TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 10

December 3 , 2024 36 days 396 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 10

(For English version to this please click here)

SMART-PDS

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2015.
  • SMART-PDS (பொது விநியோக அமைப்பில் தொழில்நுட்பம் மூலம் நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்களுக்கான திட்டம்) என்பது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் பொது விநியோகத் துறை (DFPD) மூலம் தொடங்கப் பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • உணவு மற்றும் பொது விநியோகத் துறை (DFPD).
  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் (MoAFW) (குடும்ப அடிப்படையிலான ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை (ONORC) / குடும்ப அட்டைத் தரவு வரைபடங்களுக்காக).

  • ஆதார் (இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் - UIDAI).
  • கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (ஒருங்கிணைப்புக்காக).

நோக்கங்கள்:

  • TPDS திட்டத்தின் நவீனமயமாக்கல்: தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் மூலம் இலக்கு பொது விநியோக முறையை (TPDS) நவீனப்படுத்துதல்.

  • உணவு தானியக் கசிவைத் தடுத்தல்: உணவு தானியங்களின் கசிவைக் குறைத்து விநியோகச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்துதல்.
  • புலம்பெயர்ந்தோருக்கும் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல்: புலம்பெயர்ந்தோரின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் பயனாளிகளின் தரவை ஒருங்கிணைத்தல்.

  • தரப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு: அனைத்து மாநிலங்களிலும் உள்ள PDS செயல்பாட்டைத் தரப்படுத்துதல் மற்றும் இந்திய உணவுக் கழகம் (FCI), மத்திய கிடங்கு நிறுவனம் (CWC) மற்றும் UIDAI போன்ற முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல்.
  • தொழில்நுட்ப வரம்புகளை நிவர்த்தி செய்தல்: தொழில்நுட்பம் சார்ந்தச் சீர்திருத்தங்கள் மூலம் PDS செயல்பாடுகளில், மாநில அளவிலான தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.

  • ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை (ONORC): நாடு தழுவிய பெயர்வுத் திறனுக்காக ONORC திட்டத்தினைச் செயல்படுத்துதல் மற்றும் போலிக் குடும்ப அட்டைகளை நீக்கம் செய்வதற்காக தேசிய அளவிலான ஒரு தரவுக் களஞ்சியத்தினை ஏற்படுத்துதல்.

  • ஒருங்கிணைந்தத் தரவு உள்கட்டமைப்பு: குடும்ப அட்டை மேலாண்மை, உணவு தானிய ஒதுக்கீடு, விநியோகச் சங்கிலி ஆகியவற்றில் ஒருங்கிணைந்தத் தரவு அமைப்பை உருவாக்குதல்.

பயனாளிகள்:

  • இலக்குப் பொது விநியோக அமைப்பு (TPDS) பயனாளிகள்: இது ஒவ்வொரு மாதமும் சுமார் 81.35 கோடி தனி நபர்கலுக்குப் பயன் அளிப்பதை உள்ளடக்குகிறது.

  • புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள்: தரவுப் பகுப்பாய்வு மற்றும் இயக்க முறைகளின் அடிப்படையில் புலம்பெயர்ந்தோருக்கான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.
  • பிற மத்திய திட்டங்களின் பயனாளிகள்: இ-ஷ்ரம் தளம், ஆயுஷ்மான் பாரத், PM-SVANidhi மற்றும் பிற திட்டங்களுக்காக SMART-PDS திட்டத்திலிருந்து தரவுகள் பயன்படுத்தப் படுகிறது.

தகுதி அளவுகோல்கள்:

  • PDS திட்டத்திற்கான தகுதி: வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இந்தியக் குடிமக்கள் அல்லது குறிப்பிட்டச் சமூகப் பிரிவுகளின் கீழ் உள்ளவர்கள் தகுதியுடையவர்கள்.
  • ஆதார் ஒருங்கிணைப்பு: பயனாளிகளின் அடையாளம் மற்றும் சரிபார்ப்புக்காக குடும்ப அட்டை அமைப்புடன் ஆதார் எண்கள் இணைக்கப் படுகிறது.
  • ONORC: ONORC திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளின் பெயர்வுத் திறனுக்குத் தகுதி பெற, பயனாளிகள் குடும்ப அட்டை நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

பலன்கள்:

  • கசிவில் இருந்து பாதுகாப்பு: உணவு தானிய விநியோகத்தில் கசிவு மற்றும் ஊழலை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட செயல்திறன்: ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்திற்காக மின்னணு முறையில் பணம் செலுத்தும் (ePoS) சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்துகிறது.
  • குடும்ப அட்டைகளின் பெயர்வுத் திறன்: ஒரு தேசம் ஒரே குடும்ப அட்டை அமைப்பானது பயனாளிகள், நாடு முழுவதும் உள்ள எந்த நியாய விலைக் கடையிலிருந்தும் உணவு தானியங்களை பெற அனுமதிக்கிறது, இது குறிப்பாகப் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்குகிறது.

  • நலத் திட்டங்களுக்கான தரவுப் பகுப்பாய்வு: இதில் உருவாக்கப்படும் தரவுகளை ஆயுஷ்மான் பாரத், PM-SVANidhi போன்ற பிற மத்திய நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.

  • தொழில்நுட்பம் சார்ந்தச் சீர்திருத்தங்கள்: இது PDS செயல்பாடுகளில் மாநில அளவிலான வரம்புகளைக் கடக்க உதவுகிறது, மேலும் இது தரப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த மத்திய அமைப்பை உருவாக்குகிறது.
  • நாடு தழுவிய பயனாளிகள் கண்காணிப்பு: ஆதார் ஒருங்கிணைப்புடன், ஒருங்கிணைந்தக் குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை திட்டம் (ICDS) முதல் PM Poshan மற்றும் PDS போன்ற ஊட்டச்சத்து திட்டங்களில் பயனாளிகளைக் கண்காணிக்க முடியும், மேலும் இது விளிம்பு நிலையில் உள்ள பிரிவினர்களுக்குத் தடையற்ற சேவையை வழங்குகிறது.

  • தரவு ஒருங்கிணைப்பு: இந்த அமைப்பு கொள்கை அமலாக்கத்தை மேம்படுத்த அரசாங்க அமைச்சகங்களுக்கு ஒரு விரிவான தரவுக் களஞ்சியத்தை வழங்குகிறது.

கூடுதல் தகவல்:

  • SMART-PDS என்பது உணவுப் பொருட்கள் விநியோகத்திற்கு அப்பாற்பட்டது: உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், நலத்திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் திறமையான சேவை வழங்கலுக்கான தரவுகளின் மூலம் முடிவெடுத்தல் ஆகியவற்றிற்காக இந்த நோக்கம் விரிவடைகிறது.
  • AI மற்றும் தரவு பகுப்பாய்வு: செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய தரவுப் பகுப்பாய்வுகளின் பயன்பாடு அதிகப் பொறுப்புணர்வைக் கொண்டு வருகிறது, இதன் மூலம் இடம்பெயர்வு மற்றும் நுகர்வு முறைகளைக் கண்காணிக்க உதவுகிறது, மேலும் இது மக்களின் தேவைகளுக்கு அதிக பலன் அளிக்கக் கூடியதாக உள்ளது.

  • ePoS மற்றும் மின்னணுமயமாக்கல்: கிட்டத்தட்ட 93% உணவு தானிய விநியோகம் ஆதார் அங்கீகாரம் மூலம் செயல்படுத்தப் படுகிறது, மேலும் இது அதன் சரிபார்ப்பு மற்றும் கண்காணிப்புக்கு மின்னணு விற்பனைப் புள்ளி (ePoS) சாதனங்களைப் பயன்படுத்துகிறது.

இலக்கு 03: அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு

தேசியச் சுகாதாரப் பணி (NHM)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2005.

  • இதில் உள்ள முன்னெடுப்புகள்:
  • தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் (NRHM)
  • தேசிய நகர்ப்புறச் சுகாதாரத் திட்டம் (NUHM)

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW).

நோக்கங்கள்:

  • உலகளாவிய சுகாதார அணுகல்: சமூக-பொருளாதார அல்லது புவியியல் தடைகளைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் தரமான சுகாதாரச் சேவைகளுக்கான சமமான அணுகலை உறுதி செய்தல்.

  • சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்: ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை அனைத்து மட்டங்களிலும் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல்.
  • மனித வள மேம்பாடு: மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சமூக சுகாதாரப் பணியாளர்கள் உட்பட திறமையான சுகாதாரப் பணியாளர்களைப் பயிற்றுவித்து மேம்படுத்துதல்.

  • சுகாதாரப் பாதுகாப்பு: முன்கூட்டியே தடுத்து நிறுத்தக் கூடிய நோய்களைக் குறைப்பதற்காக நோய்த்தடுப்பு, தாய் மற்றும் சேய் ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாடுத் திட்டங்கள் போன்ற நோய்த் தடுப்பு சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
  • தாய் மற்றும் சேய் ஆரோக்கியம்: தாய் மற்றும் சிசு இறப்பு விகிதங்களைக் குறைப்பதன் மூலம் தாய் மற்றும் சேய் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.
  • தொற்றக்கூடிய நோய்களின் கட்டுப்பாடு: காசநோய், மலேரியா, எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் நோய்க் காரணிகளால் பரவும் நோய்கள் போன்ற தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
  • தொற்றாத நோய் மேலாண்மை: நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களை நிர்வகிப்பதற்கான சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல்.

பயனாளிகள்:

  • கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள்: பின்தங்கிய கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கவனம் செலுத்துதல், குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு சுகாதார சேவை வழங்குதல்.
  • தாய் மற்றும் சேய் ஆரோக்கியம்: கர்ப்பிணிப் பெண்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகள்.

  • பாதிக்கப்படக்கூடிய குழுக்கள்: தொற்றக் கூடிய மற்றும் தொற்றாத நோய்களால் பாதிக்கப் பட்ட மக்கள், பழங்குடியின மக்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • உலகளாவிய அணுகல்: அனைத்துக் குடிமக்களுக்கும் தகுதியுடையவர்கள், குறிப்பாக பின்தங்கியப் பகுதிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஒதுக்கப்பட்டச் சமூகங்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • இலக்குத் திட்டங்கள்: NHM திட்டத்தின் கீழ் குறிப்பிட்டத் திட்டங்கள், ஜனனி சுரக்சா யோஜனா (JSY) போன்ற திட்டங்கள் குறைந்த வருமானம் கொண்டவர்கள் அல்லது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கானவை.

பலன்கள்:

  • தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு குறைப்பு: மேம்படுத்தப்பட்ட சுகாதாரச் சேவைகள், மருத்தவமனையில் நடைபெறும் பிரசவங்கள் மற்றும் நோய்த் தடுப்பு மூலம் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்கச் சரிவிற்கு இந்தத் திட்டம் பங்களித்துள்ளது.
  • விரிவாக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு: : ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் மருத்துவப் பிரிவுகள் உள்ளிட்ட சுகாதார வசதிகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல்.
  • நோய் கட்டுப்பாடு: காசநோய், மலேரியா, மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற முக்கியத் தொற்று நோய்களை இலக்கு சுகாதாரத் திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்துதல்.

  • சுகாதாரக் காப்பீடு: ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா (RSBY) மற்றும் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) போன்ற திட்டங்கள் பாதிக்கப்படக் கூடிய குழுக்களுக்கு உடல்நலக் காப்பீட்டை வழங்குகின்றன.
  • இலவச சுகாதார சேவைகள்: பொது சுகாதார வசதிகளில் இலவச மருந்துகள் மற்றும் நோயறிதல் சேவைகளை வழங்குதல்.
  • சமூக அதிகாரமளித்தல்: அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs) மற்றும் கிராம சுகாதாரம் மற்றும் துப்புரவுக் குழுக்கள் (VHSCs) போன்ற முன்னெடுப்புகள் மூலம், NHM சுகாதார குறித்து முடிவெடுத்தல் மற்றும் கண்காணிப்பில் சமூகப் பங்கேற்பை ஊக்குவித்தல்.

கூடுதல் தகவல்:

  • கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு: NHM திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கு வலுவான அமைப்புகள் உள்ளன, இது தலையீடுகள் பயனுள்ளதாகவும், தரவு சார்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

  • பரவலாக்கப்பட்ட செயலாக்கம்: NHM ஒரு பரவலாக்கப்பட்ட அணுகுமுறையுடன் செயல்படுகிறது, அங்கு மாநில சுகாதாரப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதாரத் திட்ட முன்னெடுப்புகளை செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் பொறுப்பான அமைப்புகள் உள்ளன.
  • பொது-தனியார் கூட்டாண்மை: சுகாதாரத் துறையில் சேவை வழங்குதல், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தத் தனியார் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை NHM திட்டம் ஊக்குவிக்கிறது.

NHM திட்டத்தின் கீழ் உள்ள முக்கியத் திட்டங்கள்:

  • ஜனனி சுரக்சா யோஜனா (JSY): ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது.
  • தேசிய நடமாடும் மருத்துவ அலகுகள்: இது தொலைதூர மற்றும் வசதி குறைந்த பகுதிகளில் சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்காக உருவாக்கப் பட்டது.

  • தேசிய ஆம்புலன்ஸ் சேவை: அவசர மருத்துவச் சேவைகளை வழங்குகிறது.
  • ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரம் (RBSK): குழந்தை ஆரோக்கியம் மற்றும் நோய்களை முன்கூட்டியே கண்டறிதலில் கவனம் செலுத்துகிறது.

  • தேசிய ஆயுஷ் திட்டம்: பாரம்பரிய மருத்துவத்தை (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) ஊக்குவிக்கிறது.

  • இலவச மருந்துகள் மற்றும் நோயறிதல் சேவைகள்: பொது சுகாதார நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நோயறிதல்கள் குறித்து சேவைகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • செப்டம்பர் 2018.      

  • நோக்கம்:
  • இந்தியாவில் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கான இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதை இலக்காகக் கொண்டு உலகளாவிய ஒரு சுகாதாரப் பாதுகாப்பை வழங்குவது இதன் நோக்கமாகும்.
  • கூறுகள்:
  • பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY).

  • சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (HWCs) (2023 ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என மறுபெயரிடப்பட்டது).

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • அமைச்சகம்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசு.
  • தலைமை முகமை: தேசிய சுகாதார ஆணையம் (NHA), PM-JAY ஐ செயல்படுத்தும் பொறுப்பு.

நோக்கங்கள்:

  • உலகளாவிய சுகாதாரப் பரவலை (UHC) அடைதல்.
  • அதிக மருத்துவச் செலவுகளுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்குதல்.

  • முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைப் பிரிவுகளில் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்தல்.
  • சமூகத்தின் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக் கூடியப் பிரிவினருக்கு, குறிப்பாக தற்போதுள்ள திட்டங்களின் கீழ் வராதவர்களுக்கு, மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்தல்.
  • சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பரவல்களில் உள்ள இடைவெளியைக் குறைத்தல்.
  • இந்தியாவின் மக்கள்தொகையில் 40%க்கும் அதிகமானவர்களுக்கு சுகாதாரக் காப்பீட்டை விரிவுபடுத்துதல்.

பயனாளிகள்:

  • இலக்கு மக்கள் தொகை: சுமார் 55 கோடி தனிநபர்கள் பயன்பெறும் வகையில், ஏறத்தாழ 12 கோடி குடும்பங்களை உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • தகுதியான குடும்பங்கள்: சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு (SECC) 2011 மூலம் தகுதியான குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டது.

  • 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள மூத்தக் குடிமக்களுக்கான இது நீட்டிப்பு செய்யப் பட்டது, இதன் மூலம் 4.5 கோடி குடும்பங்களில் இருந்து கூடுதலாக 6 கோடி முதியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

தகுதி அளவுகோல்கள்:

PM-JAY:

  • கிராமப்புறங்கள்: பற்றாக்குறை அளவுகோல்களின் அடிப்படையில் (எ.கா., நிலம் இல்லாத குடும்பங்கள், சுகாதாரம் போன்ற காரணிகள்).
  • நகர்ப்புறப் பகுதிகள்: தொழில் சார்ந்த அளவுகோல்களின் அடிப்படையில் (எ.கா., குப்பைகளைப் பிரித்து எடுப்பவர்கள், தெரு வியாபாரிகள்).

மூத்தக் குடிமக்களுக்கு (70+)

  • 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்தக் குடிமக்களும், அவர்களது வருமானத்தைப் பொருட்படுத்தாமல், இப்போது விரிவாக்கப்பட்டத் திட்டத்தின் கீழ் காப்பீடுச் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
  • PM-JAY திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் இதில் கூடுதல் முதன்மைக் காப்பீட்டுச் சலுகைகளைப் பெறுவார்கள்.

பலன்கள்:

  • பணமில்லா சுகாதாரம்: பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணமில்லாமல் சிகிச்சைகளைப் பெறலாம்.

காப்பீட்டுத் தொகை:

  • ரூ. 5 லட்சம் ஆனது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதாரப் பராமரிப்புக்காக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு வழங்கப்படுகிறது.
  • மருத்துவமனைக்குச் செல்வதற்கு முந்தைய நிலையிலான செலவுகள் (3 நாட்கள் வரை) மற்றும் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிந்தைய செலவுகளை (15 நாட்கள் வரை) இத்திட்டம் ஏற்றுக் கொள்கிறது.
  • ஏற்கனவே இருக்கும் நிபந்தனைகளும் இதில் உள்ளடக்கப் பட்டுள்ளன.

பரந்த அளவில் காப்பீடு:

  • அறுவை சிகிச்சை, தினசரி சிகிச்சைகள், நோய்க் கண்டறிதல் மற்றும் மருந்துகள் உட்பட இதில் 1,393க்கும் மேற்பட்ட சேவைகள் உள்ளடக்கப் பட்டுள்ளன.

கூடுதல் தகவல்:

  • முக்கியச் சாதனைகள்:
  • இதுவரை 35.4 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன.
  • 30,529க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன (17,063 பொது மருத்துவமனைகள் மற்றும் 13,466 தனியார் மருத்துவமனைகள் உட்பட).
  • இதில் 49% ஆயுஷ்மான் அட்டைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

விரிவாக்கம்:

  • இந்தத் திட்டம் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்தக் குடிமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இதில் ஒரு குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகை என்ற அளவில் அளிக்கப் படுகிறது.
  • எண்மமுறை சார்ந்த சுகாதாரத் திட்டம் (ABDM): ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு (ABHA) உட்பட, சுகாதாரத்திற்கான  எண்ம உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துகிறது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்