TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 01

November 11 , 2024 65 days 718 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 01

(For English version to this please click here)

ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகள்

  • ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் (SDGs) 2015 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதத்தில், மொத்தமாக 193 அனைத்து  உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
  • இந்த இலக்குகள் 2030 ஆம் ஆண்டிற்குள் அமைதி, செழிப்பு மற்றும் பூமியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.
  • வறுமை, பசி, சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், பாலினச் சமத்துவம், சுத்தமான நீர் மற்றும் சமூக நீதி போன்ற பல்வேறு உலகளாவியச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இலக்குகளுடன் மொத்தமாக 17 இலக்குகள் உள்ளன.

  • SDGகளின் முக்கிய நோக்கம் மிகவும் நிலையான, உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் சமமான உலகத்தை உருவாக்குவதாகும்.

நோக்கம்:

  • வறுமையை அனைத்து இடங்களிலும், அதன் அனைத்து வடிவங்களிலும் முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.
  • பட்டினியின்மை - அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்தல்.
  • அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு.
  • அனைவருக்கும் தரமான கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிக்கிறது.
  • பாலினச் சமத்துவம் மற்றும் அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளித்தல்.
  • அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம்.
  • அனைவருக்கும் மலிவான மற்றும் சுகாதாரமான ஆற்றல்.
  • கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி.
  • தொழிற்சாலை, புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு.
  • நாடுகளுக்குள்ளும் நாடுகளுக்கிடையிலும் குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்.
  • வளம் குன்றா நகரங்கள் மற்றும் சமூகங்கள்.
  • பொறுப்பான முறையில் நுகர்வு மற்றும் உற்பத்தி.
  • காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான காலநிலை நடவடிக்கை.
  • நீரினுள் வாழ்பவை - கடல் வளங்களைப் பாதுகாத்தல்.
  • நிலத்தில் வாழ்பவை - சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு.
  • அமைதி, நீதி மற்றும் சிறந்த நிறுவனங்கள்.
  • இலக்குகளுக்கான கூட்டாண்மை - உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

  • நிலையான மேம்பாட்டு இலக்குகள் யாரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதோடு எதிர்காலச் சந்ததியினருக்கு பூமியினைப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது.
  • அவை அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் தனிநபர்களின் செயல்களுக்கு வழி காட்டுகின்றன.

இந்தியா மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள்

  • இந்தியா, மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக, ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
  • இந்தியாவின் பரந்த மற்றும் மாறுபட்ட சமூக-பொருளாதார நிலப்பரப்பு, இந்த இலக்குகளை அடைவதில் தனித்துவமானச் சவால்களை எதிர்கொள்கிறது.
  • நாட்டின் பெரிய மக்கள்தொகை, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பரவலான வறுமை ஆகியவை நிலையான மேம்பாட்டு நன்மைகள் அனைத்து குடிமக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதை கடினமாக்குகிறது.
  • எவ்வாறாயினும், இந்த உலகளாவிய நோக்கங்களை முன்னேற்றுவதற்கு இந்தியாவும், அதன் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் இளைஞர்களின் மக்கள் தொகை ஆகியனவும் குறிப்பிடத் தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.
  • SDG களுக்கான இந்தியாவின் அணுகுமுறை அதன் குறிப்பிட்டத் தேவைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதோடு கிராமப்புற-நகர்ப்புறப் பிளவுகள், சுகாதார அணுகல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார உள்ளடக்கம் போன்ற பிரச்சினைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

  • நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும், 2030 ஆம் ஆண்டிற்குள் SDGகளை அடைவதற்கு அனைத்துத் துறைகளிலும் தொடர்ச்சியான கண்டுபிடிப்பு மற்றும் முயற்சி தேவைப்படுகிறது.

SDG இலக்கு 01 – வறுமையின்மை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS)

ஆண்டு:

  • 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்

நோக்கம்:

  • ஒரு நிதியாண்டில், திறமையற்ற உடலுழைப்புத் தொழிலில் ஈடுபடும் வயது வந்த உறுப்பினர்கள் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும், குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு உத்தரவாதமான கூலி வேலைவாய்ப்பை வழங்குதல்.
  • கிராமப்புறங்களில் நீடித்தச் சொத்துக்களை உருவாக்குதல்.

  • கூலி வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் கிராமப்புறக் குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

பயனாளி:

  • அனைத்துக் கிராமப்புறக் குடும்பங்களும், குறிப்பாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், திறமையற்ற உடலுழைப்புத் தொழிலை செய்யத் தயாராக உள்ளவர்கள்.
  • இதில் பயனாளிகளில் குறைந்தது மூன்றில் ஒரு பங்காவது பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில் இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,.

தகுதி:

  • கிராமப்புறக் குடும்பங்களில் உள்ள (நகர்ப்புற மாவட்டங்களைத் தவிர) வயது வந்தோர்கள், திறமையற்ற ரீதியிலான உடல் உழைப்பில் ஈடுபடத் தயாராக உள்ள நபர்கள்.
  • பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பகுதியில் உள்ள நபர்கள் (எ.கா. வறட்சி).

பலன்கள்:

  • ஒரு நிதியாண்டில் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அளிக்கிறது.
  • விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலையைக் கோருவதற்கும், பெறுவதற்கும் உரிமையை அளிக்கிறது.
  • சரியான நேரத்தில் வேலை வழங்கப்படாவிட்டால் (15 நாட்களுக்குள்) வேலையின்மை உதவித் தொகைக்கான உரிமையை வழங்குகிறது.
  • மருத்துவ உதவி, குடிநீர், நிழல் அமைப்பு போன்ற அத்தியாவசியப் பணியிட வசதிகளுக்கான உரிமையை தருகிறது.
  • மாநிலங்களுக்கு மாநிலங்கள் என்று சில குறிப்பிட்ட மாறுபாடுகளுடன் கிராமப்புறங்களில் பணவீக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-AL) அடிப்படையிலான ஊதிய விகிதங்கள்.
  • சமீபத்திய ஊதிய விகித உயர்வு: 2024-2025 ஆம் ஆண்டில், திறமையற்ற உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கான ஊதிய விகிதங்கள் மாநிலத்தைப் பொறுத்து 3-10% வரை அதிகரிக்கப் பட்டுள்ளன.

  • இயற்கைச் சீற்றங்கள் அல்லது பாதிக்கப்படக் கூடிய குறிப்பிட்ட குடும்பங்களுக்கு (எ.கா. பட்டியலிடப் பட்டப் பழங்குடியினர்) கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்குகிறது.
  • ஊதிய மட்டத்தில் ஊதியம் மற்றும் பொருள் விகிதம் 60:40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் அனைத்துத் திட்டங்களுக்கும் கிராம சபைகள் மூலம் சமூகத் தணிக்கை செய்யப் படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டச் சொத்துக்களைப் புவியிடக் குறியீடாகச் செய்தல்.

கூடுதல் தகவல்:

  • சொத்துக்களின் புவியிடக் குறியீடு: சொத்துகளின் உருவாக்கத்தைக் கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) மற்றும் தேசியத் தொலை உணர்தல் மையத்துடன் (NRSC) இணைந்து புவி MGNREGA என்ற வசதியினைப் பயன்படுத்துதல்.
  • சமூக தணிக்கை: வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுக்காக கிராம சபையின் வழக்கமான தணிக்கைகள்.
  • ஜன்மன்ரேகா: MGNREGA சொத்துக்களின் செயல்திறன் மற்றும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான குடிமக்களின் கருத்துக் கருவி.

  • திட்டம் 'UNNATI': MGNREGA பயனாளிகள் பகுதி நேர வேலைவாய்ப்பிலிருந்து முழு நேர வேலை வாய்ப்பிற்கு மாற உதவும் ஒரு திறன் முயற்சி.

  • ஒப்பந்ததாரர் இல்லாத மாதிரி அமைப்பு: MGNREGS திட்டத்தின் கீழ் எந்த ஒப்பந்ததாரர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்; எனவே அனைத்து வேலைகளும் உள்ளூர்ச் சமூகத்தால் நேரடியாக செயல்படுத்தப்படுகின்றன.

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரப் பணி (DAY-NRLM)

ஆண்டு:

  • 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது (2016 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப் பட்டது)

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம், இந்திய அரசு.

நோக்கம்:

  • வறுமையைக் குறைப்பதன் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு ஆதாயமான சுயதொழில் மற்றும் திறமையான கூலி வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் நிலையான மற்றும் பன்முகப் படுத்தப் பட்ட வாழ்வாதார விருப்பங்களுக்கு வழி வகுத்தல்.

  • இத்திட்டம் முதன்மையாகப் பெண்களைக் குறி வைத்து அவர்களுக்கான சுய உதவிக் குழுக்களை (SHGs) உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்பதோடு அவை நிதிச் சேவைகளை வழங்குவதற்கும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வேண்டிய வகையிலான நிறுவனங்களாகச் செயல்படுகின்றன.

  • இந்தத் திட்டம் முறையான கடன், வாழ்வாதார பல்வகைப்படுத்தல் மற்றும் பொதுச் சேவைகள் மற்றும் உரிமைகளுக்கான அணுகலை ஊக்குவிக்கிறது.

பயனாளி:

  • கிராமப்புற ஏழைக் குடும்பங்கள், குறிப்பாக சுய உதவிக் குழுக்கள் (SHGs) மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகின்றன.

  • இந்தக் குழுக்களின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பெண்களின் தீவிர ஈடுபாட்டுடன், அனைத்துக் கிராமப்புற ஏழை குடும்பங்களையும், சுய உதவிக் குழுக்களாக அணிதிரட்டுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுதி:

  • கிராமப்புறக் குடும்பங்கள், குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள்.
  • ஒவ்வொரு சுய உதவிக் குழுவும் பெண்களைக் கொண்டதாக உள்ள வகையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்.
  • பல பாதிப்புகளை எதிர்கொள்ளும் விளிம்புநிலைச் சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு சிறப்பான முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.

பலன்கள்:

  • முறையான கடன் மற்றும் வங்கி இணைப்புகள் உட்பட நிதிச் சேவைகளுக்கான அணுகல்.
  • வாழ்வாதாரத்தைப் பல்வகைப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான ஆதரவு.
  • கிரிஷி சாகிஸ் (சாகிஸ் - உதவியாளர்கள்), பசு சாகிஸ் மற்றும் பேங்க் சாகிஸ் போன்ற சமூக வள நபர்கள் (CRPs) மூலம் பெண்களுக்குப் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்.

  • உறுப்பினர்களின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வங்கி நிதியைப் பெறுவதற்கும் சுய உதவிக் குழுக்களுக்கு ₹10,000-15,000 சுழலும் நிதிகள் (RF) வழங்குதல்.
  • குழு மட்டத்தில் கூட்டு நடவடிக்கைகளுக்காக, சமூக முதலீட்டு நிதி மூலம் SHG கூட்டமைப்புகளுக்கு ஆரம்ப மூலதனத்தை அளித்தல்.

  • சுயதொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி.

கூடுதல் தகவல்:

முக்கிய அம்சங்கள்:

  • SHG உருவாக்கம்: வங்கி இணைப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும் வகையில் ஒவ்வொரு கிராமப்புற ஏழை குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் சுய உதவிக் குழுவில் (SHG) இருப்பார்.

நான்கு முக்கியக் கூறுகள்:

  • சமூக அணி திரட்டல் மற்றும் திறன் மேம்பாடு: கிராமப்புறச் சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களை உருவாக்குதல்.
  • நிதி உள்ளடக்கம்: நிதிச் சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்தல்.
  • வாழ்வாதார மேம்பாடு: நிலையான வாழ்வாதாரங்கள் மற்றும் சந்தை இணைப்புகளுக்கான ஆதரவு.
  • ஒருங்கிணைப்பு: முழுமையான வறுமைக் குறைப்புக்கான பல்வேறு அரசாங்கத் திட்டங்களுடன் ஒத்துழைத்தல்.
  • திறன் மேம்பாடு: கிராமப்புறச் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் (RSETIs) மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கானப் பயிற்சி அளித்தல்.
  • பண்ணை வாழ்வாதாரங்கள்: மகிளா கிசான் சசக்திகரன் பரியோஜனா (MKSP) மற்றும் பிற விவசாயத் தலையீடுகள் மூலம் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
  • சமூக வள நபர்கள் (CRPs): விவசாயம் (கிருஷி சாகிஸ்), கால்நடைகள் (பசு சாகிஸ்), வங்கி (வங்கி சாகிஸ்) போன்ற பல்வேறு சிறப்புப் பகுதிகளில் பெண்களுக்குப் பயிற்சி அளித்தல்.
  • சுழலும் நிதி (RF) & சமூக முதலீட்டு நிதி (CIF): SHGகளுக்கு வேண்டிய பணி மூலதனத்திற்கும் மற்றும் SHG கூட்டமைப்புகளுக்கு கூட்டு நடவடிக்கைகளுக்கும் என்று நிதி உதவி வழங்குதல்.

சமீபத்திய வளர்ச்சிகள் (FY 2023-24):

  • கடன் வழங்கல்கள்: 2023 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத நிலவரப்படி, 39 லட்சம் சுய உதவிக் குழுக்கள் ₹1.12 லட்சம் கோடி கடன்களைப் பெற்றுள்ளன.

மகிளா கிசான் அதிகாரமளித்தல்:

  • 31.03 லட்சம் பெண் விவசாயிகள் வேளாண்-சுற்றுச்சூழல் நடைமுறை ரீதியிலான தலையீடுகளின் கீழ் உள்ளனர்.
  • 21.84 லட்சம் குடும்பங்கள் ஊட்டச்சத்து மிக்க வேளாண் தோட்டங்களைக் கொண்டுள்ளன.
  • பண்ணை வாழ்வாதாரத் தலையீடுகளின் கீழ் 1,16,284 கிராமங்கள் உள்ளன.
  • 5.76 லட்சம் பெண் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக (FPOs) ஒழுங்கமைக்கப் பட்டுள்ளனர்.

பண்ணை வாழ்வாதாரத் தலையீடுகள்:

  • மஹிளா கிசான் சசக்திகரன் பரியோஜனா (MKSP): சமூக நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலமும், நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலமும் பெண் விவசாயிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட துணைக் கூறாகும்.

  • தீவிரத் தொகுதிகளில் பண்ணை வாழ்வாதாரங்கள்: இலக்குப் பகுதிகளில் நிலையான விவசாயம், கால்நடைகள் மற்றும் மரமற்ற வனப் பொருட்களை (NTFP) ஊக்குவித்தல்.
  • கரிம வேளாண்மை மற்றும் மதிப்புச் சங்கிலிகள்: கரிம வேளாண்மையை ஊக்குவித்தல், பண்ணை மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குதல் மற்றும் சந்தைகளுக்குச் சிறந்த அணுகலுக்கான சந்தை இணைப்புகளை வழங்குதல்.

செயல்படுத்தல்:

  • இந்தத் திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கங்கள் (SRLMs) மற்றும் மாவட்டப் பணி மேலாண்மை அலகுகளால் (DMMUs) மேற்பார்வையிடப்பட்டு, நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது.
  • மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் தொகுதித் திட்ட மேலாண்மை அலகுகளால் (BMMUs) உள்ளூர் அளவிலானச் செயல்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.
  • கட்ட விரிவாக்கம்: இந்தத் திட்டம் 2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்துக் கிராமப்புற ஏழைக் குடும்பங்களையும் அணி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்