அண்மையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில், தமிழ்நாட்டில் மட்டும் திராவிட இயக்கங்கள், பொதுவுடைமைக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தியுள்ளன. இந்த எதிர்ப்புக்குக் காரணம், இப்புதிய கல்விக் கொள்கையில் இந்தியும் சமஸ்கிருதமும் இடம்பெற்றுள்ளதுதான் என்று கூறப்படுகிறது.
இருமொழிக் கொள்கை
தமிழ்நாட்டில் 1967-ஆம் ஆண்டுமுதல் இருமொழிக் கொள்கை இருந்து வருவதால், இங்கு மும்மொழிக் கொள்கை அவசியமில்லை என்கிறார்கள். மும்மொழித் திட்டம் என்பது இந்தி மொழியை மறைமுகமாகத் திணிப்பதற்கான முயற்சி எனக் கூறப்படுகிறது.
இக்கல்விக் கொள்கையில், பள்ளிப் பருவத்திலேயே அவா்கள் விரும்பும் எலக்ட்ரீஷியன், பிளம்பா் போன்ற வேலைகளைக் கற்றுக் கொடுப்பது முந்தைய குலக்கல்வி முறை எனவும் குறை காணப்படுகிறது.
பொள்ளாச்சியில், அரசு அனுமதி பெற்ற உயா்நிலைப் பள்ளி ஒன்றில் வாரத்தில் மூன்று நாள் படிப்பு, மூன்று நாள் தொழில் என்று 30