதிகரித்துள்ளது.
  • குறைந்த திறன் வேலைகள் 2000 ஆம் ஆண்டில் 60.5% ஆக இருந்து 2019 ஆம் ஆண்டில் 65.1% ஆக உயர்ந்துள்ளது.
  • திறன் இல்லாத வேலைகள் 2000 ஆம் ஆண்டில் 34.4% ஆக இருந்து 2019 ஆம் ஆண்டில் 25.4% ஆக குறைந்துள்ளது.

வேலைவாய்ப்புப் போக்குகளில் மாற்றம் (2019-2022)

  • குறைந்த திறன் கொண்ட வேலைகளின் அதிகரிப்பு.
  • குறைந்த திறன் வேலை கிடைப்பதில் தொடர்ச்சியான மேல்நோக்கியப் போக்கு.

குறைந்த உயர் மற்றும் நடுத்தர திறன் வேலைகள்

  • உயர் மற்றும் நடுத்தரத் திறன் வேலை வாய்ப்புகளில் குறிப்பிடத் தக்கச் சரிவு காணப்படுகிறது.

வேலைவாய்ப்பு தரத்தில் கோவிட் - 19 தொற்றின் தாக்கம்

  • வேலை இழப்பு மற்றும் வேலையின் தரம்
  • இந்தத் தொற்றுநோயானது வழக்கமான ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, குறிப்பிடத் தக்க வேலை இழப்பை ஏற்படுத்தியது.
  • வேலைவாய்ப்பின் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டது என்பதோடு இது குடும்பங்களில் பொருளாதார நெருக்கடிக்கு வழி வகுத்தது.
  • நிதி நெருக்கடி
  • சுய தொழில் தொடங்க குடும்பங்கள் வற்புறுத்தப்பட்டன.
  • ஊதியம் இல்லாத வேலையில் குடும்ப உறுப்பினர்களின் ஈடுபாடு அதிகரித்தது.

வேலைவாய்ப்புப் போக்குகள் (2000-2019)

  • உயர் மற்றும் நடுத்தர திறன் வேலைகளில் அதிகரிப்பு
  • 2000 ஆம் ஆண்டில் 5.1% ஆக இருந்த பங்கு, 2019 ஆம் ஆண்டில் 9.6% ஆக உயர்ந்தது.
  • குறைந்த திறன் வேலைகளில் அதிகரிப்பு
  • 2000 ஆம் ஆண்டில் 60.5% ஆக இருந்த பங்கு, 2019 ஆம் ஆண்டில் 65.1% ஆக அதிகரித்துள்ளது.
  • திறன் இல்லாத வேலைகளில் குறைவு
  • 2000 ஆம் ஆண்டில் 34.4% ஆக இருந்த பங்கு, 2019 ஆம் ஆண்டில் 25.4% ஆக குறைந்தது.

வேலைவாய்ப்புப் போக்குகளில் மாற்றம் (2019-2022)

  • குறைந்த திறன் வேலைகளில் அதிகரிப்பு
  • குறைந்த திறன் கொண்ட வேலை கிடைப்பது தொடர்ந்து உயர்ந்தது.
  • உயர் மற்றும் நடுத்தர திறன் வேலைகள் குறைதல்
  • உயர் மற்றும் நடுத்தர திறன் வேலை வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க சரிவு இருந்தது.

தொழிலாளர் சந்தை மாறுபாடுகள்

  • குறைந்த திறன் கொண்ட தொழிலாளர் பரவலில் நீடித்த அதிகரிப்பு
  • பல தனிநபர்கள் குடும்ப வருமானத்தை ஆதரிப்பதற்காக வேலை செய்ய நிர்பந்திக்கப் பட்டனர்.

உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புப் போக்குகள்

  • உயர் மற்றும் நடுத்தர திறன் வேலைகளில் அதிகரிப்பு
  • உயர் மற்றும் நடுத்தர திறன் வேலைகளின் பங்கு 2000 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் 2.9% என்ற அளவிலிருந்து 6.7% ஆக உயர்ந்துள்ளது.
  • திறன் இல்லாத வேலைகளில் அதிகரிப்பு
  • அதே காலக் கட்டத்தில் திறன் இல்லாத வேலைகளின் பங்கு 9.7% என்ற அளவிலிருந்து 20.4% ஆக அதிகரித்துள்ளது.

நிறுவனங்களில் மாறுபாடு

  • எல்லா நிறுவனங்களும் இந்தப் போக்குகளை சமமாக அனுபவிக்கவில்லை.
  • இந்திய உற்பத்தித் துறையில், சுமார் 90% க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் குறு, சிறு மற்றும் முறைசாராததாக உள்ளது.
  • இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் உடலுழைப்பு சார்ந்த மற்றும் திறமையற்ற தொழிலாளர்களை நம்பியுள்ளன.

துறை சார்ந்த குறிப்புகள்

  • உயர் மற்றும் நடுத்தர திறன் வேலைகளை அதிகரிக்கும் போக்கு முறையான, அதிக மூலதனம் பெற்ற துறைகள் மற்றும் நவீன உற்பத்தித் துறைகளில் அதிகமாகக் காணப்பட்டது.

சேவைத் துறையில் வேலைவாய்ப்புப் போக்குகள்

  • உயர் மற்றும் நடுத்தரத் திறன் கொண்ட வேலைகளின் பரவல்
  • பொது நிர்வாகம், சுகாதாரம் மற்றும் கல்வி: 45.1%
  • நிதி, வணிகம் மற்றும் நில மனை: 42.3%
  • போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு: 19.7%
  • வர்த்தகம், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள்: 3%

குறைந்த மற்றும் திறன் இல்லாத வேலைகளின் விநியோகம்

  • வர்த்தகம், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள்:
  • இந்த வகையில் முக்கியமாக குறைந்த மற்றும் திறன் இல்லாத வேலைகள் 97% வேலை வாய்ப்பை உருவாக்குகின்றன.

உயர் மற்றும் நடுத்தர திறன் வேலைகளில் வளர்ச்சி

  • போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தகவல் தொடர்பு:
  • உயர் மற்றும் நடுத்தரத் திறன் கொண்ட வேலைகளின் பங்கு 2000 ஆம் ஆண்டில் 2.7% என்ற அளவில் இருந்து, 2022 ஆம் ஆண்டில் 19.7% ஆக அதிகரித்துள்ளது.
  • இந்த வளர்ச்சியில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) தொடர்பான வேலைகளும் அடங்கும்.

ICT வேலைவாய்ப்பில் கோவிட்-19 நோயின் தாக்கம்

  • கோவிட்-19 தொற்றுநோய் காலத்திலும் அதற்குப் பின்னரும் உயர் மற்றும் நடுத்தரத் திறன் கொண்ட ICT பணியாளர்களுக்கான தேவை அதிகரித்தது.

வேலைவாய்ப்பில் தொழில்நுட்ப மாற்றங்களின் தாக்கம்

  • இரண்டு தசாப்தங்களாக வேலை வாய்ப்புப் போக்குகள்
  • தொழிலாளர் தேவை மாற்றம்:
  • திறமையான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு.
  • உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் குறைந்தத் திறன் கொண்ட தொழிலாளர் வேலை வாய்ப்பைக் குறைத்தல்.
  • நடுத்தர திறன் வேலைவாய்ப்பு நிலைத்தன்மை:
  • வளர்ந்த பொருளாதாரங்களைப் போலன்றி, இந்தியாவில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நடுத்தர திறன் கொண்ட தொழிலாளர் வேலைவாய்ப்பில் முழுமையான அளவில் குறைய வில்லை.

இந்தியாவில் இயந்திர மனிதமயமாக்கல்

  • தற்போதைய இயந்திர மனிதமயமாக்கல் விகிதம்:
  • 2021 ஆம் ஆண்டில் 4,945 தொழில்துறை இயந்திர மனிதர்கள் இருப்பதாகப் பதிவாகியுள்ள நிலையில், உலகளாவிய இயந்திர மனிதர்களில் இதன் மதிப்பு 0.8% மட்டுமே உள்ளது.
  • இயந்திர மனிதமயமாக்கலின் செறிவு:
  • முதன்மையான மூலதன-தீவிர தொழில்கள் மற்றும் நடுத்தர முதல் பெரிய அளவிலான சேவை அலகுகளுக்கு மட்டுமே இந்த வசதிகள் உள்ளன.
  • குறைந்த திறன் கொண்ட தொழிலாளர் மீதான தாக்கம்:
  • இயந்திர மனிதப் பயன்பாடு சில பணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற நிலையில் இதன் விளைவாக குறைந்தத் திறன் மற்றும் திறமையற்ற தொழிலாளர்களை எதிர்காலத்தில் இடமாற்றம் செய்வதற்கான குறைந்த வாய்ப்பும் உள்ளது.

துறை சார்ந்தப் போக்குகள்:

  • அடுத்தடுத்த துறை சார்ந்தப் பிரிவுகள், பரந்த துறை சார்ந்தப் போக்குகளை ஆழமாக ஆராயும் வளர்ச்சி, உற்பத்தித் திறன் மற்றும் வேலைவாய்ப்புத் தொடர்புகளின் மாற்றங்களை ஆராய்கிறது.

இந்தியாவின் மக்கள்தொகை அமைப்பு (2011-2036)

  • உழைக்கும் வயது மக்கள்தொகையின் கண்ணோட்டம்
  • தற்போதைய மற்றும் எதிர்கால கணிப்புகள்: இந்தப் பகுதியானது இந்தியாவின் மக்கள்தொகை கட்டமைப்பைப் பகுப்பாய்வு செய்வதோடு, உழைக்கும் வயதினரைப் புரிந்து கொள்ள 2011 முதல் 2036 வரையிலான கணிப்புகளில் ஏற்படும் மாற்றங்களில் கவனம் செலுத்துகிறது.
  • மாறிவரும் மக்கள்தொகை போக்குகள்: இந்தியாவின் தொழிலாளர் மற்றும் சார்பு விகிதத்தின் பரிணாம வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு குழந்தை, இளைஞர்கள், வயது வந்தோர் மற்றும் முதியோர் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்கிறது.

மக்கள்தொகை ஈவு

  • உழைக்கும் வயது மக்கள்தொகையின் நன்மை:
  • இந்தியாவின் மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் வேலை செய்யும் வயதில் (15-59 வயது) உள்ளனர் என்ற நிலையில் இது குறைந்தபட்சம் இன்னும் ஒரு தசாப்தத்திற்கு இந்த மக்கள்தொகை ஈவு மண்டலத்திற்குள் இருப்பதை உறுதி செய்கிறது.
  • இந்த மக்கள்தொகை அமைப்பு உற்பத்தி வேலைகளில் அதிகப் பங்கேற்பைச் செயல் படுத்துவதோடு அது தேசிய வருமானத்தை மேம்படுத்தவும் செய்கிறது.

மக்கள்தொகை வளர்ச்சி கணிப்புகள்

  • மக்கள் தொகை மதிப்பீடுகள்:
  • இந்தியாவின் மக்கள்தொகை 2021 ஆம் ஆண்டில் 1.36 பில்லியனில் இருந்து, 2031 ஆம் ஆண்டிற்குள் 1.48 பில்லியனாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் 2036 ஆம் ஆண்டில் 1.52 பில்லியனாக இருக்கும்.

பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களின் போக்குகள்

  • விகிதங்களில் சரிவு: கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்தியா பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்களில் தொடர்ச்சியான சரிவைக் கண்டுள்ளது என்ற நிலையில் இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்திற்கு வழிவகுக்கிறது.
  • பத்தாண்டு வளர்ச்சி விகிதங்கள்:
  • 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான தசாப்த வளர்ச்சி விகிதம் 12.5% ​​ஆக இருந்தது என்ற நிலையில் இது 2021-2031 தசாப்தத்தில் 8.4% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உழைக்கும் வயது மக்கள்தொகை விகிதம்

  • விகிதத்தில் வளர்ச்சி:
  • 2011 ஆம் ஆண்டில் 61% ஆக இருந்த உழைக்கும் வயது மக்கள்தொகை விகிதம் 2021 ஆம் ஆண்டில் 64% ஆக அதிகரித்தது, 2036 ஆம் ஆண்டளவில் இது 65% ஐ எட்டும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன என்ற நிலையில் அதன்பின் இது நிலைப்படுத்தப்படும்.

இந்தியாவில் பிராந்திய மக்கள்தொகை மாற்றங்கள்

  • இளைஞர்களின் வேலைவாய்ப்புப் போக்குகளில் உள்ள வேறுபாடுகள்
  • இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மைப் போக்குகளில் குறிப்பிடத்தக்க பிராந்திய மாறுபாடு உள்ளது.
  • இந்த ஏற்றத்தாழ்வுகள் ஏற்புடைய வேலைகளை உருவாக்கும் மற்றும் மக்கள்தொகை ஈவினை உணரும் திறனை திறம்படப் பாதிக்கிறது.
  • வயது அமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி
  • மக்கள்தொகை முதுமையின் நிலை மற்றும் வேகம் பிராந்தியங்களில் வேறுபடுகிறது.
  • வயது அமைப்பு மற்றும் வேலையின் அளவுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் ஆகியவற்றின் மாறுபாடுகள் இந்த வேறுபாடுகளை ஈர்க்கிறது.

இளைஞர் மக்கள் தொகை கொண்ட முக்கிய மாநிலங்கள்

  • உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார்:
  • இந்த மாநிலங்களில் மக்கள்தொகையில் இளைஞர்களின் பெரும் பங்கு உள்ளது.
  • அவர்களில் இளைஞர்களின் எண்ணிக்கை 2036 ஆம் ஆண்டிற்குள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • மற்ற குறிப்பிடத்தக்க மாநிலங்கள்:
  • மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இளைஞர் மக்கள் தொகை கொண்ட மாநிலங்களாகும்.
  • இளைஞர்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 49.2% என்ற அளவிலிருந்து, 2036 ஆம் ஆண்டிற்குள் 51.5% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் மக்கள்தொகையில் பிராந்திய மாறுபாடுகள்

  • கிழக்கு, மத்திய மற்றும் வட மாநிலங்கள்:
  • பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கணிசமான இளைஞர்கள் மற்றும் உழைக்கும் வயதுடைய மக்கள் உள்ளனர்.
  • தென் மாநிலங்கள்:
  • தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
  • இந்த மக்கள் தொகை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • முடிவில், இந்தியாவின் தொழிலாளர் சந்தையில் உள்ள சிக்கலானச் சவால்களைச் சமாளிப்பது ஒரு விரிவான மற்றும் மூலோபாயக் கொள்கை கட்டமைப்பிற்கு அழைப்பு விடுகிறது.
  • வேலைவாய்ப்பை உருவாக்குதல், வேலைத் தரம், சமத்துவம், திறன் பயிற்சி மற்றும் அறிவு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா தனது மக்கள்தொகை மாற்றங்களை சிறப்பாக வழி நடத்த முடியும் என்பதோடு எதிர்காலத்திற்கான அதிக அளவு உள்ளடக்கிய மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட பணியாளர்களை உறுதி செய்ய முடியும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்