TNPSC Thervupettagam

இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல்களின் வரலாறு – பாகம் 3

May 3 , 2024 58 days 357 0

(For English version to this please click here)

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான மாதிரி தேர்தல் நடத்தை விதிகள்

பொது நடத்தை விதிகள்:

வேறுபாடுகள் தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளுதல்:

  • சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தும் செயல்களை கட்சிகள் தவிர்க்க வேண்டும்.
  • வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை தூண்டும் அறிக்கைகள் அல்லது செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும்.
  • பல்வேறு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், புரிந்துணர்வையும் ஊக்குவிக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட விமர்சனம்:

  • எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களானது கொள்கைகள் மற்றும் செயல்களில் கவனம் செலுத்துவதில் வேண்டும்.
  • தனிப்பட்ட தாக்குதல்கள் அல்லது சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
  • அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும், சாதனைகளையும் மையமாகக் கொண்ட ஒரு ஆக்கப் பூர்வமான உரையாடலைப் பேணுதல் வேண்டும்.

சாதி அல்லது மதத்தின் மூலம் முறையீடு கூடாது:

  • சாதி அல்லது மத உணர்வுகளை பயன்படுத்தி வாக்குகளைக் கவருவதைத் தடுக்க வேண்டும்.
  • மதச்சார்பின்மையை நிலைநிறுத்த வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பிரச்சாரங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • தேர்தல் செய்திகள் உள்ளடக்கியதாக இருப்பதையும், குறிப்பிட்ட மதம் அல்லது சாதி குழுக்களைக் குறி வைக்காமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

ஊழல் நடைமுறைகளைத் தவிர்த்தல்:

  • லஞ்சம், மிரட்டல் அல்லது வாக்காளர் ஆள்மாறாட்டம் போன்ற செயல்களைக் கண்டிப்பாகத் தடை செய்ய வேண்டும்.
  • வாக்குச் சாவடிகளுக்கு அருகாமையில் இருப்பது உட்பட, பிரச்சார நடத்தை தொடர்பான தேர்தல் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • வாக்குப்பதிவுக்கு முன் 48 மணி நேர மௌனக் காலத்தில் பொதுக் கூட்டங்களை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை:

  • அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தனிநபர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும்.
  • தனிப்பட்ட நபர்களின் வீடுகளின் அருகாமையில் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில், அமைதியான குடியியல் வாழ்வுக்கான உரிமையை அங்கீகரித்து நிலை நிறுத்தல் வேண்டும்.

வளங்களின் ஆக்கப்பூர்வப் பயன்பாடு:

  • பிரச்சார நோக்கங்களுக்காக தனியார் சொத்தைப் பயன்படுத்துவதற்கு முன் அதற்கான வெளிப்படையான அனுமதியைப் பெற வேண்டும்.
  • விளம்பர பலகைகள் அல்லது சுவரொட்டிகள் போன்றவற்றில் கட்சிப் பொருட்களைக் காண்பிப்பதற்கான முறையான அங்கீகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
  • சொத்து உரிமைகளை மதித்து, அரசியல் நடவடிக்கைகளுக்காக, நிலம் அல்லது கட்டிடங்களை அங்கீகரிக்காமல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

எதிர்க்கட்சி நிகழ்வுகளுக்கு மரியாதை:

  • போட்டிக் கட்சிக் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்களுக்கு இடையூறு விளைவிப்பதிலிருந்தும் அல்லது அதனைத் தடுப்பதிலிருந்தும் ஆதரவாளர்களைப் பாதுகாக்க வேண்டும்.
  • மற்ற கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கட்சித் தொண்டர்கள் தொந்தரவு செய்வதையோ அல்லது பிரச்சாரம் செய்வதையோ தடை செய்ய வேண்டும்.
  • போட்டிக் கட்சிகளின் சுவரொட்டிகளை அகற்றுவதையோ அல்லது சிதைப்பதையோ தவிர்ப்பதன் மூலம் ஜனநாயகச் செயல்முறைக்கு மரியாதை அளித்தல் வேண்டும்.

கூட்டங்கள்

  • போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் அமைதி மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கும் போதுமான ஏற்பாடுகளை அனுமதிக்கும் வகையில், உத்தேச கூட்டங்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து கட்சிகள் உள்ளூர் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
  • இது நிகழ்வின் போது எழக்கூடிய சாத்தியமான சிக்கல்களைக் கையாள என்று சட்ட அமலாக்கமானது, வளங்களைத் திறம்படத் தயார் செய்து வரிசைப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்கிறது.
  • ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ஏதேனும் கட்டுப்பாடுகள் அல்லது தடை உத்தரவுகள் உள்ளனவா என்பதைக் கட்சிகள் அறிந்திருக்க வேண்டும்.
  • அத்தகைய உத்தரவுகள் இருந்தால், சட்டப்பூர்வ அல்லது தளவாடச் சிக்கல்களைத் தவிர்க்க, அவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
  • சுமூகமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக விதிவிலக்கு தேவைப்பட்டால், கட்சிகள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.
  • கூட்டத்திற்கு ஒலிபெருக்கிகள் அல்லது பிற வசதிகளைப் பயன்படுத்துவது அவசியமானால், வேட்பாளர்கள்  முன்கூட்டியே தேவையான அனுமதி அல்லது உரிமத்தை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து பெற வேண்டும்.
  • இது விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது மற்றும் தேர்தல் கூட்ட நிகழ்வைச் சீர் குலைக்கும் கடைசி நிமிட சிக்கல்களைத் தவிர்க்கிறது.
  • கூட்டங்களின் ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்களால் ஏதேனும் இடையூறுகள் அல்லது ஒழுங்கீனமான நடத்தைகளைக் கையாள, பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் உதவியைப் பெற வேண்டும்.
  • ஒழுங்கமைப்பாளர்கள் தானாகவே பிரச்சனைகளைக் கையாள்வதைத் தவிர்ப்பது முக்கியம், மாறாக ஒழுங்கைப் பராமரிக்கவும், தொழில் ரீதியாக மோதல்களைத் தீர்க்கவும், சட்ட அமலாக்கத்தை நம்பியிருக்க வேண்டும்.

ஊர்வலம்

  • ஊர்வலங்களைத் திட்டமிடும் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள், தடங்கல்களைக் குறைப்பதற்கும், சுமூகமான ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கும், ஊர்வலம் செல்லும் பாதை, தொடக்க நேரம் மற்றும் முடிவு நேரத்தை முன்கூட்டியே கவனமாகத் திட்டமிட வேண்டும்.
  • அதற்கான ஒழுங்கைப் பராமரிக்கவும், குழப்பத்தைத் தடுக்கவும், ஊர்வலம் திட்டமிடப்பட்டப் பாதையிலிருந்து ஏதேனும் விலகல்கள் இருந்தால் அவை தவிர்க்கப்பட வேண்டும்.
  • போக்குவரத்து மேலாண்மை மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற தேவையான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்கு, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
  • இது ஊர்வலத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசு வளங்களைத் திறம்பட தயார் செய்து ஒதுக்குவதற்குச் சட்ட அமலாக்கத்திற்கு உதவுகிறது.
  • ஊர்வலம் செல்லும் பகுதிகளில் ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளதா என கட்சி அமைப்பாளர்கள் சரிபார்த்து, அதற்கேற்ப அவற்றை கடைபிடிக்க வேண்டும்.
  • ஊர்வலத்தின் போது ஏதேனும் இடையூறுகள் அல்லது விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது அவசியம் ஆகும்.
  • ஊர்வலமானது போக்குவரத்து நெரிசலோ, தடையோ ஏற்படாமல் சுமூகமாகச் செல்வதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஊர்வலம் நீண்டதாக இருந்தால், அதை நிர்வகிக்கக் கூடிய பிரிவுகளை ஒழுங்கமைப்பதன் மூலம் போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்கவும் மற்றும் சாலைச் சந்திப்புகளில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும் முடியும்.
  • ஊர்வலங்களின் ஒழுங்கான இயக்கத்தை உறுதி செய்யவும், மற்ற வாகனங்களுடனான மோதலைத் தடுக்கவும் காவல்துறையின் வழிகாட்டுதலின்படி சாலையில் வலது பக்க நிலையை உபயோகப்படுத்த வேண்டும்.
  • பாதுகாப்பைப் பேணுவதற்கும், விபத்துகளைத் தடுப்பதற்கும், காவல்துறையின் அறிவுறுத்தல்களுக்கு இணங்குவது அவசியம் ஆகும்.
  • மோதல்களைத் தவிர்ப்பதற்கும், போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்கும், பிற அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களுடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்காக ஊர்வலங்களை அதே வழியில் திட்டமிடுவது முக்கியம்.
  • முன்கூட்டியே காவல்துறையைத் தொடர்புகொண்டு அவர்களின் உதவியைப் பெறுவது, இரு தரப்பும் பரஸ்பர திருப்திகரமான ஏற்பாடுகளை செய்ய உதவுகிறது.
  • வன்முறை அல்லது ஒழுங்கீனத்தைத் தூண்டும் எந்தவொரு விதியினையும், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, குறிப்பாக உணர்ச்சிகள் அல்லது உற்சாகம் அதிகரிக்கும் தருணங்களில் தடுக்க, ஊர்வலக்காரர்கள் மீது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • ஊர்வலத்தின் போது அமைதியான மற்றும் மரியாதையான சூழலைப் பேணுவதற்கு, பிற அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்களின் உருவ பொம்மைகளை எடுத்துச் செல்வதைத் தடை செய்வது மற்றும் பிற ஆத்திரமூட்டும் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பது ஆகியன மிக அவசியம் ஆகும்.

வாக்குப்பதிவு நாள்

  • அமைதியான முறையில் வாக்குப்பதிவு செய்வதற்கும், வாக்காளர்களுக்குத் தடையின்றி அவர்களது சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு உதவ வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கு பொருத்தமான அடையாளக் குறியீடுகள் அல்லது அட்டைகளை வழங்க வேண்டும்.
  • வாக்காளர்களுக்கான அடையாளச் சீட்டுகளில் சின்னங்கள், வேட்பாளர்கள் அல்லது கட்சியின் பெயர்கள் இல்லாமல், தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • வாக்குப்பதிவு நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பும், அன்றைய தினத்திலும் மதுபானம் வழங்குவதையோ, விநியோகிப்பதையோ தடை செய்ய வேண்டும்.
  • பதற்றத்தைத் தவிர்க்க வாக்குச் சாவடிகளில் கட்சி முகாம்களுக்கு அருகில் தேவையற்ற கூட்டத்தைத் தடுக்க வேண்டும்.
  • வேட்பாளர் முகாம்களில் சுவரொட்டிகள் அல்லது பிரச்சாரம் சார்ந்தப் பொருட்கள் இல்லாமல் அவை சாதாரணமாக இருக்க வேண்டும், மேலும் அங்கு உணவு அல்லது கூட்டங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • வாகனக் கட்டுப்பாடுகள், அனுமதிகளைப் பெறுதல் மற்றும் முக்கியமாகக் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றில் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும்.

வாக்குச் சாவடி

  • வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள், தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் வகையில், நியமிக்கப்பட்ட பார்வையாளர்களிடம் தேர்தல் சிக்கல்களைப் பற்றி புகார் அளிக்கலாம்.

ஆட்சியில் உள்ள கட்சி

  • தேர்தல்களின் போது நேர்மை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையை உறுதிப்படுத்த, ஆளும் கட்சி, மத்திய அல்லது மாநில அளவில், பின்வரும் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும்:
  • அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ வருகைகளை, தேர்தல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் போக்குவரத்து மற்றும் பணியாளர்கள் உட்பட அரசாங்க வளங்களைக் கட்சி நலன்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பொது இடங்கள் மற்றும் தேர்தல் கூட்டங்களுக்கான மைதானங்கள், விமானப் போக்குவரத்துக்கான ஹெலிபேடுகள் போன்ற வசதிகள் ஆளுங்கட்சிக்கு மட்டும்  என்று ஏக போகமாக இருக்கக் கூடாது.
  • இது போன்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் மற்ற கட்சிகளும், வேட்பாளர்களும் இந்த ஆதாரங்களைச் சமமாக அணுக வேண்டும்.
  • ஓய்வு இல்லங்கள் மற்றும் அரசு பங்களாக்கள் போன்ற அரசு விடுதிகளில் ஆளும் கட்சியோ அல்லது அதன் வேட்பாளர்களோ ஏக போகமாக இருக்கக் கூடாது.
  • தேர்தல் பிரச்சாரத்திற்கு அத்தகைய இடங்களைப் பயன்படுத்துவதற்கான கடுமையான கட்டுப்பாடுகளுடன், அனைத்துக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு நியாயமான பயன்பாடு உறுதி செய்யப்பட வேண்டும்.
  • பொதுக் கருவூலச் செலவிலிருந்து விளம்பரங்களை வெளியிடுவதும், தேர்தல் காலத்தில் பாகுபாடான செய்திகளுக்காக, அதிகாரப்பூர்வ வெகுஜன ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  • தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அமைச்சர்களும் அதிகாரிகளும் மானியங்கள் அல்லது விருப்புரிமை நிதிகளை அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
    • தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பின்வருவனவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும்:
    • நிதி மானியங்கள் அல்லது அதன் வாக்குறுதிகளை அறிவித்தல்.
    • திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்.
    • கட்டுமானத் திட்டங்கள் அல்லது அத்தியாவசிய வசதிகளை வழங்குதல் தொடர்பான வாக்குறுதிகளை வழங்குதல்.
    • ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்காளர்களை பாதிக்கக்கூடிய அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் தற்காலிக நியமனங்களைச் செய்தல்.
  • மத்திய அல்லது மாநில அரசின் அமைச்சர்கள், வேட்பாளர், வாக்காளர் அல்லது அங்கீகரிக்கப் பட்ட முகவரைத் தவிர வேறு யாவரும், எந்த வாக்குச் சாவடியிலும் அல்லது வாக்குகள் எண்ணும் இடத்திலும் நுழையக் கூடாது.

தேர்தல் அறிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள்

  • 2013 ஆம் ஆண்டு ஜூலை 5, தேதியிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு, 2008 இன் எஸ்.எல்.பி.(சி) எண். 21455 (எஸ். சுப்ரமணியம் பாலாஜி Vs தமிழ்நாடு அரசு மற்றும் மற்றவர்கள்) என்பதின் கீழ், தேர்தல் அறிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க, தேர்தல் ஆணையமானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைத்தது.

இந்த வழிகாட்டுதல்கள் தேர்தல் செயல்பாட்டில் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன:

சட்டப்பூர்வ பரிசீலனைகள்:

  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 123 இன் கீழ், தேர்தல் வாக்குறுதிகள் ஊழல் நடவடிக்கைகளாகக் கருதப்படவில்லை என்றாலும், இலவசங்களை விநியோகிப்பது வாக்காளர்களைக் கணிசமாக பாதிக்கலாம் என்பதோடு, இது தேர்தல்களின் நேர்மையையும் சமரசம் செய்யலாம்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம்:

  • தேர்தல் ஆணையம், அரசியலமைப்புச் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ், ஒரு சமநிலையைப் பராமரிக்கவும், தேர்தலின் தூய்மையைப் பாதுகாக்கவும், வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
  • தேர்தலுக்கு முந்தைய அறிக்கை வெளியீடுகள், தேர்தல் ஆணையத்தின் ஒழுங்குமுறை அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்றாலும், அவை தேர்தல் செயல்முறையுடன் நேரடி தொடர்பில் இருப்பதைக் கருத்தில் கொண்டு விதிவிலக்குகள் செய்யப் படுகின்றன.

அறிக்கை வழிகாட்டுதல்கள்:

  • அறிக்கைகளானது அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் மாதிரி நடத்தை விதிகளுடன் ஒத்துப்போக வேண்டும், அரசியலமைப்பு கொள்கைகளுக்கு முரணான உள்ளடக்கத்தை அறிக்கைகளில் தவிர்க்க வேண்டும்.
  • தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட நலன்புரி நடவடிக்கைகள் அனுமதிக்கப் படும் போது, கட்சிகள் தேர்தல் நேர்மையை சமரசம் செய்தல் அல்லது வாக்காளர்களைத் தேவையற்ற முறையில் பாதிக்கக் கூடிய உறுதிமொழிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • வாக்குறுதிகளுக்கு வெளிப்படையான விழிப்புணர்வை வழங்குவதுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியமான வழிகளைக் கோடிட்டுக் காட்ட வேண்டும்.

வெளியீட்டு நேரக் கட்டுப்பாடுகள்:

  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 என்ற சட்டத்தின் பிரிவு 126 என்பதின் கீழ், ஒற்றை அல்லது பல கட்டத் தேர்தல்களுக்காக, தடை செய்யப்பட்ட காலத்தில் அறிக்கைகள் வெளியிடப்படக் கூடாது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்