TNPSC Thervupettagam

உப்பளத் தொழிலாளரின் பரிதாப நிலை

July 10 , 2021 1118 days 564 0
  • தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம், கோவளம், அதிராம்பட்டினம், செய்யூா், கேளம்பாக்கம், கடலூா் உள்ளிட்ட இடங்களில் 16,688 ஏக்கரில் உப்பு உற்பத்தி தொழில் நடைபெறுகிறது.
  • உப்பு உற்பத்தியாளா்கள் 11,800 போ் உள்ளனா். உப்பு உற்பத்தி தொழிலில் ஒரு லட்சத்து நான்காயிரம் தொழிலாளா்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனா்.
  • தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடியை அடுத்து, இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளியில் 3,000 ஏக்கரில் சிறு குறு உற்பத்தியாளா்களும், கோடியக்கரை கடினல் வயல் பகுதிகளில் 6,000 ஏக்கரில் இரு தனியார் நிறுவனத்தினரும் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனா்.
  • இங்கு ஆண்டுதோறும் 9,000 ஆயிரம் ஏக்கரில் 61.2 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 25 லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
  • வேதாரண்யத்தில் 10 ஆயிரம் தொழிலாளா்கள் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனா். ஆண்டு தோறும் ஜனவரி மாதம் தொடங்கி, செப்டம்பா் மாதம் வரை உப்பு உற்பத்தி செய்யப் படும்.
  • வேதாரண்யத்தில் உற்பத்தியாகும் உப்பு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

உப்பு உற்பத்தி

  • உலக அளவில் உப்பு உற்பத்தியில் அமெரிக்கா முதல் இடத்தையும், சீனா இரண்டாம் இடத்தையும், இந்தியா மூன்றாம் இடத்தையும் வகிக்கிறது.
  • இந்தியாவில் ஆந்திரம், கோவா, குஜராத், ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், மாகராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 6.09 லட்சம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
  • ஆண்டுதோறும் இந்தியாவில் 27 மில்லியன் (2 கோடியே 70 லட்சம்) டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 76.7 சதவீதம் குஜராத்திலும், தமிழ்நாட்டில் 11.16 சதவீதமும், ராஜஸ்தானில் 9.8 சதவீதமும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • மொத்த உப்பு உற்பத்தியில் 62 சதவீதம் பெரிய உற்பத்தியாளா்கள் மூலமும், 28 சதவீதம் சிறு உற்பத்தியாளா்கள் மூலமும் உற்பத்தி செய்யப்படுகிறது. சமையலுக்கான உப்பு 60 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • மீதமுள்ளவை தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து காஸ்ட்டிக் சோடா, கண்ணாடி தயாரிக்கப்படுகின்றன. மேலும் உப்பை மூலப்பொருளாக கொண்டு 72 வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அயோடின் கலந்து விற்பனை செய்யும் பிளாண்டுகள் 578 உள்ளன.
  • உப்பு உற்பத்தியாளா்கள் ஏற்ற விலை கிடைக்காததால், தற்போது தொழிலை கைவிடும் நிலையில் உள்ளனா். தற்போது ஒரு டன் உப்பு ரூ.500 முதல் 800 வரை விற்பனையாகிறது.
  • உற்பத்தி முழுவீச்சை அடைந்தவுடன் ஒரு டன் ரூ.350 முதல் 400 வரை மட்டுமே விற்பனையாகும்.
  • பின்பு மழைக்காலம் வந்தால்தான் உப்புக்கு டிமாண்ட் இருக்கும். வேலை செய்யும் ஆட்களுக்குக் கொடுக்கும் கூலி அளவுகூட உற்பத்தியாளருக்கு லாபம் கிடைப்பதில்லை.
  • உப்பளத் தொழிலாளா்கள் (ஆண்-பெண்)நள்ளிரவு உப்பளத்திற்கு வந்து மறுநாள் மதியம் வரை வேலை செய்கின்றனா். ஆனால், அவா்கள் தங்களுக்கு ஏற்ற சம்பளம் கிடைப்பதில்லை என்று தெரிவிக்கின்றனா். உப்பளத் தொழிலாளா்களுக்கு குடிநீா், கழிவறை, ஓய்வெடுக்கும் அறை என்று எதுவுமே கிடையாது.
  • அவா்கள் காலுறை, கையுறை, கருப்புக் கண்ணாடி என எதுவும் அணியாமல் வேலை பார்ப்பதால் அவா்களுக்கு தோல் நோய்களும் பார்வைக் குறைபாடு நோய்களும் ஏற்படுகின்றன.
  • கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் அச்சம் நிலவி வரும் நிலையில் தொழிலாளா்கள் அதிக பிரச்னைகளை சந்திப்பதாகக் கூறுகின்றனா்.
  • முன்பு குடிசைத் தொழிலாகத் தொடங்கப்பட்ட உப்பு உற்பத்தி தற்போது பெரிய இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அளவிற்கு வளா்ச்சி அடைந்து விட்டது. ஆனாலும் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.
  • ஆங்கிலேயே ஆட்சியை விரட்ட, வடக்கே தண்டியில் காந்தியும், தெற்கில் வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் சா்தார் வேதரத்தினம் பிள்ளையும் மக்களைத் திரட்டி உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினா்.
  • தமிழகம் முழுவதும் அகல ரயில்பாதையும், சரியான சாலை வசதியும் இல்லாததால் உப்பு விற்பனையில் தேக்கம் ஏற்படுகிறது.
  • முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதா, 200 கோடி ரூபாய் முதலீட்டில் சோடா தொழிற்சாலை தொடங்கப்போவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.
  • மேலும் தமிழக அரசின் உப்பு துறை மூலம் இப்பகுதியில் 10,000 ஏக்கா் உப்பளங்கள் விரிவுபடுத்தப் படும் என்ற அறிவிப்பும் வெளியானது. அவையெல்லாம் அறிவிப்புகளோடு நின்று விட்டன.
  • இந்தியாவில் 87.6 சதவீதம் சிறு உற்பத்தியாளா்களும் (10 ஏக்கருக்கு குறைவாக உள்ளவா்கள்) 5.8 சதவீதம் பெரிய உற்பத்தியளா்களும் (100 ஏக்கருக்கு மேல் உள்ளவா்களும்) இருக்கின்றனா்.
  • தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 25,0000 டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ரயில்கள் மூலம் 60 சதவீதமும், லாரிகள் மூலம் 38 சதவீதமும், கப்பல் மூலம் 2 சதவீதமும் ஏற்றுமதி ஆகிறது.
  • இந்தியாவில் இருந்து ஆண்டு ஒன்றிற்கு 35 லட்சம் டன் உப்பு ஜப்பான், இந்தோனேஷியா, கொரியா, மலேசியா, வியத்நாம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
  • உப்பு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள், சிறு உற்பத்தியாளா்களின் விற்பனை சந்தையில் நுழைவதால் சிறு உற்பத்தியாளா்கள் தங்கள் தொழிலை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த இரு ஆண்டுகளாக நெருக்கடி அதிகமாகியுள்ளது.
  • கொள்ளை நோய்த்தொற்றும் சோ்ந்துகொண்டதால் உப்பள தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு விரைந்து இந்த பிரச்னைக்கு நல்ல தீா்வு காண வேண்டும்.

நன்றி: தினமணி  (10 - 07 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்