TNPSC Thervupettagam

இந்தியாவின் சந்திரயான் திட்டப் பணிகள் - பகுதி 6

September 7 , 2023 492 days 710 0

(For English version to this please click here)

சந்திரயான் 3

சந்திரனை மையப்படுத்திய பொருளாதாரப் பார்வை

  • இந்தத்  திட்டமானது "சந்திரனை மையமாக கொண்ட ஒரு பொருளாதாரம்" என்ற ஒரு உலகளாவியக் குறிக்கோளுடன் இணைந்து செயல்படுகிறது.
  • அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் நீண்ட கால நிலவுத் திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான நன்மைகளையும் விண்வெளி ஆய்விற்கான மேம்பாட்டை அடைவதையும் எதிர்பார்க்கின்றன.

ஆழமான விண்வெளித் திட்டத்திற்கான வாய்ப்புகள்

  • குறைந்த செலவிலான விண்வெளி ஏவுதல்கள் செயல்படாத மற்றும் இல்லாத நிலையில், சந்திரனின் ஈர்ப்பு விசை மற்றும் வளிமண்டலமானது  அதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றது.
  • இது விண்கலத்தின் உந்துசக்திக்கு சந்திரனின் வளங்களைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
  • இது கிரகங்களுக்கு இடையிலான பயணங்களில் புரட்சியினை ஏற்படுத்தும்.

சுற்றுப்பாதையின் நிச்சயமற்ற தன்மையை வழிநடத்துதல்

  • பாதுகாப்பான உட்செலுத்துதலை உறுதி செய்வதற்காக இஸ்ரோ, நிறுவனங்களுக்கிடையிலான விண்வெளிச் சிதைவுகள் ஒருங்கிணைப்புக் குழுவுடன் (ஐஏடிசி) ஒன்றிணைந்துச் செயல்படுகிறது.
  • இது விண்கலமானது சுற்றும் போது ஏற்படக்கூடிய மோதல் அபாயத்தைப் பரிசீலித்து வருகிறது.
  • பரிணாமம் அடைந்து வரும் புவிக்கும் சந்திரனுக்கும் இடையிலான பகுதி மற்றும் சந்திரனின் சுற்றுச்சூழலுக்கு நிலையான நடைமுறைகள் முக்கியமானவை ஆகும்.

விண்வெளிக் கொள்கைகளை மேம்படுத்துதல்

  • இந்திய விண்வெளிக் கொள்கை (2023) உட்பட இந்தியாவின் வலுவான விண்வெளிக் கொள்கைகள் விண்வெளி முயற்சிகளில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கிறது.
  • இது அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை போன்றவற்றின் ஆராய்ச்சி மற்றும் புதுமையான முயற்சிகளை ஊக்குவிக்கிறது.

நிலைத்தன்மைக்கு மாற்றம் அடைதல்

  • முந்தைய திட்டங்களானது கிட்டத்தட்ட 50% தோல்வி விகிதத்துடன் நிதி ரீதியாக ஆடம்பரமானவை, ஆற்றல் மிகுந்தவை மற்றும் ஆபத்தானவை ஆகும்.
  • தற்போதைய சந்திரத் திட்டங்களில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், கருவிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன.
  • இது அதிக வெற்றி விகிதங்களையும் செலவு குறைவான செயல்திறனையும் உறுதி செய்கின்றன.

முன்னோக்கிய பாதை

சந்திரயான்-4 நோக்கங்கள்

  • கடந்த காலத் திட்டங்களின் அடிப்படையில், சந்திரயான்-4 திட்டமானது மாதிரிகளுடன் திரும்பும் பணிக்கான சாத்தியமான விண்கலமாக வெளிப்படுகிறது.
  • இது வெற்றியடைந்தால், சந்திரயான்-2 மற்றும் 3 திட்டத்திற்குப் பிறகு அடுத்த தர்க்க ரீதியான படியாக அமையும்.
  • இது சந்திரனின் மேற்பரப்பு மாதிரிகளை மீட்டெடுக்கும் திறனை வழங்குகிறது.
  • சந்திரனின் உள்ளடக்கம் மற்றும் வரலாறு பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவதற்கான வாக்குறுதியை இந்தத் திட்டமானது கொண்டுள்ளது.

LUPEX திட்டம்

  • இந்த சந்திரன் தொடர்பான  துருவ ஆய்வு (LUPEX) ஆனது, இஸ்ரோ மற்றும் JAXA (ஜப்பான்) ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
  • இது நிலவின் துருவப் பகுதிகளை ஆராயத் தயாராக உள்ளது.
  • நிரந்தரமாக நிழலாடிய பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இது வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • நீரின் இருப்பை ஆராய்வது மற்றும் ஒரு நிலையான நீண்ட கால நிலையத்திற்கான சாத்தியத்தை மதிப்பிடுவது ஆகியவை LUPEX திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

ஆதித்யா-எல்1

  • இந்தியாவின் ஆதித்யா எல்1 சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான திட்டமாகும்.
  • இந்த விண்கலமானது சூரிய-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) என்ற புள்ளியினைச் சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.
  • இது பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
  • சூரியனின் கரோனாவைக் கவனிப்பது, உமிழ்வுகள், சூரியக் காற்று, எரிப்புகள் மற்றும் ஒளிவட்ட நிறை வெளியேற்றம் (coronal mass ejection) ஆகியவை ஆதித்யா-எல் 1 திட்டமானது முதன்மை கவனம் செலுத்தும் பகுதிகளாகும்.

XPoSat - செயற்கைக்கோள்

  • இது தீவிர நிலைகளில் பிரகாசமான வானியல் ஊடுக்கதிர் (X-ray) மூலங்களின் பல்வேறு இயக்கவியலை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் அர்ப்பணிக்கப் பட்ட துருவ முனைப்புத்  திட்டமாகும்.
  • இந்த விண்கலமானது இரண்டு அறிவியல் பேலோடுகளை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதையில் செலுத்தும்.

NISAR

  • NASA-ISRO SAR (NISAR) என்பது நாசா மற்றும் இஸ்ரோ ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒரு புவி தாழ்வட்டச் சுற்றுப்பாதை (LEO) கண்காணிப்பு ஆகும்.
  • NISAR 12 நாட்களில் முழு உலகத்தின் இடஞ்சார்ந்த வரைபடத்தை வழங்கும்.
  • இது பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், பனிக்கட்டி, தாவர உயிரி, கடல் மட்ட உயர்வு, நிலத்தடி நீர் மற்றும் பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலைகள் மற்றும் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை அபாயங்களைப் புரிந்து கொள்வதற்கான தற்காலிகமான நிலையான தரவு ஆகும்.

ககன்யான்

  • ககன்யான் திட்டமானது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  • இந்தத் திட்டமானது இரண்டு ஆளில்லா விமானங்கள் மற்றும் ஒரு மனிதர்கள் கொண்ட விமானம் மற்றும் மதிப்பிடப்பட்ட மனித சுற்றுப்பாதை தொகுதி கொண்டதாக இருக்கும்.
  • மனிதர்கள் கொண்ட ஒரு விமானமானது ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை ஏழு நாட்கள் வரை பூமியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு ஏற்றிச் செல்லும்.

சுக்ரயான் 1

  • சூரியனில் இருந்து இரண்டாவது கோளான வெள்ளிக்கு ஒரு சுற்றுக்கலனை அனுப்புவதே இதன் திட்டமிடப்பட்ட பணியாகும்.
  • இது வெள்ளியின் புவியியல் மற்றும் எரிமலைச் செயல்பாடு, தரையில் உமிழ்வுகள், காற்றின் வேகம், மேக மூட்டம் மற்றும் பிற கிரகப் பண்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நீர் பனி இருப்புக்கள்

  • சந்திரனின் தென் துருவமானது பெரிய தொடர்ச்சியான நிழல் பகுதிகள் மற்றும் குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ளது.
  • இது நீர்ப் பனிக்கட்டியின் அதிக செறிவுகளைக் கொண்டுள்ளது.
  • கடுமையான குளிர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சூரிய ஒளி காரணமாக பல பில்லியன் ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் இந்தப் பனிப் படிவுகள் எதிர்கால மனிதத் திட்டங்களுக்கு மதிப்புமிக்க வளங்களாக அமையும்.
  • இது குடிநீர், எரிபொருள் உற்பத்தி மற்றும் வாழ்க்கைக்கு தேவையான ஆதரவு அமைப்புகள் போன்ற நன்மைகளை வழங்குகிறது.
  • இது சாத்தியமான சந்திர வாழ்விடங்களுக்கு இந்தப் பிராந்தியத்தை மிகவும் இன்றியமையாததாக ஆக்குகிறது.

 

சூரிய குடும்பத்தின் பரிணாமம்

  • வால்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் உட்பட சூரியக் குடும்பத்தின் ஆரம்பக் கட்டங்களிலிருந்து துருவப் பள்ளங்கள் பல்வேறு பொருட்களைக் கைப்பற்றி உள்ளன.
  • சந்திரனின் தென் துருவமானது இந்த அண்டப் பொருள்களைப் படிக்கும் பொக்கிஷமாக மாறுகிறது.
  • இது அவற்றின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது.
  • சூரியக் குடும்பத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை பாதிக்கும் மேலோட்டமான வழிமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளை இதன் மூலம் சேகரிக்க முடியும்.

வானியல் அவதானிப்புகள்

  • சந்திரனின் தென் துருவமானது, தடையற்ற வானியல் அவதானிப்புகளுக்கு ஒரு அழகிய, உயர்ந்த நிலையை வழங்குகிறது.
  • இது பூமியின் வளிமண்டல குறுக்கீடு மற்றும் ஒளி மாசுபாட்டினைக் குறைப்பதோடு, ஆழமான விண்வெளி ஆய்வுக்கு உதவுகிறது.
  • வானியலாளர்கள் தொலைதூர விண்மீன் திரள்கள், காஸ்மிக் பின்னணி கதிர்வீச்சு மற்றும் நிலையற்ற வான நிகழ்வுகள் போன்றவற்றைத் திறம்பட ஆய்வு செய்யலாம்.

தென் துருவத்தில் வெப்பநிலை

  • சந்திரனின் தென் துருவமானது அதன் இருப்பிடத்தின் காரணமாக தீவிர வெப்ப நிலையை அடைந்துள்ளது.
  • இதன் நிழலானப் பகுதிகளில் வெப்பநிலை -230 டிகிரி செல்சியஸ் (-382 டிகிரி பாரன்ஹீட்) வரை குறையும்.
  • சில பகுதிகளில் சூரிய ஒளி நீண்ட காலமாக இல்லாததே இத்தகைய குளிர்ச்சியான நிலைமைகளுக்குக் காரணம் ஆகும்..

தென் துருவத்தின் வரம்பு

  • நிலவின் தென் துருவமானது கணிசமான அளவிலான அட்சரேகையை உள்ளடக்கியது.
  • தோராயமாக 70 டிகிரி தெற்கு அட்சரேகையில் அமைந்துள்ள இது சந்திரனின்  மேற்பரப்பின் குறிப்பிடத்தக்க பகுதியினை விரிவடையச் செய்கிறது.
  • இந்தத் துருவப் பகுதியின் விரிவாக்கம் நிரந்தர நிழல் மற்றும் வெளிச்சம் உள்ள பகுதிகள் உட்பட பல்வேறு நிலப்பரப்பை வழங்குகிறது.

சந்திரயான்-3: இந்தியாவின் நிலவுத் திட்டத்தின் பின்னணியில் உள்ள குழு

  • அமெரிக்கா, சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்து, மெதுவாக நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நான்காவது நாடாக உருவெடுத்துள்ளது.
  • சந்திரயான்-3 திட்டத்தில் கிட்டத்தட்ட 54 பெண் பொறியாளர்கள்/விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர்.

எஸ் சோமநாத், இஸ்ரோ தலைவர்

  • இந்தியாவின் இலட்சிய நிலவுப் பயணத்தின் பின்னணியில் அறிவின் இருப்பிடமாக இஸ்ரோவின் தலைவர் எஸ் சோமநாத் கருதப் படுகிறார்.
  • ககன்யான் மற்றும் சூரியத் திட்டம் என்கிற ஆதித்யா-எல் 1 உள்ளிட்ட இஸ்ரோவின் பிற பணிகளை விரைவுபடுத்தியது போன்றவை சோமநாத் அவர்களுக்கு பெருமைச் சேர்த்துள்ளது.
  • சோமநாத் அவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
  • திரவ உந்து அமைப்புகள் மையமானது, இஸ்ரோவிற்கான விண்கலத்  தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான முதன்மை மையமாக  உள்ளது.

பி. வீரமுத்துவேல், சந்திரயான்-3 திட்ட இயக்குநர்

  • இந்தியாவின் சமீபத்திய சந்திரனின் மீதான தரையிறங்குதல் திட்டத்தின் திட்ட இயக்குனர் பி. வீரமுத்துவேல் ஆவார்.
  • 2019 ஆம் ஆண்டு அவர் இத்திட்டத்தின் பொறுப்பினை ஏற்றார்.
  • வீரமுத்துவேல் அவர்கள் சந்திரன் பயணம் தொடங்குவதற்கு முன்பு இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள விண்வெளி உள்கட்டமைப்புத் திட்ட அலுவலகத்தில் துணை இயக்குனராகப் பணியாற்றி வந்தார்.
  • அவர் தனது தொழில்நுட்பத் திறமைக்கு பெயர் பெற்றவர் ஆவார்.
  • சந்திரயான்-2 திட்டத்திலும் வீரமுத்துவேல் முக்கியப் பங்கு வகித்தார்.
  • தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) உடனான அதன் பேச்சு வார்த்தைகளுக்கு அவர் முக்கிய நபராக உள்ளார்.
  • தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல், சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி-எம்) முன்னாள் மாணவர் ஆவார்.

மோகன குமார், பணியின் இயக்குனர்

  • விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி எஸ் மோகன குமார் ஆவார். சந்திரயான்-3 திட்டத்திற்கான பணி இயக்குநராக உள்ளார்.
  • அவர் எல்விஎம்3-எம்3 திட்டத்திற்கான ஒன் வெப் இந்தியா 2 செயற்கைக் கோள்களை வணிக ரீதியாக வெற்றிகரமாக ஏவுவதற்கும் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

உன்னிகிருஷ்ணன் நாயர், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) இயக்குனர்

  • இவர் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் தும்பாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் (VSSC) தலைவராக உள்ளார்.
  • கடுஞ்சோதனையான திட்டங்களின் முக்கியச் செயல்பாடுகளுக்கு அவரும் அவரது குழுவும் பொறுப்பு ஆகும்.
  • புவியிணக்கப் பாதை செயற்கைக்கோள் ஏவுதல் வாகனமான  (GSLV) மார்க் -III விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் (VSSC) உருவாக்கப்பட்டது.

எம் சங்கரன், யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC) இயக்குனர்

  • யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் எம் சங்கரன் ஆவார்.
  • இவர் தேசிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயற்கைக் கோள் துறைக்கான சகோதரத்துவத்தை வழிநடத்தும் பொறுப்பினை வகிக்கிறார்.
  • தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், தொலை உணர்தல், வானிலை ஆய்வு மற்றும் கிரகங்களுக்கு இடையேயான ஆய்வு போன்ற தேசியத் தேவைகளை மேம்படுத்த இந்த செயற்கைக்கோள் மையம் உதவுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு இஸ்ரோவின் அனைத்து செயற்கைக் கோள்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உணர்தல் ஆகியவற்றுக்கான இந்தியாவின் முன்னணி மையத்தின் இயக்குநராக அவர் பொறுப்பேற்றார்.

ஏ ராஜராஜன், வெளியீட்டு அங்கீகார வாரியத்தின் (LAB) தலைவர்

  • இவர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் SHAR (SDSC SHAR) விஞ்ஞானி மற்றும் அதன் இயக்குனர் ஆவார்.
  • வெளியீட்டு அங்கீகார வாரியம் (LAB) விண்கல ஏவுதலுக்கான அனுமதியை வழங்கும் அமைப்பாகும்.
  • ராஜராஜன் கலவைகள் பற்றிய துறையில் ஒரு வல்லுநராகத் திகழ்கிறார்.
  • இஸ்ரோவின் அதிகரித்த ஏவுகணைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான திட விசைப் பொறி உற்பத்தி மற்றும் சிக்கலான உள்கட்டமைப்பைத் தொடங்குவது  தொடர்பான பணியினையும் அவர் கவனித்துக் கொண்டிருந்தார்.
  • மனித விண்வெளித் திட்டம் (ககன்யான்) மற்றும் SSLV ஆகியவற்றிற்கான ஏவுதல்களையும் அவர் கண்காணித்து வருகிறார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்