TNPSC Thervupettagam

இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல்களின் வரலாறு – பாகம் 2

April 30 , 2024 62 days 374 0

(For English version to this please click here)

தேர்தல் இயந்திரம்

  • இந்திய தேர்தல் ஆணையம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும், இதில் ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் உள்ளனர்.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கிறார்.

தலைமை தேர்தல் அதிகாரி:

  • தேர்தல் ஆணையத்தின் ஒட்டு மொத்த வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்குள் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை தேர்தல் அதிகாரி மேற்பார்வையிடுகிறார்.
  • இந்த அதிகாரி தேர்தல் ஆணையத்தால் அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேச அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, திறம்பட ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் நிர்வாகத்தை உறுதி செய்கிறார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி:

  • மாவட்ட தேர்தல் அதிகாரி, ஒரு மாவட்டத்திற்குள் தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிடும் பணியானது, தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது.
  • மாவட்ட அளவில் தேர்தல் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் அளித்து, தேர்தல் ஆணையம் அந்த மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து மாவட்டத் தேர்தல் அதிகாரியை நியமிக்கிறது.

தேர்தல் பொறுப்பு அதிகாரி:

  • குறிப்பிட்ட நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தலை நடத்துவதற்குப் பொறுப்பான தேர்தல் பொறுப்பு அதிகாரி, தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாடு மற்றும் நேர்மையை உறுதி செய்கிறார்.
  • மாநில அல்லது யூனியன் பிரதேச அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும், தேர்தல் பொறுப்பு அதிகாரியானவர் அவர்களின் நியமிக்கப் பட்ட தொகுதிகளுக்குள் தேர்தல்களை மேற்பார்வை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

தேர்தல் பதிவு அதிகாரி:

  • பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் பராமரிக்கும் பணியானது தேர்தல் பதிவு அதிகாரியால் மேற்கொள்ளப்படுகிறது.
  • மாநில அல்லது யூனியன் பிரதேச அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட, தேர்தல் பதிவு அதிகாரி துல்லியமான மற்றும் புதுப்பித்த வாக்காளர் பதிவை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

தலைமை அதிகாரி:

  • வாக்குச் சாவடி மட்டத்தில் செயல்படும் தலைமை அதிகாரி, வாக்குச் சாவடி அலுவலர்களின் உதவியுடன் வாக்குப்பதிவு செயல்முறையை நடத்துவதற்குப் பொறுப்பாவார்.
  • மாவட்டத் தேர்தல் அதிகாரியால் (அல்லது யூனியன் பிரதேசங்களுக்கான தேர்தல் அதிகாரிகளால்) நியமிக்கப்பட்டவர்கள், வாக்குச் சாவடிகளில் தேர்தல்கள் சுமூகமாகவும், ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் தலைமைப் பொறுப்பாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

பார்வையாளர்கள்:

பொதுப் பார்வையாளர்கள்:

  • இந்த அதிகாரிகள் முழு தேர்தல் செயல்முறையையும் அதன் நேர்மை மற்றும் சுமூகமான நடத்தையை உறுதிப்படுத்த மேற்பார்வை செய்கிறார்கள்.
  • சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் கொள்கைகளை நிலைநிறுத்த, வாக்காளர் பதிவு முதல் முடிவு அறிவிப்பு வரை ஒவ்வொரு கட்டத்தையும் அவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்.

செலவினப் பார்வையாளர்கள்:

  • செலவினப் பார்வையாளர்கள் மத்திய அரசிலிருந்து வரவழைக்கப்பட்டு, வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்கின்றனர்.
  • செலவினப் பார்வையாளர்கள் மூலம் வாக்காளர்கள் மீது தேவையற்ற செல்வாக்கைத் தடுக்கின்றன மற்றும் சட்ட வரம்புகளுக்குள் செலவழிப்பதை உறுதி செய்கின்றன.

காவல்துறைப் பார்வையாளர்கள்:

  • காவல்துறைப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகின்றனர்.
  • அவர்கள் பாதுகாப்பு வரிசைப்படுத்தலைக் கண்காணித்து, நிலைமையை மதிப்பிடுகின்றனர், மற்றும் குடிமையியல் மற்றும் காவல்துறை நிர்வாகங்களை ஒருங்கிணைத்து ஒரு சாதகமானச் சூழலை உருவாக்குகிறார்கள்.

விழிப்புணர்வுப் பார்வையாளர்கள்:

  • 16வது மக்களவை தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட விழிப்புணர்வுப் பார்வையாளர்கள் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றனர்.
  • அவர்கள் வாக்காளர் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கான தலையீடுகளை கண்காணித்து, 'பணத்தின் மூலம் செய்திகள்' போன்ற சிக்கல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகின்றனர்.

மைக்ரோ பார்வையாளர்கள்:

  • இந்த அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட இன்ன பிற பார்வையாளர்களின் மேற்பார்வையின் கீழ் வாக்கு எண்ணிக்கையில் உதவுகிறார்கள்.

தேர்தல் செயல்முறைக்கான விளக்கவுரை:

  • லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்கான தேர்தல்கள், தொகுதிகளில் முதல்நிலை-பதவி-அமைப்பு செயல்படும்.
  • இந்த அமைப்பு வாக்காளர்கள் ஒரு வேட்பாளருக்கு தலா ஒரு வாக்கை அளிக்க அனுமதிக்கிறது, என்ற நிலையில் இந்த வேட்பாளர்களில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறுகிறவர்கள், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறார்.

உதவி செலவினப் பார்வையாளர்கள்:

  • செலவினக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், முக்கியப் பிரச்சார நிகழ்வுகளைக் காணொளிப் படம் எடுப்பதிலும், தேர்தல் முறைகேடுகள் குறித்தப் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதிலும் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

தேர்தல் செயல்முறை

தேர்தல் காலம்

  • லோக்சபா மற்றும் ஒவ்வொரு மாநில சட்டப் பேரவைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
  • லோக்சபாவின் நம்பிக்கையை அரசாங்கம் ஏற்க முடியாவிட்டால் மற்றும் பொறுப்பேற்க மாற்று அரசாங்கம் இல்லை எனில், ஜனாதிபதி மக்களவையைக் கலைத்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொதுத் தேர்தலை நடத்தலாம்.

தேர்தல் அட்டவணை

தேர்தல் ஆணையத்தின் பங்கு:

  • ஐந்தாண்டு பதவிக் காலம் முடிவடையும் போது அல்லது சட்டமன்றம் கலைக்கப்படும் போது, தேர்தல் ஆணையம் அரசியலமைப்பின் படி ஆறு மாதங்களுக்குள் தேர்தலுக்கு தயாராகிறது.

அட்டவணை அறிவிப்பு:

  • தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை ஒரு பெரிய செய்தியாளர் சந்திப்பில் அறிவித்து அதன் பிறகு வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கான மாதிரி நடத்தை விதிகளை செயல் படுத்துகிறது.

வேட்பாளர்களுக்கான அறிவிப்பு:

  • வேட்புமனுக்கள் கோருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன, வேட்பாளர்கள் அவர்கள் விரும்பிய தொகுதிகளில் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர், இவை தேர்தல் நடத்தும் அலுவலரால் ஆய்வு செய்யப் படுகிறது.

வேட்புமனு பரிசீலனை:

  • வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தேர்தல் நடத்தும் அதிகாரியால் பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டு, அவற்றைச் சரி பார்த்து, பரிசீலிக்கப் பட்டு பின்னர் இரண்டு நாட்களுக்குள் திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது.

பிரச்சார காலம்:

  • போட்டியிடும் வேட்பாளர்கள் உண்மையான வாக்குப்பதிவு தேதிக்கு முன், இரண்டு வார அரசியல் பிரச்சாரக் காலத்தை அனுபவிக்கிறார்கள்.

வாக்குப்பதிவு செயல்முறை:

  • அதிக வாக்காளர்கள் இருப்பதால், தேசிய தேர்தல்களுக்கு பல நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப் படுகிறது.

வாக்குகளை எண்ணுதல் மற்றும் முடிவுகள்:

  • ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் எண்ணுவதற்கும், முடிவுகள் வெளியிட தனித் தேதி அறிவிக்கப்பட்டு  நிர்ணயிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்:

  • தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலைத் தொகுத்து, சபையின் அமைப்பிற்கான அறிவிப்புகளை வெளியிடுகிறது.

சபையைக் கூட்டுதல்:

  • குடியரசுத் தலைவர் (லோக்சபாவிற்கு) அல்லது ஆளுநர்கள் (மாநிலச் சட்டசபைகளுக்கு) அமர்வுகளுக்காக அந்தந்த அவைகளைக் கூட்டுகின்றனர்.

உறுதிமொழி அல்லது உறுதிமொழியேற்பு:

  • வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அல்லது குறிப்பிட்டச் சந்தர்ப்பங்களில், மருத்துவக் கண்காணிப்பாளர்கள் அல்லது வெளிநாட்டிலுள்ள தூதர்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு முன்பாக உறுதிமொழி அல்லது உறுதி மொழியேற்பைச் செய்ய வேண்டும்.

தேர்தல் பிரச்சாரம்

வேட்புமனு தாக்கல் செயல்முறை:

  • வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க ஒரு வார கால அவகாசம் உள்ளது, இவை தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு, ஒழுங்கற்றதாகக் கண்டறியப் பட்டால் அவை நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது, இவை இரண்டு நாட்களுக்குள் திரும்பப் பெற அனுமதிக்கப் படுகிறது.

அதிகாரப்பூர்வப் பிரச்சாரக் காலம்:

  • அதிகாரப்பூர்வப் பிரச்சாரம் நியமனப் பட்டியல் தொகுப்பிலிருந்து குறைந்தது இரண்டு வாரங்கள் நீடிக்கும், மேலும் வாக்குப்பதிவு முடிவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக அவை நிறுத்தப்படும்.

மாதிரி நடத்தை விதிகள்:

  • அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நியாயமானப் பிரச்சாரத்தை உறுதிப்படுத்தவும், மோதல்களைத் தடுக்கவும், முடிவுகள் வரும் வரை அமைதியைப் பேணவும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

அறிக்கைகள் மற்றும் முழக்கங்கள்:

  • கட்சிகள் தங்கள் திட்டங்கள், தலைவர் பலம் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விகளைக் கோடிட்டுக் காட்டும் அறிக்கைகளை வெளியிடுகின்றன.
  • கட்சிகளையும் பிரச்சினைகளையும் பிரபலப்படுத்த முழக்கங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

பிரச்சார கருவிகள்:

  • துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஆதரவாளர்களை இணங்கச் செய்வதற்கும், எதிர்க் கட்சிகளை விமர்சிப்பதற்கும், சீர்திருத்த வாக்குறுதிகளைப் பரப்புவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

தனிப்பட்ட முறையீடுகள்:

  • வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளை கடந்து, தனிப்பட்ட முறையீடுகள் மற்றும் சீர்திருத்த வாக்குறுதிகளை வழங்குவதன் மூலம் சாத்தியமான ஆதரவாளர்களை மீது தாக்கத்தை ஏற்படுத்தியும் மற்றும் அவர்களின் ஆதரவைப் பெறுகின்றனர்.

வாக்குப்பதிவு நாட்கள்

  • பாதுகாப்புப் படையினரும், தேர்தலைக் கண்காணிப்பவர்களும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கும், தேர்தலின்போது வாக்களிப்பது நியாயமாக இருப்பதை உறுதி செய்வதற்கும், வேண்டி பொதுவாக வெவ்வேறு தொகுதிகளில் வெவ்வேறு நாட்களில் வாக்குப்பதிவு நடத்தப் படுகிறது.

வாக்குச் சீட்டுகள் மற்றும் சின்னங்கள்

  • வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் முடிந்ததும், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தேர்தல் அதிகாரியால் தயாரிக்கப்பட்டு, வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படும்.
  • வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர்களின் பெயர்கள் (தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட மொழிகளில்) மற்றும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அச்சிடப் படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவர்களின் கட்சி சின்னங்கள் ஒதுக்கப்படும்.

வாக்களிக்கும் நடைமுறை

ரகசிய வாக்கெடுப்பு:

  • தனியுரிமை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையை உறுதி செய்வதற்காக ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிப்பு நடத்தப்படுகிறது.

வாக்குச் சாவடி இருப்பிடங்கள்:

  • வாக்குச் சாவடிகள் பொதுவாக பள்ளிகள் மற்றும் சமூகக் கூடங்கள் போன்ற பொது நிறுவனங்களில் நிறுவ ப்படும்.
  • ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1500 வாக்காளர்கள் என்ற அளவில் வாக்காளர்களுக்கு அருகாமையில் இருப்பதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

வாக்குச் சாவடி செயல்பாடுகள்:

  • ஒவ்வொரு வாக்குச்சாவடியும் தேர்தல் நாளில் குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் செயல்படும்.
  • வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சரி பார்த்து, வாக்குச் சீட்டு வழங்கப் படுகிறது.

வாக்களிக்கும் செயல்முறை:

  • வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை வாக்குச் சீட்டில் திரையிடப்பட்ட பெட்டியில் குறிப்பிட்டு, பின்னர் அதை ஒரு பொதுவான வாக்குப்பெட்டியில் செருகி, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறார்கள்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறிமுகம்:

  • தேர்தல் ஆணையம் நவீனமயமாக்கல் மற்றும் செயல்திறனை நோக்கமாகக் கொண்டு, தேர்தல் செயல்முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியது.
  • 2003 ஆம் ஆண்டு, மாநிலத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன என்ற நிலையில் இது 2004 மக்களவைத் தேர்தலுக்காக என்று பிரத்தியேகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாக்களிக்கும் நடைமுறைகளை ஒழுங்கு படுத்தியது.

தேசிய தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு:

  • 2004 ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலுக்கு பிரத்தியேகமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு வரலாற்று முடிவை எடுத்து அந்தச் செயல்முறைக்கு என்று ஒரு மில்லியன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தியது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) என்பது வழக்கமான வாக்குப்பதிவு முறையில் முன்பு பயன்படுத்தப்பட்ட, வாக்குச் சீட்டுகள் மற்றும் பெட்டிகளுக்குப் பதிலாக வாக்குகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு எளிய மின்னணு சாதனமாகும்.

தேர்தல் கண்காணிப்பு:

  • நியாயமான பிரச்சாரம் மற்றும் வாக்காளர் சுதந்திரத்தை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் ஏராளமான பார்வையாளர்களை நியமித்துள்ளது.
  • வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் தேர்தல் செலவினங்களில் வெளிப்படைத்தன்மையை பராமரிக்க, அதனைச் செலவினப் பார்வையாளர்கள் கண்காணிக்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கை:

  • வாக்குப்பதிவுக்குப் பிறகு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பார்வையாளர்கள் மேற்பார்வையின் கீழ் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
  • அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றியாளராக தேர்தல் அதிகாரி அறிவிக்கிறார்.

ஊடகப் பங்களிப்பு:

  • வாக்களிக்கும் இரகசியத்தைப் பேணுகின்ற அதே வேளையில், வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல் செய்திகளை வெளியிட ஊடகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
  • சிறப்பு அனுமதிச் சீட்டுகள் பெற்ற ஊடகப் பணியாளர்கள் வாக்குச் சாவடிகளுக்குள் நுழையவும், வாக்குப்பதிவு மற்றும் எண்ணும் செயல்முறையை வெளிக்காட்டவும் உதவுகிறது.

தேர்தல் மனுக்கள்:

  • தேர்தல் நடத்துபவர்கள் அல்லது வேட்பாளர்கள் முறைகேடு எனக் கூறி தேர்தல் மனுக்களை தாக்கல் செய்யலாம்.
  • இந்த மனுக்கள் முழுத் தொகுதியையும் உள்ளடக்கியது மற்றும் அவை உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப் பட்டு, உறுதி செய்யப்பட்டால் அது மறுதேர்தலுக்கு வழி வகுக்கும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்