(For English version to this please click here)
மனுதாரர்களால் எழுப்பப்பட்ட வாதங்கள்
வேலைவாய்ப்பு
- அரசுப் பணியில் உள்ள பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஒரே நகரத்தில் பதவிகளைக் கோர முடியாது.
- பொதுவாக அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு வழங்கப்படும் சுகாதாரக் காப்பீட்டை பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினரால் பெற முடியாது.
- பாலின மற்றும் பாலினச் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த தம்பதிகள், கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அல்லது குடும்ப ஓய்வூதியங்களைப் பெறுவதற்கான தகுதியானது வழங்கப்படவில்லை.
- இந்தியச் சட்டங்களின்படி, பாலின மற்றும் பாலினச் சிறுபான்மையினர் தங்கள் உயிரியல் அல்லது தத்தெடுக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, அரசுப் பணியின் மூலமாகக் கிடைக்கும் நன்மைகள் மற்றும் உரிமைகளுக்காக வேண்டி அவர்களின் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத குடும்பத்தினைப் பரிந்துரைக்க முடியாது.
மனுதாரர்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட சில சட்டங்கள்
- 1923 ஆம் ஆண்டு பணியாளர் இழப்பீட்டுச் சட்டம்
- 1952 ஆம் ஆண்டு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி சட்டம்
- 1972 ஆம் ஆண்டு பணிக்கொடைச் சட்டம்
- 1936 ஆம் ஆண்டு ஊதியம் வழங்குதல் சட்டம் மற்றும்
- 2008 ஆம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம்
- உடல்நலம் மற்றும் தனியார்துறை சார்ந்த பணிகளின் நீட்டிக்கப்பட்ட பிற வாழ்க்கைத் துணைவர்கள் சார்ந்த நலன்கள் தொடர்புடைய தனிப்பட்ட உரிமைகளிலிருந்து, பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மை குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை விலக்குவதால், பாலின மற்றும் பாலினச் சிறுபான்மை நபர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் நன்மைகளைப் பெறுவதில் அதிக தடைகளையும் அதிக ஆவணங்கள் தொடர்பான ஆய்வுகளையும் எதிர் கொள்கின்றனர்.
வீட்டுவசதி
- பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினர் சமூகங்களைச் சேர்ந்த தம்பதிகளுக்கு பொதுவாக கூட்டுக்குடும்பத்தில் பகிர்ந்து வசிக்க உரிமை இல்லை.
- எனவே, பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்த நபர்கள் பணி சம்பந்தமான நோக்கங்களுக்காக வசிப்பிடத்தை நிரூபிக்கக் கூடிய நிலையில் தங்கள் வாழ்க்கைத் துணைவரின் வாடகை அல்லது சொந்தமான வீட்டினை நம்பி இருக்க இயலாது.
பெற்றோர்த்துவம்
- திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையினை அங்கீகரிக்காமல், பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினர் சமூகங்களைச் சேர்ந்த தம்பதிகளுக்கு தத்தெடுப்பு, வாடகைத் தாய் அல்லது கருத்தரித்தல் உதவி வழி தொழில் நுட்பங்கள் மூலம் குழந்தைகளைப் பெற இயலாது.
- 2015 ஆம் ஆண்டு சிறார் நீதிச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் திருமணமாகாத தம்பதிகள் மற்றும் இணைந்து வாழும் உறவில் உள்ள தம்பதிகள் குழந்தைகளைத் தம்பதிகளாக தத்தெடுக்க அனுமதிக்கவில்லை.
- 2022 ஆம் ஆண்டு தத்தெடுப்பு விதிமுறைகளானது ஒரு தம்பதியர் குறைந்த பட்சமாக இரண்டு வருடங்கள் நிலையான திருமண உறவினைக் கொண்டிருக்கா விட்டால், குழந்தையைத் தத்தெடுக்க முடியாது என்று கூறுகிறது.
- தத்தெடுப்பு விதிமுறைகளுக்கு இணங்க, ஒரு வாழ்க்கைத் துணையுடன் நேரடி உறவில் இருக்கும் வருங்காலத்தில் ஒற்றை வளர்ப்புப் பெற்றோர்களாக மாறக் கூடிய சாத்தியக் கூறுகள் கொண்ட பெற்றோர்கள், குழந்தையைத் தத்தெடுக்க தகுதியுடையவர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று மத்திய தத்தெடுப்பு வள ஆணையமானது முடிவு செய்துள்ளது.
- 2021 ஆம் ஆண்டு வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டத்தின் படி, திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற அனுமதிக்கிறது.
அத்தகைய திருமணங்களில் காணப்படும் சிக்கல்கள்
ஒழுக்கம்
- இது சமூகத்திலுள்ள மக்களின் மனப்பான்மையில் மாற்றத்தைக் கொண்டு வந்து உள்ளதோடு, இதனால் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக ஏற்பட்ட களங்கம் பெருமளவு மறைந்து விட்டது.
அதிகரித்து வரும் பிரச்சாரச் செயல்பாடுகள்
- நேர்பாலீர்ப்பாளர் மற்றும் ஓரினச் சேர்க்கை தொடர்பான உரிமைகளுக்கு ஆதரவான பிரச்சாரங்கள் பெருகிய மற்றும் பெருகி வரும் முறையில் தீவிரமான தன்மையைப் பெற்றுள்ளதோடு, ஓரினச் சேர்க்கைக்கு எதிராக உருவாகும் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
இனப்பெருக்கம்
- திருமணத்தின் முதன்மை நோக்கம் யாதெனில் மகவுகளைப் பெறுவதே என்றும், ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகள் உயிரியல் ரீதியாக குழந்தைகளைப் பெற முடியாது என்றும் சிலர் வாதிடுகின்றனர்
இயற்கைக்கு எதிராக இருத்தல்
- ஓரினச் சேர்க்கை திருமணம் என்பது இயற்கையான பாலியல் செயல்பாடுகளுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது
சட்டச் சிக்கல்கள்
- மரபுவழி பெறும் உரிமை, வரி மற்றும் சொத்து உரிமைகள் போன்றவை இவர்கள் தொடர்புடைய திருமணத்தின் சர்ச்சைக்குரியப் பிரச்சினைகளாகும்.
தத்தெடுப்பு
- வினோதமான தம்பதிகள் என கருதப்படுவோர், குழந்தைகளைத் தத்தெடுப்பது சமூக களங்கம் எனவும் பாகுபாடுகளுக்கும் வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
- எனவே, இது குழந்தையின் உளவியல் நல்வாழ்வை எதிர்மறையாக பாதிப்பதோடு குறிப்பாக பழமைவாதச் சமூகங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மதத் தடுப்பு நடவடிக்கைகள்
- அரபு நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப் படுகிறது.
- உலகில் எந்த மதமும் ஒரே பாலின திருமணத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை.
- அவை எல்லா இடங்களிலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இயற்கைக்கு மாறானதாகக் கருதப்படுகின்றன.
சமூக இழிவுகள்
- கடுமையான சட்டச் சூழ்நிலைகளைத் தவிர, ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூக இழிவையும் எதிர்கொள்கின்றனர்.
- ஒரே பாலினத்தவர்களுக்கிடையில் ஏற்படும் எந்தவொரு பாலியல் உறவும் வெறுப்பையும் அருவருப்பையும் ஏற்படுத்துவதால், ஒரே பாலினத் திருமணங்கள் இன்னும் கற்பனை செய்ய முடியாதவையாகவே உள்ளன.
ஆணாதிக்கச் சமூகம்
- இந்திய சமூகம் ஆணாதிக்க இயல்புடையது என்பதையும், குறிப்பிட்ட சில பெண்களும் ஆண்களும் வெவ்வேறு தெரிவுகளைக் கொண்டிருப்பதையும் மறந்து விடக் கூடாது.
- இது ‘ஆணை’ மூலம் அனுமதிக்கப் படாததால், ஒரு வகையில் அது அவர்களைப் பயமுறுத்துகிறது.
கூட்டுச்சுமை
- நமது சமூகமானது பெரும்பாலும் சமுதாயத்தினைச் சார்ந்தே செயல்படுவதால் தனித்துவம் என்பது குறைந்தபட்ச அளவில் கூட ஊக்குவிக்கப்படுவதில்லை.
- ஓரினச் சேர்க்கையின் எந்தவொரு வெளிப்பாடும் பாரம்பரியத்தைக் கை விட்டு விட்டு தனித்துவத்தை மேம்படுத்தும் படியான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
அத்தகையத் திருமணங்களுக்கு ஆதரவான வாதங்கள்
மகிழ்ச்சியின் மீதான நாட்டம்
- ஓரினச் சேர்க்கை ஒரு குற்றம் அல்ல என்றும், அது மகிழ்ச்சியைப் பின்தொடர்வதற்கான ஒரு வழியாகவும், பாலியல் மகிழ்ச்சி அல்லது ஆசையை அடைவதற்கான ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது.
தன்மறைக்காப்பு உரிமை
- தனிநபர்களின் தனிப்பட்ட தன்மறைக்காப்பு நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 21 என்பதின் கீழான சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையானது தடை செய்கிறது.
எதேச்சதிகாரம்
- அறிமுகப்படுத்தப்பட்ட வகைப்பாட்டிற்கான ஒரு பகுத்தறிவு மற்றும் புறநிலை அடிப்படை சார்ந்த நோக்கங்களானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பாதுகாப்பிற்கான உரிமையை மீறுகிறதா என்று உறுதி செய்யப்பட வேண்டும்.
வரையறையில் உள்ள சிக்கல்கள்
- இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவானது இயற்கையான பாலுறவு என்பது மகவுகளைப் பெறுவதற்காக இனப்பெருக்கத்தில் ஈடுபடும் ஒரு செயல்பாடு என்று குறிப்பிடுகிறது.
- எனவே, அதன் மூலம் அனைத்து வகையான இனப்பெருக்கம் செய்யாத எந்தவொரு பாலியல் செயலையும் இயற்கைக்கு மாறானதாக இச்சட்டப் பிரிவு முத்திரை குத்துகிறது.
பாகுபாடு
- இந்தியத் தண்டனை சட்டத்தின் 377 ஆவது பிரிவின் கீழ் பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் பாகுபாடு செய்வதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 15 ஆனது தடை செய்கிறது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 15 ஆனது பாலினத்தையும் உள்ளடக்கி பல்வேறு நிலைகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது.
மனித உரிமைகள்
- ஒரு நபர் தனது அடிப்படை மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை வலியுறுத்துவதைத் தடை செய்வதற்காக சமூக விதிமுறைகள், பாரம்பரியம், பழக்கம் அல்லது கலாச்சாரத்தைப் பயன்படுத்த முடியாது என்று மனித உரிமைகளின் உலகளாவிய சட்டமானது குறிப்பிடுகிறது.
தன்மறைக்காப்பு உரிமைக் குறித்து நீதிமன்றத்தின் கருத்துக்கள்
- தனிப்பட்ட நெருக்கம், குடும்ப வாழ்க்கையின் புனிதத்தன்மை, திருமணம், இனப்பெருக்கம், வீடு மற்றும் பாலியல் நோக்குநிலை ஆகியவற்றை தன்மறைக் காப்பு அதன் மையக்கருத்தாக உள்ளடக்கியுள்ளது.
- இந்த உரிமையை தற்போது அரசு மறுக்கிறது
- குடிமக்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்து முடிவெடுக்கும் உரிமையை தன்மறைக்காப்பு உரிமையானது உள்ளடக்கியுள்ளது.
- ஒரே பாலினத் தம்பதிகளுக்கு இந்த உரிமையினை அரசு தற்போது மறுக்கிறது.
சிறப்புத் திருமணச் சட்டம்
- தனிப்பட்ட மதம் சார்ந்த சட்டங்களுடன் இணைந்து செயல்படுகிற 1954 ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டம் என்பது ஒரு மதச்சார்பற்ற சட்டமாகும்.
- ஒரே பாலினத் திருமணங்கள் இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப் படலாம்.
- இச்சட்டத்தின் கீழ் முறையான சடங்குகளுடன் புனிதப்படுத்தப்பட்ட எந்தவொரு இரு நபர்களுக்கிடையேயான திருமணங்களைப் பற்றி ஏற்கனவே இச்சட்டம் பேசுகிறது.
- சிறப்புத் திருமணச் சட்டம் என்பது வெவ்வேறு மதங்கள் அல்லது தேசங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்குகின்ற இந்தியாவில் உள்ள ஒரு சட்டமாகும்.
- இது 1954 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 1955 ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
- சாதி மற்றும் மதங்களுக்கு இடையேயான திருமணங்களுக்கு இது அனுமதி வழங்குவதோடு மேலும் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் தம்பதிகளுக்கு, தங்கள் மதத்தை மாற்றவோ அல்லது எந்த மதச் சடங்குகளையோ அல்லது பிற சடங்குகளையோ பின்பற்றத் தேவையில்லை என்று சிறப்புத் திருமணச் சட்டமானது சலுகைகளை வழங்குகின்றது.
- இருப்பினும், ஒரே பாலினத் திருமணங்களை இச்சட்டமானது அங்கீகரிக்கவில்லை.
- சில காரணங்களுக்காக விவாகரத்து வழங்குதல் மற்றும் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கத் தேவையான ஏற்பாடுகளையும் இச்சட்டமானது வழங்குகிறது.
ஒரே பாலினத் திருமணத்திற்கான நீதித்துறையின் அடிப்படை ஆதரவு
- 2018 ஆம் ஆண்டு நவ்தேஜ் சிங் ஜோஹர் மற்றும் பிறர் எதிர் இந்திய ஒன்றியம் எனும் வழக்கில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஆனது குற்றமற்றதாக்கப் பட்டு நீதித்துறையால் அறிவிக்கப்பட்டது.
- இத்தகைய முக்கியத் தீர்ப்பில், 158 ஆண்டுகள் பழமையான காலனித்துவச் சட்டத்தில் சர்ச்சைக்குரிய இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருமித்த ஓரினச் சேர்க்கையினைக் குற்றமற்றது என்று அறிவித்து அச்சட்டப்பிரிவினை உச்ச நீதிமன்றமானது ரத்து செய்தது.
- 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 377வது ஆனது, "எந்தவொரு நபரும் ஆண், பெண் அல்லது விலங்குடன் இயற்கையின் ஒழுங்குக்கு எதிரான ரீதியில் உடலுறவு கொள்வதை" தடை செய்கிறது.
- இது ஓரினச்சேர்க்கையை குறிக்கும் வகையில் விளக்கப்பட்டது.
- இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவானது பகுத்தறிவற்றது மற்றும் தன்னிச்சையானது என்று அறிவித்து உச்ச நீதிமன்றமானது தனது முந்தைய சொந்த முடிவினை மாற்றிக் கொண்டது.
- உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹிந்தன் நாரிமன், AM கன்வில்கர், DY சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வானது இந்தத் தீர்ப்பினை வழங்கியது.
அரசின் உறுதிச் சான்று அல்லது பிரமாணப் பத்திரம்
- அரசு பிரமாணப் பத்திரத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
- வரலாறு ரீதியாக காணும் போது வேறு பாலினத் திருமணம் என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
- இது "அரசின் இருப்பு மற்றும் தொடர்ச்சி ஆகிய இரண்டிற்கும் அடிப்படையானது."
- இந்தியாவில் திருமணம் என்பது ஒரு "புனித இணைவு", "அகநிலைப் புனித வினைமுறை (சாத்திரம்)" மற்றும் "நெறிமுறைகள்" என்று கருதப்படுகிறது.
- இது வழக்காறுகள், சடங்குகள், நடைமுறைகள், கலாச்சார நெறிமுறைகள் மற்றும் சமூக விழுமியங்களைப் பொறுத்தது.
- சட்டரீதியாக, மத ரீதியாக மற்றும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உறவுகள் தொடர்பான நெறிமுறையிலிருந்து எந்த ஒரு விலக்களிப்பையும் சட்டமன்றத்தின் மூலம் மட்டுமே அளிக்க முடியுமே தவிர, உச்ச நீதிமன்றம் அதனை வழங்க இயலாது.
- உயிரியல் வழியிலான ஆண், பெண் மற்றும் குழந்தை ஆகியோரைக் கொண்ட திருமணத்தின் பாரம்பரியக் கருத்தாக்கத்தை சீர்குலைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தின் மூலம் அரசாங்கமானது வாதிட்டது.
- ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிப்பது என்பது தனிநபர் தொடர்பான சட்ட அமைப்பில் அழிவினை ஏற்படுத்தும் என்றும் அது கூறியது.
- பல தாராளவாத மக்களாட்சி நாடுகளிலிருந்து வேறுபட்ட ஒன்றாக உள்ள நிலையில் இந்தியாவில், திருமணம், வாரிசு மற்றும் தத்தெடுப்பு ஆகியவை தொடர்பான அம்சங்கள் தனிப்பட்ட மதத்தினைச் சார்ந்த சட்டங்களால் நிர்வகிக்கப் படுகின்றது.
பிற அவதானிப்புகள்
- 1954 ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தின் வரம்பிற்குள் ஒரே பாலின உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக 1954 ஆம் ஆண்டு சிறப்பு திருமணச் சட்டத்திலுள்ள (SMA) வார்த்தைகளை நீதிமன்றமானது நீக்கம் செய்யவோ அல்லது விளக்கம் அளிக்கவோ இயலாது, மேலும் இதனை மேற்கொள்ளும் அதிகாரமானது சட்டமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
- திருமண உறவு என்பது நிலையானது அல்ல.
- வினோதமான நபர்களுக்கும் திருமண வாழ்வில் இணைந்து அதில் நுழைவதற்கு சம உரிமையும் சுதந்திரமும் உள்ளது.
- இருப்பினும், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமை என்று எதுவும் இல்லை.
- ஒரே பாலினத் தம்பதிகளுக்கான உரிமைகளை ஆராய ஒரு அமைச்சரவை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வழங்கும் பரிந்துரைகளின் சார்பான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு நீதிமன்றம் ஆதரவளித்தது.
-------------------------------------