TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 7) - பாகம் 21

January 7 , 2025 2 days 156 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 7) - பாகம் 21

(For English version to this please click here)

இலக்கு 7: அனைவருக்கும் மலிவான மற்றும் சுகாதாரமான ஆற்றல்

சௌபாக்யா திட்டம் (பிரதான் மந்திரி சஹாஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • அக்டோபர் 2017.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • மின்சார அமைச்சகம்; தலைமை முகமையாக ஊரக மின்சார வசதியளிப்புக் கழகம் (REC).

நோக்கங்கள்:

  • கிராமப்புறங்களில் உள்ள அனைத்து மின்சாரம் இல்லாத வீடுகளுக்கும் கடைசி மைல் வரை இணைப்பு மற்றும் மின் இணைப்புகளை வழங்குதல்.
  • நகர்ப்புறங்களில் (ஏழைகள் அல்லாத நகர்ப்புற குடும்பங்கள் தவிர்ப்பு) பொருளாதார ரீதியாக ஏழை, மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு மின்சார இணைப்புகளை விரிவுபடுத்துதல்.
  • மின்சார விநியோக அமைப்பு நீட்டிப்புச் சாத்தியமில்லாத அல்லது செலவு குறைந்த தொலை தூர மற்றும் அணுக முடியாத கிராமங்களில், மின்சாரம் இல்லாத குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின்னழுத்த (SPV) அடிப்படையிலான தனித்த அமைப்புகளைச் செயல்படுத்துதல்.

பயனாளிகள்:

  • கிராமப்புறக் குடும்பங்கள் (குறிப்பாக BPL - வறுமைக் கோட்டிற்கு கீழே) மற்றும் பொருளாதார ரீதியாக ஏழை நகர்ப்புறக் குடும்பங்கள்.
  • மின்சார விநியோக அமைப்பு இணைப்பு சாத்தியமில்லாத தொலைதூர அல்லது அணுக முடியாத பகுதிகளில் மின்சாரம் இல்லாத வீடுகள்.

தகுதி அளவுகோல்கள்:

  • இந்தத் திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள BPL குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
  • பயனாளிகள் சமூகப் பொருளாதார மற்றும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு (SECC) 2011 தரவு மூலம் அடையாளம் காணப் படுகிறார்கள்.
  • BPL தவிர மற்ற கிராமப்புற குடும்பங்கள் ரூ. 500க்கு மின் இணைப்பைப் பெறலாம், இதனை 10 சம தவணைகளில் செலுத்த வேண்டும்.
  • நகர்ப்புற BPL குடும்பங்கள் இலவச மின்சார இணைப்புகளைப் பெறுகின்றன.

பலன்கள்:

  • பொருளாதாரத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பு.
  • தொலைதூரப் பகுதிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் அமைப்புகள்.
  • பயனாளிகளை உடனுக்குடன் அடையாளம் காண, அலைபேசிப் பயன்பாடுகள் மற்றும் கிராமங்களில் முகாம்கள் மூலம் எளிமைப்படுத்தப்பட்ட பதிவு.
  • திட்டத்தின் முன்னேற்றத்தை அருகில் இருக்கும் நிகழ்நேரக் கண்காணிப்பு மூலம் கண்காணித்தல்.

கூடுதல் தகவல்:

  • சில மாநிலங்களில், முன்பு நிராகரிக்கப்பட்ட அல்லது மின்சார விநியோக அமைப்புடன் இணைக்க விரும்பாத வீடுகளுக்கு மின்மயமாக்க கூடுதல் நேரம் வழங்கப் படுகிறது.
  • இந்தத் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியாகும் என்பதோடு இது தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (DDUGJY) உடன் இணைக்கப் பட்டுள்ளது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • மே 1, 2016.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • சுகாதார மேம்பாடு: பாரம்பரிய சமையல் முறைகள் (விறகு, நிலக்கரி மற்றும் மாட்டுச் சாணம் துண்டுகள் போன்றவை) உட்புறக் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் குறைத்தல்.
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்: சுத்தமான சமையல் எரிவாயுவை (LPG) வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல், இது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் விறகு சேகரிப்பதில் செலவிடும் நேரத்தைக் குறைக்கிறது.
  • சுற்றுச்சூழல் நிலைத்தன்மை: LPG போன்ற தூய்மையான எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, காடழிப்பு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைத்தல்.

பயனாளிகள்:

  • கிராமப்புற மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள், குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு (BPL) கீழ் உள்ள குடும்பங்கள் என்பதோடு, முதன்மையாக இந்தக் குடும்பங்களில் உள்ள பெண்களை இது இலக்காக வைக்கின்றது.
  • விறகு, நிலக்கரி மற்றும் மாட்டு சாணத் துண்டுகள் போன்ற பாரம்பரிய சமையல் எரிபொருட்களைத் தற்போது பயன்படுத்தும் குடும்பங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • BPL குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு LPG இணைப்பு வழங்கப் படுகிறது.
  • சமூக-பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு (SECC) 2011 தரவு மூலம் பயனாளி அடையாளம் காணப் படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் வீட்டில் LPG இணைப்பு எதுவும் வைத்திருக்கக் கூடாது.

பின்வருபவை போன்று பல்வேறு பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள்:

  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமப்புறம்).
  • மிகவும் பின்தங்கிய வகுப்பினர்.
  • அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY).
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) குடும்பங்கள்.
  • வனவாசிகள், தீவில் வசிப்பவர்கள், முதலியோர்.

பலன்கள்:

  • இலவச LPG இணைப்புகள்: தகுதியான பயனாளிகள் இலவச LPG இணைப்பைப் பெறுகிறார்கள்.
  • நிதி உதவி: BPL குடும்பங்களுக்கு ஒவ்வொரு LPG இணைப்புக்கும் ₹1,600 வழங்கப் படுகிறது.
  • முதல் முறையாக எரிவாயு மறுநிரப்புதல் சேவை மற்றும் அடுப்பு: உஜ்வாலா 2.0 திட்டத்தில் முதல் முறையாக எரிவாயு மறுநிரப்புதல் சேவை மற்றும் அடுப்பு வழங்கப் படுகிறது.
  • எரிவாயு மறுநிரப்புதல்களுக்கு மானியம்: 14.2 கிலோ சிலிண்டரின் முதல் ஆறு முறை எரிவாயு மறுநிரப்புதல்களுக்கு அல்லது 5 கிலோ சிலிண்டரின் எட்டு முறை எரிவாயு மறுநிரப்புதல்களுக்கு மானியம் வழங்கப் படுகிறது.
  • மாதந்திரத் தவணை (EMI) வசதி: பயனாளிகள் அடுப்பு மற்றும் முதல் எரிவாயு மறுநிரப்புதலின் விலையை ஈடுகட்ட EMI வசதியைப் பெறலாம்.
  • பஹல் திட்டம்: பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடி மானியங்களைப் பெற பஹல் திட்டத்தில் சேரலாம்.
  • சுகாதார நன்மைகள்: இது உட்புற காற்று மாசுபாட்டைக் குறைப்பதோடு, சுவாச நோய்களைத் தடுப்பதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை இது கணிசமாக மேம்படுத்துகிறது.

கூடுதல் தகவல்கள்:

கட்டங்கள்:

  • கட்டம் 1: 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 8 கோடி LPG இணைப்புகளை வழங்கும் இலக்குடன் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இது 2016 ஆம் ஆண்டில் 62% ஆக இருந்த LPG பரவலை, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் 99.8% ஆக உயர்த்தியது.
  • உஜ்வாலா 2.0: 2021 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது, மார்ச் 2022 ஆம் ஆண்டிந மார்ச் மாதத்திற்குல் க்குள் கூடுதலாக 1 கோடி இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது, பின்னர் இது 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்குள் சுமார் 1.6 கோடி இணைப்புகளுக்கு நீட்டிக்கப் பட்டது.

உஜாலா திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • மே 1, 2015.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • மின் அமைச்சகம்.
  • செயல்படுத்தும் நிறுவனம்: ஆற்றல் திறன்மிகு சேவைகள் நிறுவனம் (EESL).

நோக்கங்கள்:

  • ஆற்றல்-திறனுள்ள LED விளக்குகளின் பரவலான விநியோகத்தின் மூலம் ஆற்றல் செயல் திறனை மேம்படுத்துதல் மற்றும் மின்சார நுகர்வினைக் குறைத்தல்.
  • ஆற்றல் திறன் கொண்ட விளக்குகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல்.
  • பாரம்பரிய ஒளிரும் விளக்குகளுடன் ஒப்பிடும் போது, குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் மலிவு விலை LED விளக்குகளை வழங்குவதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல்.
  • ஆற்றல் நுகர்வு மற்றும் CO2 உமிழ்வைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பங்களித்தல்.

பயனாளிகள்:

  • இந்தியாவில் உள்ள அனைத்து வீட்டுக் குடும்பங்களுக்கும் அந்தந்த மின்சார விநியோக நிறுவனங்களிடமிருந்து மீட்டர் இணைப்புடன் மின்சார வசதி வழங்கப் படுகிறது.
  • நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் குடும்பங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • மீட்டர் மின் இணைப்பு உள்ள குடும்பங்கள்.
  • குறிப்பிட்ட வருமான அளவுகோல்கள் இல்லை; இருப்பினும், கிராமப்புறக் குடும்பங்கள் மலிவு விலையில் அணுகுவதற்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றன.

பலன்கள்:

  • மலிவு விலையில் LED பல்புகள்: LED பல்புகள் மானிய விலையில் கிடைக்கின்றன (சந்தை விலை ரூ. 300-350 உடன் ஒப்பிடும்போது, ஒரு LED விளக்குக்கு ரூ. 70-80).
  • ஆற்றல் சேமிப்பு: LED விளக்குகள் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன, இதனால் மின் கட்டணங்கள் குறைக்கப் படுகின்றன.
  • சுற்றுச்சூழல் நன்மைகள்: LED விளக்குகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதன் காரணமாக CO2 வெளியேற்றத்தில் (3.86 கோடி டன்கள்) குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட்டுள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட விளக்குகள்: பாரம்பரிய விளக்குகளுடன் ஒப்பிடும்போது LED பல்புகள் சிறந்த மற்றும் ஆற்றலுடன் கூடிய விளக்குகளை வழங்குகின்றன.
  • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கிறது: LED விளக்குகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் "மேக் இன் இந்தியா" முன்னெடுப்பை இது ஆதரிக்கிறது.
  • பாரிய ஆற்றல் சேமிப்பு: தோராயமாக ஆண்டுக்கு 47,778 மில்லியன் kWh ஆற்றல் சேமிக்கப் படுகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • உஜாலா திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய பூஜ்ஜிய-மானியம் கொண்ட உள்நாட்டு விளக்குத் திட்டமாகும்.
  • தெருவிளக்கு தேசியத் திட்டம் (SLNP) என்பது உஜாலாவின் கீழ் உள்ள மற்றொரு முன்னெடுப்பாகும் என்பதோடு இது இந்தியா முழுவதும் தெரு விளக்குகளுக்குப் பதிலாக ஆற்றல் - திறனுள்ள LED விளக்குகளை வழங்குகிறது.
  • 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட கிராம் உஜாலா திட்டம், கிராமப்புறக் குடும்பங்களை இலக்காகக் கொண்டு, அவர்களுக்கு மலிவு விலையில் LED விளக்குகளை ரூ. 10க்கு வேலை செய்யக் கூடிய ஒளிரும் பல்புகளுக்கு ஈடாக வழங்கப் படுகிறது.
  • இந்தத் திட்டம் கணிசமான ஆற்றல் சேமிப்புக்கும், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் வழி வகுத்தது.

பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தான் மகாபியன் (PM KUSUM) திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2019 (மார்ச் 31, 2026 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது).

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE).

நோக்கங்கள்:

  • சூரிய ஆற்றலால் இயங்கும் பம்ப் நிறுவுதல்: பகுதி மின்சார விநியோக அமைப்பினால் சூரிய சக்தியில் இயங்கும் விவசாய பம்புகளை நிறுவுவதன் மூலம் டீசல் பம்புகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.
  • ஏற்கனவே உள்ள பம்புகளை சூரியசக்திமயமாக்கல்: ஏற்கனவே உள்ள மின்சார விநியோக அமைப்பினால் இணைக்கப்பட்ட விவசாயப் பம்புகளை சூரிய ஆற்றலால் இயங்கும் பம்ப்பாக மாற்றுதல்.
  • தரிசு நிலத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள்: பயிர் செய்ய முடியாத நிலங்கள் அல்லது தரிசு நிலங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது விவசாயிகளுக்கு, உபரி மின்சாரத்தை மின் கட்டணத்திற்கு விற்க அனுமதிக்கிறது.
  • தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவித்தல்: புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை அதிகரிக்க, கிராமப்புறங்களில் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மைக்குப் பங்களிக்கிறது.
  • விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல்: சூரிய ஆற்றலால் இயங்கும் பம்ப் நிறுவுதல் மற்றும் சூரிய மின்னாற்றல் உற்பத்திக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம், விவசாயிகள் செலவுகளைக் குறைத்து, உபரி ஆற்றலில் இருந்து சம்பாதிக்கலாம்.
  • விவசாயத்தில் இருந்து டீசல் நீக்கம்: டீசல் பம்புகளின் பயன்பாட்டைக் குறைத்து, விவசாயத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • தனிப்பட்ட விவசாயிகள்: விவசாய நிலம் உள்ள விவசாயிகள்.
  • கூட்டுறவு மற்றும் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள்: இவை சூரிய மின் ஆற்றலால் இயங்கும் பம்ப் நிறுவல்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பம்புகளின் சூரியமயமாக்கலுக்கும் விண்ணப்பிக்கலாம்.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs).
  • பஞ்சாயத்துகள்.
  • நீர்ப் பயனர் சங்கங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் PM KUSUM என்ற திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
  • தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவுகள், FPO அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகள் திட்டத்தின் வெவ்வேறு கூறுகளுக்குத் தகுதியான முதன்மைக் குழுக்கள்.
  • இத்திட்டம் பகுதி மின்சார விநியோக அமைப்பினால் கிராமப்புறப் பகுதிகள் அல்லது நம்பகத் தன்மையற்ற மின்சார விநியோக அமைப்பு இணைப்புகள் உள்ள பகுதிகளில் கிடைக்கிறது.

பலன்கள்:

  • வருமானம் ஈட்டுதல்: சூரிய ஆற்றலால் இயங்கும் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தின் மூலம் கூடுதல் வருமானம் தரும் வகையில், விவசாயிகள் சூரிய மின்னாற்றலை உற்பத்தி செய்து, மின் கட்டத்திற்கு விற்பனை செய்யலாம்.
  • நீர்ப் பாசனச் செலவைக் குறைத்தல்: டீசல் பம்புகளுக்குப் பதிலாக சூரிய மின்னாற்றலால் இயங்கும் பம்புகள், நீர்ப் பாசனத்திற்கான எரிபொருள் செலவைச் சேமிக்கின்றன.
  • விவசாயிகளுக்கான ஆற்றல் பாதுகாப்பு: நீர்ப் பாசனத் தேவைகளுக்கு நம்பகமான, சுத்தமான மற்றும் நிலையான ஆற்றலுக்கான அணுகல்.
  • நீர்ப் பாதுகாப்பு: சூரிய சக்தியில் இயங்கும் அமைப்புகள் மூலம் திறமையான நீர்ப் பாசனம் மற்றும் நீர்ப் பயன்பாடு.
  • சுற்றுச்சூழல் நட்பு: பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத் தக்க ஆற்றலை ஊக்குவிப்பதற்கும் பங்களிப்பு.
  • பரவலாக்கப்பட்ட சூரிய மின் உற்பத்தி: இது பரிமாற்ற இழப்பைக் குறைக்க உதவுகிறது, மற்றும் விவசாயிகள் மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு (DISCOMS) பயனளிக்கிறது.
  • வேலை உருவாக்கம்: சூரிய ஆற்றலால் இயங்கும் பம்புகள் மற்றும் நிலையங்களின் நிறுவல் மற்றும் பராமரிப்பு குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • நீண்ட கால நிலைத் தன்மை: விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலங்கள் அல்லது தரிசு நிலத்தைச் சூரிய மின் உற்பத்திக்கு பயன்படுத்தலாம், இதன் மூலம் நீண்ட காலத்திற்கு நீர் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

கூடுதல் தகவல்கள்:

திட்டத்தின் கூறுகள்:

  • கூறு A: விவசாயிகளுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் சிறிய சூரிய மின் நிலையங்களை (2 MW வரை) நிறுவுதல்.
  • கூறு B: தனித்தனி சோலார் பம்புகளை (7.5 HP வரை) நிறுவுதல்.
  • கூறு C: தற்போதுள்ள 15 லட்சம் மின் இணைப்புள்ள விவசாய பம்புகளின் சூரியமயமாக்கல்.

நிதி உதவி:

  • விவசாயிகள் சூரிய ஆற்றலால் இயங்கும் பம்புகளுக்கு 60% மானியம் பெறுகிறார்கள், 30% கடனாக வழங்கப் படுகிறது என்ற நிலையில் மீதமுள்ள 10% விவசாயிகளால் ஏற்கப் படுகிறது.
  • இத்திட்டத்திற்கான மொத்த மத்திய நிதியுதவி ரூ. 34,422 கோடி, 2026 ஆம் ஆண்டுக்குள் சூரிய மின்சக்தி திறனை 34,800 மெகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • இலக்கு: இந்தத் திட்டம் 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய ஆற்றலால் இயங்கும் பம்புகளை வழங்குவதையும், தற்போதுள்ள 15 லட்சம் மின்சார விநியோக அமைப்புடன் இணைக்கப்பட்ட பம்புகளை சூரியமயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்