TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 08

November 27 , 2024 49 days 392 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 08

(For English version to this please click here)

ஒருங்கிணைந்தத் தோட்டக்கலையின் வளர்ச்சிக்கான திட்டம் (MIDH)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2014.
  • இந்தத் திட்டமானது காய்கறிகள், பழங்கள், நறுமணத் தாவரங்கள், நறுமணப் பொருட்கள், மூங்கில், முந்திரி, தேங்காய் மற்றும் கோகோ போன்ற பயிர்கள் உட்பட, இந்தியாவில் தோட்டக் கலைத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • இந்திய அரசாங்கத்தின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகம் MIDH என்ற திட்டத்தின் தலைமை முகமை ஆகும்.

MIDH திட்டத்தின் நோக்கங்கள்:

  • MIDH திட்டத்தின் முக்கியக் குறிக்கோள்கள் தோட்டக்கலைத் துறையின் முழுமையான வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளன.

அதன் முக்கிய நோக்கங்களில் பின்வருவன அடங்கும்:

  • தோட்டக்கலை வளர்ச்சியை ஊக்குவித்தல்: தோட்டக்கலைத் துறையில் உற்பத்தி, தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.
  • விவசாயிகளின் ஒருங்கிணைப்பு: உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOக்கள்), உழவர் தன்னார்வக் குழுக்கள் (FIGs), மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPCs) ஆகியவற்றின் உருவாக்கத்தை ஊக்குவித்து, முழுமையான பொருளாதாரத்தை அடைய, உற்பத்தியை அதிகரிக்கவும், லாபத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • வருமானம் மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை அதிகரித்தல்: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் தேசிய ஊட்டச்சத்துப் பாதுகாப்பிற்குப் பங்களிப்பினை அளித்தல்.
  • உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்: தரமான நடவுப் பொருட்கள், சிறந்த மண் வளம் மற்றும்  பாசன நுட்பங்கள் மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.

  • திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்: மனித வளத்தை மேம்படுத்துதல், குறிப்பாக கிராமப்புற இளைஞர்களுக்கு, தோட்டக்கலை, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் குளிர் பதனச் சங்கிலி சார்ந்த தொழில்துறை போன்ற துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்குதல்.
  • தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுதல்: விவசாயத்தில் ஒட்டு மொத்த உற்பத்தித்திறன் மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்த, மேம்படுத்தப்பட்டத் தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவித்தல்.
  • பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு: கிருஷி விக்யான் கேந்திராக்கள் (KVKs) மற்றும் மாநில வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் போன்ற நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துதல்.

MIDH திட்டத்தின் கீழ் உள்ள துணைத் திட்டங்கள்:

  • தேசியத் தோட்டக்கலை திட்டம் (NHM):
  • தோட்டக்கலைத் துறையில், குறிப்பாக மலைப் பகுதி அல்லாத மாநிலங்களில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இது மாநிலத் தோட்டக்கலை திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

  • தேசியத் தோட்டக்கலை வாரியம் (NHB):
  • MIDH திட்டங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவில் செயல்படுத்துவதோடு, முதன்மையாக வணிகம் சார்ந்த தோட்டக்கலை வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

  • பனை எண்ணெய்ச் சாகுபடிக்கு ஆதரவு:
  • விவசாயிகள் நடவுப் பொருட்களை வாங்குவதற்கும், பழைய தோட்டங்களை மீண்டும் நடவு செய்வதற்கும், நீர் மேலாண்மை மற்றும் ஊடுபயிருக்கான உதவிகளுக்கும் நிதியுதவி பெறுவார்கள்.
  • உள்கட்டமைப்பு மற்றும் செயலாக்க ஆதரவு:
  • இந்த பணியானது பாமாயில் துறையில் செயலாக்க அலகுகளை உருவாக்குதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்களை உருவாக்குதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
  • சமையல் எண்ணெய்களில் தன்னிறைவு:
  • உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், இத்திட்டம் இந்தியாவை அதில் தன்னிறைவு அடையச் செய்வதையும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கான தோட்டக்கலைத் திட்டம் (HMNEH):
  • குறிப்பாக இந்தத் திட்டம் வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களில் தோட்டக்கலையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தென்னை மேம்பாட்டு வாரியம் (CDB):
  • இந்தத் திட்டங்களைத் தென்னை உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தென்னை வளரும் பகுதிகளில் MIDH திட்டமானது செயல்படுத்துகிறது.

  • மத்தியத் தோட்டக்கலை நிறுவனம் (CIH), நாகாலாந்து:
  • வடகிழக்குப் பிராந்தியத்தில் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் திறனை வளர்ப்பதற்காக நிறுவப் பட்ட இது பயிற்சி மற்றும் வளங்களுடன் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறது.
  • தேசிய மூங்கில் திட்டம் (NBM):
  • அதிக மதிப்புள்ள ஒரு தோட்டக்கலைப் பயிரான மூங்கில் சாகுபடி மற்றும் அதன் சந்தைப் படுத்துதலை ஊக்குவிக்கிறது.

MIDH திட்டத்தின் உத்திகள்:

  • விரிவான அணுகுமுறை: அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, செயலாக்கம் மற்றும் சந்தை அணுகல் உட்பட உற்பத்தி முன்னோட்டம் முதல் சந்தைப்படுத்துதல் வரை, அனைத்து நிலைகளையும் உள்ளடக்கிய மறை குறியிடப்பட்ட உத்திகள்.
  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை ஊக்குவித்தல்: விரைவில் அழுகிப் போகக் கூடிய பொருட்களின் ஆயுளை அதிகரிக்க தோட்டக்கலை செயல்முறைகள், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் குளிர் சங்கிலி சார்ந்த உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.

  • பல்வகைப் படுத்துதல்: பாரம்பரிய வகைகளிலிருந்து திராட்சைத் தோட்டங்கள், பழத் தோட்டங்கள் மற்றும் மலர் தோட்டங்கள் போன்ற உயர் மதிப்புமிக்கப் பயிர்களுக்கு பல்வகைப் படுத்துவதை ஊக்குவிக்கிறது.
  • தொழில்நுட்ப விரிவாக்கம்: பாதுகாக்கப்பட்டச் சாகுபடி, துல்லியமான விவசாயம் மற்றும் சொட்டுநீர்ப் பாசன முறைகள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப தோட்டக் கலை விரிவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது.

  • கூட்டு அணுகுமுறை: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், செயலாக்க முகவர், சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டாண்மைகளை ஊக்குவிக்கிறது.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs): விவசாயிகளின் சந்தை அணுகுதலை மேம்படுத்தவும், அவர்களின் விளைபொருட்களின் மூலம் அவர்கள் சிறந்த வருமானத்தை அடையவும் FPOக்களை வலுப்படுத்துகிறது.

MIDH திட்டத்தின் கீழ் முக்கியச் செயல்பாடுகள்:

  • MIDH தோட்டக்கலை உற்பத்தி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த, வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான செயல்பாடுகளை ஆதரிக்கிறது.
  • நாற்றங்கால் பண்ணைகளை நிறுவுதல்: திசு வளர்ப்பு மூலம் தரமான நடவுப் பொருட்களை உற்பத்தி செய்தல்.
  • பகுதி விரிவாக்கம்: புதியப் பழத் தோட்டங்களை அமைத்தல் மற்றும் பலனற்ற மற்றும் பழைய பழத்தோட்டங்களைப் புதுப்பித்தல்.
  • பாதுகாக்கப்பட்டச் சாகுபடி: உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், பருவகாலப் பயிர்களை வளர்க்கவும் பாலி ஹவுஸ் மற்றும்  பசுமை இல்லங்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்டச் சாகுபடி முறைகளை ஊக்குவித்தல்.

  • கரிம வேளாண்மை: கரிம வேளாண்மை முறைகளை ஊக்குவித்தல் மற்றும் அங்கீகரித்தல்.
  • நீர் வளங்கள் மேம்பாடு: நீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்த நீர்ப்பாசன முறைகள் மற்றும் நீர்நிலை மேலாண்மை ஆகியவற்றை உருவாக்குதல்.
  • தேனீ வளர்ப்பு: குறிப்பாகப் பழம் மற்றும் காய்கறிப் பயிர்களில், மகரந்தச் சேர்க்கையை அதிகரிக்க உதவுகிறது.
  • தோட்டக்கலை இயந்திரமயமாக்கல்: தொழிலாளர் செலவைக் குறைக்கவும், தோட்டக்கலை செயல்முறைகளில் செயல்திறனை அதிகரிக்கவும் இயந்திரமயமாக்கலை ஊக்குவித்தல்.
  • அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை: நஷ்டத்தைக் குறைப்பதற்கும், உற்பத்தி மதிப்பைக் கூட்டுவதற்கும் குளிர்சாதனச் சேமிப்பு, பொட்டலங்களாக மாற்றுதல், செயலாக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை நிறுவுதல்.

தகுதி அளவுகோல்கள்:

  • விவசாயிகள்: பழங்கள், காய்கறிகள், பூக்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் பிற தோட்டக் கலைப் பயிர்களைப் பயிரிடுபவர்கள்.
  • உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPCs): இந்தக் குழுக்கள் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதலை மேம்படுத்துவதில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றன.

  • மாநில அரசுகள்: பல்வேறு தோட்டக்கலை மேம்பாட்டு வாரியங்கள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவுடன், மாநில தோட்டக்கலைப் பணிகள் முதன்மையாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
  • தனியார் பங்குதாரர்கள்: தோட்டக்கலைப் பொருட்களைப் பதப்படுத்துதல், பொட்டலங்களாக மாற்றுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள விவசாய வணிகங்களும் இதில் பங்கேற்பதற்குத் தகுதியுடையவர்கள்.

MIDH திட்டத்தின் நன்மைகள்:

  • மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன்: சிறந்த விவசாய நடைமுறைகள், தொழில்நுட்பம் மற்றும் சொட்டு நீர்ப் பாசன முறைகளை ஊக்குவிப்பதன் மூலம், இத்திட்டம் உற்பத்தி மற்றும் மகசூலை அதிகரிக்க உதவுகிறது.
  • வருமான அதிகரிப்பு: ஒருங்கிணைப்பு மற்றும் சிறந்தச் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பு மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக வருவாயையும், சிறந்த விலையையும் பெற முடியும்.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம்: இத்திட்டம் கிராமப்புற இளைஞர்களை குளிர் பதனச் சங்கிலி சார்ந்த தொழில், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் செயலாக்கத் துறைகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறது, இது வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கிறது.
  • நிலைத்தன்மை: இத்திட்டம் இயற்கை விவசாயம், நீர்ப் பாதுகாப்பு மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம், தோட்டக்கலை நடைமுறைகள் நிலையானதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

சமையல் எண்ணெய் குறித்த தேசியத் திட்டம் – பாமாயில் (NMEO-OP)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2025-26 ஆம் ஆண்டிற்குள் உள்நாட்டு பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தியாவை சமையல் எண்ணெய்களில் தன்னிறைவுபடுத்தும் நோக்கத்துடன், சமையல் எண்ணெய் குறித்த தேசியத் திட்டம் – பாமாயிலுக்கு (NMEO-OP) 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2021 மாதத்தில் மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • இத்திட்டம் இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

NMEO-OP திட்டத்தின் நோக்கங்கள்:

  • சமையல் எண்ணெய் பாமாயில் (NMEO-OP) மீதான தேசிய திட்டத்தின் முதன்மை நோக்கங்கள் பின்வருமாறு:
  • சமையல் எண்ணெய்களில் தன்னிறைவு:
  • உள்நாட்டுச் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களில், குறிப்பாகப் பாமாயிலின் மீது இந்தியா சார்ந்திருப்பதை வெகு கணிசமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • பாமாயில் உற்பத்தி அதிகரிப்பு:
  • உள்நாட்டில் பாமாயிலின் உற்பத்தியை தற்போதைய நிலையில் இருந்து, 2025-26 ஆம் ஆண்டுக்குள் 11.20 லட்சம் டன்னாகவும், இறுதியில் 2029-30 ஆம் ஆண்டில் 28 லட்சம் டன்னாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

  • பாமாயில் சாகுபடியை ஊக்குவித்தல்:
  • இந்தியாவில் பாமாயில் சாகுபடியின் பரப்பளவை விரிவுபடுத்த, 2025-26 ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 6.5 லட்சம் ஹெக்டேர்களை இலக்காகக் கொண்டு, 10 லட்சம் ஹெக்டேரை எட்டும் இலக்குடன் இது கவனம் செலுத்துகிறது.

விலை ஏற்ற இறக்கத்தை நிவர்த்தி செய்தல்:

  • இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு விலை உறுதியை வழங்க, விலை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க, நம்பகத் தன்மை விலை (VP) வழிமுறையை அறிமுகப்படுத்துகிறது.

NMEO-OP அம்சங்கள்:

  • விவசாயிகளுக்கு விலை உறுதி:
  • இத்திட்டத்தின் கீழ் பாமாயிலைப் பயிரிடும் விவசாயிகள், நம்பகத் தன்மை விலை (VP) எனப் படும் விலை உறுதி இயங்குமுறையைப் பெறுவார்கள்.
  • VP ஆனது கடந்த ஐந்தாண்டுகளின் வருடாந்திர சராசரி கச்சா பாமாயில் (CPO) விலையில் 14.3% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு மொத்த விற்பனை விலைக் குறியீட்டை (WPI) பயன்படுத்திப் பண வீக்கத்திற்கு ஏற்ப சரி செய்யப் படுகிறது.
  • VP எதிர்காலத்தில் சுமார் 15.3% ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவே இது விலை ஏற்ற இறக்கத்திற்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
  • பற்றாக்குறை விலையானது நேரடியாக விவசாயிகளுக்கு நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்படும்.
  • வடகிழக்கு & அந்தமான் பிராந்தியங்களுக்கான சிறப்பு உதவி:
  • வடகிழக்கு மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளை ஆதரிப்பதற்காக, நாட்டின் மற்ற பகுதிகளுடன் சமநிலையை உறுதிப்படுத்த, CPO விலையில் 2% கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்கிறது.
  • உள்ளீடு மற்றும் தலையீட்டு ஆதரவு:
  • பழைய தோட்டங்களில் மீண்டும் நடவு செய்வதற்கும், பலனளிக்காதப் பனைகளைப் புத்துயிர் ஊட்டுவதற்கும் சிறப்பு உதவியாக ஒரு செடிக்கு ரூ. 250 வழங்கப் படுகிறது.
  • நடவுப் பொருட்களுக்கான உதவியை வழங்க அரசானது ஹெக்டேருக்கு ரூ. 12,000 முதல் ஹெக்டேருக்கு ரூ. 29,000 வரை அளிக்கிறது.
  • விதைத் தோட்டங்களுக்கான ஆதரவை அதிகரித்தல்:
  • பிற மாநிலங்களில் உள்ள விதைத் தோட்டங்களுக்கு 15 ஹெக்டேருக்கு ரூ. 80 லட்சமும், வட கிழக்கு மற்றும் அந்தமான் பிராந்தியங்களில் உதவித்தொகை ரூ. 100 லட்சம் வரையிலும் வழங்கப் படுகிறது.

NMEO-OP திட்டத்தின் முக்கியத்துவம்:

  • சமையல் எண்ணெய்களில் தன்னிறைவு:
  • கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்திற்கு அடுத்தபடியாக சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாகவும், உலக அளவில் சமையல் எண்ணெய்களின் மிகப்பெரிய நுகர்வோராகவும் இந்தியா உள்ளது.
  • உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், குறிப்பாக இந்தோனேஷியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • திட்டமிடப்பட்ட தேவை வளர்ச்சி:
  • 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில், சமையல் எண்ணெய்களுக்கான தேவை 20 மில்லியன் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப் படும் என்ற நிலையில் இது உணவுப் பழக்க வழக்கங்கள் மாற்றப் படுவது மற்றும் செலவழிக்கும் வருமானம் அதிகரிப்பது போன்ற காரணிகளால் உந்தப்படுகிறது.

  • உணவுத் துறையின் முக்கியத்துவம்:
  • 94% பாமாயில் உணவுத் தொழிலில், குறிப்பாக சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • உத்திகளின் முக்கியத்துவம்:
  • உலகளவில் அதிகரித்து வரும் சமையல் எண்ணெய்களின் விலைகள் மற்றும் இந்தியாவின் உணவுத் துறையில் பாமாயிலின் முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு, NMEO-OP ஆனது ஆத்ம நிர்பார் பாரத் முன்னெடுப்புடன் இணைந்து, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை ஊக்குவிக்கிறது.

NMEO-OP திட்டத்தின் பயனாளிகள்:

  • விவசாயிகள்:
  • குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் பாமாயில் பயிரிடும் விவசாயிகள், நிதி உதவி, விலை உறுதி மற்றும் பாமாயில் சாகுபடிக்கான தொழில் நுட்ப ஆதரவு ஆகியவற்றால் பயனடைவார்கள்.
  • மாநில அரசுகள்:
  • பனை எண்ணெய்த் தோட்டங்கள் மற்றும் பதப்படுத்தும் அலகுகளை நிறுவ விவசாயிகள் மற்றும் தொழில்துறைகளுடன் ஒருங்கிணைக்கும் மாநிலத் தோட்டக்கலை திட்டங்கள் மூலம் இந்தப் பணி செயல்படுத்தப்படும்.

தகுதி அளவுகோல்கள்:

  • விவசாயிகள் : அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் (குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில்) பனை எண்ணெய் மரங்களைப் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள்.

NMEO-OP திட்டத்தில் நன்மைகள்:

  • விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பு:
  • இத்திட்டம் விலை ஆதரவு இயங்குமுறையை வழங்கி சந்தை ஏற்ற இறக்கத்திலிருந்து நன்கு விவசாயிகளைப் பாதுகாக்கிறது என்பதோடு மேலும் பாமாயில் போன்ற லாபகரமான பயிரை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • பனை எண்ணெய் சாகுபடிக்கு ஆதரவு:
  • விவசாயிகள் நடவுப் பொருட்களை வாங்குவதற்கும், பழைய தோட்டங்களில் மீண்டும் நடவு செய்வதற்கும், நீர் மேலாண்மை மற்றும் ஊடுபயிருக்கான உதவிகளுக்கும் நிதியுதவியினை இதன் மூலம் பெறுகிறார்கள்.
  • உள்கட்டமைப்பு மற்றும் செயலாக்க ஆதரவு:
  • இந்தத் திட்டமானது பாமாயில் துறையில் செயலாக்க அலகுகளை உருவாக்குதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மதிப்பு கூட்டப் பட்டப் பொருட்களை உருவாக்குதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
  • சமையல் எண்ணெய்களில் தன்னிறைவு:
  • உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், இந்தத் திட்டம் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வதையும், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்