TNPSC Thervupettagam

இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள ஈரநிலங்கள் – பகுதி II

May 19 , 2023 599 days 1903 0

(For the English version of this Article Please click Here)

ஈர நிலங்களின் முக்கியத்துவம்

  • ஈர நிலங்கள் நீர் தொடர்பான அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளை  வழங்கும் முக்கியமான வழங்குநர்களாக உள்ளது.
  • தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஈரநில விவசாயத்திற்கான உற்பத்திப் பகுதியாக ஈரநிலங்கள் உள்ளன.
  • உலகின் பெரும்பாலான நீர்ப்பறவைகள் மற்றும் புலம்பெயரும் உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக ஈரநிலங்கள் உள்ளன.
  • சதுப்பு நிலங்கள் உணவின் முக்கிய  ஆதாரமாக உள்ளன.
  • பொழுதுபோக்கு, வரலாறு, அறிவியல் மற்றும் கலாச்சார விழுமியங்களைக் கொண்ட இடமாக ஈரநிலங்கள் உள்ளன.
  • சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிக அதிகமான உற்பத்தித் திறன் செய்யும் பகுதிகளில்  ஒன்றாக ஈர நிலங்கள் உள்ளதால் அவை "உயிரியல் பல்பொருள் அங்காடிகள்" என்றும்  அழைக்கப் படுகின்றது.
  • அவை பெரிய அளவில் உணவை உற்பத்தி செய்வதால் பல்வேறு வகையான விலங்கு இனங்களை  அது ஈர்க்கிறது.
  • இது இயற்கை கடற்பாசிகளாகச் செயல்பட்டு வெள்ளத்தைத் தவிர்க்க வெள்ளக் கட்டுப்பாடு காரணியாக செயல்படுகிறது. அவை தற்காலிகமாக மழைநீரைச் சேமித்து வைத்து படிப்படியாக வெளியிடுகின்றன.
  • ஈரநிலங்கள்  கரிம ஊட்டச்சத்துக்களை அகற்றுவது அல்லது தக்க வைத்துக் கொள்வது அல்லது கரிம கழிவுகளைச் செயலாக்குவது மற்றும் இடைநிறுத்தப்பட்ட ஊட்டச்சத்துக்களை குறைப்பது ஆகியவற்றின் மூலம் நீரின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன.

 

  • இந்தச் செயல்பாட்டிற்காக ஈரநிலங்கள் பெரும்பாலும் "பூமியின் சிறுநீரகங்கள்" என்று குறிப்பிடப் படுகின்றது.
  • இது கார்பன் வரிசைப்படுத்தலுக்கு உதவுகிறது,
  • கார்பன் மூழ்கிகளாகவும் செயல்படுகின்ற ஈர நில மண்ணில் அதிக அளவு கார்பன் உள்ளது.
  • மேற்பரப்பு நீரிலிருந்து நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸை அகற்றுவதற்குத் தேவையான நிலைமைகளை இவை வழங்குகின்றது.
  • இங்கு  அதிக எண்ணிக்கையிலான நுண்ணுயிரிகள், தாவரங்கள், பூச்சிகள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், மீன்கள் மற்றும் பாலூட்டி இனங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இது உதவுகிறது.
  • இது மருத்துவ மற்றும் வணிக மதிப்புகள் கொண்ட பல்வேறு வகை  தாவர மற்றும் விலங்கு இனங்களை ஆதரிக்கிறது.
  • பல நாடுகளில் ஈர நிலங்களைச் சார்ந்து தான் மீன்பிடி மற்றும் ஷெல் மீன்பிடித் தொழில் சாலைகள் உள்ளன.
  • இது உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுகிறது, ஏனெனில் அவர்களில் பலர் தமது வேலைக்காக ஈரநில வளத்தினையே சார்ந்து இருக்கின்றனர்.

இந்தியாவில் ஈரநில சீரழிவு

  • தெற்காசியாவின் சர்வதேச ஈரநில அமைப்பின் மதிப்பீடுகளின்படி கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவில் உள்ள இயற்கை ஈரநிலங்களில் கிட்டத்தட்ட 30%  சட்டவிரோதக் கட்டுமானம், நிலையற்ற நகரமயமாக்கல், விவசாய விரிவாக்கம் மற்றும் மாசுபாடு போன்ற காரணங்களால்  இழக்கப் பட்டுள்ளது.
  • 1970 ஆம் ஆண்டு  முதல் 2014 ஆம் ஆண்டு  வரை மும்பை மட்டும் அதிகபட்சமான  ஈர நிலங்களை (71%) இழந்துள்ளது.
  • ஈரநில இழப்பை எதிர்கொண்ட பிற முக்கிய நகரங்கள் அகமதாபாத் (57%), பெங்களூரு (56%), ஹைதராபாத் (55%), தேசிய தலைநகர் பகுதி டெல்லி (38%), மற்றும் புனே (37%) ஆகியவை இதில் அடங்கும்.

ஈர நிலங்களுக்கு அச்சுறுத்தல்கள்

  • நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மிக அடர்த்தியான மக்கள் தொகை.
  • விரைவான நகரமயமாக்கல்.
  • ஈரநில வடிகால் பகுதிகளை விவசாய மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்காகப்  பயன்படுத்துவதால் அவை  பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • ஆக்கிரமிப்பு இனங்களை  ஈர நிலங்களில் அறிமுகப்படுத்துவதால்  அவை ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பைச்  சேதப்படுத்துகிறது.
  • மனித நடவடிக்கைகளால் ஈர நிலங்கள் மாசுபடுகிறது.
  • தொழிற்சாலைக் கழிவுகளை கொட்டுவதால் அவை ஈரநில சுற்றுச்சூழலில் உள்ள தாவர மற்றும் விலங்கு உலகத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.
  • காலநிலை மாற்றம் ஈரநிலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது.
  • அணைகள் கட்டுவது சதுப்பு நிலங்களுக்கான நீரின் ஓட்டத்தை மாற்றுகிறது. இதனால் ஈர நிலங்களின் ஆரோக்கியமான நிலையையும் இது மாற்றுகிறது.
  • ஈரநிலங்களின் கவலைக்கு மற்றொரு காரணமாக களைகள் உள்ளன.
  • மணல் மற்றும் ஷெல் அகற்றுதல் ஈர நிலங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.
  • தீவிர மீன் வளர்ப்பினால் உருவாகும் கழிவுகள் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது.

 

ஈர நிலங்களை மீட்டெடுப்பதற்கான முறைகள்

  • ஈரநில மறுசீரமைப்பதற்கு  4 அடிப்படைப் படிகள் உள்ளன. அவை
  • படி 1: ஆக்கிரமிப்பு இனங்களை நீக்குதல் / சிகிச்சை
  • படி 2: சுத்தமான மணல் மற்றும் வண்டல் மண்ணை நிரப்புதல்
  • படி 3: விதைப்பு மற்றும் நடவு.
  • படி 4: பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு.

ராம்சர் சிறப்பு மாநாடு 1971

  • ராம்சர் சிறப்பு மாநாடு என்பது சதுப்பு நிலங்களுக்கான பாதுகாப்பு மாநாடு ஆகும். "உள்ளூர் மற்றும் தேசிய செயல்கள் மூலம் அனைத்து சதுப்பு நிலங்களையும் அறிவுப்பூர்வமாக பயன்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், உலகம் முழுவதும் நீடித்த நிலையான வளர்ச்சியை எட்டுதல் ஆகியவற்றுக்காக நாடுகளிடையேயான ஒரு ஒத்துழைப்பு” ஆகிய நோக்கங்களை எட்டுவதற்கான ஒரு பன்னாட்டு உடன்படிக்கை இது ஆகும்.
  • 1971 ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவு 1975 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
  • இந்தச் சிறப்பு மாநாட்டிற்கான வைப்புத் தொகையை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) வழங்கி உள்ளது.
  • சுவிட்சர்லாந்தில் உள்ள கிலாண்ட் நகரில் உள்ள இயற்கைப் பராமரிப்பிற்கான பன்னாட்டு ஒன்றியத் தலைமையக வளாகத்திற்குள் ராம்சர் சிறப்பு மாநாட்டுச் செயல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
  • 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் நாளன்று நடைபெற்ற ராம்சர் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஒப்பந்தார்கள் ராம்சர் செயல் திட்டத்தின் நான்கு அம்சங்களை 2016-2024 ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்குள் செயல்படுத்த ஒப்புக் கொண்டனர்
  • ஒவ்வொரு  வருடமும் பிப்ரவரி 2 ஆம் நாளன்று உலக சதுப்பு நிலநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • மான்டிராக்ஸ் (Montreux) ஆவணம் என்பது “பன்னாட்டு முக்கியத்துவம் கொண்ட சதுப்பு நிலங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகள், மாசுபடுதல், இதர மனித தலையீடுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும் சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு பதிவு செய்யப்படும் பட்டியல்” ஆகும்.
  • இது ராம்சார் பட்டியலின் ஒரு அங்கமாகப் பராமரிக்கப்படுகிறது.
  • இந்த மாநாட்டின் கீழ்க்கண்ட மூன்று முக்கியத் தூண்களுக்கு இதன் பங்குதார்கள் ஒத்துழைப்பு நல்க உறுதி ஏற்றுள்ளனர்
  • 1)  அனைத்து சதுப்பு நிலங்களையும் அறிவுப்பூர்வமாக பயன்படுத்துதல்.
  • 2) சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களின் பட்டியலுக்கு ("ராம்சார் பட்டியல்") பொருத்தமான ஈரநிலங்களைத் தேர்வு செய்து அவற்றின் திறமையான நிர்வாகத்தை உறுதிப் படுத்துவது.
  • 3) நாடுகளுக்கு இடையேயான எல்லை கடந்த ஈரநிலங்கள், சதுப்பு நில அமைப்புகளைப் பகிர்தல் மற்றும் உயிரினங்களைப் பகிர்தல் ஆகியவற்றில் பன்னாட்டு ஒத்துழைப்பினை நல்குதல்.

ஈரநிலப் பாதுகாப்புக்காக  இந்தியா  எடுத்த  நடவடிக்கைகள்

தேசிய சதுப்பு நிலப் பாதுகாப்பு திட்டம் (NWCP)

  • 1985 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள ஈரநிலங்களைப் பாதுகாப்பது மற்றும் ஈரநிலங்களைச் சரியாக பயன்படுத்துவது, மேலும் அவற்றின் சீரழிவதைத் தடுப்பதற்காக இது தொடங்கப் பட்டது.

மத்திய ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள்

  • நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களின்  சிறந்த மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக்காக 2010 ஆம் ஆண்டில் முதன்முறையாக இவ்விதிகள் அறிவிக்கப்பட்டது.
  • இதன் படி மத்திய ஈரநிலங்கள் ஒழுங்குமுறை ஆணையம் (CWRA) உருவானது,  ஆனால் 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 தேதி உடன்  அதன் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் அது இதுவரையில் மறுசீரமைக்கப் படவில்லை.

தேசியச் சுற்றுச்சூழல் கொள்கை 2006

  • சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இது போன்ற ஈரநிலங்களின் தேசியப் பட்டியலை உருவாக்குவதற்கும், ஈரநிலப் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் தேவையான அழைப்பை இது விடுக்கிறது.

கொள்திறன் மேம்பாடு

  • சதுப்பு நில மேலாளர்களின் திறனை அதிகரிப்பதற்காக, ஒடிசாவின் பார்குலில் உள்ள சிலிக்கா மேம்பாட்டு ஆணையத்தின் தற்போதைய ஈரநில ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை ஈர நிலங்களுக்கான ஒரு தேசிய திறன் மேம்பாட்டு மையமாக தரம் உயர்த்துவதற்கான  பரிசீலனையில் உள்ளது.

கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான தேசிய திட்டம்

  • கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான தேசிய திட்டம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்  நகர்ப்புறங்களில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை நிர்வகிப்பதற்கும், விரைவான நகரமயமாக்கலின் விளைவுகளை ஆய்வு செய்வதற்கும் ஒரு கருவித் தொகுப்பை இது  உருவாக்கி உள்ளது.

ம்ரித் தரோஹர் திட்டம்

  • இந்த திட்டம் 2023-24 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு 3 ஆண்டு திட்டமாகும்.
  • சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தைக் கண்டறிந்து, அவற்றின் உகந்தப் பயன்பாட்டை மேம்படுத்துவது  இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் சதுப்பு நிலப் பாதுகாப்பு தொடர்பாகச் சமூகங்களுக்கு இடையே மையப் படுத்தப் பட்ட நிலையாக இது உள்ளது.
  • இந்தத் திட்டம் ஈரநிலங்களின் பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்துதல், கார்பன் இருப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரித்தல்,  சுற்றுச்சூழல்-சுற்றுலா ஆற்றலைக் கட்டி எழுப்புதல் மற்றும்  உள்ளூர்ச் சமூகங்கள் சதுப்பு நிலங்களை வேலைவாய்ப்பிற்கு உகந்த வகையில் பயன்படுத்த உதவுதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.

மிஷ்டி (கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முயற்சி)

  • கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானங்களுக்கான சதுப்புநில முன்முயற்சி (MISHTI) என்பது தோராயமாக 540 சதுர மீட்டர் பரப்பளவிலான சதுப்பு நிலங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியமான பகுதிகளை விரிவாக ஆராய்வதினை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2023-24 ஆம்  நிதியாண்டில் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் 11 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் செயல்படத்தப்பட உள்ளது.

ஈரநிலப் பாதுகாப்புக்காக  தமிழ்நாடு எடுத்த  நடவடிக்கைகள்

தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம்

  • தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு சதுப்பு நில இயக்கத்தை தொடங்கியது.
  • தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் 5 ஆண்டுகளில் 100 சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து ஒரு வரைபடத்தினை வரையும்.
  • இது வாழ்வாதார விருப்பங்களின் மீது கவனம் செலுத்தி சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கும்.
  • இது காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகளில் மீது கவனம் செலுத்துகிறது.

சர்வதேச அமைப்பு கூட்டாளிகள்

  • சர்வதேச அமைப்பு கூட்டாளர்கள் (IOPs) என்பது ராம்சார் மாநாட்டின் பணிகளில் நெருக்கமாக இணைந்து செயல்படுத்தும்  ஆறு நிறுவனங்களைக் குறிக்கிறது இவை:
  • சர்வதேசப் பறவை உயிரின அமைப்பு
  • இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN)
  • சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனம் (IWMI)
  • சர்வதேச ஈர நில அமைப்பு
  • இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF)
  • சர்வதேச காட்டுப் பறவை மற்றும் ஈரநில அறக்கட்டளை (WWT)
  • உயிரியல் பன்முகத் தன்மை பற்றிய மாநாடு (CBD)
  • பாலைவனமாக்கலை எதிர்ப்பதற்கான மாநாடு (UNCCD)
  • புலம்பெயர்ந்த வனவிலங்கு உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான மாநாடு
  • புலம்பெயர்ந்த இனங்கள் பற்றிய மாநாடு (CMS)
  • உலகப் பாரம்பரிய மாநாடு (WHC) மற்றும்
  • அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச வர்த்தகம் (CITES) பற்றிய மாநாடு.
  • பலதரப்பு வளர்ச்சி வங்கிகள், இருதரப்பு நன்கொடையாளர்கள், ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP), அரசு சாரா நிறுவனங்கள் போன்ற பல்வேறுக் குழுக்களால் இதற்குத் திட்ட நிதியுதவி பெறப் படுகிறது.

உலக ஈரநில தினம்

  • உலக ஈரநில தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 2 தேதி அன்று கொண்டாடப் படுகிறது.

  • இது மக்களுக்கு ஈரநிலங்களின் முக்கியப் பங்கினைக் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு  2 பிப்ரவரி தேதி அன்று ஈரானிய நகரமான ராம்சரில்  ஈரநிலங்கள் மீதான மாநாடு ஏற்றுக் கொள்ளப்பட்ட   நாளை  இது குறிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டின் கருப்பொருளான "ஈரநிலங்களை மீட்டெடுப்பதற்கான நேரம் இது", என்பது ஈரநில மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசரத் தேவையை எடுத்துக் காட்டுகிறது.

முடிவுரை

  • சதுப்பு நிலங்கள் முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதாரச் சேவைகளை வழங்குகின்றது.
  • இந்த சீரழிவு அவை வழங்குகின்ற சேவைகளின்  திறனைக் கட்டுப்படுத்துகிறது.
  • ராம்சரின் COP 9 மாநாடு ஈரநில அழிவைக் குறைப்பதற்கும், நிலையான மீன்வளம், ஈரநிலப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வேண்டி பல தீர்வுகளை முன்மொழிகிறது.
  • தற்போதுள்ள கொள்கையுடனும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஈரநிலப் பாதுகாப்பு
  •  நடவடிக்கைகளுடனும் ஒன்றிணைந்து செயல்படுத்தப் படுவதால் நமது நாட்டில் உள்ள  ஈரநிலங்களின் மீதான மேலாண்மை மற்றும் கண்காணிப்பை இது மேம்படுத்தியுள்ளது.

 ------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்