TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 09

November 29 , 2024 6 days 223 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 09

(For English version to this please click here)

தேசிய கால்நடைத் திட்டம் (NLM)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • தேசிய கால்நடைத் திட்டம் (NLM) 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது மற்றும் 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவில் கால்நடைத் துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக மறுசீரமைக்கப் பட்டது, இதில் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் விலங்குகளின் உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • இந்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் துறை அமைச்சகம், தேசிய கால்நடைத் திட்டத்தை (NLM) செயல்படுத்துவதற்கான தலைமை முகமை ஆகும்.

தேசிய கால்நடைத் திட்டத்தின் நோக்கங்கள்:

  • தேசிய கால்நடைத் திட்டமானது கால்நடைத் துறையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதன்மை நோக்கங்களில் பின்வருவன அடங்கும்:

  • வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்முனைவு மேம்பாடு:
  • வேலை வாய்ப்புகளை உருவாக்க சிறு விலங்கு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு மற்றும் தீவனத் துறைகளில் தொழில் முனைவோரை ஊக்குவித்தல்.
  • உற்பத்தித்திறனை அதிகரித்தல்:
  • இறைச்சி, பால், முட்டை, கம்பளி மற்றும் பிற கால்நடைப் பொருட்களின் ஒட்டுமொத்த உற்பத்தியை மேம்படுத்த மற்றும் ஒவ்வொரு விலங்கின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டி இன மேம்பாட்டில் கவனம் செலுத்துதல்.
  • உற்பத்தியை அதிகரித்தல்:
  • இறைச்சி, முட்டை, ஆட்டுப் பால் மற்றும் கம்பளி போன்ற விலங்கு சார்ந்தப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துதல்.

  • தீவனம் கிடைக்கும் அளவுகள்:
  • தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், தீவன விதை விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல் மற்றும் சான்றளிக்கப்பட்ட தீவன விதைகள் கிடைப்பதை ஊக்குவித்தல்.
  • தீவனத்தை பதப்படுத்தும் அலகுகளை நிறுவுவதை ஊக்குவித்தல்:
  • தீவனம் மற்றும் தீவனத்திற்கான தேவை-அளிப்பு இடைவெளியைக் குறைக்க தீவனச் செயலாக்க அலகுகளை நிறுவுவதை ஊக்குவித்தல்.

  • கால்நடை இடர் மேலாண்மையை ஊக்குவித்தல்:
  • கால்நடை வளர்ப்புடன் தொடர்புடைய அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க, கால்நடை காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல்.
  • பயன்பாட்டு ஆராய்ச்சி:
  • கால்நடைத் துறையில் செயல்திறனை மேம்படுத்த கோழி வளர்ப்பு, செம்மறி ஆடு வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தி போன்ற முக்கியப் பகுதிகளில் பயன்பாட்டு ஆராய்ச்சியை ஊக்குவித்தல்.

  • திறன் உருவாக்கம் மற்றும் விரிவாக்க சேவைகள்:
  • விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்த, விரிவாக்கச் சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்குத் திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்குதல்.
  • தொழில்நுட்பப் பரவலை ஊக்குவித்தல்:
  • உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கும், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும் தொழில் நுட்பப் பரவலை ஆதரித்தல் மற்றும் கால்நடைத் துறையில், புதிய சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல்.

தேசிய கால்நடை இயக்கத்தின் அம்சங்கள் மற்றும் நோக்கம்:

  • ஒட்டகத்தினைச் சேர்த்தல்:
  • NLM திட்டமானது ஒட்டகத்தை அதன் நோக்கத்தின் கீழ் உள்ளடக்கி உள்ளது, இது முந்தைய திட்டங்களின் கீழ் முழுமையாகச் செயல்படுத்தப் படவில்லை, ஆனால் இப்போது இது முன்னுரிமைத் துறையாக ஊக்குவிக்கப் படுகிறது.
  • கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (AHIDF):
  • AHIDF என்பது NLM திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிற ஒரு மத்திய அரசுத் துறை திட்டமாகும்.
  • AHIDF திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ahidf.udyamimitra.in எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் செயலாக்கப் படுகின்றன.
  • கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாடு மேம்பாடு:
  • NLM திட்டத்தின் முக்கியமான பகுதி கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாடு கூறு ஆகும், இது நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கால்நடைகளுக்கான தடுப்பூசி போடும் செயல்முறைகளில் கவனம் செலுத்துகிறது.
  • நிதி ஆதரவு:
  • தேசிய கால்நடைத் திட்டத்திற்கான (NLM) நிதியுதவி, இன மேம்பாடு, தீவன மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் ஆதரவு போன்ற பல்வேறு கூறுகளுக்கு நிதியுதவியானது மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

தேசிய கால்நடைத் திட்டத்தின் பயனாளிகள்:

  • கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள்:
  • சிறு குறு விவசாயிகள், கோழிப் பண்ணையாளர்கள், பன்றி வளர்ப்பவர்கள் மற்றும் தீவன உற்பத்தியாளர்கள் பல்வேறு நிதி உதவி, திறன் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சி செயல்பாடுகளால் பயனடைகின்றனர்.
  • தொழில்முனைவோர்:
  • கால்நடை மற்றும் தீவனத் துறைகளில் உள்ள தொழில்முனைவோர், தீவனச் செயலாக்க அலகுகள் மற்றும் சிறிய அளவிலான கால்நடை முயற்சிகள் போன்ற புதிய அலகுகளை அமைப்பதற்கான ஆதரவைப் பெறுகிறார்கள்.
  • அரசுப் பணியாளர்கள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்கள்:
  • மாநில வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகள், விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் கால்நடை வல்லுநர்கள் உள்ளிட்டோர் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விரிவாக்கச் சேவைகளுக்கான மேம்பட்ட அணுகல் ஆகியவற்றால் பயனடைகிறார்கள்.

  • கால்நடை காப்பீடு வழங்குநர்கள்:
  • கால்நடை காப்பீட்டுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வழங்குநர்கள் இந்தத் திட்டத்தின் கீழ், இடர் மேலாண்மை வழிமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் பயனடைகிறார்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், குறிப்பாக சிறு விலங்குகள், கோழி வளர்ப்பு, பன்றி வளர்ப்பு மற்றும் தீவன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள்.
  • தீவனச் செயலாக்க அலகுகள் அல்லது கால்நடை வளர்ப்பு தொடர்பான வணிகம் சார்ந்த தொழில்களை அமைப்பதில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள்.
  • மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்கள் கால்நடை மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளுக்கு விரிவான சேவைகளை வழங்குகின்றன.

தேசிய கால்நடைத் திட்டத்தின் நன்மைகள்:

  • கால்நடை உற்பத்தித் திறன் அதிகரித்தது.
  • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு.
  • தீவனப் பாதுகாப்பு.
  • காப்பீட்டுப் பரவல்.
  • மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம்.
  • திறன் மேம்பாடு.

மண் வளக் குறிப்பேடு (SHC) திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • மண் வளக் குறிப்பேடு திட்டம் (SHC) இந்திய அரசின், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் உள்ள சூரத்கரில் தொடங்கப் பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறை, மண் வளக் குறிப்பேடுத் திட்டத்தைச் செயல்படுத்தும் தலைமை முகமை ஆகும்.

மண் வளக் குறிப்பேடு திட்டத்தின் நோக்கங்கள்:

  • மண் வளக் குறிப்பேடு திட்டமானது, விவசாயிகளுக்கு மண் வள அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் மண்ணின் தரம் மற்றும் விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன் முக்கிய நோக்கங்கள் பின்வருமாறு:

  • மண் வளக் கண்காணிப்பு:
  • இத்திட்டம் மண் வளத்தைக் கண்காணித்து, விவசாயிகளுக்கு மண்ணின் ஊட்டச்சத்து நிலை குறித்து விரிவான அறிக்கைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு நிலையான விவசாய முறைகளுக்கும் பெரும் முக்கியத்துவத்தை அளிக்கிறது.

  • உரங்களைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகள்:
  • இத்திட்டம் மண் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், மண் வளத்தை மேம்படுத்தவும், வளமாக மண்ணைப் பராமரிக்கவும் வேண்டி, தேவையான உரங்களைச் சரியான அளவில் வழங்க மற்றும் மண் ஊட்டம் குறித்தப் பரிந்துரைகளை வழங்குகிறது.

  • மண் ஊட்டச்சத்து மேலாண்மை:
  • இந்த முன்னெடுப்பானது மண் ஊட்டச்சத்து சமநிலையை மேம்படுத்துதல் மற்றும் பயிர் உற்பத்தித் திறனைக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல்:
  • இது மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், ரசாயன உரங்களின் எதிர்மறைத் தாக்கத்தைக் குறைக்கவும், நீண்ட காலத்திற்கு வேளாண் உற்பத்தியை மேம்படுத்தவும், பொருத்தமான மண் மேலாண்மை நடைமுறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

மண் வளக் குறிப்பேடுத் திட்டத்தின் அம்சங்கள்:

  • பரவல்:
  • இந்தத் திட்டம் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கியது.
  • ஒவ்வொரு விவசாயியும், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு மண் வளக் குறிப்பேட்டினைப் பெறுவார்கள் என்ற நிலையில், அதில் மண்ணின் ஊட்டச்சத்து கலவை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தீர்வு நடவடிக்கைகள் பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன.

  • மண் மாதிரிச் சேகரிப்பு:
  • GPS கருவிகள் மற்றும் வருவாய் வரைபடங்களைப் பயன்படுத்தி வேளாண் நிலங்களிலிருந்து மண் மாதிரிகள் சேகரிக்கப் படுகின்றன.
  • பாசனப் பகுதிகளுக்கு, 2.5 ஹெக்டேர் பகுப்புகளில் மண் மாதிரிகள் எடுக்கப் படுகின்றன, அதே சமயம் மழை பெய்யும் பகுதிகளுக்கு, 10 ஹெக்டேர் பகுப்புகளில் மாதிரிகள் எடுக்கப்படுகிறது.
  • மாதிரிகள் பொதுவாக ராபி மற்றும் காரிஃப் பயிர் அறுவடைக்குப் பிறகு அல்லது நிலையான பயிர் பயிரிடாத போது சேகரிக்கப் படுகின்றன.

பகுப்பாய்வு அளவுருக்கள்:

மண் மாதிரிகள் 12 முக்கிய அளவுருக்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப் படுகிறது:

  • பேரூட்டச் சத்துக்கள்: நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K), மற்றும் சல்பர் (S).
  • நுண்ணூட்டச் சத்துக்கள்: துத்தநாகம் (Zn), இரும்பு (Fe), தாமிரம் (Cu), மாங்கனீசு (Mn), மற்றும் போரான் (Bo).
  • இயற்பியல் அளவுருக்கள்: pH, மின் கடத்துத் திறன் (EC), கரிம கார்பன் (OC).

மண் வளக் குறிப்பேடு:

  • விவசாயிகள் தங்கள் மண்ணின் வளம், குறிப்பிட்ட உரப் பரிந்துரைகள் மற்றும் தேவையான மண் வளமாக்கக் கூடிய செயல்முறைகளுடன் அச்சிடப்பட்ட அறிக்கையைப் பெறுவார்கள்.

மண் வளக் குறிப்பேடுத் திட்டத்தின் தேவை:

  • ஊட்டச்சத்து குறைபாடு:
  • இந்திய மண்ணின் நிலையானது ஆண்டுதோறும் 12 முதல் 14 மில்லியன் டன்கள் வரை எதிர்மறையான ஊட்டச்சத்து சமநிலையை எதிர்கொண்டு வருகிறது, இது மண் சிதைவை அதிகப்படுத்துகிறது மற்றும் பயிர் உற்பத்தியைக் குறைக்கிறது.
  • இந்தியாவில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் 95% நைட்ரஜன் (N), 94% பாஸ்பரஸ் (P), மற்றும் 48% பொட்டாசியம் (K) ஆகியவை அடங்கும்.

  • அறியப்படாத விவசாய முறைகள்:
  • விவசாயிகள் பெரும்பாலும் அவர்களுடைய மண்ணின் குறிப்பிட்ட ஊட்டச்சத்துதஜ் தேவைகளை அறிந்திருக்கவில்லை, இது உரங்களின் அளவற்றப் பயன்பாடு, பயிர் விளைச்சல் குறைதல் மற்றும் மண் வீழ்ச்சிக்கு வழி வகுக்கிறது.
  • இந்தத் தகவல் பற்றாக்குறையானது பயிர் விளைச்சலை மேம்படுத்துதல் மற்றும் காலப் போக்கில் மண்ணின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் திறன் ஆகியவற்றைக் குறைக்கிறது.

  • மேம்படுத்தப்பட்ட வளப் பயன்பாடு:
  • இத்திட்டம், விவசாயிகள் உரங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்தவும், விரயத்தைக் குறைக்கவும், மண் வளத்தைப் பேணுவதன் மூலம், பயிர் விளைச்சலை மேம்படுத்தவும் உதவுகிறது.

மண் வளக் குறிப்பேடுத் திட்டத்தில் உள்ள சவால்கள்:

  • போதிய மண் பரிசோதனை உள்கட்டமைப்பு:
  • மண் பரிசோதனை ஆய்வகங்களின் பற்றாக்குறை மற்றும் மண் பரிசோதனைக்கு போதிய பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லாமை போன்றவற்றால் இதன் செயல்முறையானது தாமதமாகலாம் அல்லது தவறான முடிவுகளுக்கு வழி வகுக்கலாம்.

  • மண் அறிக்கைகளைப் புரிந்து கொள்ளுதல்:
  • சில விவசாயிகளுக்கு மண் சுகாதார அறிக்கைகளை விளக்குவது கடினம் எனவே இதில் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைகளை ஏற்றுக் கொள்வது மற்றும் செயல்படுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் இவை அத்திட்டத்தின் செயல்திறனைக் கட்டுப்படுத்துகிறது.

  • விடுபட்ட குறிகாட்டிகள்:
  • நுண்ணுயிர்ச் செயல்பாடு, ஈரப்பதத்தைத் தக்க வைத்தல், மண்ணின் ஆழம் மற்றும் அமைப்பு போன்ற சில முக்கியமான காரணிகள் மண் வளக் குறிப்பேட்டில் சேர்க்கப் படவில்லை, இது அதன் விரிவான தன்மையைக் கட்டுப்படுத்தலாம்.
  • ஒருங்கிணைப்புச் சிக்கல்கள்:
  • விவசாய விரிவாக்கத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், சில நேரங்களில் இத்திட்டத்தைச் திறம்பட செயல்படுத்துவதில் இடையூறு ஏற்படுகிறது.
  • குறிகாட்டிகளின் வரையறுக்கப்பட்ட நோக்கம்:
  • மண் வளக் குறிப்பேடு முதன்மையாக இரசாயன ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்துகிறது, அதே சமயம் மண்ணின் உயிரியல் மற்றும் இயற்பியல் பண்புகள் போன்ற பிற காரணிகள் பெரும்பாலும் கவனிக்கப் படுவதில்லை.

மண் வளக் குறிப்பேடுத் திட்டத்தின் நன்மைகள்:

  • மேம்பட்ட மண் உற்பத்தித் திறன்:
  • விவசாயிகள் தங்கள் மண்ணின் சரியான ஊட்டச்சத்து நிலையை அறிந்து கொள்வதன் மூலம், உர உபயோகத்தை மேம்படுத்தலாம், பயிர் விளைச்சலை மேம்படுத்தலாம் மற்றும் உள்ளீட்டுச் செலவைக் குறைக்கலாம்.

  • நிலையான விவசாய நடைமுறைகள்:
  • இத்திட்டமானது உரங்களின் சீரான பயன்பாடு மற்றும் மண் வளச் செயல்முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கிறது, இதன் மூலம் இது நீண்ட கால மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • அதிகரித்த விழிப்புணர்வு:
  • விவசாயிகள் தங்கள் மண்ணின் தேவைகளைப் பற்றி நன்கு புரிந்து கொள்கிறார்கள், இது பயிர் தேர்வு, உரங்கள் மற்றும் மண் மேலாண்மை நடைமுறைகள் குறித்து தகவலறிந்து முடிவுகளை எடுக்க உதவுகிறது.
  • செலவு குறைப்பு:
  • சரியான வகை மற்றும் சரியான அளவு உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், விவசாயிகள் ரசாயன உரங்களுக்கான அதிகப்படியான செலவைக் குறைத்து, காலப்போக்கில் மண் வளத்தை மேம்படுத்தலாம்.

  • மேம்படுத்தப்பட்ட பயிர் தேர்வு:
  • விவசாயிகள் தங்கள் மண்ணின் ஊட்டச்சத்து வளத்திற்கு ஏற்ற மிகவும் பொருத்தமான பயிர்களைத் தீர்மானிக்க முடியும், இதன் மூலம் அதிக உற்பத்தித் திறனை உறுதி செய்து, பயிர் இழப்பு அபாயத்தைக் குறைக்கலாம்.
  • நிபுணர் வழிகாட்டுதல்:
  • மண்ணின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்த விவசாயிகளுக்கு உதவ, மண் மேலாண்மை குறித்த நிபுணர் ஆலோசனைகளை அரசாங்கம் வழங்குகிறது.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம்:
  • இத்திட்டம் விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு குறிப்பாக மண் பரிசோதனை, பகுப்பாய்வு மற்றும் விரிவாக்க சேவைகள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

தகுதி அளவுகோல்கள்:

  • இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும், அவர்களது வேளாண்மை செய்யும் நில அளவைப் பொருட்படுத்தாமல், மண் வளக் குறிப்பேடு பெறத் தகுதியுடையவர்கள்.
  • மண் மாதிரிச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு மாநில அரசு அல்லது பணி ஒப்படைப்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப் படுகிறது.

கூடுதல் தகவல்:

  • தொடர்புடையத் திட்டங்கள்:
  • மண் வளக் குறிப்பேடுத் திட்டம் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டம் (NBS) போன்ற பிற விவசாயத் திட்டங்களுடன் இணைந்து செயல்படுகிறது, இது உரங்களின் சீரானப் பயன்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:
  • இந்தத் திட்டம் துல்லியமான மண் மாதிரி மற்றும் எண்மப் பதிவுகளுக்கு GPS கருவிகளைப் பயன்படுத்தி, பிராந்தியங்கள் முழுவதும் மண்ணின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கிறது.

               -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்