TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கொலீஜியம்

September 24 , 2019 1935 days 4706 0

இதுவரை

  • மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பான சமீபத்திய சர்ச்சையானது, உயர் நீதிமன்ற நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றம் செய்யும் அமைப்பான நீதிபதிகளின் கொலீஜியம் என்ற அமைப்பின் செயல்பாடு குறித்த நீண்ட கால விவாதத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
  • நீதிபதி தஹில்ரமணி தனது இட மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அனுப்பிய கோரிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் மற்றும் நான்கு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நிராகரித்ததை அடுத்து அவர் தனது ராஜினாமாவை அளித்துள்ளார்.
  • கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கும் இட மாற்றம் மற்றும் அதற்கான சரியான காரணம் குறித்த வெளிப்படைத் தன்மை இல்லாதது ஆகியவை குறித்து சட்ட வல்லுநர்களின் அமைப்பு கேள்விழுப்பியுள்ளது. இந்நிலையில், கொலீஜியமானது இந்த வெளிப்படையற்ற தன்மைக்கு உண்மையில் சில தெளிவானக் காரணங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் தேவைப்படும் போது அந்தக் காரணங்களை வெளிப்படுத்தலாம்” என்ற அதிகாரப் பூர்வமான அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கிறது.

கொலீஜியம் அமைப்பின் பரிணாமம்

  • நீதிபதிகளின் கொலீஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் கண்டுபிடிப்பு ஆகும்.
  • இந்த அமைப்பு  அரசியலமைப்பில் காணப்படுவது இல்லை.
  • இந்த அமைப்பானது உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவது பற்றியும், அவர்களது பதவி உயர்வு & பணியிட மாற்றம் குறித்து ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறும் முறை பற்றியும் விளக்குகிறது.
  • இந்த அமைப்பானது நீதிபதிகள் அடங்கிய நிறுவனத்தால் நீதிபதிகள் நியமிக்கப்படும் ஒரு அமைப்பாகும்.
  • 1970 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் தலைமை நீதிபதியின் நியமனத்தில் மூத்த நீதிபதிக்குப் பதிலாக பிற நீதிபதிகள் நியமிக்கப்பட்ட பின்னரும், நாடு முழுவதிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பெருமளவில் இட மாற்றம் செய்ய முயற்சித்தப் பின்னரும், நீதித் துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளானது என்ற கருத்து நிலவியது.
  • இதன் விளைவாக பல ஆண்டுகளாக தொடர்ச்சியான வழக்குகள் ஏற்பட்டன.
  • நியமனங்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்துகள் முழுமையானதாகவும், நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று முதல் நீதிபதிகள் வழக்கில் (1981) அல்லது இந்திய ஒன்றியத்துக்கு எதிரான S.P. குப்தா வழக்கு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்  தலைமை நீதிபதியின் கருத்து, அதிக அதிகாரம் கொண்டதாக இருப்பினும், அது முதன்மையானதாக இருக்க வேண்டுமென்ற கருத்தை உச்ச நீதி மன்றம் நிராகரித்தது.
  • இந்திய அரசியலமைப்பின் சரத்துகள் 124 மற்றும் 217 ஆகியவற்றில்  பயன்படுத்தப்படும் “ஆலோசனை” என்ற சொல் ஒத்துழைப்பைக் குறிக்கவில்லை.
  • இந்தத்  தீர்ப்பு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் பணியில் நிர்வாக அதிகாரத்தை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்றியது.
  • இரண்டாவது நீதிபதிகள் வழக்கு (1993) அல்லது இந்திய ஒன்றியத்துக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் பதிவு சங்கத்தின் வழக்கு ஆனது கொலீஜியம் முறையை அறிமுகப்படுத்தியது. அதில் உண்மையில் ஆலோசனை என்பது “ஒத்துழைப்பு” எனப்  பொருள்படும் வகையில் அமைந்துள்ளது என்று கூறியது.
  • இந்தக் கூற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தனிப்பட்ட கருத்து அன்று. இரண்டு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்ட ஒரு நிறுவன ரீதியிலானக் கருத்தாகும்” என்றும் இந்த இரண்டாவது நீதிபதிகள் வழக்கு கூறியுள்ளது.
  • உச்ச நீதிமன்றம் ஆனது மூன்றாவது நீதிபதிகள் வழக்கில் (1998) அல்லது அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் ஜனாதிபதி கே.ஆர் நாராயணனின் ஜனாதிபதிக்கான ஒரு ஆலோசனைக் குறிப்பின் படி கொலீஜியத்தை 5 உறுப்பினர்களைக் கொண்டதாக விரிவுபடுத்தியது. இதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நான்கு மூத்த நீதிபதிகளும் அடங்குவர்.

   கொலீஜியம் அமைப்பின் உறுப்பினர்கள்

  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் உச்ச நீதிமன்றத்தின் மேலும் நான்கு மூத்த நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
  • உயர் நீதிமன்றக் கொலீஜியம் ஆனது அந்தந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் வழி நடத்தப்படுகிறது, மேலும் அந்த உயர் நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • உயர் நீதிமன்றக் கொலீஜியத்தால் நியமனம் செய்யப் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு தான் அரசாங்கத்தை அடைகின்றது.

கொலீஜியத்தினால் பின்பற்றப்படும்  நடைமுறைகள்

  • இந்திய ஜனாதிபதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார்.
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நியமனத்தைப் பொருத்தவரை, விடைபெறும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தனக்கு அடுத்து வரப்போகும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைப் பரிந்துரைக்கிறார்.
  • நடைமுறையில் 1970 ஆம் ஆண்டுகளில் மூத்த நீதிபதிகள் இருந்தும் மற்ற நீதிபதிகளை நியமித்தது குறித்து எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து நீதிபதிகள் நியமனத்தில் மூப்புத்தன்மை என்ற நியதி கண்டிப்புடன் கடைபிடிக்கப் படுகிறது.
  • மத்திய சட்ட அமைச்சர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் நியமனம் குறித்தப் பரிந்துரையைப் பிரதமருக்கு அனுப்புகிறார். பிரதமர்  ஜனாதிபதிக்கு இதனை அறிவுறுத்துகிறார்.
  • உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளின் நியமனம் குறித்த பரிசீலனையானது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப் படுகிறது.
  • உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தனது மற்ற கொலீஜியம் அமைப்பின் சகாக்களையும், பரிந்துரைக்கப்படும் நபர் சார்ந்த உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியையும் கலந்து ஆலோசிக்கிறார்.
  • ஆலோசகர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும். அது கோப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
  • கொலீஜியம் அமைப்பு சட்ட அமைச்சருக்குத் தனது பரிந்துரையை அனுப்புகிறது. அவர் அந்தப் பரிந்துரையை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காகப் பிரதமருக்கு அனுப்புகிறார்.
  • இதேபோல், மத்திய அரசும் தம்மால் முன்மொழியப்படும் சிலரது பெயர்களை கொலீஜியத்திற்கு அனுப்புகின்றது.
  • மத்திய அரசு உண்மையைச் சரிபார்த்து அந்தப் பெயர்களை விசாரித்து அதன்பின் அந்தக் கோப்புகளை  கொலீஜியத்திற்குத் திருப்பி  அனுப்புகின்றது.
  • கொலீஜியம் மத்திய அரசு அளித்த பெயர்கள் அல்லது பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு அதன்பின் இறுதி ஒப்புதலுக்காக கோப்புகளை அரசாங்கத்திற்கு அனுப்புகிறது.
  • ஒருவேளை கொலீஜியம் மீண்டும் அதே பெயரை அனுப்பினால், அந்தப் பெயர்களுக்கு அரசாங்கம் தனது ஒப்புதலை வழங்க வேண்டும்.
  • ஆனால் மத்திய அரசு அதற்காக பதிலளிக்க வேண்டிய கால அவகாசம் என்று எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை. இதுதான் நீதிபதிகள் நியமனம் நீண்ட காலம் எடுக்கும் காரணம் ஆகும்.   
  • அந்தந்த மாநிலங்களுக்கு வெளியில் இருந்து தலைமை நீதிபதிகள் நியமிக்கப்படுவது என்ற கொள்கைப்படி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார்.
  • உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பரிந்துரைக்கும் கொலீஜியம் அமைப்பு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளையும் உள்ளடக்கியது.  
  • எவ்வாறாயினும், இந்தப் பரிந்துரையை உயர்நீதிமன்றக் கொலீஜியம் அமைப்பானது உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நான்கு  மூத்த சக நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து இந்தப் பரிந்துரையை வழங்குகின்றது.
  • கொலீஜியம் அமைப்பின் இந்தப் பரிந்துரையானது முதலமைச்சருக்கு அனுப்பப்படுகிறது. அவர் அதனை மத்திய சட்ட அமைச்சருக்குப் பரிந்துரைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துகிறார்.

இட மாற்றங்கள் மீதான கொலீஜியத்தின் அதிகாரங்கள்

  • உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் அதன் பிற நீதிபதிகளை பணியிடம் மாற்றவும் கொலீஜியம் அமைப்பு பரிந்துரைக்கிறது.
  • அரசியலமைப்பின் சரத்து 222 ஆனது ஒரு உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியை இட மாற்றம் செய்வது குறித்து விளக்கமளிக்கிறது.
  • உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இட மாற்றம் செய்யப்படும் போது, அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதி மாற்றியமைத்தல் நடைபெற வேண்டும்.
  • ஒரு மாதத்திற்கு அதிகமாகாமல் அந்த உயர் நீதிமன்றத்தில் தற்காலிகத் தலைமை நீதிபதி இருக்க முடியும்.
  • இட மாற்றங்கள் தொடர்பான விஷயங்களில், உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்து “தீர்மானகரமானது”. ஆனால் சம்பந்தப்பட்ட நீதிபதியின் ஒப்புதல் அதற்கு தேவையில்லை.
  • இருப்பினும் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளின் கருத்துகளையும், மேலும் அவ்வாறு கருத்து கூறக் கூடிய நிலையில் இருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகளையும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • அனைத்து இட மாற்றங்களும் பொதுமக்களின் நலனுக்காக அதாவது நீதி நிர்வாகத்தின் மேம்பாட்டுக்காக செய்யப்பட வேண்டும்.

கொலீஜியம் அமைப்புக்கு எதிரானப் பொதுவான விமர்சனம்

  • இட மாற்றங்களுக்கான காரணங்களை முழுமையாக வெளிப்படுத்துவதில் சிலர் நம்பிக்கை கொள்ளவில்லை. ஏனெனில் இது இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதிக்கு, அவர் பதவியேற்க இருக்கும் நீதிமன்றத்தில் உள்ள  வழக்கறிஞர்கள் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்க வழி வகுக்கும்.
  • பொது சர்ச்சைகளில் சிக்குவது, அதே உயர் நீதிமன்றத்தில் உறவினர்கள் பயிற்சி பெறுவது போன்றவை இட மாற்றங்களுக்குப் பொதுவான காரணங்களாக இருக்கலாம்.
  • நியமனங்களைப் பொறுத்த வரை ஓய்வு பெற்ற நீதிபதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்ற விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக நியமனங்கள் தொடர்பான “பரிசீலிக்கும் மண்டலம்” என்ற ஒன்று விரிவாக்கப்பட வேண்டும்.
  • அதிகப் பொறுப்புடைமையை ஏற்படுத்த முன்மொழியப்பட்ட புதிய புரிந்துணர்வு நடைமுறையின் நிலையும் அவ்வளவு தெளிவாக இல்லை.
  • மேலும் இந்த அமைப்பின் வெளிப்படைத் தன்மையின்மை மற்றும் உறவினர்களுக்கு ஆதரவாக ஒருதலைப் பட்சமாக செயல்படுவதற்கான வாய்ப்பு போன்றவையும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
  • எனவே இந்த அமைப்பை தேசிய நீதிபதிகள் நியமன ஆணையமாக மாற்றுவதற்காக மத்திய அரசு முயற்சித்தது. ஆனால் மத்திய அரசின் இந்த முயற்சி நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்ற அடிப்படையில் 2015 ஆம் ஆண்டில் அது உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டது.

  • தேசிய நீதிபதிகள் நியமன ஆணையமானது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அவரது இரண்டு மூத்த சகாக்கள், சட்ட அமைச்சர் மற்றும் இரண்டு புகழ்வாய்ந்த நபர்கள் ஆகியோரைக் கொண்டிருக்கும் அமைப்பாகும். இந்த புகழ்வாய்ந்த நபர்கள் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரால் கூட்டாக நியமிக்கப்படுவர்.
  • இந்த அமர்வில் இருந்த நீதிபதி J. செல்லமேஸ்வர் மத்திய அரசின் இந்த முயற்சியானது “இயல்பாகவே சட்ட விரோதமானது” என்று தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
  • பெரும்பாலான கருத்துகள் கூட கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத் தன்மைக்கானத் தேவையை ஒப்பு கொண்டன.
  • எனவே வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் முயற்சியாக, கொலீஜியத்தின் தீர்மானங்கள் இப்போது நிகழ்நேரங்களில்  வெளியிடப் படுகின்றன, ஆனால் அதில் தகுந்த காரணங்கள் கொடுக்கப் படுவதில்லை.

நடைமுறைக்கான குறிப்பாணை -  மாற்று முறை

  • எதிர்கால நியமனங்களுக்கு வழிகாட்ட புதிய நடைமுறைக்கான குறிப்பாணை ஒன்றைத்  தயாரிக்க நீதித்துறையும் அரசாங்கமும் முடிவு செய்துள்ளன.
  • இந்தப் புதிய நடைமுறையானது நியமனம் குறித்த தகுதிக் குறைவு, வெளிப்படைத் தன்மை இல்லாதது, ஒரு செயலகத்தை நிறுவுவது மற்றும் புகார் செய்யும் முறைகள் ஆகியவைப்  பற்றி ஆராயவிருக்கிறது.
  • ஆனால் இதில் அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான பல்வேறு விஷயங்களில் ஒருமித்த கருத்து இல்லாததால் இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

óóóóóóóóóó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்