TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 9) - பாகம் 29

January 31 , 2025 2 days 113 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் (SDG 9) - பாகம் 29

(For English version to this please click here)

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் முக்கிய முயற்சிகள் (தொடர்ச்சி)

4. தேசிய மின் ஆளுமைத் திட்டம் (NeGP)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2006.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY).

நோக்கங்கள்:

  • இந்தியா முழுவதும் மின்-ஆளுமையை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்.
  • தகவல் தொழில்நுட்ப இயக்கப்பட்ட அமைப்புகள் மூலம் சேவை வழங்கலை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • குடிமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் வணிகங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • அரசாங்கச் சேவைகளை அணுகும் அனைத்துக் குடிமக்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.

பலன்கள்:

  • அரசாங்கச் சேவைகளை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வு மேம்படுத்தப்படுகிறது.
  • அரசாங்கச் சேவைகள் மற்றும் தகவல்களுக்கான இணையதள அணுகலை உறுதி செய்கிறது.
  • ஊழல் குறைப்பு மற்றும் பொதுச் சேவை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • மின்-மாவட்டம், மாநிலத் தரவு மையங்கள் மற்றும் மின்-அலுவலகம் போன்ற பல துணைக் கூறுகளை இந்தத் திட்டம் உள்ளடக்கி உள்ளது.

5. ஆரோக்ய சேது செயலி

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2020.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY).

நோக்கங்கள்:

  • கோவிட்-19 நோய்த் தொற்றுகளைக் கண்டறிந்து, வைரஸ் பரவுவதைத் தடுத்தல்.
  • குடிமக்கள் தங்கள் ஆபத்து நிலைகளை மதிப்பிடுவதற்கும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கும் உதவுதல்.

பயனாளிகள்:

  • குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பாதிக்கப்பட்டப் பொது மக்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • அனைத்துத் திறன்பேசி பயனர்களுக்கும் இது பொருந்தும்.

பலன்கள்:

  • இது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகாமையில் இருப்பதைக் கண்டறிய உதவுகிறது மற்றும் சாத்தியமான பாதிப்பு அடையக் கூடிய பயனர்களுக்கு எச்சரிக்கை தெரிவிக்க உதவுகிறது.
  • சுய மதிப்பீட்டுக் கருவிகள் மற்றும் குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது புதுப்பிப்புகளை வழங்குகிறது.
  • தொடர்புத் தேடலை எளிதாக்குகிறது மற்றும் பொதுச் சுகாதாரப் பதில்களை மேம்படுத்துகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • அறிமுகப்படுத்தப்பட்ட 40 நாட்களுக்குள் 100 மில்லியனுக்கும் அதிகமானப் பதிவுகள் செய்யப் பட்டுள்ளது.
  • தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அதன் செயல்திறனுக்காக உலக சுகாதார அமைப்பால் பாராட்டப் பட்டது.

6. e-NAM (தேசிய வேளாண் சந்தை)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2016.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • விவசாயப் பொருட்களுக்கான ஒருங்கிணைந்தத் தேசியச் சந்தையை உருவாக்குதல்.
  • ஆன்லைன் தளம் மூலம் இந்தியா முழுவதும் விவசாயப் பொருட்களை வாங்குபவர்களுடன் விவசாயிகளை இணைக்க உதவுதல்.

பயனாளிகள்:

  • விவசாயிகள், வியாபாரிகள், நுகர்வோர்.

தகுதி அளவுகோல்கள்:

  • விவசாயிகள் மற்றும் வணிகர்கள் விவசாயச் சந்தைப்படுத்துதல் உற்பத்திக் குழுக்களில் (APMC - Agricultural Produce Market Committee) பதிவு செய்து உள்ளவர்கள்.

பலன்கள்:

  • விவசாயப் பொருட்களுக்கு வெளிப்படையான விலை மற்றும் நியாயமான வர்த்தகம்.
  • விவசாயிகளுக்கு அதிகச் சந்தை வாய்ப்பு மற்றும் சிறந்த விலை கண்டுபிடிப்பு.
  • இடைத்தரகர்களின் பங்கைக் குறைத்தல்.

கூடுதல் தகவல்கள்:

  • இந்தத் தளத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 1,000 மண்டிகளை இணைக்கிறது.
  • எண்மக் கட்டணம் மற்றும் தர உத்தரவாத வழிமுறைகளை வழங்குகிறது.

7. இ-சஞ்சீவனி

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2020

அமைச்சகம் / தலைமை முகமை:

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு தொலைதூர மருத்துவச் சேவைகளை வழங்குதல்.
  • மெய்நிகர் ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் சுகாதார இடைவெளியைக் குறைத்தல்.

பயனாளிகள்:

  • கிராமப்புற மற்றும் பின்தங்கிய மக்கள், சுகாதார வழங்குநர்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • மருத்துவ ஆலோசனை தேவைப்படும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள நோயாளிகள்.

பலன்கள்:

  • 2020 ஆம் ஆண்டிற்குள் 9 லட்சத்திற்கும் அதிகமான ஆன்லைன் ஆலோசனைகள் பெறப்பட்டது.
  • நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே சுகாதாரப் பிரிவை இணைக்கிறது.
  • பின்தங்கிய பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகலை மேம்படுத்துகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • தொலைதூர மருத்துவ விரிவாக்கம் மற்றும் சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளின் இது ஒரு பகுதியாகும்.

8. MyGov

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2014.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY).

நோக்கங்கள்:

  • நிர்வாகச் செயல்பாட்டில் குடிமக்களை ஈடுபடுத்துதல்.
  • அரசாங்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்வதற்கான தளத்தை வழங்குதல்.

பயனாளிகள்:

  • இந்தியக் குடிமக்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • இணைய அணுகல் பெற விரும்பும் எந்த இந்தியக் குடிமகனும் தகுதிடையவர்கள்.

பலன்கள்:

  • குடிமக்கள் கலந்துரையாடல்களில் பங்கேற்கவும், ஆலோசனைகளை வழங்கவும், கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்கவும் அனுமதிக்கிறது.
  • அரசாங்கக் கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் பற்றிய குடிமக்களின் கருத்துக்களை எளிதாக்குகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • கோவிட்-19 நெருக்கடியின் போது தங்குமிடங்களை வரைபடமாக்கம் செய்வதிலும் உணவு விநியோகம் செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

9. DIKSHA செயலி

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2017.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • கல்வி அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எண்மக் கல்வி வளங்களை வழங்குதல்.
  • தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்துதல்.

பயனாளிகள்:

  • மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

பலன்கள்:

  • பாடப் புத்தகங்கள், கற்றல் வளங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சித் தொகுதிகளுக்கான அணுகலை வழங்குகிறது.
  • குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது தொலைநிலைக் கற்றலை எளிதாக்குகிறது.
  • மனநலம் மற்றும் உள்ளடக்கிய கல்வியை ஆதரிக்கிறது.

கூடுதல் தகவல்கள்:

  • பல்வேறு கல்வி வாரியங்களுக்கான படிப்புகளை வழங்கும் செயலி மற்றும் இணையதளமாகச் செயல்படுகிறது.

பிரதம மந்திரி கதி சக்தி தேசிய ஆளுகைத் திட்டம் (NMP)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • அக்டோபர் 13, 2021.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT).

நோக்கங்கள்:

  • பல்வேறு அமைச்சகங்கள் முழுவதும் ஒருங்கிணைந்தத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்தல்.
  • மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்குத் தடையற்ற இணைப்பை வழங்குதல்.
  • கடைசி மைல் வரை இணைப்பை மேம்படுத்துதல், பயண நேரத்தைக் குறைத்தல், இதனால் பொருளாதாரத் திறன் மேம்படுகிறது.
  • சிறந்த தரவுப் பகிர்வு மற்றும் மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு மூலம் உள்கட்டமைப்புத் திட்டத்தை நெறிப்படுத்துதல்.
  • உள்கட்டமைப்புப் பயன்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் திறமையின்மையைக் குறைத்தல்.

பயனாளிகள்:

  • பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் (44 மத்திய அமைச்சகங்கள் மற்றும் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஈடுபட்டுள்ளன).
  • பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கான உள்கட்டமைப்பை நம்பியிருக்கும் தொழில்துறைகள் மற்றும் வணிகங்கள்.
  • மேம்பட்ட இணைப்பு, வேகமான போக்குவரத்து மற்றும் சிறந்தச் சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றால் பயனடையும் குடிமக்கள்.
  • உள்கட்டமைப்பு வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் அரசாங்கங்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சகங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • இந்த முன்னெடுப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்ற நிலையில், அரசு மற்றும் தனியார் பங்குதாரர்களை இலக்காகக் கொண்டது.
  • குடிமக்களுக்கு குறிப்பிட்டத் தகுதி எதுவும் தேவையில்லை, ஆனால் அவர்கள் மேம்பட்ட இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மூலம் பயனடைகிறார்கள்.

பலன்கள்:

  • மேம்படுத்தப்பட்ட இணைப்பு: இந்த முன்னெடுப்பானது சாலைகள், இரயில்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உட்பட, சுமூகமான மாதிரிப் போக்குவரத்தை உறுதி செய்கிறது.
  • உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துதல்: பல பங்குதாரர்களை ஈடுபடுத்துவதன் மூலமும், மையப்படுத்தப்பட்ட தரவு தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், திட்டக் காலக்கெடு குறைக்கப் படுகிறது.
  • செலவுகளை மேம்படுத்தல்: இந்தத் திட்டம் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான மிகவும் திறமையான மற்றும் செலவு குறைந்த வழிகள் மற்றும் முறைகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவுகிறது.
  • மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு: அமைச்சகங்களும், துறைகளும் தங்கள் முயற்சிகளை ஒத்திசைப்பதன் மூலம் தாமதங்கள் குறைவது மட்டுமில்லாமல் இணைந்து செயல்பட முடியும்.
  • சிறந்தத் தரவு கிடைக்கும் தன்மை: நிகழ் நேரத் தரவு மற்றும் GIS அடிப்படையிலான இடஞ்சார்ந்த திட்டமிடலானது கருவிகள் துல்லியமான முடிவெடுப்பதைச் செயல்படுத்துகின்றன.
  • மாவட்ட அளவிலான திட்டமிடல்: மாவட்ட ஆளுகைத் திட்டத் தளங்களை உருவாக்குவது, உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் கண்டறிந்து மிகவும் திறம்படத் திட்டமிட உள்ளூர் அதிகாரிகளை அனுமதிக்கிறது.
  • அதிகாரத்துவ தாமதங்களைக் குறைத்தல்: அனுமதி வழங்கீடுகள் (RoW) போன்ற செயல்முறைகளை எளிமையாக்குவதன் மூலமும், கண்காணிப்புக்கான எண்மத் தளத்தை வழங்குவதன் மூலமும், திட்டச் செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்கள் குறைக்கப் படுகின்றன.

கூடுதல் தகவல்கள்:

  • பிரதம மந்திரி கதி சக்தி ஆறு தூண்களை அடிப்படையாகக் கொண்டது:

விரிவான தன்மை

  • இது பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்து முயற்சிகளையும் ஒரு மையப்படுத்தப்பட்ட தளத்தில் உள்ளடக்கும்.
  • ஒவ்வொரு துறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய செயல்பாடுகளின் தெரிவுநிலையைக் கொண்டிருக்கும், விரிவான முறையில் திட்டங்களைச் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும் முக்கியமான தரவுகளையும் வழங்குகிறது.

தேர்வுமுறை

  • மாஸ்டர் பிளான் என்ற தேசிய ஆளுகைத் திட்டம், முக்கியமான இடைவெளிகளைக் கண்டறிந்து அதற்கேற்பத் திட்டங்களைத் திட்டமிடுவதில் அமைச்சகங்களுக்கு உதவுகிறது.
  • இது நேரம் மற்றும் செலவுத் திறனைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக்கு மிகவும் உகந்த வழிகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவுகிறது.

ஒத்திசைவு

  • பிரதம மந்திரி கதி சக்தி தனிப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் முழுவதும் செயல்பாடுகளை ஒத்திசைக்க உதவும் என்ற நிலையில் அவை பெரும்பாலும் தனிச்சையாக செயல்படுகிறது.
  • நிர்வாகத்தின் பல்வேறு அடுக்குகளில் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதன் மூலம், இது தாமதங்களைக் குறைத்து, திட்டச் செயலாக்கத்தை மேம்படுத்துகிறது.

பகுப்பாய்வு

  • இந்தத் திட்டம் GIS அடிப்படையிலான இடஞ்சார்ந்த திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக் கருவிகள் மூலம் தரவுகளுக்கு மையப்படுத்தப்பட்ட அணுகலை வழங்குகிறது.
  • 200க்கும் மேற்பட்ட தரவு அடுக்குகள் செயல்படுத்தும் முகவர்களுக்கான சிறந்த தெரிவுநிலையைச் செயல்படுத்தும் என்பதோடு அது மேலும் தகவலறிந்து முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது.

மாறும்தன்மை

  • அமைச்சகங்கள் மற்றும் துறைகள் GIS இயங்குதளத்தின் மூலம் குறுக்குத் துறைத் திட்டங்களின் முன்னேற்றத்தைக் காட்சிப்படுத்தவும், மதிப்பாய்வு செய்யவும் மற்றும் கண்காணிக்கவும் முடிகிறது.
  • செயற்கைக்கோள் படங்கள் அவ்வப்போது நிலத்தடி முன்னேற்றப் புதுப்பிப்புகளை வழங்குகிறது, மேலும் திட்ட முன்னேற்றம் இத்தளத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப் படுகிறது.
  • இந்த ஆளுகைத் திட்டத்தைத் தொடர்ந்து மேம்படுத்தவும், புதுப்பிக்கவும் தேவையான தலையீடுகளை அடையாளம் காண மாறும் தன்மை அணுகுமுறை உதவுகிறது .
  • பாரத் மாலா, சாகர் மாலா, உடான் மற்றும் பிற திட்டங்கள் போன்ற பல்வேறு நடப்பு மற்றும் திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை PM கதி சக்தி தேசிய ஆளுகைத் திட்டம் ஒருங்கிணைக்கிறது.
  • இந்த முன்னெடுப்பு 1,614 தரவு அடுக்குகளை ஒருங்கிணைத்துள்ளது.

  • இது பல துறைகளில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது, கீழ்க்கண்டவை உட்பட:
  • சாலைப் போக்குவரத்து
  • ரயில்வே
  • பெட்ரோலியம்
  • சுகாதாரம்
  • கல்வி
  • பேரிடர் மேலாண்மை.

  • கதி சக்தி சஞ்சார்’ தளம் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • மையப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கீடுகளை (RoW) எளிதாக்குவதன் மூலம் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை விரைவுபடுத்துவதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தளமானது தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் பிற சேவைகளுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.

தேசியத் தளவாடக் கொள்கை (NLP) 2022: முன்னேற்றம் மற்றும் முக்கிய முன்னெடுப்புகள்

  • தொடங்கப்பட்ட தினம்:
  • 17 செப்டம்பர் 2022.
  • முக்கிய நோக்கம்:
  • ஒருங்கிணைந்த, திறமையான மற்றும் செலவு குறைந்த தளவாட வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தல்.

  • முக்கிய இலக்குகள்:
  • தளவாடச் செலவுகளைக் குறைத்தல்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் முதல் 25 நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவின் தளவாடச் செயல்திறன் குறியீட்டு (LPI) தரவரிசையை மேம்படுத்துதல்.
  • சிறந்தத் தளவாட மேலாண்மைக்காக தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவித்தல்.

விரிவான தளவாடச் செயல் திட்டம் (CLAP)

  • நடைமுறைப்படுத்தல் கட்டமைப்பு: CLAP ஆனது கொள்கையை செயல்படுத்துகிறது.

கவனம் செலுத்தும் பகுதிகள்:

  • எண்மத் தளவாட அமைப்புகள்: தளவாடத்திற்கான ஒருங்கிணைந்த எண்மத் தீர்வுகளை உருவாக்குதல்.
  • வளங்களை தரநிலைப்படுத்தல்: செயல்திறனுக்கான தளவாடங்கள் தொடர்பான வளங்களின் தரப்படுத்தலை உறுதி செய்தல்.
  • மனித வள மேம்பாடு: தளவாடப் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பது.
  • மாநில ஈடுபாடு: பிராந்திய அளவில் தளவாடக் கொள்கைகளைச் சீரமைக்க மாநில அரசாங்கங்களுடன் ஒத்துழைத்தல்.
  • EXIM தளவாடங்கள்: ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) வர்த்தகத்திற்கான தளவாடங்களை வலுப்படுத்துதல்.

பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு

  • திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் (CBC) ஒத்துழைப்பு:
  • பயிற்சித் தொகுதிகள் மத்திய மற்றும் நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன.
  • முறைகள்: தளவாடங்களில் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சிப் பட்டறைகள் மற்றும் எண்மத் தளங்கள்.

மாநிலத் தளவாடத் திட்டங்கள் (SLPs)

  • மாநில பங்கேற்பு:
  • 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசியத் தளவாடக் கொள்கையுடன் (NLP) இணைந்துள்ளன.
  • நடவடிக்கை: இந்த மாநிலங்கள் தங்கள் பொதுக் கொள்கைகளில் தளவாடங்கள் மீதான கவனத்தை அதிகரிக்க தங்கள் சொந்த மாநிலத் தளவாடக் கொள்கைகளை அறிவித்துள்ளன.

ஒருங்கிணைந்தத் தளவாட ஒருங்கிணைந்தத் தளம் (ULIP)

  • தளத்தின் ஒருங்கிணைப்பு: ULIP ஆனது 10 அமைச்சகங்களில் 33 தளவாடங்கள் தொடர்பான அமைப்புகளை ஒருங்கிணைத்து, தளவாடங்களில் புதுமைகளை ஊக்குவிக்கிறது.

தனியார் துறை பங்கேற்பு:

  • 930க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் ULIP அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • அம்சங்கள்: ULIP ஆனது GST தரவை ஒருங்கிணைக்கிறது.

தளவாடத் தரவு வங்கி (LDB)

  • நோக்கம்:
  • இந்தியாவின் கொள்கலன் அமைப்பினால் ஏற்றுமதி செய்யப்பட்ட EXIM சரக்குகளில் 100% அளவை LDB கண்காணிக்கிறது.

  • தொழில்நுட்பம்:
  • IoT, பெருந்தரவுகள் மற்றும் மேகக் கணிமம் அடிப்படையிலான தீர்வுகளுடன் இணைந்து RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • EXIM கொள்கலன் இயக்கங்களின் நிகழ்நேரக் கண்காணிப்பை வழங்குகிறது.
  • அம்சங்கள்:
  • கொள்கலன் எண்களை மட்டுமே பயன்படுத்தி ஒற்றைச் சாளரத் தளவாடக் காட்சிப்படுத்தல் தீர்வினை வழங்குகிறது.
  • துறைமுகங்கள், உள்நாட்டுக் கொள்கலன் வைப்பிடங்கள் (ICDகள்), கொள்கலன் சரக்கு நிலையங்கள் (CFSகள்), பார்க்கிங் பிளாசாக்கள், டோல் பிளாசாக்கள் மற்றும் இரயில்வே துறையில் உள்ள கொள்கலன்களைக் கண்காணிக்கிறது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்