TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 8) - பாகம் 27

January 21 , 2025 6 hrs 0 min 86 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 8) - பாகம் 27

(For English version to this please click here)

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • ஆகஸ்ட் 2016.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் (MSDE).

நோக்கங்கள்:

  • வேலை அனுபவப் பயிற்சியை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்திற்கான திறமையான பணியாளர்களை உருவாக்குதல்.
  • தொழிற்பயிற்சியாளர்களுக்கு பகுதி உதவித் தொகை ஆதரவைப் பகிர்வதன் மூலம் தொழிற்பயிற்சியாளர்களைச் சேர்க்க நிறுவனங்களை ஊக்குவித்தல்.
  • மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு முன்னெடுப்புகளின் கீழ் குறுகிய கால திறன் பயிற்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு திறன் மேம்பாடு வாய்ப்புகளை வழங்குதல்.
  • சிறு நிறுவனங்களில், குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் வடகிழக்கு மண்டலம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் பயிற்சியாளர்களின் சேர்க்கையை ஊக்குவித்தல்.
  • கோட்பாட்டு அறிவுக்கும், நடைமுறைத் திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து வேலைவாய்ப்பை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • உற்பத்தி, சேவைகள், விவசாயம், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் (குறைந்தபட்ச வயது 14 வயது).
  • தொழிற்பயிற்சிப் பிரிவைப் பொறுத்து 8 ஆம் வகுப்பு முதல் பட்டதாரி நிலை வரை பல்வேறு கல்வித் தகுதிகளைக் கொண்ட பயிற்சியாளர்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • தேவையான வயது: குறைந்தபட்ச வயது 14 ஆண்டுகள் மற்றும் 18 வயது உள்ளவர்கள் அபாயகரமான தொழில்களில் தொழிற்பயிற்சி பெறத் தகுதியுடையவர்கள்.
  • கல்வித் தகுதிகள்: 8 ஆம் வகுப்பு முதல் உயர் கல்வித் தகுதிகள் வரை (எ.கா., பட்டதாரி அல்லது டிப்ளமோ பெற்றவர்கள்) வர்த்தகத்தின் அடிப்படையில் மாறுபடும்.
  • பதிவு: தொழிற்பயிற்சியாளர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • ஆதார் தேவை: தொழிற்பயிற்சி பெறுபவர்களுக்கு ஆதார் எண் இருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது வரம்பு: திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.

பலன்கள்:

  • முதலாளிகளுக்கான நிதி ஊக்கத்தொகை: தொழிற்பயிற்சியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முதலாளிகளை ஊக்குவிக்க, உதவித் தொகையில் 25% (ஒரு பயிற்சியாளருக்கு மாதத்திற்கு INR 1,500 வரை) அரசாங்கம் பகிர்ந்து கொள்கிறது.
  • தொழிற்பயிற்சியாளர்களுக்கான நிதியுதவி: NAPS-2 இன் கீழ் பகுதியளவு உதவித் தொகையானது நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் நேரடியாக தொழிற் பயிற்சியாளர்களுக்கு வழங்கப் படுகிறது.
  • பயிற்சி ஆதரவு: பயிற்சி பெறுபவர்களுக்கான அடிப்படைப் பயிற்சிக்கான செலவை, குறிப்பாக முன் அனுபவ தொழிற்பயிற்சி எதுவுமின்றி நுழைபவர்களுக்கு (INR 7,500 வரை) அரசாங்கம் பங்களிக்கிறது.
  • விரிவாக்கப்பட்ட விருப்பத் தேர்வுகள்: தொழிற்பயிற்சியாளர்கள் உற்பத்தி, சேவைகள், விவசாயம், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபடலாம்.
  • தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்ட நிர்வாகம்: இந்தத் திட்டம் நெறிப்படுத்தப்பட்ட பதிவு, பயிற்சி மற்றும் கண்காணிப்புக்கான இணைய தளத்தின் மூலம் ஆதரிக்கப் படுகிறது.
  • மாநில அரசாங்கங்களுடனான ஒத்துழைப்பு: தொழிற்பயிற்சிக்கான பயிற்சியின் கண்காணிப்பு மற்றும் எளிதாக்குவதில் மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களின் செயலில் ஈடுபாடு.
  • MSMEகளுக்கான ஆதரவு: குறிப்பாக பின்தங்கியப் பகுதிகளில் MSMEகளை ஈடுபடுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தப் படுகிறது.

கூடுதல் தகவல்கள்:

தொழிற்பயிற்சியின் வகைகள்:

  • வணிகத் தொழிற்பயிற்சி: 8 ஆம் வகுப்பு முதல் பி.எஸ்சி வரை தகுதி உள்ளவர்களுக்கான தொழிற்பயிற்சி.
  • பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சி: பொறியாளர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு தொழிற் பயிற்சி.
  • தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தொழிற்பயிற்சி: டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கான தொழிற்பயிற்சி.
  • விருப்பத் தேர்வு வணிகத் தொழிற்பயிற்சி: ஐந்தாம் வகுப்புக்கு குறைவான தகுதி உள்ளவர்களுக்கான தொழிற்பயிற்சி.
  • பயிற்சிக்கான வழிகள்: NAPS ஆனது தொழிற்துறைப் பயிற்சி நிறுவனங்கள் (ITI) தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் மற்றும் புதிய தொழிற்பயிற்சி பெற்றவர்கள் போன்ற பல்வேறு வழிகளை, விண்ணப்பதாரரின் முன் அனுபவத்தின் அடிப்படையில் நெகிழ்வான பயிற்சி காலங்களுடன் வழங்குகிறது.

நிதியுதவி:

  • NAPS-2 மாதத்திற்கு INR 1,500 வரை பகுதி உதவித்தொகையை வழங்குகிறது.
  • NAPS-2 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகிறது, பயிற்சி வாய்ப்புகளுக்கான பரந்த அணுகலை உறுதி செய்கிறது.
  • தொழில்நுட்ப ஆர்வமுள்ளச் செயலாக்கம்: பதிவு, கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்திற்கான இணைய தளத்துடன் முழு தொழிற்பயிற்சி செயல்முறையும் எண்ம மயமாக்கப்பட்டுள்ளது.

தாக்கம்:

  • இத்திட்டம் திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை தயார்நிலைக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளித்துள்ளது.
  • இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதில் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 13.38 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
  • பெண்கள், விளிம்பு நிலை சமூகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

NAPS-2:

  • இத்திட்டத்தின் ஒரு புதிய மறு செய்கை, தொழிற்பயிற்சி சூழல் அமைப்பிற்கான பகுதி உதவித்தொகை ஆதரவு மற்றும் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • குறிப்பாக MSMEகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பயிற்சியாளர்களை குறி வைக்கிறது.
  • இந்தத் திட்டம் திறன் இடைவெளியைக் குறைப்பதிலும், வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதிலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தேசிய நகர்ப்புற எண்மத் திட்டம் (NUDM)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2020.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY).

நோக்கங்கள்:

  • நகர்ப்புற இந்தியாவுக்கான பகிரப்பட்ட எண்ம உள்கட்டமைப்பை உருவாக்க, மக்கள், செயல்முறை மற்றும் இயங்குதளம் ஆகிய மூன்று தூண்களில் செயல்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டிற்குள் 2022 நகரங்களிலும், 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் அனைத்து நகரங்கள் மற்றும் நகரங்களில் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் சேவை வழங்குவதற்கான, குடிமக்களை மையப்படுத்திய மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு சார்ந்த அணுகுமுறையை நிறுவன மயமாக்குதல்.
  • நகரங்களுக்கான உள்ளூர்த் தேவைகள் மற்றும் சவால்களுக்கு ஏற்றவாறு முழுமையான ஆதரவை வழங்க MoHUA அமைச்சகத்தின் பல்வேறு எண்ம முன்னெடுப்புகளை ஒருங்கிணைத்தல்.
  • டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆத்மநிர்பர் பாரத்தின்  நீண்ட கால நோக்கங்களை ஊக்குவித்தல்.

பயனாளிகள்:

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs).
  • இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள்.
  • மேம்பட்ட நகர்ப்புற நிர்வாகம் மற்றும் சேவை வழங்கல் மூலம் பயனடையும் குடிமக்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்குள் பரவலை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட இலக்குகளுடன், இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்குப் பொருந்தும்.

பலன்கள்:

  • ஒரு பகிரப்பட்ட எண்ம உள்கட்டமைப்பு பல்வேறு நகரங்களில் தரவு மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்து, முழுமையான ஆதரவையும், தீர்வுகளையும் வழங்குகிறது.
  • இது நகர்ப்புறத் தரவு ஒருங்கிணைப்பை வளர்க்கிறது, புதுமைக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது, திட்டமிடல் மற்றும் நகர்ப்புறச் சவால்களைத் தீர்த்து வைக்கிறது.
  • மக்கள், செயல்முறை மற்றும் தளத்தின் தூண்கள் முழுவதும் தரப்படுத்தல், விவரக் குறிப்புகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறது.
  • பேரளவுத் தரவுகள் போன்ற சவால்களை எதிர்கொள்ள நகர்ப்புறத் தரவுகளின் பாதுகாப்பான, நிர்வகிக்கப்பட்ட பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.
  • நகர்ப்புற நிர்வாகத்தில் குடிமக்களின் பங்கெடுத்தல் மற்றும் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது.

கூடுதல் தகவல்கள்:

  • தேசிய நகர்ப்புற எண்மத் திட்டமானது MoHUA அமைச்சகத்தால் 2019 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட தேசிய நகர்ப்புறப் புத்தாக்க அடுக்கின் (NUIS) தொழில்நுட்பக் கொள்கைகளை உருவாக்குகிறது.
  • இது நகர்ப்புற உள்கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றை நவீன மயமாக்குவதற்கும், எண்ம மயமாக்குவதற்கும் பரந்த அரசாங்க முயற்சிகளின் ஒரு பகுதி ஆகும்.

இந்திய நகர்ப்புறத் தரவுப் பரிமாற்றம் (IUDX)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2020.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூரு.

நோக்கங்கள்:

  • நகர்ப்புறம் தொடர்பான தரவுத் தொகுப்புகளைப் பகிர்வதற்கும், கோருவதற்கும், அணுகுவதற்கும், தரவு வழங்குநர்கள் மற்றும் பயனர்களுக்கு, ULB அமைப்புகள் உட்பட, தடையற்ற இடைமுகத்தை வழங்குதல்.
  • தளங்களில் பொதுச் சேவை, பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தரவுப் பரிமாற்றத்தை எளிதாக்குதல்.
  • நகர்ப்புறத் தேவைகளுக்கு விரைவான கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த திட்டமிடலைச் செயல்படுத்துவதன் மூலம், நகரங்களுக்குள்ளும் மற்றும் முழுவதும் உள்ள பேரளவுத் தரவுகளின் சிக்கலைத் தீர்த்தல்.

பயனாளிகள்:

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs).
  • நகர்ப்புறத் தரவுப் பகிர்வு மற்றும் பகுப்பாய்வில் ஈடுபட்டுள்ள அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்.
  • குடிமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட நகர்ப்புறச் சேவையை வழங்குகிறது.

தகுதி அளவுகோல்கள்:

  • அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் துறை உட்பட, நகர்ப்புறத் தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரவு வழங்குநர்கள் மற்றும் பயனர்கள்.

பலன்கள்:

  • தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் போது பாதுகாப்பான, கட்டுப்படுத்தப்பட்ட தரவுப் பகிர்வை எளிதாக்குகிறது.
  • நகர்ப்புறச் சவால்களுக்கு தரவு சார்ந்தத் தீர்வுகளை உருவாக்குவதை ஆதரிக்கிறது.
  • முக்கியமான தரவுத் தொகுப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்துகிறது, சிறந்த நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தைச் செயல்படுத்துகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • IUDX என்பது ஒரு பொதுப் பயன்பாடுத் தளமாகும், இது நகரங்களில் தரவைத் திறம்பட அளவிட மற்றும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
  • IUDX அமைப்பில் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ​​நகர்ப்புற இந்தியா முழுவதும் தடையற்ற தரவுப் பகிர்வை ஊக்குவிக்கிறது.

திறன் குறியீட்டு இயங்குதளம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2020.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA).

நோக்கங்கள்:

  • நகர்ப்புற நிர்வாகப் பயன்பாடுகளுக்கான பொதுப் பயன்பாட்டுக் குறியீட்டின் களஞ்சியத்தில் பங்களிக்கச் சுற்றுச்சூழல் பங்குதாரர்களைச் செயல்படுத்துதல்.
  • நகர்ப்புறச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ULB அமைப்புகளால் எண்மத் தீர்வுகளை மேம்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல்.
  • உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப இருக்கும் பொதுப் பயன்பாட்டுக் குறியீடுகளைத் தனிப் பயனாக்குவதை ஊக்குவித்தல் மற்றும் புதிதாகப் புதிய தீர்வுகளை உருவாக்குவதைத் தவிர்த்தல்.

பயனாளிகள்:

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs).
  • மேம்பாட்டாளர்கள், தொழில்நுட்பப் பங்குதாரர்கள் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப தளங்கள் உட்பட நகர்ப்புற நிர்வாகத் தீர்வுகளில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் பொருந்தும்.

பலன்கள்:

  • தனிப் பயனாக்கக்கூடிய இலவச, பொதுப் பயன்பாட்டுக் குறியீட்டை வழங்குவதன் மூலம் ULB அமைப்புகளுக்கான செலவுகளைக் குறைக்கிறது.
  • நகர்ப்புறச் சவால்களை எதிர்கொள்ள எண்மப் பயன்பாடுகளின் வரிசைப்படுத்தலை விரைவுபடுத்துகிறது.
  • நகரங்கள் மற்றும் பங்குதாரர்களுடைய முழு ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவிக்கிறது.

கூடுதல் தகவல்கள்:

  • திறன் குறியீடானது, புதிய நகர்ப்புற நிர்வாகப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான சுமையைக் குறைக்க வடிவமைக்கப் பட்டுள்ளது.

புவிசார் மேலாண்மை தகவல் அமைப்பு (GMIS)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2020.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA).

நோக்கங்கள்:

  • நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான இடஞ்சார்ந்த-செயல்படுத்தப்பட்டத் தகவல்களுக்கு ஒரே இடத்தில் அணுகலை வழங்குதல்.
  • பயனுள்ள நகர்ப்புற நிர்வாகத்திற்காக பல ஆதாரங்களில் இருந்து தரவை ஒருங்கிணைத்தல்.

பயனாளிகள்:

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs).
  • நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள் மற்றும் முடிவெடுப்பவர்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • முதன்மையாக ULB அமைப்புகள் மற்றும் நகர்ப்புற நிர்வாக முகவர்களால் பயன்படுத்தப் படுகிறது.

பலன்கள்:

  • நகர்ப்புற தரவு ஒருங்கிணைப்புக்கான இணைய அடிப்படையிலான, இடஞ்சார்ந்த-இயக்கப்பட்ட கருவி.
  • நகர்ப்புற திட்டமிடுபவர்களுக்கும், முடிவெடுப்பவர்களுக்கும் நகர்ப்புறத் தரவை மிகவும் திறம்பட அணுகவும், பகுப்பாய்வு செய்யவும் உதவுகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • GMIS ஆனது, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சிறந்த நகரங்களுக்கான இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது அனைத்து சிறந்த நகரங்களுக்கான திட்டம் தொடர்பான தகவல் மற்றும் புதுப்பிப்புகளுக்கான ஒரே தளமாக செயல்படுகிறது.

சிறந்த நகரங்களுக்கான திட்டப் புதுப்பிப்புகள்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2015.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA).

நோக்கங்கள்:

  • நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரங்களை சிறந்த நகரங்களாக மாற்றுதல்.
  • நகர்ப்புற உள்கட்டமைப்பு, நிர்வாகம் மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றை மேம்படுத்தும் திட்டங்களில் கவனம் செலுத்துதல்.

பயனாளிகள்:

  • சிறந்த நகரங்களுக்கான திட்டத்தின் கீழ் உள்ள நகரங்கள்.
  • மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளால் பயனடையும் குடிமக்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • சிறந்த நகரங்களுக்கான தகுதி அளவுகோலின் அடிப்படையில் இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப் பட்ட நகரங்கள்.

பலன்கள்:

  • நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களில் (₹ 2,05,018 கோடி) குறிப்பிடத்தக்க முதலீடுகள்.
  • நகர்ப்புற வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் 2,255 க்கும் மேற்பட்ட திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன.
  • 31 லட்சத்துக்கும் அதிகமான குடிமக்களை உள்ளடக்கிய குடிமக்கள் கருத்து ஆய்வுகள் மூலம் ஈடுபாடு அதிகரித்தது.
  • ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை (ICCCs) COVID-19 கட்டுப்பாட்டு கட்டளை மையமாக மாற்றுவதன் மூலம் COVID-19 சவால்களை எதிர்கொண்டது.

கூடுதல் தகவல்கள்:

  • நகர்ப்புற இயக்கம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா மாற்றத்திற்காக வேண்டி மிதிவண்டி சாவல் மற்றும் மக்கள் சவாலுக்கான வீதிகள் போன்ற பல்வேறு தேசிய சவால்கள் சிறந்த நகரங்களுக்கான திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டுள்ளன.

               -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்