(For English version to this please click here)
இந்தியாவில் LGBTQ+களின் உரிமைகள்
- நேர்பாலீர்ப்பாளர், ஓரினச் சேர்க்கையாளர், இருபாலின ஈர்ப்பாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் (LGBT) போன்ற நபர்களுக்கு பல்வேறு ஆசிய நாடுகளில் வழங்கப் படுவதை விட, இந்தியாவில் அதிகப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
- இருப்பினும், இந்திய LGBT குடிமக்கள் மற்ற சமூக மக்களுடன் ஒப்பிடுகையில் இன்னும் சில சமூக மற்றும் சட்டச் சிக்கல்களை அனுபவிக்கின்றனர்.
- ஓரினச் சேர்க்கை அல்லது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக எந்த சட்டக் கட்டுப்பாடுகளும் இல்லை.
- சமமான இணை வாழ்வு உரிமைகளானது ஒரே பாலினத் தம்பதிகளுக்கு உள்ளதோடு, இது பேச்சுவழக்கில் இணைந்து வாழும் உறவுகள் என்று அழைக்கப் படுகிறது.
- இருப்பினும், தற்போது ஒரே பாலினத் திருமணத்தை இந்திய தேசமானது அங்கீகரிக்க வில்லை.
- இந்தியாவில் மாற்றுப் பாலினத்தவர் 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் பாலின இடமாற்ற அறுவை சிகிச்சை மூலம் சட்டப் பூர்வமாக தங்களது பாலின அடையாளங்களை மாற்ற அனுமதிக்கப் படுகிறார்கள்,
- சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரியால் சான்றிதழ் வழங்கப்பட்டவுடன், அந்நபரின் மாற்றுப் பாலினமான ஆண் அல்லது பெண் பாலினத்தைக் குறிக்கும் அடையாள ஆவணங்களை அரசு நிறுவனங்களால் வழங்க முடியும்.
- மூன்றாம் பாலினத்தவரின் கீழ் தங்களைப் பதிவு செய்ய திருநங்கைகளுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை உண்டு.
- 2010 ஆம் ஆண்டுகளில், இந்தியாவிலுள்ள அனைத்து மக்களாலும் அதிக அளவில் LGBT சமூகத்தினர், குறிப்பாக பெரிய நகரங்களில் சகிப்புத்தன்மையோடு ஏற்றுக் கொள்ளப் பட்டனர்.
- 2019 ஆம் ஆண்டின் ஒரு கருத்துக் கணிப்புப்படி LGBT சமூகத்தினரின் உரிமைகளுக்கு ஆதரவான மற்றும் வலுவான அரசியல் இயக்கங்களினால், மக்கள் ஒரே பாலின உறவுகளை அதிகம் ஏற்றுக் கொள்கிற நிலையில், அதில் நான்கு இந்தியர்களில் மூன்று பேர் அவர்களை ஆதரிக்கின்றனர்.
பொது வரையறை
- ஒரே பாலினத் திருமணம் என்பது ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு இடையேயான திருமணத்தின் ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரமாகும்.
- இது ஒரே பாலினத் தம்பதிகளுக்குப் பாரம்பரியமாக நடைபெறும் திருமணத்துடன் தொடர்புடைய அதே வகையான சட்ட மற்றும் சமூக அங்கீகாரம், உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது.
- சொத்து உரிமைகள், பரம்பரை உரிமைகள் மற்றும் ஒருவருக்கொருவர் மருத்துவ அவசர நிலைகளில் முடிவெடுக்கும் திறன் ஆகியவையும் இதில் அடங்கும்.
- ஓரினச் சேர்க்கை திருமணம் தொடர்பான அங்கீகாரமானது உலக நாடுகளில் முழுவதும் மாறுபடுகிறது, எவ்வாறெனில் சில நாடுகள் அதை சட்டப் பூர்வமாக்கியுள்ள நிலையில், மற்ற நாடுகளில் அது அவ்வாறு சட்டப்பூர்வமாக்கப் படவில்லை.
- சமயம், கலாச்சாரம், சமூகம் மற்றும் சட்டக் கருத்துகளின் அடிப்படையில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் எழுப்பப் பட்டு, இந்த விவகாரம் அதிக விவாதம் மற்றும் சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டது.
எதிர்ப்புகள்
- ஓரினச்சேர்க்கை திருமணங்களானது இயற்கை ஒழுங்குமுறைகளுக்கு எதிரானவை என்று, பாரம்பரிய மதக் குழுக்கள் நம்பிக்கைக் கொண்டிருப்பதோடு அவற்றை எதிர்த்துள்ளன.
- சில நாடுகளில், ஓரினச் சேர்க்கை குற்றமாக்கப் பட்டுள்ளதோடு, ஒரே பாலினத் திருமணம் என்பது தொலைதூரக் கனவாகத் தெரிகிறது.
வரலாற்றுப் பின்னணி
- இந்து மதம் மூன்றாம் பாலினத்தை அங்கீகரிக்கிறது.
- இதிகாசத்தின் சில பதிப்புகளில் குறிப்பாக, மகாபாரதத்தில் காணப்படும் ஷிகண்டி போன்று, சில மாற்றுப் பாலினக் கதாபாத்திரங்கள் உள்ளன.
- சில சமயங்களில் அவர் ஒரு பெண்ணாக பிறந்தார் என்றும் ஆனால் ஆணாக அடையாளம் கண்டு இறுதியில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கருவுறுதல் மற்றும் குழந்தைப் பிறப்பிற்காக வேண்டப்படும் தெய்வமான பகுச்சரா மாதாவினை ஹிஜ்ராக்கள் அவர்களின் காவல் தெய்வமாக வணங்குகின்றனர்.
- தர்மம் மற்றும் மருத்துவம் தொடர்பான இரண்டு முக்கியமான சமஸ்கிருத நூல்களான நாரதஸ்மிருதி மற்றும் சுஷ்ருத சம்ஹிதை ஆகியவை, ஓரினச் சேர்க்கையை மாற்ற முடியாதது என்று கூறுவதோடு, ஓரினச் சேர்க்கையாளர்கள் எதிர் பாலினத் துணையினைத் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்கிறது.
- இருப்பினும், மற்றொரு இந்து நூலான மனுஸ்மிருதியில், சில சந்தர்ப்பங்களில் ஓரினச் சேர்க்கைக்கு பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டன என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
- சிற்றின்பச் சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற இந்து கஜுராஹோ கோவில்கள், ஓரினச் சேர்க்கை தொடர்பான பல சித்தரிப்புகளைக் கொண்டிருக்கின்றன.
- முகலாயப் பேரரசின் போது, ஏற்கனவே இருந்த பல டெல்லி சுல்தான் சட்டங்கள் ஃபதாவா-இ-ஆலம்கிரியுடன் இணைக்கப்பட்டு, ஓரினச் சேர்க்கைக்கு பல்வேறு வகையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.
- 1860 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் மூலம் ஓரினச் சேர்க்கையைக் குற்றமாக்குவதற்கான ஒரு பிரிவானது இயற்றப் பட்டது.
- இது இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய ஒரே பாலின திருமணம் தொடர்பான காலவரிசை
- 2001: நாஸ் அறக்கட்டளையானது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் அரசியலமைப்பு நிலையினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கினை (PIL) தாக்கல் செய்தது.
- 2009: தில்லி உயர்நீதிமன்றமானது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஆனது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மற்றும் ஓரினச் சேர்க்கை குற்றமற்றது என்றும் அறிவித்தது.
- 2013 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை இந்திய உச்ச நீதிமன்றமானது ரத்து செய்தது.
- இது 377 ஆவது பிரிவினை மீண்டும் நிலைநிறுத்தியது.
- 2023: சுப்ரியா சக்ரவர்த்தி மற்றும் அபய் டாங் எதிர் இந்திய ஒன்றியம் தொடர்பான வழக்கில் இந்தியாவில் ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப் பூர்வமாக்குவதற்கு எதிராக 3:2 என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றமானது தீர்ப்பளித்தது.
LGBTQ மக்களின் உரிமைகள் தொடர்பான முக்கியமான வழக்குகள்
நால்சா எதிர் இந்திய ஒன்றியம் (15 ஏப்ரல் 2014)
- இந்த வழக்கில், உச்ச நீதிமன்றமானது சுரேஷ் கௌஷல் வழக்கில் முன்பு நிராகரிக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டது.
- ‘சுரேஷ் கௌஷல் எதிர் இந்திய ஒன்றியம்' என்ற வழக்கில் ஓரினச் சேர்க்கையைக் குற்றமாக கருதும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் அரசியலமைப்பு ரீதியிலான செல்லுபடியாகும் தன்மையினை அது உறுதி செய்தது.
- இருப்பினும், NALSA வழக்கில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தைத் தீர்மானிக்கும் உரிமையை உச்ச நீதிமன்றமானது உறுதி செய்தது.
- ஆண், பெண் அல்லது மூன்றாம் பாலினம் போன்ற பாலின அடையாளங்களுக்கு சட்டப் பூர்வ அந்தஸ்து வழங்குமாறு அரசுகளுக்கு அது உத்தரவிட்டது.
K.S. புட்டசாமி எதிர் இந்திய ஒன்றியம் (2017)
- 2017 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற அமர்வானது அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் தனியுரிமைக்கான உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக ஒருமனதாக அங்கீகரித்தது.
- LGBT மக்களின் உண்மையான உரிமைகளானது அரசியலமைப்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட உரிமைகள் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
- அவர்கள் வாழ்வதற்கான உரிமையைப் பெற்று, தனியுரிமை மற்றும் கண்ணியமான வாழ்க்கையினை வாழ்வதோடு, சுதந்திரம் மற்றும் அவற்றிற்கான சாரத்தை உருவாக்குகிறார்கள்.
ஷபின் ஜஹான் எதிர் இந்திய ஒன்றியம் (2018)
- 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய 24 வயது பெண்ணின் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை இது ரத்து செய்து தீர்ப்பளித்தது.
- இதன் மூலம் சுதந்திரம் மற்றும் கண்ணியத்திற்கான அடிப்படை உரிமையின் ஒரு அம்சமாக ஒருவரின் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அது நிலை நாட்டியது.
சக்தி வாஹினி எதிர் இந்திய ஒன்றியம் (2018)
- 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காப் பஞ்சாயத்துகளின் ஆணைப்படி நடத்தப் படும் கௌரவக் கொலைகளைத் தடுக்க உச்ச நீதிமன்றமானது உத்தரவுகளைப் பிறப்பித்தது.
- பஞ்சாயத்து அமைப்புகளின் அனுமதியின்றி திருமணம் செய்யும் நபர்களை பாதுகாக்கவும் இது உத்தரவினை பிறப்பித்தது.
- வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையினை அடிப்படை உரிமையாக இது அங்கீகரித்தது.
- வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையானது அரசியலமைப்புச் சட்டத்தின் 19 மற்றும் 21வது சரத்துகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நவ்தேஜ் ஜோஹர் எதிர் இந்திய ஒன்றியம் (2018)
- ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சாசன அமர்வானது, ஓரினச் சேர்க்கையைக் குற்றமாக குறிப்பிடும் IPC பிரிவான 377 என்ற பிரிவினை ரத்து செய்தது.
- இது வயது வந்தவர்களிடையேயான அனைத்து வகையான ஒருமித்தப் பாலுறவையும் குற்றமற்றதாக்கியது.
தீபிகா சிங் எதிர் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (2022)
- 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெண் தனது முதல் உயிரியல் வழி குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு மறுக்கப் படுவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றமானது தீர்ப்பளித்தது, ஏனெனில் அவர் ஏற்கனவே தனது இரண்டு உயிரியல் வழி அல்லாத குழந்தைகளுக்கான பலனைப் பெற்றிருந்தார்.
- இந்தத் தீர்ப்பானது குறிப்பிட்ட வகை குடும்பங்கள் மற்றும் வினோதமான திருமணங்களை அங்கீகரித்துள்ளது.
சுப்ரியா சக்ரவர்த்தி மற்றும் அபய் டாங் எதிர் இந்திய ஒன்றியம் (2023)
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழக்குகளின் தொகுப்பாகும்.
- இந்தியாவில் பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினருக்கு திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை நிறுவுவதற்கான உரிமையினை நீட்டிக்க வேண்டுமா என்பதைப் பரிசீலிக்க மனுதாரர்களால் அவை தாக்கல் செய்யப்பட்டன.
- இந்தியத் தலைமை நீதிபதி D.Y. சந்திரசூட், நீதிபதி S.K. கவுல், நீதிபதி S.R. பட், நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் நீதிபதி P.S. நரசிம்மா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வானது, 52 மனுதாரர்கள் தாக்கல் செய்த 20 தொடர்புடைய வழக்குகளை விசாரித்தனர்.
- பாலின மற்றும் பாலினச் சிறுபான்மையினர் சமூகங்களைச் சேர்ந்த மனுதாரர்கள் தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் பாகுபாடின்மை, சமத்துவ உரிமை, கண்ணியமான வாழ்க்கை, தனிப்பட்டச் சுதந்திரம், தனியுரிமை, தனிப்பட்ட சுயாட்சி, சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு வெளிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை நிறுவுவதற்கான உரிமையை அங்கீகரிக்கக் கோருகின்றனர்.
வழக்கின் சுருக்கம்
- பாலின மற்றும் பாலின சிறுபான்மையினர் சமூகங்களைச் சேர்ந்த தம்பதிகளும், தனிநபர்களைக் கொண்ட மனுதாரர்களும், பாலியல் நோக்குநிலை மற்றும் பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல், ஏதேனும் இரு நபர்களுக்கிடையேயான திருமணத்தை அங்கீகரிக்க உச்ச நீதிமன்றத்தைக் கோரினர்.
- இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19, 21 மற்றும் 25 ஆகிய சரத்துகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் பின்வரும் திருமணச் சட்டங்களின் அடிப்படையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்:
- சிறப்புத் திருமணச் சட்டம் 1954
- இந்து திருமணச் சட்டம் 1955
- வெளிநாட்டினர் திருமணச் சட்டம் 1969
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 19 மற்றும் 21 ஆகிய சரத்துகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதன் மூலம், சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் உள்ள ஆட்சேபனை அளிக்கும் வகையில் உள்ள விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் குறிப்பிடப்பட்டது.
- 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ், இந்தியக் குடிமகன் அல்லது வெளிநாட்டு இந்தியக் குடிமகனின் வெளிநாட்டு வம்சாவளியினைச் சேர்ந்த பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மைத் துணைவர் வெளிநாட்டு இந்தியக் குடிமகனாகப் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 19 மற்றும் 21 ஆகிய சரத்துகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதன் மூலம் அது தொடர்புடைய அனைத்துச் சட்டங்களின் கீழும் எந்த ஒரு நபரும் யாரையும் 'அடுத்த உறவினர்' என்ற இடத்தில் பரிந்துரைக்க முடியும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்படப் பட்டது.
- இதற்குப் பதிலளித்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசானது இந்தக் கோரிக்கையை எதிர்த்தது.
- இந்தியாவில் பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினருக்குத் திருமணம் செய்து குடும்பத்தை நிறுவுவதற்கான உரிமையை நீட்டிப்பது உட்பட, பாலியல் மற்றும் பாலினச் சிறுபான்மையினரின் திருமணம் மற்றும் குடும்பத்தை நிறுவுவதற்கான உரிமைகளை அங்கீகரிக்காதது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 19, 21 மற்றும் 25 ஆகிய சரத்துகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இது மீறாது என்றும் மத்திய அரசானது வாதிட்டது.
- இந்திய அரசியலமைப்பின் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் மற்றும் அடிப்படைக் கடமைகளைப் பின்பற்றி திருமணத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை கட்டுப்படுத்துவதற்கான அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப் பட்ட ஒரு அதிகாரத்தினைச் சட்டப்பூர்வ அரசானது கொண்டுள்ளது.
- இந்தியத் திருமணச் சட்டங்கள் ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கீகரிக்காததால், இந்தியக் குடிமகன் அல்லது வெளிநாட்டினைச் சேர்ந்த இந்திய குடிமகனின் வெளிநாட்டு வம்சாவளியினரின் பாலியல் அல்லது பாலினச் சிறுபான்மையினரின் வாழ்க்கைத் துணைவரானவர், 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் வெளிநாட்டு குடிமகனாக மட்டுமே பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை அளிக்க உரிமை உண்டு.
- சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் திருமணச் சட்டம் மற்றும் ஒரே பாலினத் திருமணத்திற்கு தொடர்பில்லாத தத்தெடுப்பு விதிமுறைகளின் அறிவிப்பு ஆகியவற்றிற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
- எனவே, தற்போதைய வழக்கில் இருந்து அந்த விஷயங்களை உச்ச நீதிமன்றம் விலக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் சார்பில் குறிப்பிடப்பட்டது.
-------------------------------------