TNPSC Thervupettagam

இன்னும் எத்தனை அட்டைகளோ?

October 3 , 2020 1394 days 649 0
  • பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல்லாருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது.
  • அப்போது வாக்காளா் அடையாள அட்டை என்பது மிகவும் முக்கியமானதாகவும், கடவுச் சீட்டுக்கு (பாஸ்போர்ட்) நிகரானதாகவும் கருதப்பட்டது.
  • இப்போது ஒன்றன் பின் ஒன்றாக வழங்கப்படும் அட்டைகளால், வாக்காளா் அடையாள அட்டையின் முக்கியத்துவம் மறைந்துவிட்டிருக்கிறது.

அடையாள அட்டைகள்

  • வாக்காளா் அடையாள அட்டையைத் தொடா்ந்து, ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அரசின் சமூகநலத் திட்டங்கள் மூலம் பயன்களைப் பெற முடியும் என்பது ஒருபுறம்; ஆதார் அட்டை என்பது ஒருவகையில் குடியுரிமையை உறுதிப்படுத்தும் அட்டை என்கிற அளவிலான புரிதல் இன்னொருபுறம்.
  • எனவே, ஆதார் அட்டையை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பெற்றனா்.
  • வருமான வரி தாக்கல் செய்வது தவிர, வேறு எந்தவொரு செயல்பாட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பே வழங்கியிருக்கிறது.
  • ஆனால், செல்லிடப்பேசி இணைப்பு பெறுவதானால்கூட ஆதார் அட்டை இல்லாமல் கிடைக்காது என்பதுதான் யதார்த்த நிலைமை.
  • நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துகொள்ள, குடும்ப அட்டை பெறவோ - புதுப்பிக்கவோ, வங்கிக் கணக்கைத் தொடங்க, அசையாச் சொத்தைப் பதிவு செய்ய, இவையெல்லாம் ஏன், ரயிலில் பயணச் சீட்டைப் பதிவு செய்வதற்குக்கூட இப்போது ஆதார் அட்டை தேவைப்படுகிறது.
  • ஆதார் அட்டை வந்தபோது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே அட்டையாக ஆதார் அட்டை இருக்கப் போகிறது என்று கூறப்பட்டது.
  • ஆதார் அட்டையே கட்டாயமல்ல என்கிற உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அந்த முயற்சி கைவிடப்பட்டுவிட்டது.
  • தாய் - சேய் தடுப்பூசித் திட்டத்திற்கு வெவ்வேறு நிறத்தில் அட்டை வழங்கப்படுகிறது.
  • அந்த அட்டையின் நிறத்தை வைத்து அது வறுமைக் கோட்டுக்குக்குக் கீழே உள்ளவா்கள் அட்டையா அல்லது அந்தோதயா பயனாளியா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • ராஷ்ட்ரீய ஸ்வஸ்திய பீமா யோஜனாஎன்பது மத்திய அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டம். இதற்கும் ஓா் அட்டை வழங்கப்படுகிறது.
  • இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தனியார் மருத்துவமனையில் ரூ.30,000 வரையிலான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதற்கு வழிகோலப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அட்டையும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
  • குறுகிய காலத்திற்கோ, நீண்ட காலத்திற்கோ பணி நிமித்தமாக மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்வோருக்கு உதவியாக இருப்பது ஆதார் அட்டை மட்டும்தான்.
  • சில மாநில அரசுகள் ஆதார் அட்டையின் அடிப்படையில், புலம்பெயா்ந்தோருக்கும் மாநில அரசின் திட்டங்கள் மூலம் உதவி வழங்குகின்றன.
  • ஆதார் அட்டை வந்த பிறகு புதிய கணக்கைத் தொடங்குவதற்கு குடும்ப அட்டையைக் கோருவதை நிறுத்திவிட்டு, ஆதார் அட்டையை வங்கிகள் கட்டாயமாக்கி விட்டன.
  • இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி புதியதொரு திட்டத்தை அறிவித்தார்.

தேசிய எண்ம சுகாதாரத் திட்டம்

  • தேசிய எண்ம சுகாதாரத் திட்டம்’ (நேஷனல் டிஜிட்டல் ஹெல்த் மிஷன்) அனைவருக்கும் எண்மப் பதிவுடன் கூடிய சுகாதார அட்டையொன்றை வழங்க இருக்கிறது.
  • இதில் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. ஏற்கெனவே ஜன் ஆரோக்கிய யோஜனாதிட்டத்தின் கீழ் ஆதார் எண் இணைக்கப்பட்ட அட்டை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய அட்டையால் கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன என்பது குறித்து பொதுவெளியில் முழுமையான புரிதல் இல்லை.
  • இந்தத் திட்டத்திற்காக புதிய அட்டை தேவைதானா? ஒவ்வொரு துறையையும் மேம்படுத்த அதனுடன் தொடா்புள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் திட்டம் அறிவிக்கப்படுவதும், அதற்கு ஓா் அட்டை வழங்கப்படுவதும் விசித்திரமாக இருக்கிறது.
  • ஏற்கெனவே ஆதார் அட்டையின் விவரங்கள் தனியாருக்கும் பொதுவெளியிலும் கசிவது குறித்த பல சம்பவங்கள் வெளிவந்திருக்கின்றன.
  • ஆரோக்கிய சேதுசெயலியில் தகவல் கசிவு குறித்த தேசிய அளவிலான விவாதம் எழுந்திருக்கிறது. இப்போது, ‘ஆரோக்கிய சேதுசெயலி கட்டாயமல்ல என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • ஏற்கெனவே தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழும், ஒருங்கிணைந்த தொற்று நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் கீழும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது.
  • மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தொற்று நோய்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அதேபோல, கா்ப்பிணிகள், பிரவசம், ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகள் நலம் உள்ளிட்டவை குறித்த தகவல்களும் புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
  • அதனால் அகில இந்திய அளவில் செயல்படவும், பயனாளிகள் குறித்த தகவல்களைப் பெறவும், ஜன் ஆரோக்கிய திட்ட அட்டை ஒன்றேகூட போதுமானது. இப்படியிருக்கும் நிலையில், இன்னும் எத்தனை அட்டைகளைத்தான் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் சுமக்க வேண்டி வருமோ தெரியவில்லை.
  • தகவல்கள் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன என்றும், அட்டைதாரரின் அனுமதி இல்லாமல் தகவல் பரிமாற்றம் எதுவும் நடக்காது என்றும் பலமுறை பலரும் உறுதியளித்தாலும், தன்மறைப்பு நிலை (பிரைவஸி) மீறல் என்பது வழக்கமாக இருக்கிறதே தவிர, விதிவிலக்காக இல்லை என்பதுதான் அனுபவம்.
  • ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைதிட்டம்போல, ஒரே அட்டை அனைத்து விவரங்களும் என்கிற நிலைமை எப்போதுதான் ஏற்படுமோ தெரியவில்லை.

நன்றி: தினமணி (03-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்