TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 6) - பாகம் 20

January 4 , 2025 3 days 140 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 6) - பாகம் 20

(For English version to this please click here)

தேசிய நதிப் பாதுகாப்பு திட்டம் (NRCP)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 1995.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஜல் சக்தி அமைச்சகம் (முன்னர் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம்).

நோக்கங்கள்:

  • பல்வேறு மாசுக் குறைப்புப் பணிகளைச் செயல்படுத்துவதன் மூலம் ஆறுகளில் மாசுபாட்டின் சுமையைக் குறைத்தல்.
  • நகராட்சி கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதன் மூலம் நதிகளில் நீரின் தரத்தை மேம்படுத்துதல்.
  • ஆற்றங்கரையைச் சுற்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதன் மூலம் நதிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
  • நதி சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிலையான மேலாண்மை மற்றும் புத்துயிர் பெறுவதை உறுதிப்படுத்துதல்.

பயனாளிகள்:

  • இந்திய மாநில அரசுகள்.
  • உள்ளூர் மாநகராட்சிகள் மற்றும் அதிகாரிகள்.
  • அசுத்தமான ஆறுகளில் வாழும் சமூகங்கள்.
  • நதிப் பாதுகாப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டுள்ள தொழில் துறைகள் மற்றும் அதன் பங்குதாரர்கள்.
  • மேம்படுத்தப் பட்ட நீரின் தரம் மற்றும் சிறந்த சுகாதாரத்திற்கான அணுகல் ஆகியவற்றால் குடிமக்கள் பயனடைகின்றனர்.

தகுதி அளவுகோல்கள்:

  • நதிகளை மாசுபடுத்தலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு மாநில அரசுகளால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • அத்திட்டங்களானது மாசு நிலை, நதி நீட்சி முன்னுரிமைகள் மற்றும் நிதியளிப்பு வழிமுறைகள் தொடர்பான NRCP வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்.
  • மூலதனச் செலவு மற்றும் அனைத்துச் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு (O&M) செலவுகளில் ஒரு பங்கை ஏற்க மாநிலங்கள் ஆதரவினை அளிக்க வேண்டும்.
  • ஆற்று மாசுபாட்டின் அளவு மற்றும் ஆற்று நீட்சியின் சிறந்தப் பயன்பாடு ஆகியவை கருதப் படுகின்றன.

பலன்கள்:

  • ஆறுகளில் நுழையும் மாசுக் கணிசமான குறைப்பு.
  • ஆறுகளின் ஒட்டு மொத்த நீரின் தரத்தில் முன்னேற்றம்.
  • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) மற்றும் கழிவுநீர் அமைப்புகளை நிறுவுதல்.
  • ஆற்றங்கரைகளின் மேம்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட குளியலறைகள்.
  • நதி நீரின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு.
  • குறைந்த செலவில் கழிவறைகள் மூலம் ஆற்றங்கரைகளுக்கு அருகில் திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுத்தல்.
  • மின்சாரத் தகனம் மற்றும் மேம்படுத்தப்பட்ட மரத் தகன முறை மூலம் ஆற்றல் சேமிப்பு.
  • அரசு அமைப்புகள் மற்றும் குடிமக்கள் மூலம் ஆற்றைப் பாதுகாப்பதில் தீவிர ஈடுபாடு.

கூடுதல் தகவல்கள்:

  • NRCP என்பது நதி மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கில் உருவான மத்திய அரசின் நிதியுதவி திட்டமாகும்.
  • மாசுபாட்டைக் குறைத்து, அவற்றினால் நீரின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், நதிகளைப் பாதுகாப்பதே இதன் முக்கியக் குறிக்கோள்.
  • NRCP மற்றும் தேசிய கங்கை நதிப் படுகை ஆணையம் (NGRBA - National Ganga River Basin Authority) ஆகியவற்றின் கீழ் நதிப் பாதுகாப்பு திட்டங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.
  • கங்கையின் புத்துயிர்ப்பு மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் தேசிய கங்கை ஆணையம், NGRBA திட்டத்தினை மாற்றியுள்ளது.
  • தேசிய நதிப் பாதுகாப்புத் திட்டத்தின் (NRCP) கீழ், கோவாவில் சால் நதித் திட்டம் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அனுமதிக்கப் பட்டது.
  • நதிகள் மாசுபடுவதைத் தடுப்பதும், நீரின் தரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

  • சால் நதித் திட்டம் உட்பட NRCPயின் கீழ் முக்கியச் செயல்பாடுகள் பின்வருமாறு:

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs):

  • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், திசை திருப்பப்பட்ட கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்காக அமைக்கப்பட்டு, ஆற்றில் சேரும் மாசுபாட்டைக் குறைக்கவும், நீரின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

குறைந்த விலை சுகாதார (LCS) பணிகள்:

  • ஆற்றங்கரைகளில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கவும், மனிதக் கழிவுகளால் நதி நீர் மாசுபடுவதைக் குறைக்கவும், குறைந்த செலவில் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப் பட்டு உள்ளன.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு:

  • மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நதிகளைப் பாதுகாப்பதில் சமூகங்களை ஈடுபடுத்தவும் மேற்கொள்ளும் முயற்சிகள் NRCPயின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • பாதுகாப்புச் செயல்பாட்டின் உள்ளூர் உரிமையை உறுதி செய்வதற்காக பொதுமக்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப் படுகிறது.

மின்சாரத் தகனம்:

  • உடல்களை முறையாக தகனம் செய்வதை உறுதி செய்வதற்காகத் தகனம் செய்யும் இடங்களில் மின்சாரத் தகனம் அமைக்கப் பட்டுள்ளது.
  • இது மரத்தை அடிப்படையாகக் கொண்ட தகனத்தின் தேவையைக் குறைக்கிறது என்பதோடு மேலும் இது மாசுபாட்டைக் குறைக்கவும், மரத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
  • NRCP என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே செலவுப் பகிர்வு அடிப்படையில் செயல்படும் மத்திய நிதியுதவி திட்டமாகும்.
  • இந்தத் திட்டம் 16 மாநிலங்களில் உள்ள 77 நகரங்களில் உள்ள 34 ஆறுகளின் மாசுபட்ட பகுதிகளை உள்ளடக்கியது.
  • NRCP திட்டத்தின் கீழ், ஒரு நாளைக்கு 2522.03 மில்லியன் லிட்டர் (MLD) கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இத்திட்டங்களில் கழிவுநீரை இடைமறித்தல் மற்றும் திருப்புதல், ஆற்றங்கரை மேம்பாடு, பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் போன்ற மாசு குறைப்புப் பணிகளும் அடங்கும்.

நமாமி கங்கை ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • ஜூன் 2014.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஜல் சக்தி அமைச்சகம்.
  • தூய்மையான கங்கைக்கான தேசியத் திட்டம் (NMCG).
  • மாநிலத் திட்ட மேலாண்மைக் குழுக்கள் (SPMGs).

நோக்கங்கள்:

  • மாசு குறைப்பு: கழிவுநீர் சுத்திகரிப்புத் திறன் மற்றும் கழிவு நீர் மேலாண்மையை மேம்படுத்துவதன் மூலம் கங்கை நதியில் மாசு அளவைக் குறைத்தல்.
  • பாதுகாப்பு மற்றும் புத்துயிர்ப்பு: ஆற்றில் நீரின் தரம், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் புத்துயிர் பெறுதல்.
  • உள்கட்டமைப்பு மேம்பாடு: கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆற்றங்கரை மேம்பாடு மற்றும் தொழில்துறைக் கழிவுநீர் கண்காணிப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.
  • பல்லுயிர்ப் பாதுகாப்பு: இயற்கை வாழ்விடங்களை மேம்படுத்துதல் உட்பட, நீர்வாழ் மற்றும் கரையோரப் பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்துதல்.
  • பொது மக்களிடம் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பு: பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல்.
  • பொருளாதார மேம்பாடு: கங்கை தொடர்பான பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் ‘அர்த் கங்கா’ மாதிரி போன்ற முன்னெடுப்புகள் மூலம் ஆற்றின் குறுக்கே நிலையான வளர்ச்சியை அடையச் செய்தல்.

பயனாளிகள்:

  • கங்கை நதிப் படுகை மாநிலங்களில் வாழும் மக்கள் (உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்றவை)
  • ஆற்றங்கரை மேம்பாடு, சுற்றுலா, இயற்கை விவசாயம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூகங்கள்.
  • கங்கை ஓங்கில் மற்றும் நீர்வாழ் இனங்கள் உட்பட வனவிலங்கு மற்றும் நீர்வாழ் பல்லுயிரிகள்.

தகுதி அளவுகோல்கள்:

  • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், காடு வளர்ப்பு அல்லது பல்லுயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றில் பொது மக்களின் பங்கேற்பு.
  • உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, அந்தந்த மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தகுதி தீர்மானிக்கப்படுகிறது.

பலன்கள்:

  • நீரின் தரத்தில் முன்னேற்றம்: மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நதியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளினால், ஆற்றில் தூய்மையான நீரின் தரத்திற்குப் பங்களிக்கின்றன.
  • மேம்படுத்தப்பட்ட பல்லுயிர்: ஓங்கில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் கங்கை சுற்றுச்சூழல் அமைப்பில் நீர்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு.
  • பொருளாதார வாய்ப்புகள்: அர்த் கங்கா மாதிரியானது சூழல் சுற்றுலா, இயற்கை விவசாயம் மற்றும் நிலையான வணிக மாதிரிகள் மூலம் சமூகங்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குகிறது.
  • கலாச்சார மற்றும் ஆன்மீக மதிப்புப் பாதுகாப்பு: கங்கையின் நதிக் கரைகள் மற்றும் மலைப் பாதைகளின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, ஆற்றின் கலாச்சார முக்கியத்துவத்தைப் பராமரிக்க உதவுகிறது.
  • பொதுமக்கள் விழிப்புணர்வு: குடிமக்கள், தன்னார்வலர்கள் (கங்கா பிரஹாரிகள்) மற்றும் உள்ளூர் சமூகங்கள் தூய்மைப்படுத்துதல், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் காடு வளர்ப்பு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

கூடுதல் தகவல்கள்:

  • இத்திட்டத்தின் பட்ஜெட் ₹20,000 கோடி மற்றும் பல கட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது: குறுகிய காலம் (ஆரம்ப நிலை), நடுத்தர காலம் (5 ஆண்டுகள்) மற்றும் நீண்ட காலம் (10 ஆண்டுகள்).
  • இத்திட்டத்தின் கீழ், 90க்கும் மேற்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டங்கள் மற்றும் நதிக்கரை மேம்பாட்டுத் திட்டங்கள் கங்கைப் படுகை மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளன.
  • தொழில்துறைக் கழிவுகள் மற்றும் ஆற்றில் கழிவு நீர் அகற்றுவதைக் குறைப்பதில், அவற்றிக்கான கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை வழிமுறைகளுடன், சிறப்பு கவனம் செலுத்தப் படுகிறது.
  • இதன் இரண்டாம் கட்டத்தில் (2021-26), திட்டங்களை முடிப்பது மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் மறுபயன்பாட்டை அதிகரிப்பது போன்ற முயற்சிகளில் கவனம் செலுத்தப்படும்.

நதிகளை இணைக்கும் தேசிய முன்னோக்குத் திட்டம் (NPP).

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • ஆகஸ்ட் 1980.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தொடக்கத்தில், நீர்ப் பாசன அமைச்சகம் (தற்போது ஜல் சக்தி அமைச்சகம்).
  • தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் (NWDA) நதிகள் ஒன்றோடொன்று இணைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், திட்டமிடுவதற்கும் பொறுப்பாகும்.

நோக்கங்கள்:

  • நதிகளை இணைக்கும் வலைப்பின்னல் மூலம் உபரி நீரை, நீர் வளம் உள்ள பகுதிகளில் இருந்து பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு மாற்றுதல்.
  • நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்துதல், நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்தல், நீர் மின்சாரம் உற்பத்தி செய்தல்.
  • நீர் விநியோகத்தைச் சமநிலைப்படுத்துவதன் மூலம் வெள்ளம் மற்றும் வறட்சியைக் குறைத்தல்.
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு நீர் விநியோகத்தை ஆதரித்தல், நீர் வழிச் செலுத்தலை அதிகரித்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

பயனாளிகள்:

  • நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், குறிப்பாக மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர்ப் பாசனத்தைச் சார்ந்துள்ள விவசாயத் துறைகள்.
  • கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளில் உள்ள பொது மக்கள் (இந்தியா முழுவதும் 600 மில்லியன் மக்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது).
  • நிலையான நீர் வழங்கல் தேவைப்படும் தொழில்கள்.
  • உள்நாட்டு நீர்வழிகளின் வளர்ச்சி மூலம் போக்குவரத்து துறையை மேம்படுத்துதல்.
  • பிராந்திய மக்கள் வெள்ளம் அல்லது வறட்சி நிலைமைகளுக்கு ஆளாகின்றனர்.

தகுதி அளவுகோல்கள்:

  • குறிப்பாக இந்தியாவின் தீபகற்பம் மற்றும் இமயமலைப் பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை அல்லது வறட்சி நிலையை எதிர்கொள்ளும் மாநிலங்கள் மற்றும் பகுதிகள்.
  • நீர்ப் பங்கீடு மற்றும் உள்கட்டமைப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் உடன்பாடு கொண்ட மாநிலங்கள்.

பலன்கள்:

நீர்ப்பாசனம்:

  • 35 மில்லியன் ஹெக்டேர் நீர்ப் பாசனத்தில் பயனடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இதில் 25 மில்லியன் ஹெக்டேர் மேற்பரப்பு நீர் மற்றும் 10 மில்லியன் ஹெக்டேர் அதிகரித்த நிலத்தடி நீர் பயன்பாட்டில் உள்ளது.

நீர் மின் உற்பத்தி:

  • சுமார் 34,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நீர்மின்சார அமைப்பு.

நீர்ப் பாதுகாப்பு:

  • குடிநீர், தொழில்துறை மற்றும் விவசாயத் தேவைகளுக்கு குறிப்பாக, வறட்சியால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் நீர் வரத்து அதிகரிப்பு.

உள்நாட்டு நீர்வழிகள்:

  • நீர் வழிச் செலுத்தலுக்கான கால்வாய்களை உருவாக்குதல், சாலை மற்றும் இரயில் போக்குவரத்து வலை அமைப்புகளின் அழுத்தத்தைக் குறைத்தல்.

பேரிடர் மேலாண்மை:

  • பிராந்தியங்கள் முழுவதும் சிறந்த நீர் விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம் வெள்ளம் மற்றும் வறட்சியின் பாதகமான தாக்கங்களைத் தணித்தல்.

பொருளாதார வளர்ச்சி:

  • நீர் விநியோகம், வழிச் செலுத்தல் மற்றும் நீர் மின்சாரம் தொடர்பான கட்டுமானம், பராமரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம்.

கூடுதல் தகவல்கள்:

  • NPP இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியது: தீபகற்பக் கூறு மற்றும் இமயமலைக் கூறு.
  • மகாநதி, கோதாவரி மற்றும் தென்னிந்தியாவின் பிற நதிகளில் இருந்து காவேரி, கிருஷ்ணா மற்றும் வைகை போன்ற நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு நீரை மாற்றுவது உட்பட, 16 நதிகளை இணைக்கும் பணியை தீபகற்பக் கூறு உள்ளடக்கியது.
  • இமயமலைக் கூறு கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற 14 நதிகளையும் அவற்றின் துணை ஆறுகளையும் இணைப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • கென் - பெத்வா இணைப்புத் திட்டம் NPP திட்டத்தின் கீழ் அமைந்த முதல் பெரிய திட்டமாகும், மேலும் 2021 ஆம் ஆண்டில் செயல்படுத்தப் பட என்று இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.
  • நதிகள் இணைப்புக்கான சிறப்புக் குழு மற்றும் நதி மேம்பாட்டிற்கான பணிக்குழு உட்பட, இதனைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிட அரசாங்கம் பல குழுக்களையும், பணிக் குழுக்களையும் அமைத்துள்ளது.
  • இந்த திட்டங்களுக்கான நிதியுதவி, பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனாவின் (PMKSY) கீழ் நபார்டு உட்பட பல்வேறு வழிமுறைகளால் ஆதரிக்கப் படுகிறது.

              -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்