TNPSC Thervupettagam

இந்தியாவின் சந்திரயான் திட்டப் பணிகள் - பகுதி 3

August 29 , 2023 501 days 727 0

(For English version to this please click here)

சந்திரயான் 2

திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள்

  • இந்தத் திட்டமானது சந்திரனைப் பற்றி ஆய்வு செய்ய தேவையான ஒரு தொன்மை வாய்ந்த ஏதுவான சூழலை வழங்குகிறது.
  • இது மற்ற வானியல் கூறுகளை விடவும் மிக நெருக்கமாக இருக்கும் வகையில் உள்ளது.
  • இது வானியல் கூறுகளானது எவ்வாறு உருவானது மற்றும் பரிணாமம் அடைந்தது என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.
  • இது சூரியக் குடும்பத்தையும் பூமியையும் கூட நன்கு புரிந்து கொள்ள உதவும்.
  • விண்வெளிப் பயணமானது புது வடிவம் பெறுவதோடு ஒவ்வொரு நாளும் வெளிப்புறக் கோள்களானது  கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன.
  • இத்திட்டம் பூமியின் வானியல் அண்டைக் கிரகங்களைப் பற்றி மேலும் அறிய உதவுகிறது.
  • இது மேம்படுத்தப்பட்ட திட்டங்களுக்கும் உதவும்.
  • நிலவை சென்றடைய உள்ள நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.
  • இது இந்தியக் குடிமக்களின் தேசியப் பெருமையை உயர்த்துகிறது.
  • இது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி செய்யும் கல்வியாளர்களின் மன உறுதியை அதிகரிக்க உதவும்.
  • மேலும், இது இளைஞர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதோடு அதை ஊக்குவிக்கும் பணியினையும் மேற்கொள்ளும்.
  • இது மெய் வாழ்விற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளையும் மேற்கொள்ளும்.
  • இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் உயர் துல்லியமான கருவிகளின் கூறுகளுக்காக நல்ல உயர்ந்த தரமான உற்பத்தி நடைமுறைகள் தேவைப்படுகின்றன.
  • இது இந்திய உற்பத்தித் துறையில் புதுமையான கண்டுபிடிப்பின் உணர்வைப் உட்செலுத்துவதற்கு மிகவும் முக்கியமானது ஆகும்.

  • இஸ்ரோ ஆரம்ப நிலையில் ஒரு தொடக்க விண்வெளிப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான Team Indus உடன் இணைந்து இந்த ஏவுதலுக்காக செயல்பட்டது.
  • Team Indus பெங்களூருவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.
  • இருப்பினும், இது விண்வெளித் துறையில் இந்தியப் புத்தாக்கத் துறைக்கு ஊக்கத்தை அளித்ததோடு, இதன் மூலம் தொழில்முனைவோரையும் ஊக்குவிக்கிறது.
  • சந்திரயான்-2 திட்டமானது இதே போன்ற இன்ன பிற சாத்தியக் கூறுகளையும் வழங்குகிறது.
  • சந்திரயான்-2 திட்டத்திற்கு, இரண்டு பெண்கள் - ரிது கிரிதால் மற்றும் எம் வனிதா ஆகியோர் முறையே இதன் செயல்முறை மற்றும் திட்ட இயக்குனர்களாக உள்ளனர்.
  • எனவே, இது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அடையாளமாகவும் உள்ளது.
  • இது நாட்டின் மிகப்பெரிய திட்டங்களில் பெண்களின் தலைமைத்துவம் வகிக்கும் சின்னமாக விளங்குகிறது.

முன்னோக்கியப் பாதை

  • சந்திரயான்-2 திட்டமானது பிற லட்சியப் பணிகளுக்கு முன்னோடியாக உள்ளது:
  • ககன்யான் திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டுக்குள் மூன்று இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புதல்.
  • பிற கிரக ஆய்வுகள் மற்றும் ஒரு சூரிய விண்கலத் திட்டமான ஆதித்யா-எல்1 ஆய்வு.
  • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏற்ப நிரந்தர விண்வெளி நிலையம் உருவாக்கல்.
  • 2024 ஆம் ஆண்டில் சந்திரயான் -3 எதிர்கால நிலவுப் பயணத்திற்காக ஜப்பானின் ஜாக்ஸா (ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம்) உடன் இந்தியா ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • இது நிலவின் தென் துருவத்திலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை மீண்டும் கொண்டு வர எண்ணுகிறது.
  • இஸ்ரோவின் முந்தையத் திட்டங்கள் தொலைத்தொடர்பு, ராணுவம், தொலை  உணர்வி போன்ற பல்வேறு கருவிகளில் பல பயன்பாடுகளைக் கொண்டிருந்தன.
  • அதன் எதிர்காலத் திட்டங்களானது விரிவான மற்றும் ஆழமான விண்வெளி தொழில்நுட்பத்தின் மூலம் பல புதியப் பகுதிகளை மேலும் ஆராயும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை மெய்ப்பிப்பதற்காக சந்திரன் சரியான சோதனைப் படுக்கையாக உள்ளது.
  • சந்திரனிலிருந்துத் தண்ணீரைப் பிரித்தெடுப்பதில் எதிர்காலப் பயணங்கள் வெற்றிப் பெற்றால் இது சந்திரனில் போட்டிக் காலனித்துவம் ஏற்பட வழி வகுக்கும்.
  • எனினும் நிலவில் உயிர் வாழ நீர் மட்டும் உதவாது.
  • இதனை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு, குறிப்பாக செவ்வாய்க் கிரகப் பயணத்திற்கு வேண்டி எரிபொருளாகவும் பயன்படுத்தவும் முடியும்.
  • புவி வெப்பமடைவதால், மக்கள்தொகை வெடிப்பு மற்றும் வளங்களின் பற்றாமை போன்ற சவால்களை மனித குலம் தற்போது எதிர்கொண்டு வருகிறது.
  • எனவே, சந்திரயான் போன்ற திட்டங்கள் இந்திய விஞ்ஞானிகளின் திறனை மெய்ப்பிப்பதற்கு உதவுகிறது.
  • வாழ்க்கைக்குச் சாத்தியமான மாற்று வழிகளை வழங்குவதன் மூலம் மனிதகுலம் மற்றும் எதிர்காலச் சந்ததியினரின் நலன்களைப் பாதுகாக்கவும் இது உதவும்.

சந்திரயான் 2 திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • இஸ்ரோவின் அறிக்கையின்படி சந்திரயான் 1 திட்டத்தின் கண்டுபிடிப்புகளை சந்திரயான் 2 ஊக்குவித்து வேகப்படுத்துகிறது.
  • இந்தத் திட்டமானது இன்னும் முழுமையாக ஆராயப்படாத நிலவின் "தென் துருவப் பகுதியை" குறிவைத்து மேற்கொள்ளப்படுகிறது.
  • இது நிலவின் மேற்பரப்பின் மாறுபாடுகளை ஆராய்வதற்காக ஒரு விரிவான வரைபடத் தயாரிப்புப் பணியில் கவனம் செலுத்தியது.
  • அனைத்து விண்வெளிப் பயணங்களையும் ஒப்பிடும் போது, நிலவின் துருவப் பகுதிகளில் விண்கலத்தை தரையிறக்க எந்தவொரு நாடும் முயற்சித்ததில்லை.
  • இதன் மூலம் சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை பெற இது வழி வகுத்தது.
  • சந்திரனின் அச்சின் காரணமாக, தென் துருவத்தில் உள்ள சில பகுதிகள் எப்போதும் இருட்டாகவே உள்ளது.
  • துருவப் பகுதிகளில் மிகக் குறைந்த அளவிலான கோணத்தில் பள்ளங்கள் அமைந்திருப்பதால் அது சூரிய ஒளியைப் பெற்றிருக்காது.
  • இதனால், அது அத்தகையப் பரப்புகளில் பனி படர்ந்து இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
  • நிலவின் தென் துருவத்தில் நிலவின் மேற்பரப்பு பகுதியானது எப்பொழுதும் நிழலில் இருக்கும்.
  • இது நிலவின் வட துருவத்தை விட மிகவும் பெரியது, இதனால் இது சந்திரனின் தென் துருவத்தினை மிகவும் ஆர்வமான ஒரு பகுதியாக மாற்றியுள்ளது.
  • இது நிரந்தரமாக அதனைச் சுற்றியுள்ள நிலவின் நிழலான பகுதிகளில் நீர் இருப்பதற்கான ஒரு நிகழ்தகவையும் அதிகரிக்கிறது.
  • இது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 04 அன்று இந்திய நேரப்படி 03:42 மணிக்குத் தொடங்கி வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
  • விண்கலத்தின் உந்துவிசை முறையினைப் பயன்படுத்தி இது திட்டமிடப்பட்டது.
  • இது சென்றடைவதற்கான காலம் 9 வினாடிகள் ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று, சந்திரயான்-2 திட்டமானது, நிலவின் வெளிக் கோளத்தில் ஆர்கான்-40 இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று சந்திரயான்-2 ஆனது சந்திரனின் வடகிழக்கு நாற்புறத்தில் அமைந்துள்ள சாராபாய் பள்ளத்தைப் படம் பிடித்து அனுப்பியது.

சந்திரயான் 2 திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்டத் தகவல்கள்

நிலவில் நீர் மூலக்கூறுகள் இருத்தல்

  • இன்று வரை நிலவில் H2O மூலக்கூறுகள் இருப்பதைப் பற்றிய மிகத் துல்லியமான தகவலை இந்தத் திட்டமானது வழங்கியுள்ளது.

சிறிய கூறுகளின் இருப்பு

  • குரோமியம், மாங்கனீசு மற்றும் சோடியம் போன்றவை தொலை உணர்வி மூலம் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பானது, சந்திரனில் மக்மாவிலிருந்து பாறைகள் உருவாகி பரிணாமம் அடைந்ததைப் புரிந்து கொள்வதற்கான ஒரு பாதையை அமைத்துக் கொடுக்கும்.
  • இது நெபுலாரின் (ஒண்முகில்) நிலைமைகள் மற்றும் கிரக வேறுபாட்டின் மீதான ஆழமான நுண்ணறிவுகளையும் வழங்குகிறது.

சூரியப் பிளம்பு பற்றிய தகவல்கள்

  • செயல்பட்டிலுள்ள பகுதிக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான நுண்ணிய சூரிய மின்காந்த ஒளிகள் முதல் முறையாகக் காணப்பட்டன.
  • இஸ்ரோவின் கூற்றுப்படி, இது "சூரியக் கரோனாவை வெப்பமாக்குவதற்குப் பின்னால் உள்ள வழிமுறைகளைப் புரிந்து கொள்வதில் பெரும் தாக்கங்களைக் ஏற்படுத்தியுள்ளது".
  • பல தசாப்தங்களாக இது ஒரு வெளிப்படையானப் பிரச்சனையாக உள்ளது.

சந்திரயான் - 2 திட்டத்தின் கூறுகள்: ஏவு ஊர்தி

  • பூஸ்டர்கள் (நிலை 0) - S-200
  • முதல் நிலை - L-110 திரவ நிலை
  • இரண்டாம் நிலை - C-25

சந்திரயான்-2 திட்டம்: புதுப்பிப்புகள்

  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் விண்கலமானது வெற்றிகரமாக நிறுத்தப் பட்டது.
  • இந்த ஆர்பிட்டர் 7 ​​ஆண்டுகள் ஆயுட்காலதத்தினைக் கொண்டுள்ளதால் அதுவரை அது தன் பணியினைத் தொடர்ந்துச் செய்யும்.
  • விக்ரம் லேண்டரின் பணியானது 14 நாட்கள் வரை தொடரும்.
  • 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று சந்திரனின் மேற்பரப்பில் தரை இறக்கமானது திட்டமிடப்பட்டுள்ளது.
  • இருப்பினும், தரையிறக்கமானது இறுதிக் கட்டத்தில் தோல்வியடைந்தது.
  • விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது.
  • இது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட 2 மீ/வி வேகம் அதிகமாக இருந்தது.
  • இஸ்ரோவின் தோல்விப் பகுப்பாய்வுக் குழுவானது, இத்தோல்விக்கு மென்பொருள் கோளாறே காரணம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளது.
  • பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்கள் என்ற கால அளவிற்குத் திட்டமிடப்பட்டது.
  • ஆனால் இந்தத் தரையிறக்கம் தோல்வியடைந்ததால், சந்திரனின் மேற்பரப்பில் அந்த ரோவரை நிலை நிறுத்த முடியவில்லை.
  • நாட்டின் இரண்டாவது சந்திரயான் பயணத்தின் தரவுகளை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
  • சந்திரயான்-2 திட்டத்தின் தரவானது கிரகத் தரவு அமைப்பு-4 (PDS4) என்ற தர நிலையில் இருக்க வேண்டும்.
  • இதனைக் கிரகத் தரவு அமைப்புக் காப்பகமாக ஏற்றுக் கொள்வதற்கு முன், அது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்.
  • இதனைப் பற்றி உலகளாவிய அறிவியல் சமூகம் மற்றும் பொது மக்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவிக்கப் பட்டது.

  • இந்தச் செயல்பாடு நிறைவடைந்து விட்டதால், சந்திரயான்-2 திட்டத்திலிருந்து முதல் தரவுத் தொகுப்பானது வெளியிடப் பட்டது .
  • இப்போது இந்திய விண்வெளி அறிவியல் தரவு மையம் (ISSDC) வழங்கும் PRADAN இணைய முகப்பு மூலம் பரந்த அளவிலான ஒரு பொதுப் பயன்பாட்டிற்காக இது வெளியிடப்படுகிறது.
  • ISSDC என்பது இஸ்ரோவின் கிரகத் திட்டங்களுக்கான கோள்களின் மீதான தரவுக் காப்பகத்தின் ஒரு மைய அமைப்பாகும்.
  • இஸ்ரோவின் அறிவியல் தரவுக் காப்பகமானது (ISDA) தற்போது சந்திரயான்-2 திட்டத்தின் பேலோடுகளால் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி வரையில் ஏழு கருவிகளில் இருந்து பெறப்பட்ட தரவுத் தொகுப்புகளை வைத்திருக்கிறது.
  • ISDA என்பது இஸ்ரோவின் கிரகப் பணிகளுக்கான ஒரு நீண்ட காலக் காப்பகமாகும்.
  • அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இணைந்து இந்தச் சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடாக இந்தியா உருவெடுக்கத் தயாராக உள்ளது.
  • சந்திரயான் 2 திட்டமானது இந்தியாவிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகிற்கும் ஒரு பெரிய அறிவியல் முன்னேற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
  • இத்திட்டம் தோல்வியுற்ற போதிலும், இதன் ஆர்பிட்டர் மற்றும் பிற பகுதிகள் மிகவும் இயல்பாக செயல்பட்டு, தகவல்களைச் சேகரித்து வருகின்றன.
  • சமீபத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (இஸ்ரோ) இது வரை அறிவியல் பேலோடுகள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.
  • இது இன்னும் பகுப்பாய்வு செய்யப்பட்டு மதிப்பிடப்பட வேண்டும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்