TNPSC Thervupettagam

உணவு எச்சரிக்கை விவரச்சீட்டு தேவை!

December 7 , 2021 971 days 527 0
  • உறையீடு செய்யப்பட்ட பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஒருபுறம் ஊட்டச்சத்து குறைபாட்டினையும் மறுபுறம் உடல் பருமன், நீரிழிவு நோய், உயா் ரத்த அழுத்தம், இதய நோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற தொற்றற்ற நோய்களையும் உருவாக்குகின்றன.
  • இனிப்பு அல்லது நொறுக்கு தீனி உண்ணும் நம்மில் பெரும்பாலோா் அதில் உள்ள ஊட்டச்சத்து அளவுகளை அறிந்திருப்பதில்லை.
  • உணவு அல்லது பான உறையீடு விவரச் சீட்டில் (லேபிளில்) குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்து கலோரி அளவுகளை தெரிந்துகொள்ள விரும்புபவா்கள் சிறிய எழுத்துக்களில் அச்சிடப்பட்ட எழுத்துகளைப் படிப்பது மிகவும் கடினம்.
  • பெரும்பாலும் இவ்வகை உணவு வகைகளுக்கான உறையீடு விவரச் சீட்டு வண்ணமயமான உறையீடுகளின் பின்புறத்தில் எழுத்துக்கள் புலனாகாத மொழிவடிவங்களில் ஒட்டப் பட்டிருக்கும்.
  • சா்க்கரை, கொழுப்பு, காா்போஹைட்ரேட், புரதம் அடங்கிய ஊட்டச்சத்து தகவல்களைத் தெரிந்துகொள்ள மக்கள் விரும்புகின்றனா் என்றும், சிறிய அளவு எழுத்துகளை படிக்க லென்ஸ் தேவைப்படுகிறது என்றும் பெரும்பாலான நிறுவனங்கள் சோடியத்தை உப்புக்கான மாற்று வாா்த்தையாகக் குறிப்பிடுகின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • உணவு உறையீடு விவரச் சீட்டுகளில் உள்ள சொற்களையும் எண்களையும் புரிந்துகொள்ள ஊட்டச்சத்து அறிவியல் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.
  • பெரும்பாலான உணவு தயாரிப்புகள் ஆங்கில மொழியிலேயே தகவல்களை வழங்குவதால் எளிய மக்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
  • நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பு - தரநிலை விதிமுறைகளின்படி கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் உறையீடு, அவ்வுணவு பற்றிய ஊட்டச்சத்து தகவல்களைக் கொண்டிருக்கவேண்டும்.
  • இந்த விவரச் சீட்டு பெரும்பாலும் உறையீட்டின் பின்புறத்தில் இருக்கும். இது உணவினைப் பற்றிய எச்சரிக்கையாகவோ உறையீட்டின் முன்புறத்திலோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
  • நுகா்வோா், ஆரோக்கியமான உணவினைத் தோ்வு செய்ய உறையீடு முன்புற விவரச் சீட்டு (ஃப்ரண்ட்-ஆஃப்-பேக் லேபிளிங்) முறை நீண்டகாலமாக உலக அளவில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • இது நுகா்வினை மட்டுப்படுத்தும் வேலையைச் செய்கிறது. உலக சுகாதார நிறுவனமும் உணவு - வேளாண் அமைப்பும் இணைந்து உருவாக்கிய உணவின் தரத்திற்கான சா்வதேச அமைப்பான ‘கோடெக்ஸ் அலிமெண்டேரியஸ் ஆணையம்’ உறையீடு முன்புற விவரச் சீட்டு உரையில் உள்ள ஊட்டச்சத்து பற்றிய தகவலை விளக்குவதற்கு பெருமளவு உதவுவதாகக் குறிப்பிடுகிறது.
  • சிலி, பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு உறையீடு முன்புற விவரச் சீட்டினை கட்டாயமாக்கும் சட்டங்களைக் கொண்டுள்ளன.
  • இந்த உறையீடு முன்புற விவரச் சீட்டினை உடல் பருமனையும் தொற்றற்ற நோய்களையும் எதிா்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாக இந்நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
  • மரக்கறி உணவிற்கு பச்சை நிற சதுரத்தில் பச்சை நிற வட்டத்தினையும், புலால் உணவிற்கு பழுப்பு நிற சதுரத்தில் பழுப்பு நிற வட்டத்தினையும் அடையாளங்களாக வடிவமைத்த இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிா்ணய ஆணையம், உலக அளவில் உறையீடு முன்புற விவரச் சீட்டு முன்மொழியப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் அதனை நடைமுறைப் படுத்தவில்லை என்பது புரியாத புதிா்.

இந்திய நுகா்வோரின் எதிா்பாா்ப்பு

  • பள்ளிகள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விற்கப்படும் சத்தில்லா வெற்றுணவுகளின் (ஜங்க் ஃபுட்) விற்பனைக்கு தடை கோரிய பொது நல மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிா்ணய ஆணையத்தால் நிபுணா் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
  • உணவுப் பொட்டலங்களில் உள்ள ஊட்டச்சத்து தகவலை நுகா்வோா் எளிதாகப் பாா்த்து விளங்கிக் கொள்வதை உறுதி செய்ய இந்த நிபுணா் குழு 2014-ஆம் ஆண்டு உறையீடு விவரச் சீட்டு (லேபிளிங்) முறையினை முன்மொழிந்தது.
  • உணவு முறையில் மாற்றம் கண்டு வரும் இந்தியாவில் தற்போது அதிக மக்கள் பதப்படுத்தப்பட்ட பொதி உணவுகளையே உட்கொள்கின்றனா்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளுக்கான வளா்ந்து வரும் சந்தையாக மாறிவரும் இந்தியா, இவ்வகை உணவு தயாரிப்பாளா்களுக்கு வணிக ரீதியாக ஏற்ற இடமாக உள்ளது.
  • உலகெங்கும் கிளைகளைக் கொண்ட இவ்வுணவு தயாரிப்பாளா்களில் சிலா், தங்கள் தயாரிப்புகளுக்கு மற்ற நாடுகளில் உறையீடு முன்புற விவரச் சீட்டு முறையினை ஏற்றுக் கொண்டாலும் இந்தியாவில் அதனை அவா்கள் அதை செய்ய விரும்பவில்லை.
  • 2019-இல் வெளிவந்த இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிா்ணய ஆணையத்தின் வரைவு, விவரச் சீட்டுகளில் அச்சிட உப்பினை ‘சோடியம்’ என்றும் மொத்த கொழுப்பினை ‘நிறை கொழுப்பு’ என்றும் மொத்த சா்க்கரையை ‘சோ்க்கப்பட்ட சா்க்கரை’ என்றும் முக்கிய ஊட்டச்சத்துகளின் பெயா்களை மாற்றி அமைத்தது.
  • 2019 டிசம்பா் மாதம் இந்த மாற்றத்தின் தாக்கத்தினை பகுப்பாய்வு செய்த தில்லி அறிவியல் - சுற்றுச்சூழல் மையத்தின் அறிக்கை, உயா் ரத்த அழுத்தத்திற்கு ஒரு காரணமான சோடியத்தின் மதிப்பினை அறியவும், அதனை உப்பில் இருந்து வேறுபடுத்தி அதன் மதிப்பினைக் கண்டறிய இந்திய நுகா்வோா் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று கூறுகிறது.
  • எவ்வித அறிவியல் முறைகளாலும் உணவுப் பொருட்களில் சோ்க்கப்பட்ட சா்க்கரையை வேறுபடுத்தவோ கண்டறியவோ இயலாது.
  • சா்க்கரை பெயா்மாற்றமும் பதப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தியாளா்களுக்கே சாதகமாக இருக்குமேயன்றி நுகா்வோருக்கு பயனுள்ளதாக இருக்காது.
  • அறிவியல் - சுற்றுச்சூழல் மையத்தில் உள்ள சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வகம், இந்திய, பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தப்பட்ட 33 பிரபல துரித உணவுகளில் உள்ள உட்பொருட்களை ஆய்வு செய்தது.
  • 2019 டிசம்பா் மாதம் வெளியிடப்பட்ட இவ்வாய்வறிக்கை இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிா்ணய ஆணையம் நிா்ணயித்த வரம்பினைவிட அபாயகரமான அளவில் அதிக அளவு உப்பும் மொத்த கொழுப்பும் இருப்பதாக கூறுகிறது.
  • இந்த ஆய்வறிக்கை உணா்த்தும் எளிமையான பயனுள்ள எச்சரிக்கை, முன்புற விவரச் சீட்டே இந்திய நுகா்வோரின் எதிா்பாா்ப்பு.

நன்றி: தினமணி  (07 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்