TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 16

December 17 , 2024 21 days 283 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 16

(For English version to this please click here)

தொழிற்துறை மதிப்பை மேம்படுத்துவதற்கான திறனை வலுப்படுத்துவதற்கான (STRIVE) திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2017.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் (MSDE).

நோக்கங்கள்:

  • தொழிற்துறை முழுவதும் பயிற்சித் திட்டங்களின் வரம்பையும், நோக்கத்தையும் விரிவுபடுத்துதல்.
  • தொழிற்பயிற்சியின் தரம் மற்றும் சந்தை சார்ந்தவற்றை மேம்படுத்துதல்.
  • பணியிடத்தில் பயிற்சி அனுபவத்தை மேம்படுத்துவதற்கு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை குழுக்களைத் தொழிற்பயிற்சி செயல்முறையில் ஈடுபடுத்துதல்.

பயனாளிகள்:

  • பயிற்சி பெற்றவர்கள் பயிற்சியின் முறை மூலம் பல்வேறு தொழில்களில் சேர்ந்தனர்.
  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் தொழிற்பயிற்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ள தொழில் குழுக்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் உட்பட தொழிற் பயிற்சி வழங்குநர்கள், விரிவாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் (மாணவர்கள் அல்லது தொழில் வல்லுநர்கள்) அந்தந்த தொழிற்துறைப் பயிற்சி நிறுவனங்கள் (ITI) மற்றும் தொழிற்பயிற்சி வழங்குநர்களால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்பவர்கள் தகுதியுடையவர்கள்.

பலன்கள்:

  • பயிற்சி வாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
  • பயிற்சித் திட்டங்களில் பரந்த தொழில்துறைப் பங்கேற்பு, செய்முறை திறன்களை மேம்படுத்துதல்.
  • தொழிற்துறைப் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைக் குழுக்களுக்கு இடையே பலப்படுத்தப் பட்ட இணைப்புகள், பயிற்சியாளர்கள் நிஜ-உலக சூழல்களில் அனுபவத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது.

கூடுதல் தகவல்கள்:

  • பயிற்சிக் கட்டமைப்பை மேம்படுத்த தொழிற்துறைப் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பை STRIVE ஊக்குவிக்கிறது.
  • இந்தத் திட்டமானது, தொழிற்துறையினருக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, தொழிற்பயிற்சியாளர்களுக்கு, தொழில் பங்கேற்பை மேம்படுத்தும் ஊக்கத் தொகைகளை உள்ளடக்கியது.
  • இந்த விரிவுபடுத்தப்பட்ட தொழிற் பயிற்சியானது பல்வேறு துறைகளில் உள்ள திறன் இடைவெளியைக் குறைப்பதற்கும், தொழிற்பயிற்சியாளர்களுக்கு தொழில் தேவைகளுக்கு ஏற்ப நிகழ்நேரப் பணி அனுபவத்தை வழங்குவதற்கும் உதவுகிறது.

பிரதான் மந்திரி உச்சதர் சிக்சா அபியான் (PM-USHA) திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • ஜூன் 2023.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • கல்வி அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதன் மூலம் தற்போதுள்ள மாநில உயர் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்தத் தரத்தை மேம்படுத்துதல்.
  • மாநில உயர் கல்வி நிறுவனங்களில் நிர்வாகம், கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தங்களை எளிதாக்குதல்.

  • சுயசார்பு நிறுவனங்களை உருவாக்க பள்ளிக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையுடன் பின்தங்கிய மற்றும் முன்னோக்கியத் தொடர்பை ஏற்படுத்துதல்.
  • உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்.
  • ஒரு திட்டமிட்ட வளர்ச்சியின் மூலம் உயர் கல்வியில் அணுகல், சமத்துவம் மற்றும் தரத்தை மேம்படுத்துதல்.
  • புதிய கல்வி நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்துதல் அல்லது மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல்.

பயனாளிகள்:

  • மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த கல்லூரிகள்.
  • தொலைதூர, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மாவட்டங்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் குறைந்த மொத்தச் சேர்க்கை விகிதம் (GER) உள்ள பகுதிகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் (HEIs) மாணவர்கள்.
  • ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பல்துறை ஒழுங்கு ஆதரவு தேவைப்படும் அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • UGC சட்டத்தின் பிரிவு 2(f) இன் கீழ் வரும் கல்லூரிகள் நிதியுதவி பெறத் தகுதியுடையவை.
  • கல்வி நிறுவனங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார வாரியத்திற்குரிய (NAAC) கிரேடு A அங்கீகாரம் அல்லது தேசிய அங்கீகார வாரியத்திற்குரிய (NBA) நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பலன்கள்:

  • MERU (பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சி) மாற்றத்திற்கான அங்கீகாரம் பெற்ற 35 மாநில பல்கலைக்கழகங்களுக்கு ரூ.100 கோடி ஆதரவு.
  • புதிய மாதிரிப் பட்டயக் கல்லூரிகளை நிறுவுதல்.
  • தற்போதுள்ள பல்கலைக்கழகங்களை வலுப்படுத்துவதற்கும். உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மானியங்களை வழங்குதல்.

  • தொலைதூர, LWE-பாதிக்கப்பட்ட மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மாவட்டங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துப் படுகிறது.
  • பாலினச் சேர்க்கை மற்றும் சம பங்கு, ICT அடிப்படையிலான வேலைவாய்ப்புத் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
  • கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்துறை சீரமைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • இந்தத் திட்டம் தேசியக் கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவில் உயர் கல்வியை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சில மாநிலங்களுக்கு 90:10 நிதி விகிதத்திலும், மற்றவைகளுக்கு 60:40 என்ற விகிதத்திலும் விளைவு அடிப்படையிலான மாதிரியில் நிதி வழங்கப்படுகிறது.
  • சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பிரதேசங்கள் 100% மத்திய நிதியைப் பெறுகின்றன.
  • இந்தத் திட்டம் இந்தியாவின் உயர்கல்வி அமைப்பில் தரம், சமத்துவம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இலக்கு 05: பாலினச் சமத்துவம்

பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ (BBBP) திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • ஜனவரி 22, 2015.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்.
  • கல்வித் துறை அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • பாலினச் சார்புடைய பாரபட்சமான, பாலினம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுத்தல்.
  • பெண் குழந்தையின் உயிர் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.
  • பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்களிப்பை உறுதி செய்தல்.
  • பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
  • குழந்தைப் பாலின விகிதம் (CSR) மற்றும் பிறப்பின் போது பாலின விகிதம் (SRB) ஆகியவற்றை மேம்படுத்துதல்.
  • இடைநிலைக் கல்வியில், குறிப்பாக STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) ஆகியவற்றில் பெண்களின் சேர்க்கையை அதிகரித்தல்.
  • பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் மாறா நிலையில் உள்ள சவால்களை எதிர்த்தல்.

பயனாளிகள்:

  • முதல் நிலை: இளம் மற்றும் புதிதாக திருமணமான தம்பதிகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், பெற்றோர்.
  • இரண்டாம் நிலை: இளைஞர்கள், இளம் பருவத்தினர் (பெண்கள் மற்றும் சிறுவர்கள்), மருத்துவ நிபுணர்கள், தனியார் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் நோய் கண்டறியும் மையங்கள்.
  • மூன்றாம் நிலை: அதிகாரிகள், பஞ்சயாத்து ராஜ் நிறுவனங்கள் (PRIs), முன்னணி பணியாளர்கள், பெண்கள் சுய உதவிக் குழுக்கள், மதத் தலைவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • இந்தத் திட்டம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, குறைந்த குழந்தைப் பாலின விகிதம் (CSR) உள்ள மாவட்டங்களையும், CSR மற்றும் பிறப்பு பாலின விகிதத்தில் (SRB) குறைந்து வரும் பகுதிகளையும் இலக்காகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வியை உறுதி செய்வதற்கும், ஆதரவு தேவைப்படும் சமூகங்கள், நிறுவனங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு என்று உருவாக்கப் பட்டுள்ளது.

பலன்கள்:

  • மேம்படுத்தப்பட்ட பிறப்புப் பாலின விகிதம் (SRB) மற்றும் குழந்தைப் பாலின விகிதம் (CSR).
  • அதிகரித்த மருத்துவமனையில் நடைபெறும் பிரசவங்கள் மற்றும் ANC (பிறப்புக்கு முந்தையப் பராமரிப்பு) பதிவு.
  • இடைநிலைக் கல்வியில் பெண்களின் சேர்க்கை அதிகரித்தல் மற்றும் அவர்களுக்கான பள்ளி உள்கட்டமைப்பில் முன்னேற்றம் (எ.கா., செயல்பாட்டில் இருக்கும் கழிப்பறைகள்).
  • மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து நிலை மற்றும் குறைந்த எடை மற்றும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைப்பு.
  • பெண்களுக்கான பாரம்பரியமற்ற வாழ்வாதார (NTL) திறன்களை மேம்படுத்துதல்.
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் நிதி உதவி வழங்குதல்.
  • பெண் குழந்தைகளின் உரிமைகளுக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் ஆதரவு.

கூடுதல் தகவல்கள்:

  • இது ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பாலினம் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் பல துறை தலையீடுகளைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • இலக்கு விளைவுகளில் SRB விகிதத்தை ஆண்டுதோறும் 2 புள்ளிகளால் மேம்படுத்துதல், பாலின அடிப்படையிலான குழந்தை இறப்பைக் குறைத்தல் மற்றும் இடைநிலைக் கல்வியில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
  • இத்திட்டம் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு, குழந்தைத் திருமண ஒழிப்பு மற்றும் பெண்களுக்கு ஒட்டு மொத்த அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
  • சில மாநிலங்களில் நிதி குறைவாகப் பயன்படுத்தப்படுவதால், இதைச் செயல்படுத்துவதில் சில சவால்கள் உள்ளன, ஆனாலும் இத்திட்டத்தின் விரிவாக்கம் தொடர்கிறது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2015.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • நிதி அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கானச் சேமிப்பை ஊக்குவித்தல்.
  • பெண் குழந்தைகளுக்கான நிதிப் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலை ஊக்குவித்தல்.
  • பெண் குழந்தைகளின் பரந்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல்.

பயனாளிகள்:

  • பெண் குழந்தைகள் (இந்திய குடிமக்கள்), அவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலர்களால் திறக்கப்பட்ட கணக்குகள்.
  • ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் இரண்டு கணக்குகள், தலா ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒன்று.

தகுதி அளவுகோல்கள்:

  • கணக்கு தொடங்கும் போது பெண் 10 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.
  • ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் இரண்டு SSY கணக்குகள் அனுமதிக்கப்படும்.
  • பெண் 18 வயதை அடைந்தவுடன் கணக்கைச் செயல்படுத்த வேண்டும்.

பலன்கள்:

வரி நன்மைகள்:

  • வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் (வருடத்திற்கு ₹1.5 லட்சம் வரை) வரி விலக்குக்குத் தகுதியானப் பங்களிப்புகள்.
  • வரி இல்லாத வட்டி மற்றும் முதிர்வு வருமானம்.

  • பாதுகாப்பு: நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசு ஆதரவு சேமிப்புத் திட்டம்.
  • பகுதியளவு திரும்பப் பெறுதல்: பெண் 18 வயதை அடைந்த பிறகு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு கல்வி நோக்கங்களுக்காக 50% திரும்பப் பெறப் படுவதற்கு இது அனுமதிக்கிறது.
  • முதிர்வு: கணக்கு தொடங்கி 21 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது பெண்ணின் 18 வயதில் திருமணம் நிகழ்வது இதில் எது முந்தையதோ அதன் படி முதிர்வு பெறும்.

கூடுதல் தகவல்கள்:

  • கணக்கு திறப்பு: எந்தவொரு தபால் அலுவலகத்திலும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியிலும் கணக்கினைத் திறக்கலாம்.
  • வைப்புத்தொகை: வருடத்திற்கு குறைந்தபட்சம் ₹250; ஆண்டுக்கு அதிகபட்சம் ₹1.5 லட்சம்.
  • கணக்கு பெயர்வுத்திறன்: இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம், ஒரு தபால் அலுவலகம் / வங்கியில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றலாம்.
  • திரும்பப் பெறுதல்: முதிர்ச்சியின் போது பெண் குழந்தைக்குச் செலுத்த வேண்டிய முழுத் தொகை.
  • முன்கூட்டியே கணக்கினை மூடல்: கணக்கு வைத்திருப்பவரின் மரணம் அல்லது கணக்கு வைத்திருப்பவருக்கு தேவையற்ற சிரமம் ஏற்பட்டால் அனுமதிக்கப்படுகிறது.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2015.

அமைச்சகம் / தலைமை முகமை:

  • நிதி அமைச்சகம், முத்ரா (MUDRA - Micro Units Development & Refinance Agency Limited).

நோக்கம்:

  • பெருநிறுவனம் அல்லாத, பண்ணை அல்லாத சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையில்லாமல் கடன் வழங்குதல்.
  • முறையான நிதி அமைப்பில் குறைவான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSME) ஒருங்கிணைப்பதன் மூலம் நிதிச் சேர்க்கையை எளிதாக்குதல்.

  • சிறு தொழில்கள் மற்றும் தொழில்முனைவோரை ஆதரிப்பதன் மூலம் சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்த உதவுதல்.

பயனாளிகள்:

  • பெருநிறுவனம் அல்லாத, பண்ணை அல்லாத சிறு மற்றும் குறு நிறுவனங்களான தனிநபர்கள், சொத்துச் சார்புடையவைகள், கூட்டாண்மைகள் மற்றும் உற்பத்தி, செயலாக்கம், வர்த்தகம் மற்றும் சேவைகள் போன்ற வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற சட்ட நிறுவனங்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • சாத்தியமான வணிகத் திட்டத்துடன் உள்ள இந்தியக் குடிமக்கள்.
  • விவசாயம் அல்லாத பிற வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு கடன் கிடைக்கும்.
  • குறு நிதி நிறுவனங்கள் (MFIs), வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) கடன் வழங்கும் நிறுவனங்களாக செயல்படுகின்றன.

பலன்கள்:

  • இணை ஈடு அல்லது செயலாக்கக் கட்டணங்கள் தேவையில்லை.
  • கடன் வகையைப் பொறுத்து ₹50,000 முதல் ₹10 லட்சம் வரை கடன் தொகை.
  • நெகிழ்வான வகையில் திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள்.
  • ATMகளின் மூலம் செயல்பாட்டு மூலதனத்தை அணுக முத்ரா அட்டை வசதி.

கூடுதல் தகவல்கள்:

  • முத்ரா வங்கிகள், MFI நிறுவனங்கள் மற்றும் NBFC நிறுவனங்களுக்கு மறுநிதியளிப்பு வழங்குகிறது, ஆனால் தொழில்முனைவோருக்கு நேரடியாக கடன் வழங்காது.

PMMY திட்டத்தின் கீழ் மூன்று கடன் பிரிவுகள் உள்ளன:

  • ஷிஷு: ₹50,000 வரை கடன் (புதிய சிறு நிறுவனங்களுக்கு).
  • கிஷோர்: ₹50,000க்கு மேல் மற்றும் ₹5 லட்சம் வரையிலான கடன்கள் (வளர்ச்சி நிலையில் உள்ள வணிகங்களுக்கு).
  • தருண்: ₹5 லட்சம் மற்றும் ₹10 லட்சம் வரையிலான கடன்கள் (மேலும் விரிவாக்க விரும்பும் வணிகங்களுக்கு).

2024 மத்திய பட்ஜெட்டில் சமீபத்திய மாற்றங்கள்

  • கடன் வரம்பு அதிகரிப்பு: தருண் பிரிவின் கீழ் கடன் வரம்பு ₹10 லட்சத்தில் இருந்து ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, இதன் மூலம் முந்தையக் கடனை வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்திய தொழில் முனைவோர் பயனடைவார்கள்.
  • புதிய வகை - தருண் பிளஸ்: ₹10 லட்சத்துக்கு மேல் மற்றும் ₹20 லட்சம் வரையிலான கடன்களுக்கு தருண் பிளஸ் என்ற புதிய கடன் வகை உருவாக்கப் பட்டது.
  • தருண் வகையின் கீழ் கடன்களை வெற்றிகரமாகத் திருப்பிச் செலுத்திய தொழில் முனைவோருக்குத் தகுதி வரம்பிடப் பட்டுள்ளது.

முக்கியச் சாதனைகள்:

  • நிதிச் சேர்க்கை: PMMY கடன் கணக்குகளில் 71.4% பெண்களிடம் உள்ளது, மேலும் இதில் கணிசமான பகுதி (51%) SC / ST (பட்டியலிடப்பட்ட சாதியினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் (OBC) தொழில்முனைவோருக்கானது.
  • இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்திறன்: கடன் கணக்குகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட தொகைகள் ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன, மேலும் கடன் கணக்குகளின் எண்ணிக்கையில் சுமார் 12% அதிகரிப்பு மற்றும் அனுமதிக்கப்பட்ட தொகையில் சுமார் 14.7% உயர்வு நிகழ்ந்துள்ளது.

முத்ரா 2.0 திட்டத்தின் நீண்ட கால நோக்கம்:

  • விரிவாக்கப்பட்ட நோக்கம்: நிதிக் கல்வியறிவு மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களுடன், கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புற பகுதிகளுக்கான விரிவாக்கம்.
  • மேம்படுத்தப்பட்ட கடன் உத்தரவாதத் திட்டம் (ECGS): நிதி நிறுவனங்களுக்கான ஆபத்தைக் குறைப்பதன் மூலம் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்குவதை ஊக்குவிக்கிறது.
  • வலுவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக் கட்டமைப்பு (RMEF): சிறந்த வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறனுக்காக கடன் வழங்குதல், பயன்பாடு மற்றும் திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றின் நிகழ்நேரக் கண்காணிப்பை உறுதி செய்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்