(For English version to this please click here)
மத்திய அரசின் எதிர்ப்பிற்கான பின்னணியில் உள்ள காரணங்கள்
சட்ட மறுசீரமைப்பு தேவை
- தடைசெய்யப்பட்ட உறவு தொடர்பான உத்தரவுகள், திருமணம் பற்றிய நிபந்தனைகள் மற்றும் தனிநபர்களை ஆள்வது தொடர்பான தனிப்பட்டச் சட்டங்களின் கீழ் காணப்படும் சடங்கு மற்றும் சம்பிரதாயத் தேவைகள் போன்ற ஏற்கனவே உள்ள தனிப்பட்ட மற்றும் எழுதப்பட்ட சட்ட விதிகளை ஒரே பாலின நபர்களின் திருமணத்தைப் பதிவு செய்வது மீறுவதாக உள்ளது.
வாழ்க்கைத் துணை பற்றிய வரையறை
- ஒரே பாலினத் திருமணத்தில் தனிநபர்கள் பற்றிய பல்வேறு சட்டங்களை இயற்றும் போது அந்த திட்டத்தின் பின்னணியின் கீழ் ஒருவரை ‘கணவன்’ என்றும் மற்றவரை ‘மனைவி’ என்றும் குறிப்பிடுவதும் அல்லது நடைமுறைப் படுத்தக் கூடியதும் சாத்தியமில்லை.
கலாச்சார விதிமுறைகளுக்கு எதிரானது
- இனப்பெருக்கத்தைப் பல்வேறு மதச் சடங்குகளை நிறைவேற்றுவதற்கான ஒரு கடமையாகவும், மத அடிப்படையிலானதாகவும் நம் நாட்டில் உள்ள சமூக அமைப்பானது கருதப்படுகிறது.
சொத்து மற்றும் பிற குடிமையியல் உரிமைகள்
- இந்தியாவில் திருமணத்திற்குப் பிந்தைய சொத்து உரிமைகள் என்பது மிகவும் தொல்லைத் தரக் கூடிய ஒரு பிரச்சினையாகும்.
- ஓரினச்சேர்க்கை திருமணமானது சட்டத்திற்கு எந்தவிதமான தடைக் காப்பு நிலையினையும் உருவாக்காது, ஆனால் சிக்கலான விளக்கங்களை மேலும் அதிகரிக்கும்.
நவ்தேஜ் வழக்கில் திருமணங்களைக் குறிப்பிடவில்லை
- 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நவ்தேஜ் சிங் ஜோஹர் வழக்கின் தீர்ப்பில் ஓரினச் சேர்க்கை குற்றமற்றது என்று குறிப்பிடப்பட்டது.
- ஆனால் அது ஒரே பாலின திருமணத்தினைப் குறிப்பிடவும் இல்லை /சட்டப் பூர்வமாக்கவும் இல்லை.
வேற்றுப் பாலினத் தம்பதியுடன் ஒப்பிட இயலாமை
- ஆணும் பெண்ணும் ஒன்றிணைந்து பிறந்த குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்துடன் ஓரினச் சேர்க்கை திருமணத்தினை ஒப்பிட முடியாது.
சமூகத்தின் நலன்
- எதிர்பாலினத் திருமணங்களுக்கு மட்டுமே அங்கீகாரத்தினை வழங்குவதற்கான கட்டாயமான ஆர்வமானது சமூகத்திற்கும் அரசுக்கும் உள்ளது.
முன்னோக்கிய பாதை
மதத்திலிருந்து விலகுதல்
- கிட்டத்தட்ட அனைத்து மதங்களிலும் இத்தகையத் திருமணங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.
- எனவே சட்ட அனுமதியை பெறுவதற்கு எந்த ஒரு மதமும் தடையாக இருத்தல் கூடாது.
பாகுபாடுகளை நீக்குதல்
- ஒரே பாலினச் சமூகத்தினை சேர்ந்த மக்களுக்குப் பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் ஆற்றல் வாய்ந்த வாழ்க்கையையும் மற்றும் உறவுகளையும் உருவாக்க அவர்களுக்குத் தேவையான அதிகாரம் அளிக்கும் பாகுபாடுகளை எதிர்க்கும் சட்டமானது தேவைப்படுகிறது.
சமுதாயத்தினைப் பரிணாம வளர்ச்சியடைய வைத்தல்
- உரிமைகள் தொடர்பான முற்போக்கான உணர்தல் கோட்பாட்டைச் சமூகத்தினர் உள்வாங்க வேண்டும்.
- இதனைச் சட்டத்தின் மூலம் வலுக்கட்டாயமாக நம்ப வைக்க முடியாது.
விழிப்புணர்வை உருவாக்குதல்
- நிச்சயமாக, இது ஒரே இரவில் நடக்கும் நிகழ்வு அல்ல.
- நமது சமூகமானது சதி மற்றும் நிக்காஹ் ஹலாலாவை ஒரு மத ஒழுங்காகக் கருதிய சமூகம் ஆகும்.
பாலினத்தையும் சேர்க்க வேண்டுமென்பதற்காக சரத்து 15 இன் நோக்கத்தை விரிவுபடுத்துதல்
- சரத்து 15 ஆனது மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் குடிமக்களைப் பாகுபடுத்துவதிலிருந்து பாதுகாக்கிறது.
- பாலினம் மற்றும் பாலியல் நோக்குநிலையை உள்ளடக்குவதன் மூலம் பாகுபாடு இல்லாத காரணங்களை விரிவுபடுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
- வெகுஜன ஊடகங்கள் மற்றும் அதிகாரப் பூர்வ காட்சி ஊடகங்கள் மூலம் LGBTQ சமூகத்துடன் தொடர்புடைய களங்கத்தைக் குறைக்கவும், இறுதியாக அதனை அகற்றவும், பொது மக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அரசானது விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதி ரோஹிண்டன் எஃப். நாரிமன் நவ்தேஜ் சிங் ஜோஹர் மற்றும் பலர் என்ற வழக்கில் உத்தரவிட்டிருந்தார்.
மாணவர்களை உணர்வினை ஏற்படுத்தல்
- பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் பாலுணர்வின் பன்முகத் தன்மையைப் பற்றிய உணர்திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
- பரம்பரை-பாலியல் முறை மற்றும் ஓரினச்சேர்க்கைக்கு அடிப்படைக் காரணமாக அமைவது பன்முகத் தன்மையேயாகும்.
LGBTQ சமூகத்தில் தீர்ப்புகளின் தாக்கங்கள்
சமூகத் தாக்கம்
- தற்போது அவர்கள் மற்றப் பாலின மக்களைப் போல சாதாரணமாக கண்ணியம், மரியாதை, சுதந்திரத்துடன் வாழ்கிறார்கள்.
கல்வியில் ஏற்பட்ட தாக்கங்கள்
- அவர்கள் உயர்கல்வி, பள்ளிப் படிப்பு மற்றும் வேலைகளைத் தேர்வு செய்யலாம்.
தனிப்பட்ட தாக்கம்
- அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையினைச் சுதந்திரமாகத் தேர்வு செய்யவும், அமைதியான சூழலில் வாழவும் செய்கின்றனர்.
- பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
LGBTQ சமூகத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள்
வேலைவாய்ப்பு
- வேலை இழப்பு ஏற்படும் என்ற பயம் காரணமாக பணியிடத்தில் தங்களின் பாலினத்தினை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்.
திட்டங்கள்
- சுகாதாரம் மற்றும் ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான அணுகல் மறுக்கப் படுகிறது.
தகவல் பரிமாற்றமின்மை
- LGBT குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இடையேயான தகவல் தொடர்பு பரிமாற்றம் இல்லாததால் குடும்பங்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
வெறுக்கத்தக்க குற்றம்
- சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் வெறுப்புக் குற்றங்களால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர்.
- கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்தல் மற்றும் மனிதக் கடத்தல் செயலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
- குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை இல்லை.
ஒரே பாலினத் திருமணம் - உலக நாடுகள் மற்றும் இந்தியா
இந்தியாவில் LGBTQIA அங்கீகரிக்கப்பட்ட வரலாறு
- 1861 ஆம் ஆண்டில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் அனைத்து ஓரினச் சேர்க்கை நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய செயல்பாடுகளை "இயற்கை ஒழுங்கிற்கு எதிரான" பாலியல் குற்றம் என பிரிட்டிஷ்காரர்கள் கருதினர்.
- 1977 ஆம் ஆண்டு இந்தியாவில் ஓரினச்சேர்க்கை பற்றிய முதல் ஆய்வினை சகுந்தலா தேவி என்பவர் வெளியிட்டார்.
- இது "ஓரினச் சேர்க்கையாளர்களின் உலகம்" என்று அழைக்கப்பட்டது.
- 1994 ஆம் ஆண்டில், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையானது சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டது.
- 2014 ஆம் ஆண்டு, திருநங்கைகளைப் பாலினத்தின் மூன்றாம் பிரிவினராகக் கருத வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றமானது தீர்ப்பளித்தது.
- 2017 ஆம் ஆண்டில், நாட்டிலுள்ள LGBTQIA சமூகத்திற்கு தங்கள் பாலியல் நோக்குநிலையைப் பாதுகாப்பாக வெளிப்படுத்தும் ஒரு சுதந்திரத்தை உச்ச நீதிமன்றமானது வழங்கியது.
- ஒரு தனிநபரின் பாலியல் நோக்குநிலையானது தன்மறைக்காப்பு உரிமையால் பாதுகாக்கப் பட்டது.
- 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று, ஒருமித்த ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளைக் குற்றமாக கருதும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 என்பதை உச்ச நீதிமன்றமானது ரத்து செய்தது.
- 2019 ஆம் ஆண்டில், திருநங்கைகளின் உரிமைகள், அவர்களின் நலன் மற்றும் பிற தொடர்புடைய விவகாரங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், திருநங்கைகளுக்கான (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை நாடாளுமன்றமானது இயற்றியது.
பல நாடுகளால் அங்கீகரிக்கப் படுதல்
- வெளிநாட்டு உறவுகளின் உலகளாவியச் சிந்தனை மன்றத்தின் படி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரான்ஸ் உட்பட குறைந்தது 30 நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணங்களானது சட்டப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- ஓபர்கெஃபெல் எதிர் ஹாட்ஜஸ் (2015) என்ற வழக்கில் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றமானது ஒரே பாலினத் தம்பதிகளுக்கு திருமணம் செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்தது.
- அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள உள்ள 50 மாநிலங்களில் முப்பத்தி ஒன்று மாநிலங்கள் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை வரையறுக்கிற வகையில் திருமணச் சட்டங்களைக் கொண்டுள்ளது.
- 1996 ஆம் ஆண்டு மே மாதத்தில், பாலியல் நோக்குநிலையை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டை அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்த முதல் நாடு தென்னாப்பிரிக்கா ஆகும்.
- ஐக்கியப் பேரரசானது 2017 ஆம் ஆண்டு "ஆலன் டூரிங் சட்டத்தை" நிறைவேற்றியது.
- இது 'ஓரினச் சேர்க்கைப் பற்றிய செயல்களைத் தடை செய்த வரலாற்றுச் சட்டத்தின் கீழ் எச்சரிக்கப்பட்ட அல்லது தண்டனை பெற்ற ஆண்களுக்குப் பொது மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு ஆகியவற்றை வழங்கியது.
நாடு
|
சட்டம்
|
நெதர்லாந்து
|
ஒரே பாலினத் தம்பதிகளுக்கு திருமணம் மற்றும் தத்தெடுக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்கிய முதல் நாடு நெதர்லாந்து ஆகும்.
|
கனடா
|
2005 ஆம் ஆண்டு கனடாவின் கூட்டாட்சிப் பாராளுமன்றமானது ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப் பூர்வமாக்கியது.
|
தென்னாப்பிரிக்கா
|
2006 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்கா ஆப்பிரிக்காவின் முதல் நாடாகவும், தென் அரைக்கோளத்தில் ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாகவும் ஆனது.
|
அர்ஜென்டினா
|
2010 ஆம் ஆண்டு அர்ஜென்டினா லத்தீன் அமெரிக்காவில் ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு ஆனது.
|
நியூசிலாந்து
|
2013 ஆம் ஆண்டு அரசரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, நியூசிலாந்து ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஒரே பாலினத் திருமணத்தை அனுமதித்த முதல் நாடு ஆனது.
|
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்
|
ராணியின் ஒப்புதலுக்குப் பிறகு, இங்கிலாந்தில் ஒரே பாலினத் திருமணம் பாராளுமன்ற நடவடிக்கை மூலம் சட்டப் பூர்வமாக்கப்பட்டது.
|
அயர்லாந்து
|
அயர்லாந்து நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணங்களை 2015 ஆம் ஆண்டில் ஒரு பிரபலமான வாக்கெடுப்பு மூலம் சட்டப் பூர்வமாகிய நிலையில் மக்கள் வாக்கு மூலம் அத்தகையத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு இதுவாகும்.
|
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
|
2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, திருமணங்களில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒரே பாலினத் திருமணங்களுக்கு அங்குள்ள மத்திய அரசானது ஒப்புதல் அளித்தது.
|
தைவான்
|
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதாக அங்கீகரிக்கும் சட்டத்தினை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் கண்டறிந்த பிறகு, ஒரே பாலினத் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கிய முதல் ஆசிய நாடாக தைவான் ஆனது.
|
எஸ்டோனியா
|
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு எஸ்டோனியாவின் பாராளுமன்றமானது ஒப்புதல் அளித்தது. அவ்வாறு செய்யும் முதல் முன்னாள் சோவியத் மற்றும் முதல் பால்டிக் நாடு இதுவாகும்.
|
- ஓரினச்சேர்க்கை தம்பதியினர் தங்கள் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பணியிடங்களில் இருந்து களங்கம் மற்றும் விலக்கி வைக்கப் படுவதை எதிர்கொள்கின்றனர்.
- இந்தியாவில் ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குவது LGBTQ தம்பதிகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தினையும், பாதுகாப்பினையும் வழங்காது.
- ஆனால், அதன் மூலம் அதிக சமூக ஏற்பிசைவை ஊக்குவிப்பதோடு ஒதுக்கப்பட்டச் சமூகங்களுக்கு எதிரான பாகுபாட்டைக் குறைக்கலாம்.
- இந்தியாவில் ஒரே பாலினத் திருமணங்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் என்பது பற்றிய விவாதம் தொடர்ந்து சர்ச்சைக்குரியப் பிரச்சினையாக இருப்பதோடு, அரசாங்கமும் மனுதாரர்களும் எதிரெதிர் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
- எவ்வாறாயினும், ஒரே பாலினத் திருமணம் குறித்து உள்ளடக்கிய மற்றும் தனிப்பட்ட உரிமைகளை மதிக்கும் வகையில் அது பற்றிய சிக்கலான சமூக, கலாச்சார மற்றும் சட்டரீதியான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஒரே பாலினத் திருமணம் தொடர்பான எந்தவொரு முடிவையும் கவனமாக மதிப்பீடு செய்யப் பட வேண்டும்.
- இறுதியில், பாலின நோக்குநிலையைப் பொருட்படுத்தாமல், அனைத்து தனிநபர்களுக்கும் சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாத கொள்கைகளை நிலைநிறுத்தும் வகையில் ஒரு சமநிலையான மற்றும் நியாயமான தீர்வுக்கு வருவது முக்கியமாகும்.
-------------------------------------