இதுவரை
- பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15 அன்று தனது சுதந்திர தின உரையில், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினம் முதல் தொடங்கி ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழிகளின் பயன்பாட்டை அறவே நீக்க ஒரு இயக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- தற்போது தனி நபர்களும், பிற அமைப்புகளும் தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள நெகிழிக் கழிவுகளை நீக்க தீவிரமாகச் செயல்பட வேண்டும். நகராட்சி அமைப்புகளும் இந்தக் கழிவுகளை சேகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- புதியதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்குப் புதிய வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும்.
- 1986 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொருள்களை எடுத்துச் செல்லும் பைகள், கரண்டிகள் மற்றும் தட்டுகள் போன்ற நெகிழிப் பொருள்களின் பொதுவான பயன்பாட்டைத் தடுக்க அரசு 2022 ஆம் ஆண்டை காலக் கெடுவாக விதித்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே அக்டோபர் 02, 2019 அன்று நெகிழிப் பொருள்களை ஒழிப்பதற்கான தடையுத்தரவு அறிவிக்கப்படலாம்.
பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த நிலைப்பாட்டில் இந்தியாவின் தற்போதைய நிலை
- 2016 ஆம் ஆண்டு நெகிழிக் கழிவுகள் மேலாண்மை விதிகள் மற்றும் 2018 ஆம் ஆண்டு அதன் திருத்தங்கள் என நிறைய விதிகள் இருந்த போதிலும் பெரும்பாலான பெரு நகரங்களும் சிறு நகரங்களும் இவ்விதிகளின் கூறுகளை நடைமுறைப்படுத்த இன்னும் தயாராகவில்லை.
- பெரிய மாநகராட்சி அமைப்புகள் கூட இந்தக் கழிவுகளைப் பிரித்தெடுப்பதில் தவறி விடுகின்றன. மறுசுழற்சி செய்யக்கூடிய நெகிழிகள், மறுசுழற்சி செய்ய இயலாத நெகிழிகள் மற்றும் பிற கழிவுகள் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பிரித்து, அவற்றைச் சேகரித்து, பொருள் மீட்பு வசதிகள் மூலம் அவற்றைப் பதப்படுத்தலாம்.
- நெகிழிக் கழிவுகளின் உண்மையான அளவைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் எழும் விமர்சனங்களுக்கு மத்தியில் இது வளர்ந்து வரும் பிரச்சனையாகக் கருதப்படுகிறது.
- நெகிழிப் பொருட்களின் தனி நபர் நுகர்வு 2014-15 ஆம் ஆண்டில் 11 கிலோ கிராமாக இருந்தது. இந்த நுகர்வு 2022 இல் 20 கிலோ கிராமாக உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. (இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்புத் தகவல்)
- சுமார் 43% மக்கள் குறைந்த மீட்பு விகிதங்கள் உடைய ஒற்றைப் பயன்பாடு நெகிழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
- 2018 ஆம் ஆண்டு நெகிழிக் கழிவு மேலாண்மை திருத்தத்தின் படி ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளுடன் இணைந்து கழிவு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உற்பத்தியாளர்களுக்கு 6 மாத காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சரியான தொழிற் துறை நடவடிக்கைகளைப் பயன்படுத்தி மறுசுழற்சி செய்வதற்கு வசதியாக நெகிழிகள் எண் குறியீடுகளுடன் (பாலி எத்திலீன் டெரிப்தாலேட் - 1, குறைந்த அடர்த்தி பாலி எத்திலீன் – 4, பாலிபுரப்பிலீன் - 5 போன்றவை) உருவாக்கப் படுகின்றன.
- இத்தகு மறுசுழற்சியானது மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களின் அளவைக் குறைக்கிறது.
- அவை சிமெண்ட் சூளைகளின் இணை செயலாக்கம், பிளாஸ்மா பைரோலிசிஸ் அல்லது நிலத்தை நிரப்புதல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி அகற்றப்பட வேண்டும்.
- 2019 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 52 நிறுவனங்களை அவர்களது உற்பத்தியாளர் நீட்சிப் பொறுப்புக் கடமையை நிறைவேற்றுவதற்கானத் திட்டத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டது.
கலப்பு உரம் அல்லது மக்கும் நெகிழிகள் போன்ற மாற்றுகளின் சாத்தியக்கூறுகள்
- பகாஸ் (கரும்பிலிருந்து சாறு எடுத்த பின் எஞ்சியவை), சோள மாவு, தானிய மாவு போன்றவற்றில் இருந்து பெறப்படும் உரமாகக் கூடிய, மட்கக் கூடிய அல்லது உண்ணக் கூடிய நெகிழிகள் ஆகியவை நெகிழிகளுக்கு மாற்றாக அமைந்த போதிலும், அவை தற்போதுள்ள நெகிழியின் அளவு மற்றும் விலை ஆகியவற்றின் மீது வரம்பைக் கொண்டுள்ளன.
- பொதிகட்ட உதவும் சில உயிரி மட்கும் பொருள்களை உடைக்க சிறப்பான நுண்ணுயிரிகள் தேவைப்படுகின்றன. அதே சமயம் சோளமாவு போன்ற உயிரிப் பொருட்களில் இருந்து பெறப்படும் பிரபலமான, வளமான பாலி அசிட்டிக் அமிலம் கொண்டு உருவாக்கப்படும் மட்கும் கோப்பைகள் மற்றும் தட்டுகளின் உற்பத்திக்கு தொழிலக உரங்கள் தேவைப்படுகின்றன.
- இதன் மறுபுறத்தில், உருளைக் கிழங்கு மற்றும் சோள மாவுச் சத்து மூலம் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட பொருள்கள் இயல்பான நிலையில் சிறப்பாக செயல்படுகின்றன என்று பிரிட்டனில் நடத்திய ஆய்வு மூலம் தெரிய வருகிறது.
- உண்ணக்கூடிய பொருட்களின் மீது பொதிகட்டப் பயன்படுத்தப் படும் பொருளுக்கானத் தேர்வாக தற்போது கடற்பாசி உருவெடுத்து வருகின்றது.
- இந்தியாவில் தயாரிப்பாளர்களின் உரிமத்தைச் சரிபார்க்க சரியான சோதனை மற்றும் சான்றிதழ்கள் இல்லாத நிலையில் போலியான மற்றும் மட்கும் உரங்கள் போன்ற நெகிழிகள் சந்தையில் நுழைந்துக் கொண்டிருக்கின்றன.
- ஜனவரி 2019 இல் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது மட்கும் உரம் என்று குறிக்கப்பட்ட ஆனால் அதற்கான எந்தச் சான்றிதழும் இல்லாத பொருள்களைக் கொண்டுச் செல்லும் பைகள் மற்றும் பிற பொருள்களை 12 நிறுவனங்கள் சந்தைப் படுத்தியுள்ளன என்று தெரிவித்துள்ளது.
- மேலும் அந்தந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களை இத்தகு நிறுவனங்களின் மேல் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
- ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தால் அதற்கு மாற்றாகப் பயன்படும் பொருள்களின் விற்பனை குறித்து சான்றளிக்க ஒரு விரிவான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.
- நெகிழிப் பொருள்களுக்கு எதிரான இயக்கமானது பல அடுக்கு பொதி கட்டுதல், ரொட்டிப் பைகள், உணவு உறை மற்றும் பாதுகாப்பான பொதி கட்டுதல் போன்றவற்றிற்கு ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
- பெரும்பாலும் நுகர்வோர்களுக்கு இந்த விஷயத்தில் வேறு வழியில்லை.
- இப்பிரச்சாரத்தின் மறு பகுதியில் தட்டுகள், கரண்டிகள் மற்றும் கோப்பைகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப் படும் சோதனை செய்யப்பட்ட, மட்கக்கூடிய மற்றும் உரமாகக் கூடிய பொருட்களைப் பிரித்தெடுப்பதிலும், அந்தக் கழிவுகளைக் கவனமாகக் கையாளுவதிலும், அவற்றின் மறுசுழற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
- இத்தகு நடவடிக்கைகளில் நகராட்சி அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
பொதி கட்டும் (Packaging) தொழிற்சாலைகளுக்கான பொறுப்புகள்
- சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் மும்பையில் நடந்த சர்வதேச நெகிழ்வான பொதிகட்டுதல் மாநாட்டில் கடுமையான சட்டங்களின் படி தொழிற்துறைகள் அவற்றின் உற்பத்தியாளர் நீட்சிப் பொறுப்பைக் கையாள வேண்டும் என்று தொழிற்துறைக்கு ஒரு செய்தி அனுப்பினார்.
- அனைத்து வகையான நெகிழிக் கழிவுகளின் சேகரித்தல், அதை மறு சுழற்சி செய்தல் மற்றும் அதைப் பதப்படுத்துதல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக அவற்றைத் தயாரிப்பவர்களின் மீது அதிக அழுத்தம் அளிக்க வேண்டும்.
- பொதிகட்டுதலானது கழிவு அளவுகளின் விகிதாச்சார உயர்வுடன் சேர்த்து 2015 ஆம் ஆண்டு இருந்த 31 பில்லியன் டாலர் என்ற மதிப்பில் இருந்து 2020 ஆம் ஆண்டில் 72.6 பில்லியன் டாலர் என்ற மதிப்பிற்கு உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- - - - - - - - - - - - - - -