TNPSC Thervupettagam

இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல்களின் வரலாறு – பாகம் 4

May 8 , 2024 247 days 545 0

(For English version to this please click here)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) அறிமுகம்

  • வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்ற சவால்களை இந்தியாவின் ஜனநாயக செயல்முறை எதிர்கொண்டதன் காரணமாக 1982 ஆம் ஆண்டு கேரளாவின் பரூர் சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) அறிமுகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • இந்த முன்னோட்டமானது உடனடி பலன்கள், மனித வளத் தேவைகளை ஒழுங்குபடுத்துதல், செல்லாத வாக்குகளை ஒழித்தல் மற்றும் ஓட்டு எண்ணும் செயல்முறையை விரைவுபடுத்துதல் போன்றவற்றைக் சுட்டிக் காட்டியது.

சட்டத் திருத்தம் மற்றும் நாடு தழுவிய அமலாக்கம்

  • பரூர் இடைத்தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, 1951 ஆம் ஆண்டின்  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட ஒரு திருத்தம் நாடு தழுவிய அளவில் EVM இயந்திர முறையை மேற்கொள்ள வழி வகுத்தது..
  • 1988 ஆம் ஆண்டில், இந்தத் திருத்தம் தேர்தல் செயல்பாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளின் விரிவான ஒருங்கிணைப்புக்கு வழி வகுத்தது.
  • 2004 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள் 100 சதவீத முழுமையை எட்டிய போது, இது குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதோடு இது இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
  • 2001 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டன.
  •  EVM இயந்திரங்கள் அரசிற்குச் சொந்தமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப் படுகிறது.

வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறை (VVPAT)

  • வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க, வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறையானது (VVPAT) 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி/சட்டமன்றப் பகுதியிலும் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வாக்குச் சாவடிகளில் VVPAT சீட்டுகள் எண்ணப் படும், இதன் மூலம் எந்தவொரு வாக்காளரும் தாங்கள் பதிவு செய்த வாக்கைச் சரிபார்க்க முடியும்.
  • இது அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, குறிப்பிடத்தக்க வகையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் VVPAT மற்றும் கட்டுப்பாட்டு அலகு (CU) ஆகியவற்றின் முடிவுகளுக்கிடையில் பொருந்தாத ஒரு நிகழ்வு கூட நடக்கவில்லை.

இந்தியத் தேர்தல் ஆணைய - மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (ECI-EVM) அமைப்பினைப் புரிந்து கொள்ளுதல்

  • இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) விதிமுறைகளின் கீழ் தேர்தல்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களை உள்ளடக்கிய இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) அமைப்பு, இந்தியத் தேர்தல் ஆணைய - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (ECI-EVM) என்றும் அழைக்கப்படுகிறது.
  • வாக்குச் சீட்டு அலகு (BU), கட்டுப்பாட்டு அலகு (CU), மற்றும் பின்னர் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறை (VVPAT), ECI-EVMகள் போன்றவை தேர்தல் செயல்பாட்டில் துல்லியம் மற்றும் செயல்திறனை உறுதி செய்கின்றன.
  • மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வின் அவசியத்தை உணர்ந்து, வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறை (VVPAT) உருவானது.
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட, வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறையின் (VVPAT) மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளின் துல்லியத்தை உறுதிப்படுத்த இது உதவுகிறது.
  • அச்சிடப்பட்ட சீட்டு, வேட்பாளரின் விவரங்களைக் காட்டுவதன் மூலம், அதன் சரிபார்ப்புக்கான ஒரு உறுதியான பதிவை அது வழங்குகிறது.

சட்டக் கட்டமைப்பு மற்றும் செயல்படுத்தல்

  • 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நியாயமான தேர்தலுக்கு இவை அவசியமானதாக கருதி, ஒவ்வொரு கட்டமாக வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறையினை (VVPAT) அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அங்கீகாரம் அளித்தது.
  • வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறைகள் (VVPAT) முதன்முதலில் நாகாலாந்தில் 2013 ஆம் ஆண்டில் நடந்த நோக்சென் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டன.
  • அதன் பின்னர், இவை பொது மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களின் போது தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டு, வாக்களிக்கும் செயல்முறையின் நம்பகத் தன்மையையும், வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்தியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றமானது தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப் படுவதற்கு முன் அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப் பட வேண்டி VVPAT முறைகளின் மீது ஒரு சிறிய விகிதமாக 2 சதவிகித அளவில் அவை உறுதி செய்யப் பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

பாரம்பரிய வாக்குச் சீட்டு / வாக்குப் பெட்டி முறையுடன் ஒப்பிடும் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் நன்மைகள்:

  • இது பல சந்தர்ப்பங்களில், சர்ச்சைகள் மற்றும் தேர்தல் மனுக்களுக்கு மூல காரணங்களான தவறான மற்றும் சந்தேகத்திற்குரிய வாக்குகளின் சாத்தியத்தை நீக்குகிறது.
  • இது வழக்கமான முறையை விட மிக வேகமாக வாக்குகளை எண்ணும் செயல்முறையை செய்கிறது.
  • இதனைப் பயன்படுத்துவதால் காகிதத்தின் அளவு குறைகிறது, இதனால் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் இந்தச் செயல்முறை சூழல் நட்புடன் உள்ளது.
  • ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரே ஒரு தாள் வாக்குச் சீட்டு மட்டுமே தேவைப்படுவதால், இது அச்சிடுவதற்கான செலவைக் குறைக்கிறது (கிட்டத்தட்ட பூஜ்யம்).

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வழக்கமான காகித வாக்குச் சீட்டு முறைக்கு இடையிலான ஒப்பீடு

  • வழக்கமான காகித வாக்குச்சீட்டு முறையில், வாக்காளர்கள் அச்சிடப்பட்ட காகித வாக்குச் சீட்டில் தங்கள் விருப்பங்களைக் குறியிட்டு, நியமிக்கப்பட்ட இடத்தில் ஒரு குறியீடு வைப்பதன் மூலம், தங்களுக்கு விருப்பமான வேட்பாளர் தேர்வை இது குறிக்கிறது.
  • குறியிட்ட பிறகு, வாக்குச் சீட்டானது மடித்து வாக்குப் பெட்டியில் வைக்கப்படும்.
  • எண்ணும் போது, சரியாகக் குறிக்கப்பட்ட வாக்குகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்பதோடு, மேலும் மனிதனால் வாக்குகளை எண்ணுவது பிழைகள் மற்றும் கையாளுதலுக்கு ஆளாகிறது, என்ற நிலையில் இது பெரும்பாலும் இந்தச் செயல்முறையை நீட்டிக்கிறது.

காகித வாக்குச்சீட்டில் உள்ள சிக்கல்கள்

  • செல்லாத வாக்குகள்: முறையற்ற குறியிடுதல் அல்லது மை படிதல் போன்ற காரணங்களால் பல வாக்குகள் செல்லாததாகி விடும்.
  • வாக்குப்பெட்டி பாதிப்பு: வாக்குச் சாவடியைக் கைப்பற்றும் போது "தவறான வாக்குகளால் வாக்குப் பெட்டிகள் நிரப்பப் படுவதற்கு" வாய்ப்புள்ளது.
  • முன்பே குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள்: முன்பே குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளைக் கொண்டு வாக்களித்த நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

ECI-EVM அமைப்பின் செயல்பாடு

  • ECI-EVM அமைப்பில், கட்டுப்பாட்டு அலகு (CU) தலைமை அதிகாரியால் நிர்வகிக்கப்படுகிறது, அதே நேரத்தில் வாக்குப்பதிவு அலகு/அலகுகள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை முறை (VVPAT) ஆகியவை வாக்குப்பதிவுப் பெட்டிக்குள் வைக்கப் படுகின்றன.
  • வாக்குப்பதிவு அலுவலர், காகித வாக்குச் சீட்டுகளை வழங்குவதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டு அலகில் உள்ள "வாக்குச்சீட்டு பொத்தானை" அழுத்துவதன் மூலம் மின்னணு வாக்குச்சீட்டை செயல்படுத்துகிறார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களித்தல்

வாக்களிக்கும் செயல்முறை:

  • வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கம் வேட்பாளருக்கு வாக்குப் பதிவு அலகில் உள்ள "நீல பொத்தானை" அழுத்தி வாக்களிக்கின்றனர்.
  • அப்போது அந்தத் தேர்வைக் குறிக்க சிவப்பு LED ஒளிரும்.
  • வேட்பாளரின் விவரங்களைக் காண்பிக்கும் ஒரு காகிதச் சீட்டு உருவாக்கப்பட்டு, VVPAT இயந்திரத்தில் 7 வினாடிகளுக்கு அவை வெளிப்படையான சாளரத்தில் தெரியும்.

சரிபார்ப்பு:

  • அச்சிடப்பட்ட சீட்டைப் பார்த்து வாக்காளர்கள் தங்களின் வாக்கின் அசல் தன்மை பற்றிய செய்தியினைச் சரிபார்க்கலாம்.
  • பிறகு அந்தச் சீட்டு தானாகவே வெட்டி எடுக்கப்பட்டு VVPAT இன் முத்திரையிடப்பட்ட சேமிப்பு பெட்டியில் சேமிக்கப்படும்.

உறுதிப்படுத்தல்:

  • கட்டுப்பாட்டு அலகிலிருந்து வரும் பீப் சத்தம், வாக்கின் வெற்றிகரமான பதிவை உறுதிப்படுத்துகிறது.

தொழில்நுட்ப அறிவுத் தேவை

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிக்க தொழில்நுட்ப அறிவு எதுவும் தேவையில்லை.
  • சாதாரண குடிமக்கள் ECI-EVM இயந்திரங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கும் செயல்பாட்டில் எளிதாகப் பங்கேற்கலாம் என்ற நிலையில் இது தேர்தல் செயல்பாட்டில் உள்ளடங்கிய தன்மையையும், அணுகலையும் உறுதி செய்கிறது.

ECI-EVM வாக்களிக்கும் முறையின் நன்மைகள்

  • செல்லாத வாக்குகளை நீக்குதல்: பொத்தான்களை அழுத்துவதன் மூலம் ECI-EVM இயந்திரங்கள் மூலம் வாக்களிப்பது என்பது, காகித வாக்குச்சீட்டு முறையின் பொதுவான பிரச்சினையான செல்லாத வாக்குகளின் சாத்தியத்தை நீக்குகிறது.
  • வாக்குச்சாவடிகளில் போலி வாக்காளர்களைத் தடுத்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்பம், கடுமையான நிர்வாக நடைமுறைகளுடன் இணைந்து வாக்குச் சாவடிகளில் போலி வாக்காளர்களைத் திறம்பட நீக்கி, அவர்கள் முயற்சித்தாலும் அதனைப் பயனற்றதாக்குகிறது.
  • வாக்களிப்பதில் நேரக் கட்டுப்பாடு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அமைப்பு ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சமாக நான்கு வாக்குகள் என்ற அளவில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது, இது கணிசமான எண்ணிக்கையிலான வாக்குகளைப் போடுவதற்குத் தேவைப் படும் நேரத்தை கணிசமாக நீட்டிக்கிறது.
  • இந்தத் தாமதமானது, வாக்குச் சாவடியைக் கைப்பற்றும் முயற்சிக்கு பாதுகாப்புப் படையினருக்குப் பதிலளிப்பதற்குப் போதுமான வாய்ப்பை வழங்குகிறது.
  • முடிவிற்கு பிந்தைய வாக்களித்தலைத் தடுப்பது: வாக்குப்பதிவின் முடிவில் இறுதி/முடிவு பொத்தானை அழுத்தியவுடன், வாக்களிக்கும் செயல்முறையின் நம்பகத் தன்மையினை உறுதி செய்யும் வகையில், மேலும் அதிகப் படியான வாக்குகளை அளிக்க முடியாது.
  • விரைவான மற்றும் பிழையற்ற வாக்கு எண்ணிக்கை: ECI-EVM இயந்திரங்கள் விரைவான மற்றும் துல்லியமான வாக்குகளை எண்ணுவதை உறுதி செய்கிறது, இதன் மூலம் பிழைகள் மற்றும் கையாளுதல்கள் இல்லாமல், இது மிகவும் திறமையான தேர்தல் செயல்முறைக்கு வழி வகுக்கிறது.
  • வாக்காளர்களுக்கான உடனடி சரிபார்ப்பு: வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறையின் (VVPAT) மூலம், வாக்காளர்கள் தங்களின் வாக்குகள் துல்லியமாகப் பதிவாகி விட்டதா என்பதை உடனடியாகச் சரிபார்ப்பது என்பது, தேர்தல் முறையில் நம்பிக்கையையும், உறுதியையும் அதிகரிக்கும்.

EVM இயந்திரங்கள் / VVPAT இயந்திரங்களின் முக்கிய அம்சங்கள்:

  • தனித்துவமான வரிசை எண்: ஒவ்வொரு அலகும் அதன் பின்புறத்தில் லேசர்-குறியிடப்பட்ட எண் மற்றும் பட்டை குறியீடுடன் பொருந்தும் வகையில் அதன் நினைவகத்தில் சேமிக்கப்பட்ட ஒரு தனித்துவமான வரிசை எண்ணைக் கொண்டுள்ளது.
  • நிகழ்நேரக் கடிகாரம் (RTC): இது கட்டுப்பாட்டு அலகில் உட்பொதிக்கப்பட்டுள்ளது என்பதின் மூலம் நிகழ் நேரக் கடிகார அலகு செயல்படுத்தப்படும் போது, தற்போதைய தேதி மற்றும் நேரத்தை அது காட்டுகிறது.  
  • இதில் செயலிழப்புகள் 'கடிகாரப் பிழை' எனக் குறிப்பிடப் படுகின்றன.
  • மின்கல நிலை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள் ஒரு சிறப்பு மின்கல அமைப்பில் இயங்கும், அது பவர் ஆன் செய்யப்பட்டவுடன் கட்டுப்பாட்டு அலகுத் திரையில் மின்கல நிலை காட்டப்படும்.
  • மின்கல சக்தி குறைவாக இருக்கும் போது 'மின்கலத்தை மாற்றவும்' என்ற செய்தி தோன்றும்.
  • அச்சிடும் திறன்: தேவைப்பட்டால், வாக்கெடுப்பு தரவு முடிவுகளை அச்சிடலாம்.
  • பரஸ்பர அங்கீகாரம்: கட்டுப்பாட்டு அலகு (CU), வாக்குச்சீட்டு அலகு (BU) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறை (VVPAT) ஆகியவை வலுவான பரஸ்பர அங்கீகார திறன்களைக் கொண்டுள்ளன என்பதோடு, மேலும் அங்கீகரிக்கப்படாத சாதன இணைப்புகளையும் அவை தடுக்கின்றன.
  • ஆற்றல் சேமிப்பு முறை: அலகுகள் செயலற்ற நிலையில், மின்கல ஆயுள் நீட்டிக்கப் படும் போது ஆற்றல் சேமிப்புப் பயன்முறையில் நுழைகின்றன.
  • பிரெய்லி ஒருங்கிணைப்பு: பார்வைக் குறைபாடுள்ள வாக்காளர்களுக்கு என்று வாக்கெடுப்பு அலகுகள் வடிவமைக்கப்பட்ட பிரெய்லி எண்களைக் கொண்டுள்ளது.
  • தனி அமைப்பு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள் கம்பி அல்லது கம்பியில்லா வலைப் பின்னல் இணைப்புகள் இல்லாமல் தானாகவே இயங்குகின்றன.
  • அங்கீகரிக்கப்படாத அணுகலை கண்டறிதல் தொகுதி (UADM): இயந்திரத்தில் உட்பொதிக்கப் பட்ட அங்கீகரிக்கப்படாத அணுகலைக் கண்டறிதல் தொகுதி (UADM), நுண் கட்டுப்படுத்தி அல்லது நினைவகத்திற்கான இயந்திர அணுகல் முயற்சியின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தினை முடக்கி டிஜிட்டல் சான்றிதழை அழிக்கிறது.
  • மேம்பட்ட குறியாக்க நுட்பங்கள்: அலகுகளுக்கு இடையே உள்ள குறியாக்கப்பட்ட தொடர்பு முறைகளானது, மறைகுறியாக்க வழிமுறைகளிலிருந்து தரவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
  • தானியங்கு சுய-கண்டறிதல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள் ஒவ்வொரு முறை இயக்கப் படும் போதும் சுய-நலன்சார் சோதனைகளை நடத்துகின்றன.
  • மாறுபட்ட விசை அழுத்தக் குறியீடு முறை: விசை அழுத்தங்கள் மாறும் வகையில் குறியிடப் பட்டு, கட்டுப்பாட்டு அலகு, வாக்குச்சீட்டு அலகு மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறை (VVPAT) ஆகியவற்றுக்கு இடையே மறைகுறியாக்க குறிப்புகளைத் தடுக்கிறது.
  • ரேடியோ அதிர்வெண் பரிமாற்றம் இல்லை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளில் ரேடியோ அலைவரிசை (RF) தொடர்புத் திறன் இல்லை, மேலும் ஊடலை (புளூடூத்) அல்லது அருகலை (வைஃபை) போன்ற  நெறிமுறைகள் மூலம் அவை சேதமடைவது தடுக்கப் படுகிறது.
  • ஒருமுறை நிரல்படுத்தக் கூடிய நுண்கட்டுப் படுத்திகள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நுண்கட்டுப் படுத்திகள் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை என்பதோடு, உற்பத்தியின் போது வைக்கப்பட்ட நிரல்படுத்தப்பட்டப் பயன்பாட்டு மென் பொருளையும் கொண்டுள்ளது.
  • நிகழ்வு முத்திரையிடுதலுக்கான நிகழ்நேரக் கடிகாரம்: ஒவ்வொரு விசை அழுத்தமும் நிகழ்நேரத்தில் தேதி மற்றும் நேர முத்திரையுடன் பதிவு செய்யப் படும்.

பொதுத்துறை நிறுவனங்களால் உள்நாட்டு உற்பத்தி

  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் / வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறைகள் (VVPAT) இறக்குமதி செய்யப்படவில்லை, ஆனால் இரண்டு புகழ்பெற்ற பொதுத் துறை நிறுவனங்களால் (PSUs) அவை உள்நாட்டில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப் பட்டு தயாரிக்கப்படுகின்றன:
  • அவை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிற பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL),  மற்றும் அணு ஆற்றல் துறையின் கீழ் செயல்படும் இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ECIL) ஆகியன ஆகும்.
  • இந்த உள்நாட்டு உற்பத்தியானது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நிறுவப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் நுட்பமான வழிகாட்டுதலின் கீழ் நடத்தப் படுகிறது.

திறன் மற்றும் செயல்பாடு

  • ECI-EVM அமைப்பு, ஒரு அமர்வுக்கு அதிகபட்சமாக 2,000 வாக்குகளைப் பதிவு செய்யும் திறன் கொண்ட ஒரு வலுவான திறனைக் கொண்டுள்ளது.
  • இருப்பினும், நடைமுறையில், இது பொதுவாக 1,500 வாக்குகளுக்கு இடமளிக்கிறது.
  • ஒவ்வொரு வாக்குப்பதிவு அலகும் 16 வேட்பாளர்களைக் கையாளும் வகையில் பொருத்தப் பட்டுள்ளது, இதில் மேற்கண்டவற்றில் இல்லை (NOTA) என்ற விருப்பமும் அடங்கும்.
  • குறிப்பிடத்தக்க வகையில், ஒரு கட்டுப்பாட்டு அலகானது 24 வாக்குப்பதிவு அலகுகள் வரை இணைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
  • இது ‘மேற்கண்டவற்றில் யாரும் இல்லை (NOTA)’ என்ற அலகு உட்பட அதிகபட்சமாக 384 வேட்பாளர்களைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர அமைப்பை உருவாக்குகிறது.
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறைகளுக்கு (VVPAT)  வெளிப்புற அமைப்பிலிருந்து மின்சாரம் எதுவும் தேவையில்லை.
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை முறைகள் (VVPAT)  ஆகியவை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் / எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் வழங்கப்படும் சுய மின்கலம் /சேமிப்புக் கலன்களில் இயங்குகின்றன.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்