TNPSC Thervupettagam

இந்தியாவின் புதிய பாராளுமன்றம் - பகுதி 1

October 4 , 2023 462 days 1367 0

(For English version to this please click here)

இந்தியாவின் புதிய பாராளுமன்றம்

  • சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில், இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடமானது, ஒட்டுமொத்த தேசத்தின் கலாச்சாரம், பெருமை மற்றும் ஆர்வம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இது சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு மே 28, ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் பற்றிய முக்கிய செய்திகள்

  • புதிய பாராளுமன்றக் கட்டிடமானது டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது.
  • புதிய பாராளுமன்றம், மத்திய எழில்முற்றக் கட்டிடங்களின் வரிசையில் ஒரு முக்கோண அமைப்பினைக் கொண்ட நிலையில் கட்டப் பட்டுள்ளது,
  • இது மக்களவை, மாநிலங்களவை, மத்திய ஓய்வு அறை மற்றும் அரசியலமைப்பு அதிகாரிகளின் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.
  • மக்களவையின் வடிவமானது தேசியப் பறவையான 'மயில்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.
  • புதுப்பிக்கப்பட்ட மாநிலங்களவை மண்டபத்தின் வடிவமானது நமது தேசிய மலரான 'தாமரையைக்' கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.

  • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அவைகளில் ஒவ்வொரு இருக்கையிலும் இரண்டு உறுப்பினர்கள் அருகருகே அமர முடியும்.
  • ஒவ்வொரு இருக்கையிலும் எண்ம அமைப்புகள் மற்றும் தொடுதிரைகள் பொருத்தப் பட்டிருக்கும்.
  • புதிய கட்டிடத்தில் இந்தியாவின் ஜனநாயகப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அரசியலமைப்பு மண்டபமானது அமைந்திருக்கிறது.
  • இது சமீபத்திய ஒலி-ஒளி (ஆடியோ-வீடியோ) அமைப்புகளுடன் கூடிய பெரிய குழு அறைகளைக் கொண்டிருக்கும்.
  • அமைச்சரவையின் பயன்பாட்டிற்காக 92 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • தற்போதையக் கட்டமைப்பில் மூன்று குழு அறைகள் உள்ள நிலையில் புதியதில் ஆறு குழு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • புதிய பாராளுமன்ற வளாகம் 'திவ்யாங் நபர்களுக்கு நட்பு ரீதியிலானது' (மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றது).
  • ஆற்றல் திறனை மையமாகக் கொண்டு, இந்தப் புதிய வளாகமானது "பிளாட்டினம்-மதிப்பீடு செய்யப்பட்ட பசுமைக் கட்டிடமாக" (அதிகத் தரம் வாய்ந்த) அமைக்கப் பட்டுள்ளது.
  • இது நிலையான வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.
  • இதில் மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி முறைகள் இடம் பெற்று உள்ளன.

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் தேவை

தற்போது இருக்கின்ற பாராளுமன்றமானது பழையது.

  • தற்போதுள்ள பாராளுமன்ற இல்லமானது (புதிய பாராளுமன்றம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு இது ஜனநாயக அருங்காட்சியகமாகமாற்றப்படும்) ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு பழமையான பாரம்பரியத் தரம்-I என்ற கட்டிடமாக, இன்னல்கள் மற்றும் அதிகப்படியான பயன்பாட்டின் அறிகுறிகளைக் காட்டுகிறது.

எம்.பி.க்கள் அமரும் குறுகிய இடம்

  • தற்போதைய பாராளுமன்றக் கட்டிடமானது ஒரு முழு அளவிலான ஜனநாயகத்திற்கான ஈரவை சட்டமன்றத்திற்கும் இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப் படவில்லை.
  • அதன் மைய மண்டபத்தில் 440 பேர் மட்டுமே அமரும் வசதி உள்ளதோடு, கூட்டு அமர்வுகள் நடைபெறும் போது, ​​வரையறுக்கப்பட்ட இருக்கைகளுக்கான இடப் பிரச்சனையானது அதிகரிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கு பின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையானது தற்போதுள்ள 545 என்ற எண்ணிக்கையில் இருந்து கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களின் எண்ணிக்கை 545 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், இந்தக் கட்டிடத்தின் இருக்கை ஏற்பாடுகள் தடைபட்டதாகவும் சிக்கலானதாகவும் மாறி உள்ளது.

பாதிப்பிற்குள்ளான உள்கட்டமைப்பு

  • நீர் வழங்கல், கழிவுநீர்ப் பாதைகள் போன்ற சேவைகள் இதில் கூடுதலாகப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளனது.
  • இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி அக்கட்டிடத்தின் அழகானது பாதிக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்புக் கவலைகள்

  • எடுத்துக்காட்டாக, தீப் பாதுகாப்பு, கட்டமைப்பு பாதுகாப்பு (டெல்லி தற்போது நில அதிர்வு மண்டலம்-IV என்ற நிலையில் உள்ளது) போன்ற பாதுகாப்புக் கவலைகளும் உள்ளன.

காலாவதியான தகவல் தொடர்பு கட்டமைப்புகள்

  • தற்போதுள்ள பாராளுமன்றத்தின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பம் மிகப் பழமையானது என்பதோடு அதன் அனைத்து அரங்குகளின் ஒலியியலும் மேம்படுத்தப்பட வேண்டும்.

பணியாளர்களுக்குப் போதிய பணியிடமின்மை

  • பல ஆண்டுகளாக, உள் சேவை இடங்களானது அரசு அலுவலகங்களாக மாற்றப்பட்டன, இதன் விளைவாக அது தரமற்றப் பணியிடங்களாக மாறியுள்ளது.
  • பல சூழ்நிலைகளில், இந்தப் பணியிடங்கள் அதிக தொழிலாளர்களுக்கு இடம் அளிப்பதற்காக துணைப் பகிர்வுகளை உருவாக்குவதன் மூலம் இன்னும் சிறியதாக மாற்றப்ப ட்டன.

பாரம்பரியத்தைத்  தாண்டிய வளர்ச்சி

  • தற்போதுள்ள பாராளுமன்ற மாளிகை, 1927 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
  • இது ஒரு நூற்றாண்டு பழமையான பாரம்பரிய தரம்-I என்ற வகையைச் சார்ந்த கட்டிடமாகும்.
  • பல ஆண்டுகளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கை இதில் கணிசமான அதிகரித்ததுடன், கட்டிடத்தின் வயது மற்றும் வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவை இடம், வசதிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையிலான தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.
  • பாரம்பரிய மதிப்பீடு-I என்பது கட்டடக்கலைப் பாணி, வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொருள் பயன்பாடு மற்றும்/அல்லது அழகியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தேசிய அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் வளாகங்களை உள்ளடக்கியது.
  • அது ஒரு பெரிய வரலாற்று நிகழ்வு, ஆளுமை, இயக்கம் அல்லது நிறுவனத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
  • அவை இப்பகுதியின் முக்கிய அடையாளங்களாக இருந்து வருகின்றன.
  • அனைத்து இயற்கை தளங்களும் மதிப்பீடு-I என்ற நிலைக்குள் வர வேண்டும்.

https://i.filecdn.in/755esias/image-1685362988505.png

குறிப்பிடத்தக்கச் சிறப்பம்சங்கள்

உகந்த இடப்பயன்பாடு

  • புதிய பாராளுமன்றக் கட்டிடம், தற்போதுள்ள கட்டிடத்துடன் சேர்ந்து, சுமார் 65,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • அதன் முக்கோண வடிவம் இந்த இடத்தின் திறமையான பயன்பாட்டை உறுதி செய்கிறது என்பதோடு, வளர்ந்து வரும் தேசத்தின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப இது இடம் அளிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட இருக்கைத் திறன்

  • புதிய கட்டிடத்தில் 888 இருக்கைகள் கொண்ட பெரிய மக்களவைக் கூடம் மற்றும் 384 இருக்கைகள் கொண்ட பெரிய மாநிலங்களவைக் கூடம் ஆகியவை அடங்கும்.
  • இப்போது பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வுகளுக்கு 1,272 இடங்கள் வரை இடமளிக்க முடியும்.
  • இது உள்ளடக்கிய மற்றும் வலுவான ஜனநாயக நடவடிக்கைகளை எளிதாக்குகிறது.
  • எனினும் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் மைய மண்டபம் இருக்காது.
  • இந்தப் புதியக் கட்டிடத்தில் அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் குழு அறைகள் கொண்ட 4 மாடிகள் இருக்கும்.
  • இந்தக் கட்டிடமானது, தற்போதுள்ள பழைய வட்ட வடிவ கட்டிடத்தை விட 10% அளவு சிறியது.

https://i.filecdn.in/755esias/image-1685362898135.png

அதிநவீன வசதிகள்

  • ஒரு அதிநவீன அரசியலமைப்பு மண்டபமானது இந்திய ஜனநாயகத்தின் இதயமாக செயல்படுகிறது என்பதோடு, இது குடிமக்களை ஆளுகையின் மையத்தில் வைக்கிறது.
  • இந்தக் கட்டிடம் அதி நவீன அலுவலக இடங்களையும், அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு

  • புதிய சன்சாத் பவன் "பிளாட்டினம் தரமதிப்பீடு செய்யப்பட்ட பசுமைக் கட்டிடமாக" நிற்கிறது.
  • இது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

கலாச்சார ஒருங்கிணைப்பு

  • புதிய பாராளுமன்றக் கட்டிடமானது நவீன இந்தியாவின் ஆற்றல் மற்றும் பன்முகத் தன்மையைத் தடையின்றி ஒருங்கிணைப்பதோடு, பிராந்தியக் கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலாச்சாரக் கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது.
  • அனைவரையும் உள்ளடக்கல்
  • அணுகல்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, புதிய பாராளுமன்றக் கட்டிடமானது திவ்யாங் (மாற்றுத் திறனாளிகள்) தனிநபர்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறது.
  • இது உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் அந்த வளாகத்திற்குள் வெகு சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்வதோடு, உள்ளடக்கம் மற்றும் சமமான பங்கேற்பையும் வளர்க்கிறது.

https://img.theweek.in/content/dam/week/magazine/theweek/cover/images/2022/12/24/36-Art-of-the-state.jpg

காட்சிக் கூடம் மற்றும் கண்காட்சிகள்

  • இதன் பொது நுழைவாயில்கள் மூன்று காட்சியகங்களுக்கு இட்டுச் செல்கின்றன. அவை - இந்தியாவின் நடனம், பாடல் மற்றும் இசை மரபுகளை வெளிப்படுத்தும் சங்கீத் காட்சிக் கூடம் ; நாட்டின் கட்டிடக்கலை பாரம்பரியத்தைச் சித்தரிக்கும் ஸ்தாப்த்யா காட்சிக் கூடம்,  பல்வேறு மாநிலங்களின் தனித்துவமான கைவினைப் பாரம்பரியங்களைக் காட்டுகிற ஷில்ப் காட்சிக் கூடம் ஆகியனவாகும்.

மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் அணுகல்

  • மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அறைகள், எண்ணியமயமாக்கப்பட்ட வாக்களிப்பு முறை, நன்கு வடிவமைக்கப்பட்ட ஒலியியல் மற்றும் அதிநவீன ஒலி-காணொளி அமைப்புகள் ஆகியவை திறம்பட சட்டமியற்றும் நடவடிக்கைகளை உறுதி செய்யும்.
  • இக்கட்டிடத்தின் முக்கோண எல்லைக்கு இணையாக உள்ள இடங்கள் வழியாக அமைச்சர்களின் அறைகளை அணுகலாம்.
  • அதிகாரப் பரிமாற்றத்தின் சின்னமான செங்கோலை நிறுவியதால், இந்தியாவிற்கு அதிகாரப் பரிமாற்றத்திற்கான அடையாள சின்னமாக இது விளங்குகிறது.

மறுசீரமைப்புத் திட்டம்

  • தற்போதுள்ள பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அடுத்ததாக ஒரு முக்கோணப் பாராளுமன்றக் கட்டிடத்தை நிர்மாணித்தல்.
  • பொது மத்தியச் செயலகத்தை நிர்மாணித்தல்.
  • ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரையிலான 3-கிமீ நீளமுள்ள ராஜ்பாத் (கர்தவ்யா பாதை) மறுசீரமைத்தல்.
  • வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகள் மீண்டும் அருங்காட்சியகங்களாக மாற்றுதல்.

செங்கோலின் வரலாற்று முக்கியத்துவம்

சோழர் காலம்

  • செங்கோல் என்பது "செம்மை" என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது "நீதி" என்பதாகும்.
  • இது தங்கத்தால் ஆனது என்பதோடு சோழப் பேரரசில் தங்கள் அதிகாரத்தை பிரதிநிதித்துவப் படுத்த மரபார்ந்த நிகழ்வுகள் செய்யப்படும் சூழ்நிலைகளில் அந்தப் பேரரசர்களால் எடுத்துச் செல்லப் பட்டது.
  • இது வாரிசுரிமை மற்றும் சட்டப்பூர்வ அடையாளமாக ஒரு மன்னரிடமிருந்து மற்றொருவருக்கு ஒப்படைக்கப்பட்டது.

https://cdn.statically.io/img/www.legacyias.com/wp-content/uploads/2020/05/image.jpeg?quality=100

  • சோழர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் இலங்கையின் சில பகுதிகளை கிபி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர்.
  • அவ்விழாவின் போது வழக்கமாக ஒரு உயர் மதகுரு அல்லது குரு என்பவர் புதிய மன்னரை ஆசீர்வதித்து அவருக்கு செங்கோலை வழங்குவார்.

சுதந்திரத்திற்கு முன்

  • சுதந்திரத்திற்கு முன், ‘ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தை மாற்றுவதைக் குறிக்கும் வகையில் பின்பற்ற வேண்டிய விழா எது?’ என்ற கேள்வி இருந்தது.
  • சி. ராஜகோபாலாச்சாரி அவர்கள், இந்தியாவின் பண்டைய நாகரிகம் மற்றும் கலாச்சாரம் மற்றும் வேற்றுமையில் அதன் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில், அதன் அதிகாரப் பரிமாற்றத்திற்குப் பொருத்தமான ஒரு விழாவாக 'செங்கோல்' ஒப்படைக்கும் சோழர் மரபு தழுவு நிகழ்வினைப் பரிந்துரைத்தார்.
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14, அன்று திருவாவடுதுறை ஆதீனத்தால் (500 ஆண்டுகள் பழமையான சைவ மடம்) பிரதமர் நேருவுக்கு ஒரு செங்கோலானது வழங்கப் பட்டது.
  • மதராஸில் (இப்போது சென்னை) பிரபல நகை வியாபாரியான வும்மிடி பங்காரு செட்டி என்பவரால் ஒரு தங்கச் செங்கோல் வடிவமைக்கப்பட்டது.
  • இதில் நந்தியானது, "நியாயா" (அறத்தின்) என்ற தர்மத்தின் காப்பாளனாக ஒரு அசையாத பார்வையுடன், செங்கோலின் உச்சியில் கையால் செதுக்கப் பட்டு பொருத்தப் பட்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்

  • 1947 ஆம் ஆண்டு செங்கோலைப் பெற்ற பிறகு, நேரு அதை அலகாபாத்தில் உள்ள ஆனந்த் பவன் அருங்காட்சியகத்திற்கு (பிரயாக்ராஜ்) நன்கொடையாக வழங்குவதற்கு முன்பு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சிறிது காலம் வைத்திருந்தார்.
  • இது பின்பு ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஆனந்த் பவன் அருங்காட்சியகத்தில் உள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில், 'மத்திய விஸ்டா' அல்லது மத்திய எழில்முற்றம் என்ற மறுவடிவமைப்புத் திட்டம் நடந்து கொண்டிருந்த போது, ​​இந்த வரலாற்று நிகழ்வைப் புதுப்பிக்கவும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோலை நிறுவவும் அரசாங்கம் முடிவு செய்தது.
  • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் அதன் வரலாறு மற்றும் பொருளை விளக்கும் பலகை ஒன்றும் வைக்கப் பட்டுள்ளது.
  • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டது வெறும் அடையாளச் சைகை மட்டுமல்ல, அதில் ஒரு அர்த்தமுள்ள செய்தியும் பொதிந்துள்ளது.
  • இது இந்தியாவின் மக்களாட்சியானது அதன் பண்டைய மரபுகள் மற்றும் விழுமியங்களில் வேரூன்றியிருப்பதையும், அதன் பன்முகத் தன்மை மற்றும் பன்மைத் தன்மையை மதிப்பதோடு இது அனைவருக்குமானது என்பதையும் இது குறிக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்