TNPSC Thervupettagam

இந்தியாவின் சந்திரயான் திட்டப் பணிகள் - பகுதி 5

September 5 , 2023 494 days 638 0

(For English version to this please click here)

சந்திரயான் 3

சந்திரனை நோக்கிய சந்திரயான் விண்கலத்தின் பயணம்

  • இந்த விண்கலமானது 3,84,000 கிலோமீட்டர் தூரப் பயணத்தைக் கிட்டத்தட்ட 45 நாட்களில் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இது சந்திர உலகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குகிறது.
  • கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட வானிலை பற்றிய முன்னறிவிப்பு இருந்த போதிலும், விண்வெளி ஆர்வலர்கள் சந்திரயான் 3 திட்டத்திற்கான விண்கலத்தை உருவாக்கியுள்ளனர்.
  • சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை மேம்படுத்திட வேண்டி முந்தைய தோல்வி அடிப்படையிலான உத்திகளை மையமாகக் கொண்டு இது வடிவமைக்கப் பட்டு உள்ளது.
  • அது தரையிறங்கும் பகுதியானது விரிவுபடுத்தப்பட்டுள்ளதோடு, 4 கிமீx2.4 கிமீ கொண்ட பகுதிக்குள் லேண்டரானது எங்கும் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு அனுமதிக்கச் செய்றது.
  • விக்ரம் லேண்டரில் தரையிறங்கும் தளம் அல்லது தேவைப்பட்டால் மாற்று தளத்தை அடைய நீண்ட பயணத் தூரத்திற்குத் தேவையான அதிக எரிபொருள் பொருத்தப் பட்டுள்ளது.
  • இது நடுநிலை உந்த மாற்றத்தை அகற்றுதல் மற்றும் அதிக வேகத்தில் தரையிறங்குவதற்கு தேவையான கருவியின் கால்களை வலுப்படுத்துதலோடு, லேண்டரின் இயற்பியல் கட்டமைப்பு ஆகியவற்றையும் மாற்றியுள்ளது.
  • இது அதிக மின் உற்பத்திக்காக, அதிக அளவிலான சூரியத் தகடுகளைப் பொருத்தி வருகிறது.

செயல்படுத்துதல் மற்றும் மென்மையான தரையிறக்கம்

துவக்கம் மற்றும் காலவரிசை

  • சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு LVM3 M4 துவக்கியானது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.
  • LVM-3 ஆனது ஏவப்பட்ட சுமார் 16 நிமிடங்களுக்குப் பிறகு, விண்கலமானது ராக்கெட்டிலிருந்துப் பிரிந்தது.
  • இது ஒரு நீள்வட்ட வாகனச் சுற்றுப்பாதையில் (EPO) நுழைந்தது.
  • இத்திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை சூரிய சக்தியில் வேலை செய்வதால் இது ஒரு சந்திர நாளுக்கான (சுமார் 14 பூமி நாட்கள்) ஆயுளைக் கொண்டிருக்கும்.

சுற்றுப்பாதை கலம்

  • சந்திரயான்-3 விண்கலமானது ஆர்பிட்டரை சுமந்து செல்லாமல், அது சந்திரயான்-2 திட்டத்தின் ஆர்பிட்டரிலிருந்து தரவைப் பயன்படுத்தும்.

தரையிறங்கும் தளம்

  • இந்த தரையிறங்கும் தளமானது சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் 70 டிகிரியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எடை

  • பாதுகாப்பான தரையிறக்கத்திற்காக செய்யப்பட்ட மாற்றங்கள் காரணமாக, பேலோடின் எடை முந்தையத் திட்டத்தின் எடையை விட சற்று அதிகமாக உள்ளது.

அதிக எரிபொருள்

  • தரையிறங்கும் தளம் அல்லது மாற்று தரையிறங்கும் தளத்திற்கு நீண்ட தூரம் பயணிப்பதற்காக அதிக எரிபொருள் நிரப்பப் பட்டுள்ளது.

சந்திரயான்-3 இன் தரையிறங்கும் தேதி

  • சந்திரயான்-3 என்ற நிலவு திட்ட விண்கலமானது எவ்வித தடையுமின்றி சென்று உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று மாலை 5.47 மணிக்கு விக்ரம் லேண்டரானது நிலவின் மேற்பரப்பில் மெதுவாகத் தொடும் என்று இஸ்ரோவால் எதிர்பார்க்கப் பட்டது.
  • கூடுதலாக, இந்த ஆய்வானது நிலவின் மேற்பரப்பில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, வெளிக் கோளம் மற்றும் நிலப்பரப்பை ஆராயவும் முயற்சியினை மேற்கொள்ளும்.
  • இந்த விண்கலத்தின் ரோவரைப்  பூமியுடன் இணைக்க சந்திரயான் 2 திட்டத்தின் ஆர்பிட்டரானது பயன்படுத்தப்படும்.
  • நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள அதன் மேற்பரப்பை ஆய்வு செய்ய தேவையான புகைப்படங்களை எடுக்கும்.

  • இது லேண்டரின் வேகத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான திருத்தங்களைச் செய்கிறது.
  • இதில் லேசர் டாப்ளர் வெலோசிமீட்டர் என்ற கருவியும் அடங்கும்.
  • இது லேண்டரின் வேகத்தைக் கணக்கிடவதற்காக லேசர் கற்றைகளைச் சந்திரனின் மேற்பரப்பிற்கு செலுத்தும் பணியினை மேற்கொள்ளும்.

சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்குவதன் முக்கியத்துவம்

  • வரலாற்று ரீதியாக காண்கையில், நிலவுக்கான விண்கலப் பயணங்கள் அனைத்தும் அதன் சாதகமான நிலப்பரப்பு மற்றும் இயக்க நிலைமைகள் காரணமாக பூமத்திய ரேகைப் பகுதியினை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளன.
  • இருப்பினும், சந்திரனின் தென் துருவமானது மிகவும் வித்தியாசமானதாக உள்ளது.
  • பூமத்திய ரேகைப் பகுதியுடன் ஒப்பிடும் போது இது மிகவும் சவாலான நிலப் பரப்பாகும்.
  • சில துருவப் பகுதிகளில் சூரிய ஒளியானது குறைவாக உள்ளது.
  • இதன் விளைவாக எப்போதும் இருண்டப் பகுதிகளில் வெப்பநிலையானது -230 டிகிரி செல்சியஸ் வரை சென்றடையும்.
  • சூரிய ஒளியின் பற்றாக்குறை மற்றும் கடுமையான குளிர் ஆகியன அந்தக் கருவியின் செயல்பாடுகள் மற்றும் நிலைத்தன்மைக்குச் சிரமங்களை ஏற்படுத்துகிறது.
  • இது ஆரம்பகால சூரியக் குடும்பத்தைப் பற்றிய மதிப்பு மிக்கத் தகவல்களின் அகநிலைத் தகுதி வாய்ந்த களஞ்சியங்களை உருவாக்குகிறது.
  • எதிர்காலத்தில் ஆழமான விண்வெளி ஆய்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பகுதியை ஆராய்வது மிகவும் முக்கியமானது ஆகும்.

தென் துருவத்தில் தரையிறங்குவதனால் ஏற்படும் சவால்கள்

  • முந்தைய விண்கலங்கள் பெரும்பாலும் நிலவின் பூமத்திய ரேகைப் பகுதிக்கு அருகில் தரையிறங்கியுள்ளன.
  • விரும்பத்தக்க நிலப்பரப்பு, மென்மையான மேற்பரப்பு, செங்குத்தான சரிவுகள் இல்லாதது மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் கருவிகளுக்கு போதுமான சூரிய ஒளி கிடைத்தல் போன்றவற்றின் காரணமாக பூமத்திய ரேகைக்கு அருகில் இது தரையிறங்குவது எளிதானது மற்றும் பாதுகாப்பானது ஆகும்.
  • மறுபுறம், சந்திரனின் தென் துருவமானது, தீவிர வெப்பநிலையுடன் கூடிய சவாலான நிலப்பரப்பையும் சூரிய  ஒளியைப் பெறாத, நிரந்தரச் நிழலில் இருக்கும் பகுதிகளையும் வழங்குகிறது.
  • மறுபுறம், சந்திரனின் தென் துருவமானது, தீவிர வெப்பநிலையுடன் கூடிய சவாலான நிலப்பரப்பையும் சூரிய  ஒளியைப் பெறாத, நிரந்தர நிழலில் இருக்கும் பகுதிகளையும் வழங்குகிறது.

இஸ்ரோ ஏன் நிலவின் தென் துருவத்தை ஆராய விரும்புகிறது?

  • தென் துருவப் பகுதியில் கணிசமான அளவு நீர் மூலக்கூறுகள் இருப்பதாக நம்பப்படுகிறது,
  • இது நிரந்தரமாக நிழலான பள்ளங்களில் பனிக்கட்டியாக சிக்கியிருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • நீரின் இருப்பை ஆராய்ந்து உறுதிப்படுத்துவது எதிர்கால மனிதப் பணிகளுக்கும், சந்திர வளங்களின் சாத்தியமான பயன்பாட்டிற்கும் அவசியம் ஆகும்.
  • இது ஆரம்பகால சூரியக் குடும்பம் மற்றும் நிலவின் வரலாறு தொடர்பான பாதுகாக்கப்பட்ட தரவுகளை வழங்குகிறது.
  • நிலவானது விண்வெளிக் குப்பைகளிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.
  • இந்த விண்வெளிக் குப்பைகள் செவ்வாய்க் கிரகத்தின் அளவுள்ள பொருளுக்கும் ஆரம்பகாலப் பூமிக்கும் இடையே ஏற்பட்ட மாபெரும் தாக்கத்தால் உருவானதாக கருதப்படுகிறது. 
  • சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதன் மூலம், விஞ்ஞானிகளால் நிலவிலுள்ள பொருட்கள் மற்றும் நிலை பற்றிய நுண்ணறிவுகளைப் பெற முடியும். 
  • பூமி-சந்திரன் அமைப்பு உருவாகும் போதே தென்துருவமானது காணப்பட்டது.
  • சந்திரயான்-1 விண்கலமானது சேகரித்தத் தரவுகளில் இருந்து தண்ணீர் இருப்பதை இஸ்ரோ-நாசா வெற்றிகரமாக உறுதிப்படுத்தியது.
  • 2024 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் LUPEX ஆனது நிலவின் தென் துருவத்திற்கு ஒரு லேண்டர் மற்றும் ரோவரை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் மூலம் இஸ்ரோவால் மெதுவான தரையிறக்கம், அதனை வழிசெலுத்தல், வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் நீண்ட காலச் செயல்பாடுகளுக்கான புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கி நிரூபிக்க முடியும்.
  • எதிர்கால விண்வெளிப் பயணங்களில் இதைப் பயன்படுத்தலாம்.

சந்திரயான் 3 திட்டத்தின் முக்கியத்துவம்

வரலாற்று ரீதியான சந்திரனின் மீதான தரையிறக்கம் 

  • இது சந்திரனின் மேற்பரப்பில் ஒரு வெற்றிகரமான மற்றும் துல்லியமான தரையிறக்கம் ஆகும்.
  • இஸ்ரோவின் துல்லியமாக திட்டமிடப்பட்ட கட்டங்கள்,  திறமை மற்றும் தகர்க்க இயலாத  அர்ப்பணிப்பு ஆகியவை மூலம் விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியாவின் அந்தஸ்தானது மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்ட முன்னேற்றத்தின் போது, உற்சாகம் மேலும் அதிகரிப்பதோடு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று திட்டமிடப்பட்ட சந்திரனில் தரையிறக்கத்தை உலகச் சமூகம் ஆவலுடன் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
  • இந்தியாவின் சந்திரயான்-3 திட்டமானது நாட்டின் நிலவின் மீதான ஆய்வு முயற்சிகளைத் தொடர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சந்திரயான்-1 மற்றும் 2 போன்ற முந்தையத் திட்டங்களின் சாதனைகள் மீதான அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டது. 

எதிர்காலச் சந்திர ஆய்வு

  • சந்திரனில் மனித இருப்பிடத்தை நிறுவுவதற்கான இந்தியாவின் தேடலில் இத்திட்டமானது முக்கியப் பங்கினை வகிக்க முடியும்.
  • JAXA (ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி) உடனான அவர்களின் ஒத்துழைப்பு மூலம் சந்திரன் மீதான துருவ ஆய்வுப் பணியானது LUPEX அல்லது சந்திரயான்-4 திட்டம் என விரிவாக்கப்பட உள்ளது.
  • விண்வெளிக் கல்வியை மேம்படுத்துதல்
  • இந்தியாவில் விண்வெளிக் கல்வி மற்றும் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டமானது செயல்படும்.
  • இது விஞ்ஞானச் சமூகத்தினர் மற்றும் விண்வெளி ஆர்வலர்களின் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகமாகச் செயல்படும்.

சந்திரனின் மேற்பரப்பு ஆய்வு 

  • நிலப்பரப்பு, கனிமங்கள் மற்றும் நீர் போன்ற நிலவின் விவரங்களை சந்திரயான்-2 திட்டமானது வெளிப்படுத்தியது.
  • சந்திரயான்-3 திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை நிலவின் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்காக அங்குள்ள பாறைகள் மற்றும் மண்ணை ஆய்வு செய்கின்றன என்பதோடு மேலும் இது நிலவின் மேற்பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்திய சிறுகோள் தாக்கங்களை வெளிப்படுத்துகிறது.
  • நிலவின் தென் துருவத்தில் கவனம் செலுத்தி, சந்திரயான்-3 விண்கலமானது தாதுக்கள், நிலத்தடி அம்சங்கள் மற்றும் நீரைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு மேலும் நிலவின் புவியியல் மற்றும் வளங்கள் பற்றிய புதிய நுண்ணறிவுகளையும் ஆய்வு செய்ய உறுதியளிக்கிறது.
  • இந்தியா தனது சந்திரனின் ஆய்வுத் திறனைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதையும், உலகளாவியச் சந்திரன் தொடர்பான ஆராய்ச்சி முயற்சிகளுக்குப் பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்புகள்

  • சந்திரயான்-3 விண்கலமானது நிலவில் ஏற்படும் நிலநடுக்கம் மற்றும் நிலத்தடி வெப்பத்தை ஆய்வு செய்வதற்கான கருவிகளைக் கொண்டுள்ளது.
  • இது சந்திரனின் புவியியல், வளங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் பற்றிய இந்தியாவின் பிடியை வலுப்படுத்துவதோடு வான் பொருட்கள் பற்றிய நுண்ணறிவுகளை ஆழமாக்கும்.
  • இத்திட்டமானது நில அதிர்வுகள் மற்றும் வெப்பப் பண்புகளைப் புரிந்து கொள்ள முயல்கிறது.
  • இது சந்திரனின் உட்புற செயல்பாடுகள் மற்றும் பரந்த அண்ட பகுதிகளைப் புரிந்து கொள்ள உதவும்.

இந்தியாவின் விண்வெளி லட்சியங்கள்

  • சந்திரயான் திட்டப்பணிகள் இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளித் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்துகின்றன.
  • வெற்றிகள் மற்றும் பின்னடைவுகள் நாட்டின் அனுபவத்திற்கும் விண்வெளி ஆய்வின் நிபுணத்துவத்திற்கும் பங்களிக்கின்றன.

சர்வதேச அங்கீகாரம்

  • சந்திரயான் திட்டப்பணிகள் விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளன.
  • அறிவியல் அறிவு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவை எடுத்துக் காட்டுகின்றன.

வேலை உருவாக்கம்

  • இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளித் தொழில்நுட்பத் துறை ஏற்கனவே நூற்றுக்கணக்கான வேலைகளை உருவாக்கியுள்ளது.
  • இது நேரடியாகவும் மறைமுகமாகவும் கூடுதல் உயர் தொழில்நுட்ப வணிக வாய்ப்புகளை உருவாக்கும்.

தொடக்கநிலை நிறுவனங்களை வளர்ப்பது

  • சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியானது தொழில்நுட்ப காட்சிப் பொருளாக மாறி, உலகளாவிய விண்வெளிச் சமூகத்தில் இந்தியாவின் நன்மதிப்பை அதிகரிக்கும்.
  • இது இந்திய நிறுவனங்களுக்கான கூட்டு முயற்சிகள் மற்றும் வணிக வாய்ப்புகளை ஈர்க்கும்.
  • இது உலகளாவியச் சந்தைக்கான விண்வெளி அமைப்புகளை உருவாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் புத்தாக்க நிலை நிறுவனங்களுக்கு உதவுகிறது.

சர்வதேச நற்பெயரை வலுப்படுத்துதல்

  • சந்திரயான்-3 திட்டமானது வெற்றிகரமாக முடிவடைந்தால் நிலவில் தரையிறங்கும் நான்காவது நாடாக இந்தியா மாறும்.
  • இது உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவுகிறது.
  • இது விண்கலத்தைக் குறைந்த செலவில் விண்ணில் செலுத்துவதற்கு வழி வகுக்கிறது.
  • இது இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.
  • இந்தச் சாதனையானது பயனுள்ள வகையில் சர்வதேச ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும்.

மூலோபாய நிலைப்பாடு

  • சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியானது இந்தியாவின் நிலையை மேம்படுத்தும்.
  • இது சர்வதேச விண்வெளிப் போட்டியில் ஒரு முக்கிய வீரராக, சீனாவின் செல்வாக்குடன் பொருந்தக் கூடிய வகையில் உள்ளது.
  • ரஷ்யா பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா தனது நிலையை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாக உள்ளது.
  • ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையுடன் சேர்ந்து, இது இந்தியாவின் எப்போதும் அதிகரித்து வரும் விண்வெளித் தடங்களை மேம்படுத்தும்.
  • இதன் மூலம் மூலோபாய ரீதியாக முன்னோக்கி செல்லும் பாதையை பட்டியலிடுவது அவசியம் ஆகும்.

 

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்