TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 12

December 8 , 2024 30 days 300 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 12

(For English version to this please click here)

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY)

தொடங்கப்பட்ட தினம்:

  • டிசம்பர் 31, 2016 அன்று அறிமுகப்படுத்தபட்டது.
  • ஜனவரி 1, 2017 அன்று செயல்படுத்தப்பட்டது.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

PMMVY திட்டத்தின் நோக்கங்கள்

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்து நிலை மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த நிதி உதவி வழங்குதல்.
  • சிறந்த சுகாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் தாய் மற்றும் சிசு இறப்பைக் குறைத்தல்.

  • பாதுகாப்பான பிறப்புகளை உறுதி செய்ய மருத்தவமனையில் நடைபெறும் பிரசவங்களை ஊக்குவித்தல்.

  • குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமான தாய்ப்பால் அளிப்பதை ஊக்குவித்தல்.
  • ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துதல்.

PMMVY திட்டத்தின் பயனாளிகள்

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அங்கன்வாடி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களில் பதிவு செய்தவர்கள்.

  • ஏற்கனவே உள்ள பிற அரசுத் திட்டங்களின் கீழ் மகப்பேறு பலன்களைப் பெறாத பெண்கள்.
  • ஆதார் எண்களை வழங்கவும், திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றவும் தயாராக உள்ள பெண்கள்.

தகுதி அளவுகோல்கள்

  • விண்ணப்பதாரர் கர்ப்பிணிப் பெண் அல்லது பாலூட்டும் தாயாக இருக்க வேண்டும்.
  • அவருக்கு குறைந்தது 19 வயது இருக்க வேண்டும்.

  • இந்தத் திட்டம் முதலில் பிறந்து வாழும் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும்.
  • கர்ப்பம் காரணமாக பெண்கள் ஊதிய இழப்பைச் சந்திக்க வேண்டும்.
  • அங்கன்வாடி மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிற சுகாதார மையங்களில் பெண்கள் பதிவு செய்ய வேண்டும்.

PMMVY திட்டத்தின் நன்மைகள்

பண பலன் ரூ. 5,000 மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது, அவை பின்வருமாறு:

  • முதல் தவணை (ரூ. 1,000): அங்கன்வாடி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிலையத்தில் ஆரம்ப கால கர்ப்பப் பதிவு மூலம் வழங்கப் படுகிறது.
  • இரண்டாவது தவணை (ரூ. 2,000): கர்ப்பமாகி 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்தபட்சம் ஒரு முறை பிறப்புக்கு முந்தையப் பரிசோதனையை (ANC – Ante Natal Care) பெற்ற பிறகு வழங்கப் படுகிறது.

  • மூன்றாவது தவணை (ரூ. 2,000): பிரசவம் மற்றும் குழந்தையின் பதிவுக்குப் பிறகு, முதல் சுற்று தடுப்பூசியுடன் சேர்த்து வழங்கப் படுகிறது.

  • மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்களுக்கு கூடுதலாக ஜனனி சுரக்சா யோஜனா (JSY) திட்டத்தின் கீழ் பயன்களை அளிக்கிறது.

கூடுதல் தகவல்கள்

  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஊதிய இழப்பை ஓரளவு ஈடுசெய்வது மற்றும் பிரசவத்திற்கு முன்பும், பின்பும் பெண்கள் போதுமான ஓய்வு எடுக்க உதவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

  • முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்: சில நிபந்தனைகளின் கீழ் இரண்டாவது பெண் குழந்தைக்கும் பலன்கள் நீட்டிக்கப் படலாம் என்ற நிலையில், கர்ப்ப காலத்தில், கர்ப்பம் பதிவு செய்யப் பட்டால் இரண்டாவது குழந்தைக்கு மொத்தத் தொகையாக ரூ. 6,000 வழங்கப் படுகிறது.

  • ஆவணம் சமர்ப்பிப்பதில் உள்ள சிரமங்கள் (எ.கா. ஆதார் இணைப்பது) மற்றும் சில பெண்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லாமை போன்ற செயல்படுத்துதல் ரீதியிலானச் சவால்களை இந்தத் திட்டம் எதிர்கொள்கிறது.

பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா (PMBJP)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2008 (ஆரம்பத்தில் ஜன் ஔஷதி பிரச்சாரம் என அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர், 2015 ஆம் ஆண்டில் பெயர் மாற்றம் செய்யப் பட்டது).

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்.
  • இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் (PMBI).

நோக்கங்கள்:

  • தரமான மரபு சார் மருந்துகளை மலிவு விலையில் வழங்குதல்.
  • குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தரமான மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்துதல்.
  • பொதுவான மருந்துகளின் செயல்திறன் மற்றும் மலிவு விலை பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குதல்.

  • வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுய தொழிலை ஆதரிக்கவும் ஜன் ஔஷதி கேந்திராக்களை திறப்பதை ஊக்குவித்தல்.
  • குறிப்பாகச் சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவு மக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்புக்கானச் செலவினங்களைக் குறைத்தல்.

பயனாளிகள்:

  • பொது மக்கள்: குறிப்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கியப் பின்னணியில் உள்ளவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பின்தங்கியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

  • தொழில்முனைவோர்: சுய வேலைவாய்ப்புக்காக ஜன் ஔஷதி கேந்திராக்களை (JAKs) அமைக்க விரும்பும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள்.

தகுதியான நிறுவனங்கள்:

  • அரசு சாரா நிறுவனங்கள்.
  • தொண்டு நிறுவனங்கள்.
  • தொழில்முறை அமைப்புகள்.
  • தனியார் மருத்துவமனைகள்.
  • அறக்கட்டளைகள்.
  • சுய உதவிக் குழுக்கள்.

பலன்கள்:

தனிநபர்களுக்கு:

  • தரம் பெற்ற மருந்துகளை விட சுமார் 50% முதல் 90% வரை குறைந்த விலையில் மரபுசார்  மருந்துகளைப் பெறலாம்.
  • குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் மருந்துகளுக்கான மேம்படுத்தப் பட்ட அணுகல்.
  • ஜெனரிக் (காப்புரிமை அற்ற வகை) மருந்துகளின் நன்மைகள் மற்றும் தரம் பற்றிய விழிப்பு ணர்வு மேம்படுத்தப்பட்டது.

சமூகத்திற்கு:

  • சுகாதாரச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் சுகாதார அமைப்புகளின் மீதான சுமை குறைக்கப் பட்டது.
  • ஜன் ஔஷதி கேந்திராக்களை நிறுவுவதன் மூலம் பொருளாதார நடவடிக்கை மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் அதிகரித்தது.
  • வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் மருந்துகளை அணுகக் கூடிய வகையில் இது சமூகச் சமத்துவமின்மையைக் குறைத்துள்ளது.

தொழில்முனைவோருக்கு:

  • ஜன் ஔஷதி கேந்திரங்களை நிறுவ நிதி ஊக்கத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப் படுகிறது.
  • பெண் தொழில்முனைவோர், திவ்யாங் தனிநபர்கள் மற்றும் உயர் லட்சிய மாவட்டங்களில் உள்ளவர்களுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப் படுகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • PMBJP மையங்கள்: 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 10,500 மையங்களை உருவாக்கும் இலக்குடன், இந்தியா முழுவதும் 8,675 மையங்கள் திறக்கப் பட்டுள்ளன.
  • ஜன் ஔஷதி ஆக்ஸோ - மக்கும் மாதவிடாய் கழிவுத் துணி: மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ. 1க்குக் கிடைக்கும் வகையில் மாதவிடாய் கழிவுத் துணியானது அறிமுகப் படுத்தப்பட்டது.
  • ஜன் ஔஷதி திவாஸ்: இந்தத் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுகாதாரப் பரிசோதனைகளை வழங்கவும் ஆண்டுதோறும் ஜன் ஔஷதி திவாஸ் கொண்டாடப்படுகிறது.

  • e-Aushadhi செயலி: இச்செயலி அருகிலுள்ள ஜன் ஔஷதி கேந்திராக்களைக் கண்டறிய உதவுகிறது, மேலும் பொதுவான மற்றும் தரம் பெற்ற மருந்துகளின் விலைகளையும் ஒப்பிடுகிறது.
  • நிதி ஆதரவு: தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கிராமப்புறம் / தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்குச் சிறப்பு நிதிச் சலுகைகளை வழங்குகிறது.

  • இந்தத் திட்டம் சுகாதாரச் செலவுகளைக் குறைப்பதிலும், தரமான மருந்துகளுக்கான அணுகலை அதிகரிப்பதிலும், சுயதொழிலுக்கான வாய்ப்புகளை வழங்குவதிலும், சுகாதாரத்தை நன்கு பேண மருந்துகளை மிக மலிவான விலையிலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அணுகக் கூடியதாகவும் மாற்றுவதில் முக்கியப் பங்காற்றுகிறது.

தேசிய ஆயுஷ் திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • தேசிய ஆயுஷ் மிஷன் (NAM), 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஆயுஷ் அமைச்சகம்.
  • இது ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) உள்ளிட்ட இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய நிதியுதவித் திட்டமாகும்.

NAM திட்டத்தின் நோக்கங்கள்:

  • ஆயுஷ் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை சுகாதார மையங்களில் ஆயுஷ் வசதிகளை ஒருங்கிணைத்தல் மூலம் ஆயுஷ் சேவைகளுக்கான அணுகுதலை அதிகரித்தல்.
  • ஆயுஷ் மருந்துகளுக்கான நிலையான மூலப்பொருட்களை வழங்குவதற்கு நல்ல விவசாயச் செயல்முறைகளை (GAP) விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் மருத்துவத்திற்கான தாவரச் சாகுபடியை ஊக்குவித்தல்.

  • தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை உறுதி செய்ய ஆயுஷ் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துதல்.
  • நோய்த் தடுப்பு, நோய் தீர்க்கும் மற்றும் மறுவாழ்வு சுகாதாரத்தில் ஆயுஷ் செயல்முறைகளின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.

முக்கிய அம்சங்கள்:

  • ஆயுஷ் அமைப்புகளின் இணை இருப்பிட மையங்கள்: ஆரம்ப சுகாதார மையங்கள் (PHC), சமூக சுகாதார மையங்கள் (CHC), மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் (DHs).
  • அத்தியாவசிய மருந்துகள் வழங்கல்: ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்குதல்.
  • ஆயுஷ் மருத்துவமனைகளை மேம்படுத்துதல்: 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகளை அமைத்தல் உள்ளிட்டவை.

  • மருத்துவத் தாவரங்களை வளர்ப்பதற்கு ஆதரவு: பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப் படும் மூலிகைகள் சாகுபடியில் ஈடுபட விவசாயிகளை ஊக்குவித்தல்.
  • ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை (HWCs) நிறுவுதல்: இவை ஆரோக்கியம், நோய்த் தடுப்பு மற்றும் நோய்களை நிர்வகிப்பதற்கான ஆயுஷ் செயல்முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
  • நெகிழ்வான கூறுகள்: ஆராய்ச்சி, ஆரோக்கிய மையங்கள், தொலைதூர மருத்துவச் சேவைகள் மற்றும் பல்வேறு பொது சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

நிர்வாகம் மற்றும் செயல்படுத்துதல்:

  • நிதியளிப்பு முறை: இந்தத் திட்டம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற நிதி விகிதத்தில் செயல்படுத்தப் படும் நிலையில். வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களுக்கு, இது 90:10 என்பது நிதி விகிதம் ஆகும்.
  • மாநில வருடாந்திரச் செயல் திட்டங்கள் (SAAPs): மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மானியங்களைப் பெறுவதற்கான திட்டங்களை முன்மொழிகின்றன.

  • ஆயுஷ்மான் பாரத் உடன் (2020) இணைத்தல்: இந்தியாவின் பொது சுகாதார அமைப்பில் முக்கியப் பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளுக்கு ஆயுஷ் HWC மையங்கள் ஆயுஷ்மான் பாரத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

சாதனைகள்:

  • 2022-23 நிதியாண்டில் 8.42 கோடி பயனாளிகள் ஆயுஷ் சேவைகளைப் பெற்றுள்ளனர், இது 2020-21 ஆம் ஆண்டில் 1.5 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

NAM திட்டத்தின் கூறுகள்:

  • ஆயுஷ் சேவைகள்: இணை இருப்பிட மையங்கள், அத்தியாவசிய மருந்துகள் வழங்கல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல்.
  • ஆயுஷ் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்: யோகா, தொற்றாத நோய் மேலாண்மை, நோய்த் தடுப்பு சிகிச்சை மற்றும் மனநலம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
  • மருத்துவ தாவரங்கள்: சாகுபடியை ஊக்குவித்தல் மற்றும் மருத்துவத் தாவரங்களின் நிலையான மேலாண்மை.

நிதி ஆதரவு:

  • மாநில அரசுகளுக்கு அவர்களின் மாநில வருடாந்திரச் செயல் திட்டங்களின் (SAAPs) அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது.
  • உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி: இதில் ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை மேம்படுத்துதல், புதிய நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் மருத்துவத் தாவரங்கள் சாகுபடி மற்றும் செயலாக்கத்திற்கான உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.

NAM திட்டத்தின் கீழ் மற்ற முக்கிய முன்னெடுப்புகள்:

  • ஆயுஷ் தொழில்முனைவோர் திட்டம்: ஆயுஷ் துறையில் புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துதல்.
  • ஆயுஷ்மான் பாரத் ஒருங்கிணைப்பு: 2020 ஆம் ஆண்டில், ஆயுஷ் கொள்கைகளின் அடிப்படையில் முழுமையான ஆரோக்கிய மாதிரியை வழங்க ஆயுஷ்மான் பாரத் முன்னெடுப்பில் ஆயுஷ் HWC மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்சா யோஜனா (PMSSY)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • மார்ச் 2006 (2003 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது).

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • நாடு முழுவதும் மலிவு மற்றும் நம்பகமான மூன்றாம் நிலை சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்கான பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்தல்.
  • பின்தங்கிய பகுதிகளில் தரமான மருத்துவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துதல்.
  • AIIMS போன்ற நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துதல்.

கூறுகள்:

AIIMS போன்ற நிறுவனங்களை நிறுவுதல்:

  • அதிநவீன வசதிகள் மற்றும் மருத்துவக் கல்வித் திட்டங்களுடன் 22 புதிய எய்ம்ஸ் நிறுவனங்களை அமைத்தல்.
  • இந்த நிறுவனங்கள் மூன்றாம் நிலை சுகாதாரம், ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன என்பதோடு இது பின்தங்கியப் பகுதிகளில் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயர்த்துதல்:

  • சிறப்புப் பிரிவுகள், படுக்கைகள் மற்றும் முதுகலை திட்டங்களைச் சேர்ப்பதன் மூலம் தற்போதுள்ள மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • மேம்படுத்தப்பட்ட சுகாதாரச் சேவைகள் மற்றும் கல்விக்கான அணுகுதலைப் பெறும் வகையில், இந்தியா முழுவதும் பின்தங்கியப் பகுதிகளில் உள்ள மக்கள்.
  • மேம்படுத்தப் பட்ட கல்வி மற்றும் பயிற்சி வசதிகளால் பயன்பெறும் மருத்துவ மாணவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • பயனாளிகளுக்குக் குறிப்பிட்ட தகுதி அளவுகோல் இல்லை; இருப்பினும், மோசமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உள்ள பகுதிகளுக்கு இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கிறது.
  • மேம்படுத்தப்படும் மருத்துவக் கல்லூரிகள் சுகாதார அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

பலன்கள்:

  • பின்தங்கிய பகுதிகளில் மூன்றாம் நிலை சுகாதாரச் சேவைகளுக்கான அணுகல் அதிகரித்தது.
  • மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்தியது.

  • பல்வேறு மாநிலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவ வசதிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்குகிறது.
  • பொது சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சைகளுக்கு மேம்படுத்தப்பட்ட சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது.
  • பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் முதுகலைப் படிப்புகள் மூலம் மருத்துவ நிபுணர்களை உருவாக்குதல்.

கூடுதல் தகவல்:

இந்தத் திட்டம் பல கட்டங்களில் செயல்படுத்தப்பட்டது:

  • முதல் கட்டம்: 6 புதிய AIIMS போன்ற நிறுவனங்கள், 13 மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தல்.
  • இரண்டாம் கட்டம்: 2 புதிய எய்ம்ஸ் நிறுவனங்கள் மற்றும் 6 மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துதல்.
  • மூன்றாம் கட்டம்: மேலும் 7 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்துதல்.
  • எய்ம்ஸ் நிறுவனங்கள் தன்னாட்சி பெற்றவை என்பதோடு அவை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.
  • அவை இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகள் மற்றும் சிறப்பு சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது.

          -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்