TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 17

December 20 , 2024 11 hrs 0 min 78 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 17

(For English version to this please click here)

ஜனனி சுரக்சா யோஜனா (JSY)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2005.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW).

நோக்கங்கள்:

  • மருத்துவமனையில் நடைபெறும் பிரசவத்தை ஊக்குவிப்பதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்பைக் குறைத்தல்.
  • மிகவும் பின்தங்கிய பின்னணியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவி வழங்குதல், அவர்களை மருத்துவ மனைகளில் பிரசவம் மேற்கொள்ள ஊக்குவித்தல்.
  • குறிப்பாக குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில், மருத்துவமனையில் நடைபெறும் பிரசவத்தை மேம்படுத்துதல்.

பயனாளிகள்:

  • கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பாக பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL) உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
  • கிராமப்புறப் பெண்கள், பழங்குடிச் சமூகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

தகுதி அளவுகோல்கள்:

  • 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்.
  • இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறந்த பெண்கள்.
  • உயர் செயல்திறன் கொண்ட மாநிலங்களில் (HPS) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL), SC, அல்லது ST சமூகங்களைச் சேர்ந்தப் பெண்கள் அல்லது குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் (LPS) உள்ள கர்ப்பிணிப் பெண்கள்.
  • அரசு சுகாதார வசதிகள் அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் பிரசவிக்கும் கர்ப்பிணிப் பெண்கள்.

பலன்கள்:

  • மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவத்திற்குப் பிறகு பெறப்படும் ஊக்கத்தொகை: கிராமப் புறங்களில் ₹1,400 மற்றும் நகர்ப்புறங்களில் ₹1,000.
  • பயனாளிகளைச் சுகாதார வசதிகளுடன் இணைப்பதற்காக அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களுக்கு (ASHA) ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகின்றன.
  • பிரசவத்திற்கான நிதி உதவி (அறுவைச் சிகிச்சை அல்லது C-Section உட்பட) மற்றும் பிற மகப்பேறு தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன.
  • மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களை ஊக்குவித்தல் மற்றும் சுகாதார அணுகலை மேம்படுத்துவதன் மூலம் தாய் மற்றும் குழந்தை இறப்பைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.

கூடுதல் தகவல்கள்:

  • இத்திட்டம் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவ விகிதத்தின் அடிப்படையில் மாநிலங்களைக் குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள் (LPS) மற்றும் அதிக செயல் திறன் கொண்ட மாநிலங்கள் (HPS) என வகைப்படுத்துகிறது.
  • LPS மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் போன்றவை அடங்கும் என்பதோடு இது மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவ விகிதங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • இந்தத் திட்டம் இந்தியாவின் தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) ஒரு முக்கிய அங்கமாகும் என்பதோடு இது உலகளாவிய சுகாதார அணுகல் இலக்கிற்கும் பங்களிக்கிறது.
  • இந்தத் திட்டத்திற்கான நிதியானது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப் படுகிறது (முறையே 60% மற்றும் 40%).

சக்தி சாதன் திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2021.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (MWCD).

நோக்கங்கள்:

  • பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல்வேறு தலையீடுகள் மூலம் பெண்களை மேம்படுத்துதல்.
  • கடத்தல், வன்முறை மற்றும் சுரண்டலில் இருந்து தப்பியவர்கள் உட்பட கடினமானச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குதல்.
  • தங்குமிடம், தொழில் பயிற்சி மற்றும் பிற தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம் பெண்களின் வளர்ச்சியை எளிதாக்குதல்.

பயனாளிகள்:

  • கடத்தல், வன்முறை மற்றும் சுரண்டலில் இருந்து தப்பியவர்கள் உட்பட கடினமானச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்கள்.
  • தங்கும் விடுதிகள் போன்ற ஆதரவு வசதிகள் தேவைப்படும் பணிபுரியும் பெண்கள்.
  • திறன் மேம்பாடு, நிதி சுதந்திரம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை அணுக விரும்பும் பெண்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • கடத்தல் அல்லது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, துன்புற்ற நிலை அல்லது பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலைகளில் உள்ள பெண்கள்.
  • தங்குமிடம், மறுவாழ்வு மற்றும் தொழில்சார் ஆதரவு தேவைப்படும் பெண்கள்.

பலன்கள்:

  • தங்குமிடம், உணவு, உடை மற்றும் ஆரம்ப சுகாதாரம்.
  • ஆலோசனை, உளவியல் ஆதரவு மற்றும் மறுவாழ்வு சேவைகள்.
  • தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் நிதி கல்வியறிவு.
  • வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறுவதற்கும் உதவி.
  • பெண்களின் சட்ட உரிமைகளுக்கான ஆதரவு, சட்ட ஆலோசனைக்கான ஏற்பாடுகள்.

கூடுதல் தகவல்கள்:

  • திட்டங்களின் இணைப்பு: சாமர்த்தியா துணைத் திட்டத்தில் முந்தைய உஜ்வாலா, ஸ்வதர் கிரே மற்றும் பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதிகள் ஆகியவை அடங்கும்.
  • நிர்வாக நோக்கங்களுக்காக, ஸ்வதர் கிரே மற்றும் உஜ்வாலா திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, இப்போது சக்தி சாதன் என்றும் இது அழைக்கப்படுகின்றது என்ற ஒரு நிலையில் இது ஒரு ஒருங்கிணைந்த நிவாரணம் மற்றும் மறுவாழ்வு இல்லமாகும்.

  • சக்தி சாதன் முதன்மையாக கடத்தல் மற்றும் பிற துன்பச் சூழ்நிலைகளில் இருந்து தப்பியப் பெண்களுக்குத் தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குகிறது.
  • இந்தத் திட்டமானது, பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான, அதன் கூறுகளின் ஒரு பகுதியாக, தேசிய மழலையர் காப்பகத் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி மாத்ரித்வா வந்தனா யோஜனா (PMMVY) ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
  • பொருளாதார மேம்பாட்டிற்கான இடைவெளி நிதியுதவியானது, பெண்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதற்கும், அவர்களின் நிதிச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் திட்டம் சக்தி திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு இது நாடு முழுவதும் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் பெரும் கவனம் செலுத்துகிறது.

கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • ஆகஸ்ட் 2004.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • கல்வி அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • கல்வியில் பாலின இடைவெளியைக் குறைத்தல்: பெண்களின் கல்வியறிவு குறைவாக உள்ள பகுதிகளில் தரமான கல்வியை வழங்குவதன் மூலம், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கல்வியை மேம்படுத்துவதே KGBV திட்டத்தின் ஒரு முதன்மை நோக்கமாகும்.
  • சேர்க்கை அதிகரிப்பு: இத்திட்டம் பள்ளிகளில், குறிப்பாக பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் அதிகபட்ச கல்விச் சேர்க்கையை அடைய இலக்கு வைத்துள்ளது.

  • இடைநிற்றல் விகிதங்களைக் குறைத்தல்: இந்தத் திட்டம் சிறுவர்களை விட, குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதங்களைக் குறைப்பதற்காக செயல்படுகிறது.
  • குடியிருப்பு வசதிகளை வழங்குதல்: KGBV பள்ளிகள் தங்குமிட வசதிகளுடன் இலவசக் கல்வியை வழங்குகின்றன என்பதோடு தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தொலைவு அல்லது பெற்றோரின் புறக்கணிப்பு போன்ற தடைகள் இல்லாமல் கல்வியைத் தொடரவும் உதவுகின்றன.
  • வாழ்க்கை மற்றும் தொழில் திறன்கள்: பள்ளிக் கல்விக்கு கூடுதலாக, KGBV பள்ளிகள் பெண்களைச் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்துவதற்கு வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தொழில் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

பயனாளிகள்:

  • பட்டியலிடப்பட்ட சாதிகள் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்.
  • வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள (BPL) குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்.
  • இத்திட்டம் முக்கியமாக 10-18 வயதுடைய சிறுமிகளை இலக்காகக் கொண்டு கவனம் செலுத்துகிறது.
  • கிராமப்புறங்களைச் சேர்ந்த, படிப்பைக் கைவிடும் அபாயத்தில் உள்ள பெண்கள் மற்றும் குறைந்த கல்வியறிவு பெற்ற பெண்கள்.
  • கல்வி அறிவில் பாலின இடைவெளிகள் இருக்கக் கூடிய, கல்வியில் பின்தங்கிய தொகுதிகளில் (EBBs) உள்ள குழந்தைகள்.

தகுதி அளவுகோல்கள்:

  • 10 முதல் 18 வயது வரையிலான பெண்கள்.
  • SC, ST, OBC, சிறுபான்மைச் சமூகங்கள் அல்லது BPL குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
  • பள்ளியை விட்டு வெளியேறிய பெண்கள் அல்லது பள்ளியை விட்டு வெளியேறும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
  • இது ஆரம்பக் கல்வியைத் தொடர முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பெண்களை கவனத்தில் கொண்டுள்ளது.

பலன்கள்:

  • இரண்டாம் நிலை வரை இலவசக் கல்வி (ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, சில சமயங்களில்).
  • பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு இலவச உறைவிடம், தங்குமிடம் மற்றும் படிப்பு சார்ந்தப் பொருட்களை வழங்குகிறது.
  • மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கப் படுகின்றன.
  • குடியிருப்பு வசதிகளால், கிராமப்புறங்களில் உள்ள பெண் குழந்தைகளின் தூரச் சுமை மற்றும் பெற்றோரின் சிரமங்களைக் குறைக்க உதவுகின்றன.
  • பொருளாதாரச் சுதந்திரத்திற்காக பெண்களை மேம்படுத்துவதற்கு தொழில் மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி அளிக்கப் படுகிறது.
  • கல்வி வசதிகள் குறைவாக உள்ள அல்லது போதுமானதாக இல்லாத பகுதிகளில் தரமான கல்விக்கான அணுகல்.
  • தலைமைத்துவம் மற்றும் எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் அடிப்படையில் திறனை வளர்ப்பது.

கூடுதல் தகவல்கள்:

  • இத்திட்டம் தொடக்கத்தில் 75 மாவட்டங்களில், குறிப்பாக கல்வியில் பின்தங்கிய தொகுதிகளில் (EBBs) உள்ள பெண் குழந்தைகளிடையே குறைந்த கல்வியறிவு விகிதம் உள்ளவர்களுக்காக தொடங்கப் பட்டது.
  • இது காலப்போக்கில் இந்தியா முழுவதும் கல்வியில் பின்தங்கிய சுமார் 3,500 தொகுதிகளை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.
  • ஒரு பள்ளிக்கு சுமார் 50 முதல் 100 பெண்கள் தங்குவதற்கும், இலவச உறைவிடம் மற்றும் தங்குவதற்கும் KGBV பள்ளிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • சர்வ சிக்சா அபியான் (SSA) திட்டத்துடன் இணைப்பு: KGBV திட்டம் 2007 ஆம் ஆண்டில் SSA திட்டத்துடன் இணைக்கப் பட்டது, பின்னர், அது 2018 ஆம் ஆண்டில் சமக்ரா சிக்சா அபியானுடன் இணைக்கப் பட்டது.
  • உயர்வகுப்பு மேல்நிலைத் தரத்திற்கு மேம்படுத்தப் பட்டது: சில KGBV பள்ளிகள் இப்போது பின்தங்கிய பின்னணியில் உள்ள பெண்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வியை வழங்குகின்றன.
  • இட ஒதுக்கீட்டுக் கொள்கை: 75% இடங்கள் SC, ST, OBC அல்லது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள 25% BPL குடும்பத்தைச் சேர்ந்தப் பெண்களுக்கு அளிக்கப் படுகிறது.
  • கல்வியறிவு விகிதங்களை மேம்படுத்துதல், பெண் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் இறுதியில் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் பெண்கள் தன்னிறைவு பெறுவதற்கு அதிகாரமளித்தல் ஆகியவை கவனம் செலுத்தும் பகுதிகளாக உள்ளன.

பெண்களுக்கான பிரகதி உதவித் தொகை திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2014.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • கல்வி அமைச்சகம்.
  • செயல்படுத்தும் நிறுவனம்: தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்தியக் கவுன்சில் (AICTE).

நோக்கங்கள்:

  • தொழில்நுட்பக் கல்வி மூலம் பெண்களை மேம்படுத்துதல்: பிரகதி உதவித்தொகை திட்டத்தின் முக்கிய நோக்கம் டிப்ளமோ (பட்டயப் படிப்பு) அல்லது பட்டப் படிப்புகளில் தொழில்நுட்பக் கல்வியைத் தொடர விரும்பும் பெண் மாணவர்களை ஊக்குவிப்பதும், ஆதரவளிப்பதும் ஆகும்.
  • கல்வியில் பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்தல்: இத்திட்டமானது சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவைச் சேர்ந்தப் பெண் மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் குறிப்பாக கவனம் செலுத்துவதோடு மேலும் அவர்கள் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் தரமான கல்வியை அணுகவும் உதவுகிறது.

  • கல்விக்கான நிதி உதவி: கல்விக் கட்டணம் மற்றும் படிப்பு தொடர்பான பொருட்களை வாங்குவதற்கு உதவித் தொகையாக நிதி உதவியை இது வழங்குகிறது.

பயனாளிகள்:

  • தொழில்நுட்பக் கல்வியைத் தொடர விரும்பும் மாணவிகள்.
  • டிப்ளமோ அல்லது பட்டப் படிப்புகளுக்கு AICTE குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும் மாணவர்கள்.
  • ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
  • ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண் இந்த உதவித் தொகைக்கு தகுதியானவர்.
  • குடும்ப வருமானம் ₹8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தகுதி பெறலாம்.

தகுதி அளவுகோல்கள்:

  • குடியுரிமை: விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • பாலினம்: மாணவிகள் மட்டுமே தகுதியுடையவர்கள்.
  • வருமானம்: குடும்பத்தின் மொத்த வருமானம் ஆண்டுக்கு ₹6 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • வயது மற்றும் படிப்பு: விண்ணப்பதாரர் AICTE குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு அளவிலான தொழில்நுட்பப் படிப்பின் (பொறியியல், தொழில் நுட்பம், முதலியன) முதல் ஆண்டில் இருக்க வேண்டும்.
  • சேர்க்கை அளவுகோல்: விண்ணப்பதாரர் மாநில அல்லது மத்திய அரசின் மையப்படுத்தப் பட்ட சேர்க்கை செயல்முறை மூலம் அனுமதிக்கப் பட்டிருக்க வேண்டும்.

பலன்கள்:

  • கல்விக் கட்டணம் அல்லது உண்மையான கல்விக் கட்டணம் (எது குறைவாக உள்ளதோ அது) ஆண்டுக்கு ₹30,000.
  • கூடுதல் திருப்பிச் செலுத்தும் தொகை: கல்விக் கட்டணம் தள்ளுபடி அல்லது திருப்பிச் செலுத்தும் சந்தர்ப்பங்களில், புத்தகங்கள், மடிக்கணினிகள், உபகரணங்கள், மென்பொருள், வாகனங்கள் வாங்குவதற்கு அல்லது போட்டித் தேர்வுகளுக்கான கட்டணத்தை ஈடுகட்ட ₹30,000 வரை பயன்படுத்தப்படலாம்.

கூடுதல் தகவல்கள்:

உதவித்தொகைகளின் எண்ணிக்கை:

  • டிப்ளமோ படிப்புகளை தொடரும் மாணவர்களுக்கு 2000 உதவித் தொகை.
  • பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2000 உதவித் தொகை.
  • ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 4000 உதவித் தொகை வழங்கப் படுகிறது.

முன்பதிவு:

  • பட்டியலிடப்பட்ட சாதியைச் சார்ந்த (SC) விண்ணப்பதாரர்களுக்கு 15%.
  • பட்டியலிடப்பட்ட பழங்குடி பிரிவினைச் சேர்ந்த (ST) விண்ணப்பதாரர்களுக்கு 7.5%.
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27%.

தேர்வு நடைமுறை:

  • இதற்கான தேர்வு என்பது தகுதி அடிப்படையிலானது, குறிப்பாக தகுதித் தேர்வில் விண்ணப்பதாரரின் செயல் திறன் கருத்தில் கொள்ளப் படுகிறது.
  • மையப்படுத்தப்பட்ட சேர்க்கை செயல்முறை மூலம் இதன் செயல்முறையானது நிர்வகிக்கப் படுகிறது.

முக்கிய அம்சங்கள்:

  • பெண்களுக்கான கல்விக்கான அதிகரித்த அணுகல்: இந்த உதவித்தொகையானது தொழில்நுட்பக் கல்வியில் பெண்களின் சேர்க்கையைக் குறிப்பாக, அவர்கள் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட துறைகளில் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
  • கல்விச் செலவுகளுக்கான ஆதரவு: இது மாணவர்களுக்கு கல்விச் செலவு மற்றும் அது தொடர்புடைய செலவுகளை நிர்வகிக்க உதவுவதற்கு குறிப்பிடத்தக்க நிதி உதவியை வழங்குகிறது.
  • SC, ST, OBC பிரிவினருக்கான இடஒதுக்கீடு: இத்திட்டம் சமமான அணுகலை உறுதி செய்வதற்காக, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குகிறது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்