(For English version to this, please click here)
இந்தியாவில் புலியின் தற்போதைய நிலை பற்றிய விவரங்கள்
- 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கேமராவில் புகைப் படம் எடுக்கப் பட்ட இந்தப் பெரிய பூனைகளைச் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.
- இதில் பிடிபடாத புலிகளின் விவரங்கள், புள்ளியியல் நுட்பங்களால் கணக்கிடப் படுகிறது.
- எண்ணிக்கைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் ஒருவரான இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த கமர் குரேஷி என்பவர் “கேமரா பொறிகளில் 3,080 புலிகள் சிக்கியுள்ளன” என்று கூறியுள்ளார்.
- இருப்பினும், இந்த எண்ணிக்கை இன்னும் முடிவடையாததால் இது முழுமையான ஒரு தரவு அன்று.
- உண்மையான எண்ணிக்கையில் மாநிலம் வாரியாக கணக்கெடுக்கப் பட்ட புலிகள் மற்றும் கேமரா பொறிகளுக்கு வெளியே உள்ள புலிகள் ஆகியவை அடங்கும்.
- இந்தக் கணக்கெடுப்பு அறிக்கையானது புலிகளின் எண்ணிக்கையின் மீது ஒரு மதிப்பிடப் பட்ட தரவைக் காட்டுகிறது என்றும் விஞ்ஞானிகள் விளக்கினர்.
- மேலும் இதன் சராசரி மதிப்பு ஒரு இறுதி எண்ணாக முன்னிலைப் படுத்தப் பட்டது.
- எடுத்துக்காட்டாக, புலிகள் கணக்கெடுப்பு 2018 அறிக்கையின்படி, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்பின் மதிப்பு முறையே 2,603 மற்றும் 3,346 ஆகும்.
- எனவே, இதன் விளைவாக சராசரி மதிப்பு 2,967 வந்த நிலையில் இதுவே 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை ஆகும்.
- 2023 ஆம் ஆண்டின் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையிபடி, 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இறுதித் தரவுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் புலிகளின் எண்ணிக்கை சுமார் 6% உயர்ந்துள்ளது.
- இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
- இந்தச் சரிவு இருந்த போதிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலிகளின் எண்ணிக்கை நிலையானதாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஷிவாலிக் மலைகள் மற்றும் கங்கை வெள்ளப் பெருக்குச் சமவெளிகள் சமீபத்திய ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளன.
- மத்திய இந்தியா மற்றும் வடகிழக்கு மலைப் பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
- பிரம்மபுத்திரா வெள்ளச் சமவெளி மற்றும் சுந்தரவனக் காடுகளும் புலிகளின் எண்ணிக்கையில் சாதகமான போக்கைக் காட்டியுள்ளன.
- இந்த முன்னேற்றங்கள் ஊக்கமளிப்பதோடு இந்தியாவில் புலிகள் பாதுகாப்பின் மீதான வெற்றிகரமான முயற்சிகளை சுட்டிக் காட்டுகிறது.
- புலிகளின் எண்ணிக்கை குறித்த தற்போதைய மதிப்பீடானது, பாதுகாக்கப் பட்டப் பகுதிகளுக்கு வெளியே வசிக்கும் புலிகளின் எண்ணிக்கை பற்றிய எந்தத் தகவலையும் வழங்கவில்லை.
- புலிகள் என்பவை சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் மற்றும் மனித-விலங்கு மோதல்களால் அதிகளவில் பாதிக்கப்படக் கூடியவை ஆகும்.
- நாடு முழுவதிலும் உள்ள ஐந்து பெரிய புலிகள் மண்டலங்களிலும் புலிகளின் எண்ணிக்கை என்பது வளர்ச்சிக்கு ஒரு சவாலாக உள்ளது என்று கணக்கெடுப்பு அறிக்கையின் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
- உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக வேண்டி அதிகரித்து வரும் கோரிக்கைகளே இதற்குக் காரணம் ஆகும்.
- ஷிவாலிக் மலைகள் மற்றும் கங்கைச் சமவெளிகள் போன்ற நிலப்பரப்பில் புலிகள் காப்பகத்திற்கு வெளியே புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- எனவே, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் புலிகள் மற்றும் பெரிய வகை தாவர உண்ணிகளுக்கு இடையே ஏற்படும் மோதலைக் குறைக்க வெகுவாக முதலீடு செய்ய வேண்டும்.
- மத்திய இந்திய மலைப் பகுதிகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தாழ்வாரங்கள் போன்ற வனவிலங்குகளின் வாழ்விடங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
- வாழ்விடம் ஆக்கிரமிப்பு, புலிகள் மற்றும் அவற்றின் இரையைச் சட்டவிரோதமாக வேட்டையாடுதல், மரமல்லாத வனப் பொருட்களின் மீதான அதிகப் படியான சுரண்டல், சுரங்கம், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள், எப்போதும் விரிவடைந்து வரும் உள்கட்டமைப்பு, கட்டுப்பாடற்ற மற்றும் சட்ட விரோதமான கால்நடை மேய்ச்சல், மனிதர்களால் ஏற்படுத்தப் பட்ட காட்டுத் தீ மற்றும் பிற காரணங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அதன் விளைவுகள்
- நிபுணர்களின் கூற்றுப்படி, நாட்டில் உள்ள பெரும்பான்மையான புலிகள் ஒரு சில பாதுகாப்புப் பகுதிகளில் மட்டுமே குவிந்துள்ளன, இதனால் அவை அவற்றின் அதிகபட்ச தாங்கு திறனை நெருங்குகின்றன.
- புதிய பகுதிகளைப் பாதுகாப்பு இருப்புக்களாக உருவாக்காமல், அவற்றின் எண்ணிக்கை மீதான வளர்ச்சியைத் தக்க வைப்பதில் பல்வேறு தடைகள் இருக்கலாம்.
- இந்தியாவானது சமீபத்தில் சிறுத்தைகளை ஆப்பிரிக்காவில் இருந்து இடமாற்றம் செய்துள்ள நிலையில் இப்போது இந்தப் பெரிய பூனைகளை மற்ற உலக இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான சர்வதேச முயற்சிகளை ஆராய்ந்து வருகிறது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பொருத்தமான வாழ்விடத்தை உருவாக்கி அங்கு அதனை இடமாற்றம் செய்வது தொடர்பாக, கம்போடியா நாட்டுடன் கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.
- கம்போடியாவில் சட்டவிரோத வேட்டையாடுதல் காரணமாக புலிகளின் எண்ணிக்கை அழிந்துள்ளன.
புலிகள் கணக்கெடுப்புக்கான அறிவியல் அணுகுமுறைகள்
- இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கத்தால் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப் படுகிறது.
- புலிகளின் எண்ணிக்கையைக் குறைந்தது 3,000 ஆக அதிகரிப்பது மற்றும் உயிரினங்களின் நீண்ட கால உயிர் வாழ்வை உறுதி செய்வதற்காக வேண்டி அவற்றின் வாழ்விடங்களைப் பராமரித்து அதனை மேம்படுத்துவது ஆகியவை இந்திய அரசாங்கத்தின் இலக்கு ஆகும்.
- புலிகள் கணக்கெடுப்பு என்பது அதன் தனிநபர்களைக் கணக்கிடுவதற்காக பல அறிவியல் அணுகுமுறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான பயிற்சியாகும்.
புலிகளை எண்ணும் முறைகள்
நிழற்படக் கருவி பொறி
- தனித்தனியான புலிகளின் படங்களைப் பிடிக்க புலிகளின் வாழ்விடங்களில் உள்ள மூலோபாய இடங்களில் நிழற்படக்கருவி பொறிகளை அமைப்பது இதில் அடங்கும்.
- மனிதக் கைரேகையைப் போலவே இருக்கும் இந்தப் படங்கள், அவை அதன் தனித்துவமானப் பட்டை வடிவங்களின் அடிப்படையில் தனிப்பட்டப் புலிகளை அடையாளம் காணப் பயன்படுகிறது.
டிஎன்ஏ பகுப்பாய்வு
- டிஎன்ஏ பகுப்பாய்வின் மூலம் புலிகளின் இனம், பாலினம் மற்றும் தனிப்பட்ட அடையாளத்தைக் கண்டறிய வேண்டி புலிகளிடமிருந்துச் சேகரிக்கப்பட்ட முடி அல்லது சிதறல் மாதிரிகள் பயன்படுத்தப் படலாம்.
- தொலைதூர அல்லது அடைய முடியாதப் பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.
காலடித்தடங்களை எண்ணுதல்
- இது ஒரு குறிப்பிட்டப் பகுதியில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையை மதிப்பிடச் செய்வதற்காக புலிகளின் காலடி அடையாளங்களை (காலடித்தடங்கள்) எண்ணுவதை உள்ளடக்குகிறது.
- இந்த முறை மற்ற எண்ணும் முறைகளுடன் இணைந்து முடிவுகளைச் சரி பார்க்கவும், புலிகளின் எண்ணிக்கை மீதான மிகவும் துல்லியமான மதிப்பீட்டை வழங்கவும் பயன்படுத்தப் படுகிறது.
நேரடி கவனிப்பு
- பயிற்சி பெற்ற பார்வையாளர்களால் காடுகளில் உள்ள புலிகளை நேரடியாகக் கண்காணிப்பது இதில் அடங்கும்.
- இந்த முறை மற்ற முறைகளுக்குத் துணை புரியவும், புலிகளின் பரவல் மற்றும் அதன் நடத்தை பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கவும் பயன்படுத்தப் படுகிறது.
- புலிகளைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முறைகள் குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறிப்பிட்ட வாழ்விடங்கள் மற்றும் அங்குள்ள நிலைமைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.
- பல முறைகளின் முடிவுகள் பெரும்பாலும் புலிகளின் எண்ணிக்கையின் மீதான துல்லியமான மதிப்பீட்டை வழங்குவதற்காக இணைக்கப் படுகின்றன.
- இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு என்பது பல பங்குதாரர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சியாகும்.
புலிகள் கணக்கெடுப்பின் பங்குதாரர்கள்
தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA)
- என்டிசிஏ என்பது இந்தியாவில் புலிகளின் மேலாண்மை மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனம் ஆகும்.
- புலிகள் கணக்கெடுப்பை நடத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை மாநிலங்களுக்கு அது வழங்குகிறது.
மாநில வனத்துறைகள்
- மாநில வனத்துறையினர் புலிகள் கணக்கெடுப்பிற்காக வேண்டி கள அளவிலான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
- நிழற்படக் கருவிப் பொறிகளை அமைத்தல், மாதிரிகள் சேகரித்தல் மற்றும் கள ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தல் போன்றவை இதில் அடங்கும்.
வனவிலங்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புக் குழுக்கள்
- வனவிலங்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் பெரும்பாலும் புலிகள் கணக்கெடுப்பை நடத்துவதில் அரசு நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ஆதரவையும் நிபுணத்துவத்தையும் வழங்குகின்றன.
- புலிகள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் அவை உதவுகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள்
- பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் வனவிலங்கு அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புலிகளை எண்ணுவதற்கும், தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும், அதன் முடிவுகளை விளக்குவதற்கும் வேண்டி பயன்படுத்தப்படும் முறைகளைச் செயல்படுத்துதல் மற்றும் அதனை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர்ச் சமூகங்கள்
- குறிப்பாகப் புலிகளின் வாழ்விடங்களுக்கு அருகில் வசிப்பவர்கள், புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு, புலிகளைக் கண்டது பற்றியத் தகவல்களை வழங்குதல், அதற்கான தரவுச் சேகரிப்பில் உதவுதல் மற்றும் அதன் மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
புலியைத் தேசிய அடையாளத்தின் ஒரு முத்திரை அடையாளமாக உட்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்
- புலி, நம் நாட்டின் தேசிய விலங்காக இருப்பதால், அது ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
- நாட்டின் வலிமை மற்றும் அழகின் அடையாளமாக அதன் நிலை உள்ளது.
- நாட்டை ஒன்றிணைப்பதில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளதோடு, அந்த நாட்டு மக்களிடையே தேசிய அடையாளம், பெருமை மற்றும் ஒற்றுமை உணர்வை அது வளர்க்கிறது.
- இது ஒரு பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
- பல நாடுகளில், பல நூற்றாண்டுகளாக புலி என்பது உள்ளூர் புராணங்கள், நாட்டுப் புறவியல் மற்றும் பாரம்பரியக் கலை வடிவங்களின் ஒரு ஒருங்கிணைந்தப் பகுதியாக உள்ளது.
- ஒரு நாடு தனது தேசிய விலங்கைப் பாதுகாக்க ஒன்றிணைவதால், நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான கூட்டுப் பொறுப்பை அது வளர்க்கிறது.
- ஒரு தேசிய அடையாளமாக புலி நாட்டின் தேசியப் பெருமையை ஊக்குவிக்கிறது.
- இந்தப் பகிரப்பட்ட பெருமை, சொந்தம் மற்றும் தேசபக்தியின் 'ஒரு தேசம்' என்ற உணர்வை வளர்க்கிறது.
- பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் புலிகள் பாதுகாப்பை இணைத்து, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
- ஒரு தேசிய விலங்கு என்பது ஒரு நாட்டை பல வழிகளில் ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது ஆகும்.
- இது பகிரப்பட்ட கலாச்சாரம் மற்றும் வரலாறு மூலம் மக்களை இணைக்கிறது,
- இது கூட்டு முயற்சிகளை ஊக்குவித்து அதன் மூலம் சுற்றுச்சூழல் கல்விக்கான ஒரு ஊக்கமாகவும் செயல்படுகிறது.
-------------------------------------