TNPSC Thervupettagam

இந்தியாவின் சந்திரயான் திட்டப் பணிகள் - பகுதி 1

August 26 , 2023 317 days 742 0

(For English version to this, please click here)

சந்திரயான் 1

  • சந்திரயான்-1 திட்டமானது சந்திரனைப் பற்றிய பல்வேறு தகவல்களை ஆராய்வதற்காக விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலாப் பயணக் கலம் என்ற வகையில் இஸ்ரோவின் முதல் ஆய்வுப் பணியாகும்.
  • இது சந்திரனை அதன் வட்டப்பாதையில் சுற்றி வருவதற்காகவும், விண்கலக் கருவிகளின் உதவியுடன் சந்திரனைக் கண்காணிப்பதற்காகவும்  என்று வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • சந்திராயன்-1 விண்கலமானது சந்திரனுக்குச் செலுத்தப்பட்டு, குறிப்பாக அதன்  மேற்பரப்பில் இருந்து 100 கிமீ தொலைவிலுள்ள சுற்றுப்பாதை வரையில் சுற்றி வந்தது.
  • சந்திரயான்-1 திட்டப் பணியின் கீழ் அதன் கருவிகளில் ஒன்றை நிலவின் மேற் பரப்பிலுள்ள இடர்சார்ந்த பகுதியில் அது தரையிறக்கச் செய்தது.
  • நிலவின் மீதான தாக்க ஆய்வுக் கருவி அல்லது MIP ஆனது, 35-கிலோ எடை கொண்ட கன சதுர வடிவத் தொகுதியாக, அதன் அனைத்துப் பக்கங்களிலும் இந்திய மூவர்ணக் கொடியுடன் வடிவமைக்கப் பட்டிருந்தது.
  • MIP ஆனது சந்திரனின் மேற்பரப்பில் இந்திய முத்திரையை விட்டுச் சென்றுள்ளது.

வரலாறு

  • 1999 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகம் சந்திரனுக்கான இந்திய அறிவியல் சார்ந்த திட்டப் பணியினை மேற்கொள்ளும் ஆலோசனையை வழங்கியது.
  • சந்திரயான் திட்டப் பணியானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) தொடங்கப் பட்டதோடு சந்திரனுக்கான இந்தியாவின் முதல் பயணமும் இதுவேயாகும்.
  • 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்கலச் செலுத்து வாகனமான PSLV C-11 என்ற மேம்படுத்தப் பட்டப் பதிப்பு மூலம் விண்ணில் செலுத்தப் பட்டது.

  • இந்தச் செலுத்து வாகனமானது  2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று சந்திரனின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப் பட்டது.
  • 2000 ஆம் ஆண்டில் இந்திய வானியல் கழகத்துடன் ஏற்பட்ட ஒரு கலந்துரையாடலின் பலனாக இந்த முன்முயற்சியானது தொடர்ந்து நடைபெற்றது.
  • இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்யும் தேசிய நிலவு இயக்கப் பணிக் குழுவை அமைத்தது.
  • இக்குறியீடானது சந்திரயான் திட்டத்தின் தீவிரத்தை அளவிடும் ஒரு முக்கிய சர்வதேச வளமாக உள்ளது.

சந்திரயான் 1 விண்கலத் திட்டத்தின் நோக்கங்கள்

  • நிலவின் மேற்பரப்பில் உயர் தெளிவுத்திறன் கொண்ட தொலை உணர்வுப் பணிகளை மேற்கொள்ளுதல்.
  • நிலவின் முப்பரிமாண வரைபடத்தை (அருகில் மற்றும் தொலைவில்) உருவாக்குவதற்கு தேவையான தகவல்களை வழங்குதல்.
  • முழு நிலவின் மேற்பரப்பில் அதனை வரைபடமாக்குவதற்குத் தேவையான இரசாயன மற்றும் கனிமவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
  • எதிர்கால எளிமையான நிலவுப் பயணங்களுக்காக சந்திரனின்  மேற்பரப்பில் ஒரு துணைச் செயற்கைக் கோளின் தாக்கத்தை சோதிக்கச் செய்தல்.
  • நிலவில் இரும்பு, அலுமினியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளுடன் டைட்டானியம் மற்றும் கால்சியம் ஆகியன இருப்பதையும் இந்த திட்டமானது வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளது.
  • 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று சந்திரயான் 1 திட்டமானது அந்த ஆய்வுக்கான தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் முடிவடைந்ததாக இஸ்ரோவால் அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் திட்டமானது 312 நாட்கள் வரை நீடித்தது.
  • இந்தத் திட்டச் செலவினத்தின் மதிப்பீடானது  ரூ.386 கோடி அல்லது 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  • சந்திரயான்-1 அனுப்பிய சமீபத்தியப் படங்கள் சந்திரனின் துருவங்களில் துருப் பிடித்துக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறது.

சந்திரயான் 1 திட்ட விண்கலத்தின் கண்டுபிடிப்புகள்

  • இது இரண்டு ஆண்டுகளுக்குத் திட்டமிடப்பட்டு அதற்கு மாறாக 312 நாட்களுக்கு இயங்கியது, ஆனால் அதன் திட்டமிட்டப் பணியின் இலக்குகளில் 95% அளவினை அது வெற்றிகரமாக அடைந்துள்ளது.
  • நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • சந்திரனின் மேற்பரப்பில் பழமை வாய்ந்த சந்திரனின் லாவா ஓட்டத்தால் உருவான சந்திரனிலுள்ள குகைகளைப் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன.
  • சந்திர மண்டலத்தின் மேற்பரப்பில் காணப்பட்ட வலுவான மற்றும் பரவலான தாக்கமானது அங்கு கண்டறியப்பட்ட தரைப் பிளவுகள் மற்றும் முறிவுகள் என்பவை விண்கற்களின் தாக்கங்களுடன் இணைந்த நிலவின் உட்புறச் செயல்பாடுகளின் அம்சங்களாக இருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது
  • சந்திரயான்-1 இல் உள்ள கருவிகளில் ஒன்றான கனிமவியல் வரைபடக்கருவியின் (எம்3) தரவானது, நிலவின்  துருவங்களில் ஹெமாடைட் எனப்படும் கனிமம் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
  • ஹெமாடைட் (Fe2O3) என்பது இரும்பு ஆக்சைடு அல்லது துருவினால் உருவாகும் ஒருவகைக் கனிமமாகும்மேலும் இரும்பானது ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீருடன் வெளிப்படும் போது இக்கனிமமானது உற்பத்தி செய்யப் படுகிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பின் அடையாளமாக, நிலவின் மேற்பரப்பில் இரும்புச்சத்து நிறைந்த வளமுடையப் பாறைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
  • இது துருவை உருவாக்குவதற்கு இரும்புடன் தொடர்பு கொள்ளத் தேவையான இரண்டு தனிமங்களாகிய நீர் மற்றும் ஆக்ஸிஜனின் இருப்புப் பற்றிய தகவல்களை அறிய முற்படவில்லை.
  • சமீபத்தில், ஐக்கிய அமெரிக்க விண்வெளி மையமான தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) சந்திரனின் மேற்பரப்பில் இரும்பு மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்கள் அதிக அளவில் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.

நிலவின் துருவப் பகுதிகளில் துருப்பிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள்

  • நாசாவின் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியிலுள்ள ஆக்ஸிஜனானது ஹெமாடைட் என்ற கனிமம் உருவாவதற்கு உந்துதலாக இருக்கலாம் என்று கருதப் படுகின்றது.
  • பூமியின் காந்தப்புலம் (பூமியின் காந்த மண்டலத்தின் நீளமான பகுதி) சந்திரனுக்குப் பிராண வாயுவைக் கொண்டு செல்ல உதவுவதோடு நிலவின் சுற்று வட்டப் பாதையின் சில காலகட்டங்களில் சூரியனிலிருந்து வெளி வரும் 99% சூரியக் காற்று வீசுவதையும் தடுக்கிறது.
  • சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் மின்னூட்டம் பெற்றத் துகள்கள் கொண்ட சூரியக் காற்று (Solar Wind) என்பது ஹைட்ரஜனை மூலமாகக் கொண்டு பூமியையும் சந்திரனையும் தாக்கவல்லது.
  • ஹைட்ரஜனானது ஹெமாடைட் உருவாவதைக் கடினமாக்குகிறது.
  • சந்திராயன்-1 திட்டத்தின் தரவானது நிலவில் உள்ள துருவங்கள் தண்ணீரின் இருப்பிடமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது.

முன்னோக்கிய பாதை

  • இந்த ஆய்வின் முடிவுகள், சந்திரனின் துருவப் பகுதிகள் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவினை மறு உருவாக்கம் செய்ய உதவும் வகையில் உள்ளது.
  • சந்திரனின் மேற்பரப்பின் பரிணாம வளர்ச்சியில் பூமியும் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்றும் அது குறிப்பிடுகிறது.
  • இருப்பினும், அங்கு பாறையுடன் நீர் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதைத் துல்லியமாக தீர்மானிக்க கூடுதல் தரவு தேவைப்படுகிறது என்றும் இந்த ஆய்வின் மூலம் அறியலாம்.
  • இந்தியாவின் சந்திரயான்-1 திட்ட விண்கலமானது நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிவதில் முக்கியப் பங்கினை வகித்துள்ளது.
  • இந்தியாவின் முதல் தொலைநோக்குப் பார்வை கொண்ட விரிவான விண்வெளிப் பயணமாக சந்திரயான்-1 அறியப் படுகிறது.
  • இந்த விண்கலமானது நாசாவின் நிலவுக்கான கனிமவியல் வரைபடக் கருவியை (M3) உள்ளடக்கிய உணர்விகளின் தொகுப்பையும், வண்ணப் படமெடுக்கும் நிறமாலைக் கருவியையும் கொண்டு நிலவில் உள்ள கனிம தாதுக்களில் சிக்கியுள்ள நீரின் அளவை உறுதிப்படுத்த தேவையான ஆதரவினையும் வழங்குகிறது.

  • இந்தியாவின் முதலாவதான நிலவினை ஆராய்வதற்கான விரிவான விண்வெளிப் பயணமான சந்திரயான் 1 ஆனது சந்திரனைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏவப்பட்டுள்ளது.
  • நிலவிற்கான இந்த ஆய்வானது நிலவிலுள்ள வேதியியல் பண்புள்ளத் துகள்கள், கனிமவியல் தாதுக்கள் மற்றும் நிலவின் அமைவிட வரைபடம் தயாரித்தல் ஆகிய இலக்குகளைக் கொண்டதாகும்.
  • இந்த விண்கலமானது ஐந்து இந்தியக் கருவிகளோடு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளின் அறிவியல் ஆராய்ச்சிக் கருவிகளையும் எடுத்துச் சென்றுள்ளது.
  • சந்திரயான் 1 விண்கலமானது புவிநிலைப் பரிமாற்றச் சுற்றுப்பாதையிலிருந்து 140x14,180 மைல்கள் (225x22817 கிலோமீட்டர்கள்) என்ற தொடக்கநிலைத் தொலைவிலிருந்து 17.9 டிகிரி சாய்வாக செலுத்தப்பட்டது.
  • இறுதியாக, சந்திரயான் 1 ஆனது நவம்பர் 8 அன்று, 11:21 UT என்பதில் அதன் எரிபொருளானது எரியத் தொடங்கி சுமார் 13.5 நிமிடங்கள் வரை நீடித்த நிலையில், அது சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.
  • ஆரம்பக் கட்டத்தில் சந்திரனின் சுற்றுப்பாதையின் அளவானது தோராயமாக 7502x504 கிலோமீட்டர்கள் (4660x310 மைல்கள்) ஆகும்.
  • சந்திரயான் -1 நவம்பர் 8 முதல்  நவம்பர் 12  இடையிலான காலகட்டத்தில் அதன் சுற்றுப் பாதையை படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, அதன் செயல்பாட்டுத் துருவச் சுற்றுப்பாதையை அடைந்தது.
  • இது சந்திரனின்  மேற்பரப்பில் இருந்து 62 மைல் (100 கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது.
  • இரண்டு நாட்களுக்குப் பிறகு சந்திரயான் விண்கலமானது அதன் 64-பவுண்டு (29-கிலோகிராம்) எடை கொண்ட நிலவின் மீதான தாக்க ஆய்வுக் கருவியினை  (MIP) 14:36 UTC என்ற நேரத்தில் வெளியிட்டது.
  • அதன் சுற்றுப்பாதையில் இயங்கக் கூடிய ஒரு சிறிய மோட்டாரைப் பயன்படுத்திய பிறகு, நிலவின் மீதான தாக்க ஆய்வுக் கருவியானது அதனுள் நுழைந்து அதன் மூன்று உணர்விகளிலிருந்து தரவுகளைப் பரிமாறத் தொடங்கியது.
  • நிலவின் இந்த ஆய்வுக் கருவியானது 15:01 UT மணிக்கு, சந்திரனின் தென் துருவத்தில் உள்ள ஷாக்லெட்டன் என்ற பள்ளத்திற்கு அருகில் சந்திரனின் மேற்பரப்பில் விழுந்தது.

  • மேலும், நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் காட்டும் தரவுகளை, தனது பயணத்தின் போது, MIP அனுப்பியதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • ஆனால் துரதிருஷ்டவசமாக, அந்தக் கண்டுபிடிப்புகளை அந்தத் தரவின் அளவுத் திருத்தத்தில் உள்ள முரண்பாடுகள் காரணமாக வெளியிட முடியவில்லை.
  • நாசாவால் செலுத்தப்பட்ட M3 அல்லது நிலா கனிமவியல் வரைபடக்கருவி என்ற மற்றொரு உள் கருவி மூலம் அங்கு நீர் இருப்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
  • சந்திரயான்-1 திட்டப் பணியானது பல்வேறு நோக்கங்களைக் கொண்ட ஒரு அதி நவீனப் பயணமாகும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்