TNPSC Thervupettagam

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 18

December 27 , 2024 11 days 344 0

இந்தியாவின் SDG இலக்கு வாரியான திட்டங்கள் - பாகம் 18

(For English version to this please click here)

பெண்களுக்கான உதவி சேவைத் திட்டம் 2016

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • ஏப்ரல் 1, 2015.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • வன்முறையால் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு 24 மணி நேரமும் இலவச தொலைத்தொடர்பு சேவையை வழங்குதல்.
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பெண்களை இணைப்பதன் மூலம் நெருக்கடி மற்றும் நெருக்கடியற்ற தலையீடுகளை எளிதாக்குதல் (எ.கா., காவல்துறை, மருத்துவமனைகள், அவசர ஊர்தி சேவைகள், மாவட்டச் சட்ட சேவை ஆணையம் (DLSA), பாதுகாப்பு அதிகாரி (PO), தீர்வு வழங்கீட்டு மையம் (OSC)).
  • வன்முறை அல்லது துன்பத்தை அனுபவிக்கும் பெண்களுக்குத் தொடர்புடைய அரசாங்கத் திட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றியத் தகவல்களை வழங்குதல், குறிப்பாக அவர்களின் உள்ளூர்ப் பகுதி அல்லது வேலைவாய்ப்பு சூழ்நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டுள்ளது.

பயனாளிகள்:

  • எந்த விதமான வன்முறையையும் (குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை போன்றவை) எதிர்கொள்ளும் அல்லது துன்பத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள்.
  • பெண்கள் தொடர்பான அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிய விரும்பும் பெண்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • பொது அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் வன்முறையை அனுபவிக்கும் எந்தவொரு பெண் அல்லது சிறுமியர், அல்லது பெண்கள் நலத் திட்டங்கள் அல்லது திட்டங்களைப் பற்றிய தகவல்களைத் தேடுபவர்கள்.

பலன்கள்:

  • கட்டணமில்லா 24 மணி நேர தொலைத் தொடர்பு சேவை: பெண்கள் 181 என்ற குறுகிய குறியீடு மூலம் தேவையான ஆதரவு மற்றும் தகவல்களை அணுகலாம்.
  • அவசரநிலை பொறுப்பு ஆதரவு அமைப்பு (ERSS) ஒருங்கிணைப்பு: இது அவசரகாலச் சேவைகளுக்கு (காவல்துறை, தீயணைப்பு, அவசர ஊர்தி சேவைகள் போன்றவை) உடனடி அணுகலை உறுதி செய்கிறது.
  • பரிந்துரை சேவைகள்: பெண்களுக்கான தீர்வு காணும் மையத் திட்டம், மருத்துவமனைகள், சட்ட சேவைகள் மற்றும் வரதட்சணைத் தடுப்பு அதிகாரிகள், குழந்தை திருமணத் தடுப்பு அதிகாரிகள் போன்ற பிற சட்டப்பூர்வ அதிகாரிகளுடன் இணைக்கப் பட்டுள்ளனர்.

  • ஆலோசனை மற்றும் மீட்பு சேவைகள்: துன்பத்தில் உள்ள பெண்கள் ஆலோசனை மற்றும் மீட்பு வாகனச் சேவையையும் அணுகலாம்.
  • அரசாங்கத் திட்டங்களுக்கான அணுகல்: இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கு நலத் திட்டங்கள் மற்றும் ஆதரவுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் வழங்கப் படுகின்றன.

கூடுதல் தகவல்கள்:

  • மகளிர் உதவி சேவை ஒருங்கிணைப்பு: இந்தத் திட்டம் இறுதியில் அனைத்து அவசர மற்றும் அவசரமற்ற சேவைகளையும் ஒரே எண் அமைப்பில் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது: அவசரநிலைகளுக்கு 112 மற்றும் அவசரமற்ற ஆதரவு மற்றும் தகவல்களுக்கு 181.
  • 34 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் செயல்படுத்தல்: பெண்கள் உதவி எண் திட்டம் நாடு முழுவதும் இயங்குகிறது, அதன் தொடக்கத்தில் இருந்து 68.7 மில்லியன் அழைப்புகளுக்கு உதவியுள்ளது.

அவசரநிலைப் பொறுப்பு ஆதரவு அமைப்பு (ERSS):

  • நிர்பயா நிதியத்தின் கீழ், இது ஒரு நாடு தழுவிய முன்னெடுப்பு என்பதோடு காவல்துறை, தீயணைப்பு மற்றும் அவசர ஊர்தி சேவைகளை நிவர்த்தி செய்ய, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அவசர எண்ணான 112  என்ற எண்ணை வழங்குகிறது.
  • இது 35 மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களில் செயல்பட்டு வருகிறது.

குடும்ப வன்முறைக்கான பிற உதவி எண்கள்:

  • தேசிய மகளிர் ஆணையம் (NCW) உதவி எண்: NCW ஆனது 2020-21 ஆம் ஆண்டில் 7827170170 என்ற எண்ணை வீட்டு வன்முறையைப் பற்றிப் புகாரளிக்கவும், 24 x 7 பரிந்துரை சேவையின் மூலம் ஆதரவை வழங்குவதற்காகவும் தொடங்கப் பட்டது.

  • கட்செவி அஞ்சல் (WhatsApp) அவசர எண்: தொற்று நோய்களின் போது ​​ குடும்ப வன்முறைச் சூழ்நிலைகளில் உள்ள பெண்களுக்கு உதவ 7217735372 என்ற உதவி எண் சேவை தொடங்கப் பட்டது.

தீர்வு காணும் மையத் திட்டம்

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • 2015.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் (MWCD).

நோக்கங்கள்:

  • தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த ஆதரவையும், உதவியையும் வழங்குதல்.
  • ஒரே அமைப்பின் கீழ் மருத்துவ, சட்ட, உளவியல் மற்றும் ஆலோசனை ஆதரவு போன்ற பரந்த அளவிலான சேவைகளுக்கு அவசர மற்றும் அவசரமற்ற அணுகலை வழங்குதல்.
  • குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் மற்றும் அமிலத் தாக்குதல்கள் மற்றும் கௌரவ அடிப்படையிலான வன்முறை போன்ற பிற குற்றங்கள் உட்பட பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்த்துப் போராட உதவுதல்.

பயனாளிகள்:

  • வன்முறையால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட பெண்கள் உட்பட அனைத்து வயதினரும் இதன் பயனாளிகள்.
  • சாதி, வகுப்பு, மதம், பிரதேசம், பாலியல் நோக்குநிலை அல்லது திருமண நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து பெண்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை, கடத்தல், அமிலத் தாக்குதல்கள் மற்றும் கௌரவ அடிப்படையிலான குற்றங்கள் உட்பட எந்தவொரு வன்முறைக்கும் (உடல் சார்ந்த, பாலியல் சார்ந்த, உணர்ச்சி சார்ந்த, பொருளாதார, உளவியல்) பாதிக்கப்பட்டப் பெண்கள் மற்றும் சிறுமிகள்.
  • 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு, OSC ஆனது சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012 ஆகியவற்றின் கீழ் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

பலன்கள்:

  • மீட்புச் சேவைகள் மற்றும் அவசர உதவி: ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து பெண்களை மீட்டு அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அனுப்புகிறது.
  • மருத்துவ உதவி: சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வழங்கிய சில வழிகாட்டுதல்களின்படி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்கிறது.
  • சட்ட உதவி: முதல் நிலை ஆய்வேடுகளைத் தாக்கல் செய்வதற்கான ஆதரவு மற்றும் சட்டச் செயல்முறைகளுக்கான ஆலோசனை, தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கான அணுகலை வழங்குகிறது.
  • உளவியல்-சமூக ஆதரவு: பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைச் சமாளிக்க உதவும் தொழில்முறை ஆலோசனை மற்றும் உளவியல் சேவைகளை வழங்குகிறது.
  • தங்குமிடம்: துன்பப்படும் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ஐந்து நாட்கள் வரை தற்காலிகப் புகலிடம் அளிக்கிறது.
  • காணொளி கூட்டத்திற்கான வசதி: இந்த வசதியை நீதிமன்ற நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும், பெண் நேரடியாக ஆஜராக வேண்டிய அவசியமின்றி சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கும் வேண்டி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்:

  • இந்தத் திட்டத்திற்கு 2012 டெல்லி கூட்டுப் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து நிறுவப்பட்ட நிர்பயா நிதியின் மூலம் நிதியளிக்கப்படுகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 100% நிதியுதவியை வழங்குகிறது.
  • இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் தீர்வு காணும் மையங்களை (OSCs) நிறுவி உள்ளன.
  • இத்திட்டம் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஒரு விரிவான ஆதரவு அமைப்பாக இருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்களுக்கு உடனடி உதவி மற்றும் நீதி மற்றும் மறுவாழ்வு பெறுவதற்கான கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை வழங்குகிறது.

இலக்கு 06: சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரம்

ஸ்வச் பாரத் திட்டம் (SBM)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • அக்டோபர் 2, 2014.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஸ்வச் பாரத் திட்டம் (நகர்ப்புறம்): வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA).
  • ஸ்வச் பாரத் திட்டம் (கிராமப்புறம்): ஜல் சக்தி அமைச்சகம்.

நோக்கங்கள்:

  • உலகளாவிய துப்புரவுப் பாதுகாப்பை அடைவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துதல் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்துதல்.
  • ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் தூய்மையை மேம்படுத்துதல் மற்றும் திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழித்தல்.
  • சுகாதார நடைமுறைகள் தொடர்பான துப்புரவு நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
  • திட மற்றும் திரவக் கழிவுகள் உட்பட கழிவு மேலாண்மையை உறுதி செய்து, அனைத்துப் பகுதிகளையும் திறந்தவெளி கழிப்பிடமற்ற (ODF) மண்டலங்களாக மாற்றுதல்.
  • பல்வேறு துணைப் பணிகள் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுகாதார வசதிகளை வழங்குதல்.

பயனாளிகள்:

  • கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள், குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்கள் (BPL), பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்கள், ஒதுக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள்.
  • மாணவர்கள், பெண்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களும் இத்திட்டத்தின் முக்கியப் பயனாளிகள்.
  • சுகாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் அனைத்து மக்கள்.

தகுதி அளவுகோல்கள்:

  • கிராமப்புறங்களில் உள்ள பயனாளிகளில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்கள் (BPL) மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள (APL) குடும்பங்கள், விளிம்புநிலைப் பிரிவைச் சேர்ந்தவர்களும் (பட்டியலிடப்பட்டச் சாதியினர் / பட்டியலிடப்பட்டப் பழங்குடியினர், நிலமற்ற, சிறு விவசாயிகள் போன்றவர்கள்) இதில் அடங்குவர்.
  • நகர்ப்புறங்களைப் பொறுத்தவரையில், நகரங்களை குப்பையில்லா நகரமாக்குதல், கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் துப்புரவு நடவடிக்கைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் சுகாதார உதவிக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது.

பலன்கள்:

  • சுகாதார மேம்பாடு: குறைக்கப்பட்ட நீரினால் பரவும் நோய்களினால், ஆண்டுதோறும் 60,000-70,000 குழந்தைகளின் உயிர்கள் பாதுகாக்கப்படுகிறது, மேலும் 300,000 குறைவான வயிற்றுப் போக்கு இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • பொருளாதார சேமிப்பு: மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் காரணமாக குடும்பங்கள், ஆண்டுக்கு சுமார் ₹50,000 சுகாதாரம் தொடர்பான செலவுகளைச் சேமிக்கின்றன.
  • சுற்றுச்சூழல் தாக்கம்: குறைக்கப்பட்ட நிலத்தடி நீர் மாசுபாடு, மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைச் சூழல்கள்.
  • வேலைவாய்ப்பு: சுமார் 1.25 கோடி பேர் சுகாதாரம் தொடர்பான பணிகளில் பணியாற்றுகின்றனர்.
  • கல்வி நன்மைகள்: மேம்படுத்தப்பட்ட குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதார (WASH) வசதிகள், குறிப்பாக பெண்களிடையே சிறந்த அளவிலான பள்ளி வருகைக்கு வழி வகுக்கும்.

கூடுதல் தகவல்கள்:

  • முக்கிய முன்னெடுப்புகள்: ஸ்வச் பாரத் கோஷ், ஸ்வச் சர்வேக்சன், ஸ்வச் வித்யாலயா அபியான் மற்றும் ஸ்வச்தா ஹி சேவா போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்.

நடந்து கொண்டிருக்கும் கட்டங்கள்:

  • SBM (நகர்ப்புறம்) 2.0: ₹1.41 லட்சம் கோடி (2021–2026) பட்ஜெட்டில் நகரங்களை குப்பையில்லா மற்றும் கழிவு நீர் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • SBM (கிராமின்) இரண்டாம் கட்டம்: ₹1,40,881 கோடி (2020–2025) பட்ஜெட்டில் ODF நிலையை நிலை நிறுத்துவது மற்றும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையை (SLWM) மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
  • பள்ளிகளில் சுகாதாரத்திற்காக ஸ்வச் வித்யாலயா அபியான் மற்றும் 100% கழிப்பறையை இருப்பதை நோக்கமாகக் கொண்டது.

ஜல் ஜீவன் திட்டம் (JJM)

தொடங்கப்பட்ட ஆண்டு:

  • ஆகஸ்ட் 2019.

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை.

நோக்கங்கள்:

  • 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்துக் கிராமப்புற வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குழாய் இணைப்புகள் (FHTC) மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குதல்.
  • ஒவ்வொரு வீட்டிற்கும், குறிப்பாக தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் கிராமங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தண்ணீரை உறுதி செய்தல்.
  • நீர் மேலாண்மைக்கான சமூக அணுகுமுறையை மேம்படுத்துதல்.
  • நீர் சேமிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீரை அதிகரித்தல் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
  • உள்ளூர் உள்கட்டமைப்பு மூலம் கிராமப்புறங்களில் நிலையான நீர் வழங்கல் அமைப்பை உருவாக்குதல்.

பயனாளிகள்:

  • இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புறக் குடும்பங்கள்.
  • தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்  படுகிறது.
  • பானி சமிதிகள் (கிராம நீர் குழுக்கள்) மூலம் சமூகங்கள், இதில் 50% பெண்கள் உறுப்பினர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் (SHGs), அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHAs) உள்ளனர்.

தகுதி அளவுகோல்கள்:

  • அனைத்துக் கிராமப்புற குடும்பங்களும் தகுதியானவை.
  • குறைவான நீர் வசதி, தண்ணீர்ப் பற்றாக்குறை அல்லது நீரினால் பரவும் நோய்கள் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகிறது.

பலன்கள்:

  • பாதுகாப்பான குடிநீருக்கான அணுகல்: ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் நீர் கிடைக்கும், இதனால் தொலைதூர மூலங்களிலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான தேவை நீங்கும்.
  • தண்ணீரின் தரக் கண்காணிப்பு: கிராமப்புறங்களில் நீரின் தரப் பரிசோதனை மற்றும் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்கிறது.
  • நீர் பாதுகாப்பு: மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீரை அதிகரித்தல் மற்றும் தண்ணீரைத் திறம்பட பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
  • சுத்தம் மற்றும் சுகாதாரம்: சுத்தமான குடிநீருக்கான மேம்படுத்தப் பட்ட அணுகல், நீரினால் பரவும் நோய்களைக் குறைப்பதன் மூலம் சிறந்த சுகாதார விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
  • பொருளாதார வலுவூட்டல்: பெண்கள் மற்றும் குழந்தைகள் தண்ணீர் சேகரிக்கும் நேரத்தை குறைக்கிறது, சிறந்த கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அனுமதிக்கிறது.
  • சமூக ஈடுபாடு: பானி சமிதிகள் நீர் அமைப்புகளை நிர்வகித்தல் மற்றும் பராமரிப்பதில் சமூகப் பங்கேற்பையும் உரிமையையும் ஊக்குவிக்கின்றன.
  • மற்ற திட்டங்களுடன் ஒருங்கிணைப்பு: இந்தத் திட்டமானது மேம்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான பிற அரசு திட்டங்களுடன் ஒன்றுபடுகிறது.

கூடுதல் தகவல்கள்:

  • இந்தத் திட்டம் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி போன்ற ஒன்றியப் பிரதேசங்களுடன், குஜராத், தெலுங்கானா, கோவா, ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்களில் குழாய் நீர் விநியோகத்தை 100% அடையச் செய்வதில் முக்கியப் பங்கினை வகிக்கிறது.
  • இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகியவை விரைவில் மொத்தப் பரவல்களை அடையும் பாதையில் உள்ளன.
  • இந்தத் திட்டம் விவசாயம் மற்றும் பிற சமூகத் தேவைகளுக்கு கழிவுநீர் மறுபயன்பாடு உட்பட, நீர் ஆதாரங்களின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்த உள்ளூர் உள்கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்துகிறது.
  • கிராம சபைகளால் தயாரிக்கப்படும் கிராமச் செயல்திட்டங்கள் உள்ளூர் நீர் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், தீர்வுகளை திறம்பட செயல்படுத்துவதற்கும் முக்கியமானதாகும்.

ஜல் ஜீவன் மிஷன் (நகர்ப்புறம்):

  • 2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், ஜல் ஜீவன் மிஷன் (நகர்ப்புறம்) நிலையான வளர்ச்சி இலக்கு 6 உடன் இணைந்து, அனைத்து நகர்ப்புறங்களிலும் செயல்பாட்டுக் குழாய்கள் மூலம் நீர் விநியோகத்தின் அனைவருக்குமான பரவலை வழங்குவதாக அறிவித்தது.
  • இது நகர்ப்புற நீர் விநியோகத்தை மேம்படுத்துதல் மற்றும் நீர்நிலைகளைப் புத்துயிர் ஊட்டுதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு கிராமப்புறத் திட்டத்தை நிறைவு செய்கிறது.

செயல்படுத்துதல்:

  • கிராம நீர் வழங்கல் அமைப்புகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்குப் பானி சமிதிகள் பொறுப்பு வகிக்கின்றன.
  • இந்தத் திட்டம் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுத்தப் படுகிறது, அங்கு நீர் வழங்கல் திட்டங்களின் திட்டமிடல், ஒப்புதல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவை மத்திய அரசின் ஆதரவுடன் மாநில / ஒன்றியப் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்